Wednesday, 18 July 2007

ஈழச்செய்திகள்:180707



* கேடி ராஜபக்ச அரசின் பேடித்தனமான யுத்தம்.

* ''சகல மக்களது சமாதானம் பற்றி'' கெளரவ பேச்சு!

* புளியங்குளம் வைத்தியசாலை மீது குண்டு வீச்சு!!

அமெரிக்க - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் இன்று நாடாளுமன்றில் வெளியிடப்படுமாம்
அமெரிக்காவுடன் இலங்கை செய்துகொண்டுள்ள பாது காப்பு ஒப்பந்தத்தின் முழுவடிவத்தை அரசு இன்று நாடாளு மன்றில் வெளிப்படுத்தவுள்ளது.இந்த ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் வெளிப்படுத்து மாறு ஜே.வி.பியினர் தொடர்ச்சியாக அரசிற்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். அதைத் தொடர்ந்தே இந்த ஒப்பந்தம் இன்று வெளிப்படுத்தப்படவுள்ளது. இந்த ஒப்பந்தம் வெளிப்படுத்தப்படாமல் இருப்பது தொடர்பாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ நேற்று நாடாளுமன்றில் தனது விசனத்தை வெளி யிட்டார்.இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை ஏற்கனவே நாடாளு மன்றத்தில் அரசு சமர்ப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒப்பந்தத்தின் வாசகங்களை சபையில் ஏற்கனவே சமர்ப்பித்த அரசு, அந்த ஒப்பந்தத்தின் பின் இணைப்பான 42 விடயங்களை அம்பலப்படுத்தவில்லை. அவற்றை யும் சேர்த்து வெளியிடும்படியே ஜே.வி.பி. தொடர்ந்து அர சுத் தலைமையை வலியுறுத்தி வருகின்றது.
யாழ்: உதயன்
சகல மக்களும் சமாதானத்துடனும் கௌரவத்துடனும் வாழும் தேசிய தீர்வொன்றை காண்பதே எமது பிரதான நோக்கம் [16 - July - 2007]
அரச சமாதான செயலகம்

பேச்சுவார்த்தைகள் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்காக 2006 ஏப்ரல் முதல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளனர்.
அரசியல் யாப்பு யோசனைகளைப் பரவலான ஆதரவுடன் முன்னெடுப்பது இவற்றுள் முக்கிய இடத்தைப் பெறுகிறது. பல தசாப்தங்களாக இடம்பெற்று வரும் உள்நாட்டு முரண்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து இலங்கையில் சகல மக்களும் கௌரவத்துடனும் சமாதானத்துடனும் வாழ்வதற்கானதொரு தேசியத் தீர்வொன்றைத் தேடிக் கண்டுபிடிப்பதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாகும் என்று சமாதான செயற்பாட்டை கூட்டிணைப்பதற்கான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகல கட்சிகளையும் சகலரையும் உள்ளடக்கியதொரு அணுகு முறையே தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு தேவைப்படுகிறது என்பதை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசியல் கட்சிகளிடையே தேசிய கருத்தொருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் நம்பிக்கையில் ஜூலை மாதம் 11 ஆம் திகதி சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் நிபுணர்கள் குழுவொன்றை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.
ஜனாதிபதியின் உரையில் கோடிட்டுக்காட்டப்பட்ட சர்வகட்சி பிரதிகள் குழு மற்றும் நிபுணர்கள் குழுவுக்கு வழங்கப்பட்ட ஆணை. ஆகக்குறைந்த அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கான தேர்வுகளைக் கண்டறிவதுடன் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு பூரணத்துவமான அணுகுமுறையையும் வழங்குவதாகும்.
பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களது மாறுபட்ட அணுகு முறைகளை ஆராய்ந்து அவர்களின் கலந்துரையாடல்களினூடாக கருத்தொருமைப்பாட்டை உருவாக்குவதற்கானதொரு பரந்ததொரு தீர்வைப் பெற்றுக் கொள்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவும் நிபுணர்கள் குழுவும் கிரமமாக வாராந்தம் மற்றும் இரு வாரங்களுக்கொரு முறை என 2006 ஜூலை முதல் கூட்டங்களை நடாத்தி தமது கலந்துரையாடல்களின் போது கணிசமான அளவு முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக உறுதிப்படுத்தின.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்கள் இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று 2006 ஓக்டோபர் மாதம் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். அதன் நோக்கம் இந்திய அரசியல் யாப்பு மத்திய மற்றும் பிராந்திய அரசுகளுக்கிடையிலான தொடர்புகள் அத்துடன் பஞ்சாயத்து ராஜ்ஜியம் போன்ற அடிமட்ட சுய நிர்வாக நிறுவனங்கள் செயற்படும் முறை போன்றவை பற்றி அறிந்து கொள்வதே இவ்விஜயத்தின் நோக்காக இருந்தது.
நிபுணர்கள் குழு அதன் ஆரம்ப அறிக்கைகள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு 2006 டிசம்பர் 6 ஆம் திகதி சமர்ப்பித்தது. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டங்களின் போது தெரிவிக்கப்பட்ட பல்வேறு கருத்துகள் மற்றும் நிபுணர்கள் குழு ஆரம்ப அறிக்கைகளில் தெரிவித்திருந்த கருத்துகளை கவனத்திலெடுத்து சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தவிசாளர் 2007 ஜனவரி 8 ஆம் திகதி சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அங்கத்தவர்களுக்கு கலந்துரையாடுவதற்கான ஆவணமொன்றைச் சமர்ப்பித்தார்.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்து கொண்டு 2007 ஜனவரி 8 ஆம் திகதி தமது கட்சியின் கருத்துகளை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்குத் தெரிவித்தது. 2007 மே 25 ஆம் திகதி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அதன் யோசனைகளை சமர்ப்பித்தது.
2006 டிசம்பர் மாதம் குழுவில் இருந்து விலகிக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஆகஸ்ட் 2006 இல் விலகிக் கொண்ட மேல் மாகாண மக்கள் முன்னணியைத் தவிர, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவுக்குத் தவிசாளர் முன்வைத்த கலந்துரையாடலுக்கான ஆவணம் பற்றித் தம் கருத்துகளை சகல சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு அங்கத்தவர்களும் சமர்ப்பித்தனர்.
பின்னர் 2007 ஜூன் 4 ஆம் திகதி தொடக்கம் மேல் மாகாண மக்கள முன்னணி சர்வகட்சிக் கூட்டங்களில் மீண்டும் கலந்து கொண்டதோடு, மக்கள் விடுதலை முன்னணிக்கு திரும்ப வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு தொடர்ந்தும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதோடு, தம்மால் விரைவில் ஒரு யோசனையை சர்வகட்சி மாநாட்டுக்குச் சமர்ப்பிக்க முடியும் என குழுவின் தவிசாளர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
முக்கியமாக தெற்கில் அரசியல் கருத்தொருமைப்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்கத்துடன் 2006 செப்டம்பர் 15 ஆம் திகதி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கம் பேச்சுகளை ஆரம்பித்தது. சமாதானம், நல்லாட்சி, தேர்தல் சீர்திருத்தம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவை தொடர்பான 6 அம்ச பொதுவான குறைந்த பட்ச தேசிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு இப்பேச்சுகள் நடத்தப்பட்டன.
இரு கட்சிகளும் 2006 ஒக்டோபர் 23 ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. "பயங்கரவாதத்தை அதன் சகல தோற்றங்களிலும் எதிர்த்து மனித உரிமைகளை நிலைநாட்டும் அதேவேளை நடைபெற்று வரும் முரண்பாட்டுக்கானதொரு பேச்சுவார்த்தைகள் மூலம் பெறப்படும் தீர்வொன்றைத் தேடுவதில்" அரசாங்கத்துக்கு இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி அதன் ஆதரவைத் தெரிவித்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கு வசதி ஏற்படும் எனக் கூறி இப்போது ஐ.தே.கட்சி உறுப்பினர்கள குழுவொன்று அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளையும் ஏற்றுள்ளது. ஆயினும், சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிறப்புரிமை உத்தியோகபூர்வ ஐ.தே.கட்சிக்கே உண்டு என்பதால் இவர்கள் இக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. பிரிந்து சென்ற குழு, ஈ.பி.ஆர். எல்.எவ். மற்றும் புளொட் போன்ற ஏனைய கட்சிகளுடன், தமது யோசனைகளுக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாத நிலையிலும் அவர்களது யோசனைகளைச் சமர்ப்பித்துள்ளனர். இத்தகைய குழுக்களுடன் சர்வதேச பிரதிநிதிகள் குழு ஆலோசனைச் செயற்பாட்டினூடாக கலந்துரையாடல்களை மேற்கொள்கிறது.
இதேவேளையில், சமாதானச் செயற்பாட்டைக் கூட்டிணைப்பதற்கான செயலகம், அரசியல் யாப்புக்கான சீர்திருத்தங்கள் மூலம் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நோக்குவதற்காக வழிகாட்டல் குழுவொன்றை அமைத்துள்ளது. அதிகாரப் பகிர்வின் அலகுகள் மற்றும் அவற்றின் அதிகாரங்கள் போன்ற சிக்கலான விடயங்களை விடுத்து இலகுவாக கருத்தொருமைப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்கான விடயங்கள் பற்றி இக் குழு ஆலோசனை வழங்கும்.
தேர்தல் முறைக்கான சீர்திருத்தம், பாராளுமன்றத்தில் பிறிதொரு சபையை அமைத்தல் மற்றும் பகிரங்க சேவையில் அத்துடன் பாதுகாப்புப் படைக்கு சிறுபான்மையினரை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளல் போன்றவற்றை இவ்வணுகுமுறை தொடர்பாக உதாரணமாக எடுத்துக் காட்டலாம்.
சமாதானச் செயலகம் முஸ்லிம் சமாதானச் செயலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு புலிகளின் சமாதானச் செயலகத்துடன் தொடர்புகளை புதுப்பிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, இவ்வாறாக குறைந்த பட்சம் மேற்படி இலகுவாக இணக்கம் காணப்படக் கூடிய விடயங்கள் பற்றி அவர்கள் கருத்துகளை அறியக்கூடியதாயிருக்கும்.
சிறுபான்மைக் கட்சிகள் மற்றும் அக்கறையுள்ளவர்கள் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்புக்களின்போது, நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான துறைகள் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. இது தொடர்பாக அரசியல் யாப்பு சீர்திருத்த அமைச்சு மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் குழு ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் தொடர்புகளை மெற்கொள்ள நாடப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் [16 - July - 2007]
வீரமணி மீண்டும் வலியுறுத்தல்
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண இந்திய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் ஊடகவியலாளர்களுக்கு கி. வீரமணி சனிக்கிழமை அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது;
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொடுமை நடக்கிறது. போர் தீவிரமாகும் சூழ்நிலையால் அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உள்ளது. சிலர் காடுகளுக்குச் சென்று உணவு இல்லாமல் தவிக்கிறார்கள்.
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ சமாதானம், போர் நிறுத்தம், வெளிநாடுகளைச் சமரசம் செய்யுங்கள் என்று கூறிக்கொண்டே அங்குள்ள தமிழர்களை கொடுமைப்படுத்தி வருகிறார்.
அங்குள்ள தமிழர்கள் தொப்புள் கொடி உறவுள்ள மண்ணாக தமிழ்நாட்டை கருதுகிறார்கள். அண்டை நாட்டிலே பாதிக்கப்பட்ட அவர்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசுக்கு மாபெரும் கடமை உண்டு. தன் செல்வாக்கை பயன்படுத்தி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும்.
இதை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் வருகிற 20 ஆம் திகதி தமிழ்நாடு முழுவதும் ஈழத்தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்புக் கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னை ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமை தாங்குகிறேன் என்றார் அவர்.
தினக்குரல்

Posted on : Wed Jul 18 5:52:45 EEST 2007
இந்திய இலங்கை கடற்படைகளின் தகவல் பரிமாற்ற உடன்பாட்டை ரத்துச் செய்க!
பிரதமர் மன்மோகன்சிங்கிடம் வைகோ வலியுறுத்து
இந்திய கடற்படையும் இலங்கைக் கடற்படையும் தகவல் பரிமாற்றத்துக் காக செய்து கொண்டதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உடன் ரத்துச் செய்ய வேண் டும்.பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ம.தி. மு.க.பொதுச் செயலாளர் வைகோ மேற் கண்டவாறு கோரியுள்ளார்.பிரதமருக்கு அவர் நேற்றுமுன்தினம் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இப்படிக் கோரியுள்ளார்.அக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ள தாவது:இந்திய கடற்படையும் இலங்கை கடற்படையும் தகவல் பரிமாற்றத்துக் காக தொலைத்தொடர்பு சாதனங்களின் ஒருங்கிணைப்பு செயற்பாட்டினை மேற் கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இச் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.2004 இல் இந்தியாவுடன் இலங்கை அரசு இராணுவ ஒப்பந்தம் செய்ய முயன்றபோது அதை நான் உங்கள் கவ னத்துக்குக் கொண்டுவந்து அதன் ஆபத்தை சுட்டிக்காட்டியபோது நீங்களும் இலங் கையுடன் இராணுவ ஒப்பந்தம் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்தீர்கள்.இலங்கை விமானப் படைக்கு உத வும் வகையில் ராடர் சாதனங்களை இந்தியா வழங்கியது. இதை நான் உங் களிடம் சுட்டிக்காட்டியபோது தமிழர் களுக்கு எதிராகப் பயன்படுத்தப் படு மானால் ராடர்களை இந்தியா திரும்பப் பெறும் என்று உறுதி கூறினீர்கள்.ஆனால், ராடர்களைத் திரும்பப் பெறுவதற்குப் பதிலாக, இப்போது நடை பெறும் போரில் மேலும் ராடர் சாதனங் களை இலங்கைக்கு இந்தியா வழங்கி யுள்ளது. குடாநாட்டு மக்களுக்கான உதவிகளை அனுப்ப மறுத்தமையாழ்ப்பாணத்தில் துயரத்தில் பரித விக்கும் தமிழ் மக்களுக்கு கொடுப்பதற் காக தமிழக மக்களிடம் திரட்டிய உண வையும் மருந்துப் பொருள்களையும் செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக அனுப்பி வைப்பதற்கான அனுமதியை இந்திய அரசு வேண்டுமென்றே மறுத்து விட்டது. இதற்காக நான் நேரில் உங் களைச் சந்தித்து கோரிக்கை வைத்தும் பயனில்லை.பழைய தவறைச் செய்யவேண்டாம். சிங்கள அரசு இலங்கையில் உள்ள தமி ழர்களை கூண்டோடு அழிக்க முற்பட்டு இனப் படுகொலையையும் இராணுவத் தாக்குதலையும் தீவிரப்படுத்தி வருகிறது.இந்நிலையில் தமிழர்களுக்கு எதி ரான நடவடிக்கைகளுக்கு இந்தியா இராணுவ ரீதியான உதவிகளைச் செய்து வருகிறது.இந்திய அரசின் இத்தகைய நடவ டிக்கைகள் தமிழக மக்களை ஆழமாகக் காயப்படுத்துகிறது. தமிழர்களுக்கு எதி ராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்யும் துரோகம் இது.எனவே, இரு நாட்டு கடற்படை களுக்கும் இடையில் செயற்படும் தக வல் தொடர்பு ஒருங்கிணைப்பு நட வடிக்கையை இந்திய அரசு ரத்துச் செய்ய வேண்டும். 1987 இல் இந்தியா செய்த தவறு களை மீண்டும் செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன் என் றுள்ளது.
யாழ்:உதயன், அழுத்தம் ENB

தொப்புள் கொடித் தொடர்பு!
Posted on : Tue Jul 17 6:20:38 EEST 2007

இந்தியக் கடற்படை ஆலோசகர் குடாநாட்டுக்கு வெள்ளியன்று வந்தார்
இந்தியக் கடற்படை ஆலோசகர் கப்டன் பிரசாத் சிங் குடாநாட்டுக்கு கடந்த வெள் ளிக்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண் டார்.காங்கேசன்துறை துறைமுகத்தை அபி விருத்தி செய்வது தொடர்பாக அவர் படை அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளார்.பலாலித் தளத்தில் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி யுடன் அவர் கலந்துரையாடினார்.குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் குறித்து அவர் கேட்டறிந்தார் என இரா ணுவத் தரப்புத் தெரிவித்தது.
யாழ்; உதயன்

ஜெயம், ரமேஷ் உட்பட 800 விடுதலைப்புலிகள் எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர்-UNP
வீரகேசரி நாளேடு
தொப்பிகலையில் பாதுகாப்புப் படைகள் பெறவிருந்த பாரிய இராணுவ வெற்றி அரசியல் உயர்மட்ட உத்தரவினால் தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் தொப்பிகலையை சுற்றிவளைத்திருந்த போது அங்கு சிக்கியிருந்த புலிகளின் தளபதிகளான ஜெயம் மற்றும் ரமேஷ் உட்பட 800 புலி உறுப்பினர்கள் அதி சக்திவாய்ந்த ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு எவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றனர்.
இதற்கு இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
தொப்பிகலையில் சிக்கியிருந்த 800 புலி உறுப்பினர்களையும் விமானத் தாக்குதல் மூலம் அழிக்கப்போவதாக அரசாங்கம் கூறியது. இறுதி நேரத்தில் ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று கேட்கின்றோம். இந்திய புலனாய்வு தகவல்களின் படி புலி உறுப்பினர்கள் 800 பேரும் தப்பிச் செல்வதற்கு அரசியல் உயர் மட்டத்தின் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மஹிந்த புலி உடன்படிக்கையின் ஒரு கட்டமாக இவ்வாறு புலி உறுப்பினர்கள் தப்பிச்செல்ல அனுமதிக்கப்பட்டார்களா? என்றும் கிரியெல்ல கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மாலை இடம் பெற்ற அவசர செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
தொப்பிகலையை சுற்றிவளைத்து விட்டோம் மற்றும் அங்கு சிக்கிக் கொண்டிருக்கும் ஜெயம், மற்றும் ரமேஷ் உட்பட 800புலி உறுப்பினர்களை விரைவில் அழித்து விடுவோம் என்று கடந்த ஒரு மாதகாலமாக அரசாங்கம் கூறிக்கொண்டிருந்தது. ஆனால் இறுதியில் தொப்பிகலையில் இராணுவத்தினர் பலத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனால் ஜெயம் மற்றும் ரமேஷ் உட்பட 800 புலி உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. அவர்கள் அழிக்கப்பட்டார்களா? அல்லது கைது செய்யப்பட்டார்களா? எமது கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.
எமக்கு கிடைத்த இராணுவ உள் தகவல்களின் படி மேற்படி 800 புலி உறுப்பினர்களும் பாதுகாப்புடன் பல்குழல் பீரங்கி மற்றும் ஆயுதங்களுடன் வெலிக்கந்தை, சேருநுவர, மூதூர், மணிராசகுளம் ஊடாக முல்லைத்தீவுக்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு இறுதி நேரத்தில் விடுக்கப்பட்ட அரசியல் உயர் மட்ட உத்தரவே காரணம் என்று தெரியவருகிறது.
இந்நிலையில் இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் பன்னிப்பிட்டிய ஆகியோரிடம் யார் இந்த உத்தரவை விடுத்தது என்று நாங்கள் கேட்கின்றோம். எங்களுக்கு உடனடியாக பதில் தேவைப்படுகின்றது. இது தொடர்பாக உண்மையை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கின்றது. இராணுவ வெற்றி அரசியல் தலையீட்டால் காட்டிக்கொடுக்கப்படுவதை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது.
யுத்தம் செய்வதற்கு தேவையான நிதியை பாராளுமன்ற அனுமதியுடனேயே பெற்றுக்கொள்ள வேண்டும். நிதியை செலவழிப்பதற்கு ஜனாதிபதிக்கு ஏகபோக உரிமை இல்லை. அவருக்கும் நிதி தேவையென்றால் பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்படவேண்டும். தொப்பிகலையை தக்க வைத்துக் கொள்வதற்கு 20 ஆயிரம் படையினர்தேவைப்படுகின்றனர். அவர்களின் ஒருவருட செலவு 40 ஆயிரம் இலட்சம் ரூபாவாகும். எனவே நாங்கள் முன்வைத்துள்ள சந்தேகங்களுக்கு உடனடியாக பதிலளிக்குமாறு அரசாங்கத்தைக் கோருகிறோம். மஹிந்த புலி உடன்படிக்கையை ஒரு கட்டமாக மேற்படி 800 புலிகளும் தப்பிச்செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பார்கள் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.
Posted on : Mon Jul 16 5:43:58 EEST 2007
தொப்பிகல வெற்றிக்கான பரிசுகள் புலிகளால் விரைவில் வழங்கப்படும் அதிர்ச்சி காத்திருக்கிறது என்கிறார் புலிகளின் இராணுவப் பேச்சாளர்
கொழும்பு,ஜூலை16இலங்கை அரசுக்கு மேலதிக அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரித்துள்ளார்.கொழும்பு ஆங்கில ஊடகமான "த நேஷன்' பத்திரிகைக்கு இராசையா இளந்திரையன் அளித்துள்ள நேர்காணலிலேயே மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:இலங்கை அரசு இரண்டு தடங்களில் பயணிக்கின்றது. போர் ஒருபுறம் மறுபுறம் அமைதி என்று கூறிவருகின்றது. இரண்டையும் அடையக்கூடிய சாத்தியம் அதற்கு இல்லை. தமி ழீழ விடுதலைப் புலிகள் கிழக்கில் இல்லை என்கின்றனர். புலிகள் எங்கும் இருப்பார்கள். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலையில் நாம் நிலைகொண் டுள்ளோம். ஆனால் உங்களுக்குத் தெரி யாது.இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இனப் படுகொலைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இதற்குப் பதிலடியாக எமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தி இனப் படுகொலையிலிருந்து எமது மக் களைப் பாதுகாப்போம்.தொப்பிகல வெற்றிநிகழ்வை கொண்டாடுகின்றது மஹிந்த ராஜபக்ஷ அரசு. இதற்கான பரிசு புலிகளிடம் நிறையக் காத்திருக்கின்றன. தொப்பிகலவில் கடந்த 15 ஆண்டுகாலமாக எதுவித நிரந்தர இராணுவ முகா மையும் நாங்கள் அமைத்திருக்கவில்லை. தொப்பிகல வெற்றி என்று அரசு அறிவித் தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அது ஒன்றும் பாரிய தோல்வி அல்ல. கிழக்கில் தங்களது படைப் பலத்தை விரிக்கவேண்டிய நிலை அரசுக்கு உரு வாகியுள்ளது. அவர்களால் அங்கிருந்து வடக்குக்கோ இதர பகுதிகளுக்கோ எளி தில் நகர்ந்துவிட முடியாது. தொப்பிகலவை எத்தனை காலம்தான் தக்கவைப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.தொப்பிகல என்பது ஒரு மலைப் பிர தேசம். அதனைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டுமாயின் ஆளணி மற்றும் வளங் களை வீணடிக்க வேண்டியிருக்கும். மலை களை ஊடுருவிச் செல்ல இலங்கை இரா ணுவம் விரும்புவதில்லை. அந்தப் பிர தேசத்தைச் சில படையணிகளால் மட் டுமே பாதுகாத்துவிட முடியாது.தொப்பிகலவில் தற்போது இரு படை யணிகள் மட்டுமே இருக்கின்றன என்று கேள்விப்படுகின்றோம். இந்த இரு படை யணிகளால் நீண்ட காலத்துக்கு தொப்பிக லவைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது.கிழக்கில் அரசு தேர்தலை நடத்தினா லும் அங்கு ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடைபெறாது. பெரும்பாலான மக்கள் தேர்தலில் பங்கேற்பதை விரும்பவில்லை. கிழக்கில் தன் கட்டுப்பாட்டைக் காட்டு வதற்கு மஹிந்த அரசு முயற்சிக்கின்றது என்றார்.

முதற்பரிசு! -ENB

Posted on : Wed Jul 18 5:53:51 EEST 2007
பிரதம செயலாளருக்கு முன்னால் நின்று வேட்டுக்கள்தீர்க்கப்பட்டிருக்கின்றன

கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் ஹேரத் அபய வீரவை, அவருக்கு முன்னால் நின்றே ஆயுததாரி சுட்டுள்ளார்.அவரது கொலை குறித்து நேற்று நடைபெற்ற விசா ரணையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. திருகோணமலை நீதிவான் எஸ்.ராமகமலன் மரண விசாரணைகளை நடத்தினார். இறந்தவருக்கு முன்பக்கமாக நின்று ஆயுததாரி வேட் டுக்களைத் தீர்த்துள்ளார் என்றும் நெஞ்சு, தலை ஆகிய பகுதிகளில் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன என்றும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிட்ட நீதிவான், சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கும்படி உத்தர விட்டார்.
வவுனியாவிலிருந்து கடும் ஷெல் தாக்குதல் புளியங்குளம் ஆஸ்பத்திரிக்கு பலத்த சேதம்[16 - July - 2007]
வவுனியாவிலிருந்து விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள புளியங்குளம் நோக்கி நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் படையினர் நடத்திய கடும் ஷெல் தாக்குதலில், புளியங்குளம் அரசினர் வைத்தியசாலையின் பெரும் பகுதி முற்றாகச் சேதமடைந்துள்ளது. வவுனியா நகரில் ஜோசப் முகாமிலிருந்தும் வேறு முகாம்களிலிருந்துமே சனிக்கிழமை இரவு 9 மணி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை இந்த அகோர ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ஆட்லறி ஷெல்கள் புளியங்குளம் ஆஸ்பத்திரி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வீழ்ந்தே வெடித்துள்ளன.
இதனால், ஆஸ்பத்திரியின் பிரசவ விடுதியும், வெளி நோயாளர் பிரிவும் முற்றாகச் சேதமடைந்துள்ளன. ஆஸ்பத்திரியின் ஏனைய பகுதிகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது.
ஆஸ்பத்திரிக்கு அருகில் ஆசிரியர் வள நிலையம்; புளியங்குளம் இந்துக் கல்லூரி மற்றும் குடியிருப்புகளும் கடைத்தொகுதிகளும் இந்தப் பகுதியிலுள்ளன.
இந்த ஷெல் தாக்குதலால் குடியிருப்பு பகுதிகளுக்கும் சேதமேற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்தக் கடும் ஷெல் தாக்குதலையடுத்து புலிகளும் படையினரின் முன்னரங்க காவல் நிலைகளை நோக்கி மோட்டார் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
வவுனியாவுக்கு வடக்கேயும் ஓமந்தைக்கு மேற்கேயுமுள்ள கிடாச்சூரி, கல்மடு பகுதிகளின் முன்னரங்க நிலைகள் மீதே இந்த மோட்டார் தாக்குதல்கள் நீண்டநேரம் மேற்கொள்ளப்பட்டன.
எனினும், இவற்றால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை.
மன்னாரில் பலியான இராணுவத்தினரின் உடல்கள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பு [16 - July - 2007]

மன்னார், தம்பனை பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த 4 படையினரின் சடலங்களை புலிகள் நேற்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று மாலை 4 மணியளவில் புலிகளிடமிருந்து படையினரின் சடலங்களை பொறுப்பேற்றுக் கொண்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளரான டாவிடே விக்னாட்டி தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை மோதலில் தங்களது தரப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்ததாக படையினர் தெரிவித்துள்ளதுடன், தங்களில் 3 பேர் உயிரிழந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.

குடும்பிமலைச் சமருக்கான ஆயுதக் கொள்வனவில் உச்சக்கட்ட ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு [16 - July - 2007]
மட்டக்களப்பில் குடும்பிமலை சமருக்காக அரசாங்கத்தால் புதிய ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அதில் உச்சக்கட்ட ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது;
58 நாட்கள் நடைபெற்ற குடும்பிமலைச் சமரில் படையினர் பெருமளவான சுடுவலுவை பிரயோகித்திருந்தனர். ஆட்லறிகள், மோட்டார்கள், பல்குழல் ரொக்கட் செலுத்திகள், சிறிய ரக மற்றும் கனரக துப்பாக்கிகள், கிபீர், மிக்-27 ரக குண்டு வீச்சு விமானங்களென அவர்கள் பயன்படுத்திய சுடுவலு மிக அதிகம். அதன் செலவுகளும் மிக அதிகம்.
குடும்பிமலை மீதான நடவடிக்கை ஏன் இழுபட்டுச் செல்கின்றது என பல நாட்டுத் தலைவர்களும் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்த படைவலு மேலும் அதிகரிக்கப்பட்டது.
படை பலத்தில் ஆட்லறிகள், மோட்டார்கள், பல்குழல் ரொக்கட் செலுத்திகள் மற்றும் நவீன ஆயுதங்களை வாங்குவது பொதுவானது. ஆனால், அதில் பெறப்படும் தரகுப்பணம் பலரை கோடீஸ்வரர்களாகவும் இலட்சாதிபதிகளாகவும் மாற்றியுள்ளது.
அதாவது, தற்போதைய வேறுபாடு என்னவெனில், நாட்டில் ஊழல் உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதிரடிப்படை ஒன்று, புதிதாக பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர் சார்லி கலகேயினால் அண்மைய நாட்களில் வழிநடத்தப்படுகின்றது. இதுவே குடும்பிமலை மீதான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தது. அது 6 பற்றாலியன்களைக் கொண்டது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இந்த படைப்பிரிவை 58 ஆவது படையணியாக்க இராணுவத் தலைமையகம் விரும்புகின்றது. மேலும், இந்த நடவடிக்கையில் கொமாண்டோப் படையணிகள், 2 ஆவது பற்றாலியன், கெமுனு வோச்சின் 7,8 ஆவது பற்றாலியன்கள், இரு இலகு காலாட்படை பற்றாலியன்கள், சிங்கப் படையணியின் 1 ஆவது பற்றாலியனும் பங்குபற்றியிருந்தன.
இரு வாரங்களுக்கு முன்னர் வடபோர் முனையில் இருந்து மேலதிக துருப்புகளும் கிழக்கே நகர்த்தப்பட்டிருந்தன. அரசுத் தலைவர்களின் கேள்விகளைத் தொடர்ந்து தாக்குதலை நடத்த உருவாக்கப்பட்ட மேலதிக இராணுவத்தினரும் கடந்த வாரம் அனுப்பப்பட்டிருந்தனர்.
குடும்பிமலை மீதான தாக்குதலை வெற்றி விழாவாக அரசு நாடு முழுவதும் பெருமெடுப்பில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. தற்போது இராணுவத்தின் கவனம் வடபகுதி நோக்கி திரும்பியுள்ளது. விடுதலைப்புலிகளை பலவீனமாக்கும் வரை வட பகுதி மீதான படை நடவடிக்கை தொடருமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சூளுரைத்துள்ளார்.
மன்னார் களமுனையில் சனிக்கிழமை இராணுவத்தினரால் தொடங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை பெரும் மோதலாக வெடித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மோதல்களை நிறுத்தி அமைதிக்கான அழைப்பை விடுக்கும் வரை படை நடவடிக்கையை கைவிடப்போவதில்லை என நோர்வே அனுசரணையாளர்களுக்கு அண்மையில் ஜெனீவாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இதற்கான பதிலை விடுதலைப்புலிகள் இந்த வாரமும் மீண்டும் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவார் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பு அரசின் இராணுவ- பொருளாதார இலக்குகளை தாக்கப் போவதாகவும் அவர் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
2002 ஆம் ஆண்டு உருவான போர் நிறுத்த அமுலில் உள்ள நிலையிலும் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலும், அரசும் விடுதலைப் புலிகளும் தமது நிலைப்பாட்டை தெளிவாக்கத் தெரிவித்துள்ளனர்.
எனவே, நாட்டின் பொருளாதாரம் அடிக்கு மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் போதும் பிரகடனப்படுத்தப்படாத நான்காம் ஈழப்போரில் பெரும் சமர்கள் விரைவில் வெடிக்கப்போகின்றன என்பதை உறுதிப்படுத்த இதை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சி
[16 - July - 2007] ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்
இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்து செல்கின்றமை பொருளாதார வீழ்ச்சிக்கும், பொருட்களின் விலையேற்றத்திற்குமே காரணமாக அமையுமென பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொப்பிகலவை இராணுவம் கைப்பற்றியதையடுத்து, இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகளை தாக்கப்போவதாக விடுதலைப் புலிகள் எச்சரித்திருந்தனர்.
இதனையடுத்தே இலங்கை பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதுடன் இந்நிலை நீடித்தால் இவ்வருட இறுதியில் டொலரின் பெறுமதி 118 ரூபாவிலிருந்து 120 ஆக அதிகரிக்குமெனவும் எச்சரித்துள்ளனர்.
டொலர் ஒன்றும் 111 ரூபா 75 சதத்திலிருந்து 111 ரூபா 80 சதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்து அமெரிக்க டொலரின் விலை அதிகரித்துச் செல்லுமாயின் நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். கணேசமூர்த்தி கூறுகையில்,
நாட்டில் பணவீக்கம் நிலவுமாயின் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும். முதலீட்டாளர்களின் வருகைக்கு பாதுகாப்பும் செல்வாக்குச் செலுத்துகிறது. இலங்கைக்கு வெளிநாட்டு பண உள்வருகை அவசியம். வெளிநாட்டு பணம் வராவிட்டால் ரூபாவின் பெறுமதி குறைவடையும்.
ரூபாவின் பெறுமதி குறைவடைகின்றமையானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக எரிபொருள் விலை அதிகரிப்பு, பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும்.
ரூபாவின் பெறுமதி குறைவடைந்து, டொலரின் பெறுமதி கூடிச் செல்கின்றமைக்கு நிதி, நிருவாகத்தின் வினைத்திறனற்ற செயற்பாடும் முக்கிய காரணியாக விளங்குகிறது என்றார்.
இதேவேளை எரிபொருள் கொள்வனவுக்காக அதிகபணத்தை வெளிநாடுகளுக்குச் செலுத்துவதும், போர்ச் சூழல் நீடித்துச் செல்கின்றமையும் எதிர்வரும் காலங்களில் ரூபாவின் பெறுமதி குறைவடைவதற்கான பிரதான காரணியாக அமையுமென மற்றும்சில பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Posted on : Mon Jul 16 5:50:57 EEST 2007
அ'புரம் சிறைச்சாலையில் 28 தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் அகதிகள் நேற்றுமுன்தினம் தொடக்கம் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள னர்.தமிழ்க்கைதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிங்களக் கைதிகளையும் தடுத்து வைத்துள்ளதால் தாம் அச்சம் அடைந் துள்ளதாகத் தெரிவித்து சிறைச்சாலை அதிகாரிகளின் ஏற்பாட்டை ஆட்சேபித்து தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம் பித்ததாக தமிழ்க்கைதிகள் தெரிவித்துள்ள னர்.சிறைக்கைதிகளை வேறு இடத்துக்கு மாற்றுமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: