Sunday, 27 May 2007

ஈழச்செய்திகள்

சமாதானப் பேச்சுக்கள் மீளத் தொடங்க உந்துதல் அளிப்பதே எமது குழுவின் நோக்கம்
பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் வாஸ் சொல்கிறார்

சமாதானம் உரு வாகாத பட்சத்தில் மட்டுமன்றி அதற் கான நம்பிக்கை இல் லாமற்போகும் போதும், இலங்கை யின் அப்பாவி மக் கள் தொடர்ந்தும் துன் பங்களையும் கஷ்டங்களையும் அனுப விக்க நேரிடும்.அதனைக் கருத்திற்கொண்டே மீண் டும் சமாதானப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு உந்துதல் கொடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு விரும்பு கிறது.இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஹெய்த் வாஸ். கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங் கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வி யில் அவர் இதனைக் கூறினார்.அவர் தமது செவ்வியில் மேலும் தெரி வித்ததாவதுஇலங்கையில் நடைபெறும் போரின் மீது அக்கறை கொள்வோர் மீது பல குழு வினரும் ஊடகங்களும் குற்றங்களைச் சுமத்துவது அவநம்பிக்கைகளை ஏற் படுத்துகின்றது. இலங்கை விடயத்தில் அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகம் இருக்கவேண்டும் என நான் விரும்புகின் றேன். மோதல்களில் ஈடுபடும் தரப்புக்களை ஓர் அமைதி வழியிலான தீர்வைக் காண்ப தற்கு கொண்டுவரும் முயற்சிகளுக்காகவே பிரிட்டனின் அனைத்துக் கட்சி நாடாளு மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது. நம்மில் எவரும் விடுதலைப் புலிகளைச் சந்திக்கவில்லைமனித உரிமை மீறல்கள், பயங்கரவாத செயல்கள் போன்றவற்றில் எந்தக் கு ழு வினர் ஈடுபட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டியது. நானோ அல்லது எமது எந்த அங்கத்தவர்களோ விடுதலைப் புலி களைச் சந்தித்தது இல்லை. அனைத்துக் கட்சிக் குழுவானது பிரித் தானியா அரசின் கருத்தை பிரதிபலிக்க வில்லை. ஆயினும் அதில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்களை கொண்டுள் ளது என்றார். ஹெய்த் வாஸ் லெய்செஸ்ரர் தொகுதி யின் நாடாளுமன்றப் பிரதிநிதியாவர். இவர் முன்னர் முன்னாள் வெளிவிவகார உதவி அமைச்சருமாவார். கடந்த ஐம்பது வருட காலத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன் றத்தில் பிரதிநிதியாக இருக்கும் முதலா வது இந்திய வம்சாவழியினருமாவார். இலங்கையில் ஓர் அமைதியான தீர்வை எட்டுவதற்குரிய பேச்சுக்களுக்கு விடு தலைப் புலிகள் மீதான பிரித்தானியா வின் தடைகள் காரணம் எனவும் அனைத் துத் தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட்டு ஒரு தீர்வைக் காண்பதற்கு தடை நீக்கப் படவேண்டும் எனவும் முன்னர் பிரித் தானியாவின் நாடாளுமன்றத்தில் வாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவில் இருந்த முக்கிய ராடாரை விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்: கொழும்பு ஊடகம் Sunday, 27 May 2007

கடந்த வியாழக்கிழமை அதிகாலை நெடுந்தீவு ராடார் நிலையத்தின் மீது தாக்குதலை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகள், அங்கிருந்த முக்கியமான ராடார்களையும், ஆயுதங்களையும், வெடிபொருட்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர் என கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:
இந்த தாக்குதலை அடுத்து யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, 51 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான பிரிக்கேடியர் லிஓநாட் மார்க்கை தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பாக விவாதித்ததை தொடர்ந்து அவர் தனது பிரிக்கேட் கட்டளை அதிகாரிகளை தொடர்பு கொண்டு நெடுந்தீவை மீட்பதற்கான எதிர் நடவடிக்கைகள் குறித்து திட்டங்களை வகுத்திருந்தார்.
நெடுந்தீவை மீட்பதற்கு இரு பற்றலியன் துருப்புக்கள் தயார்படுத்தப்பட்டன. அந்தப் பகுதிக்கு காங்கேசன்துறை கடற்படைத்தளத்தில் இருந்து 10 டோராக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மேற்கு கரையிலான நடமாட்டங்களை கண்காணித்த ராடார் நிலை அழிக்கப்பட்டுள்ளது. சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் நடுக்கடலில் உள்ள தமது கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்கும் திட்டத்தையும் விடுதலைப் புலிகள் கொண்டிருந்தனர்.
நெடுந்தீவு இந்தியாவின் இராமேஸ்வரத்திற்கு மிக அருகில் உள்ளதனால் அது படையினரின் மேற்கு கரையோர கண்காணிப்புக்களுக்கு மிகவும் கேந்திர முக்கியத்துவமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: