'ஒப்பரேசன் எல்லாளன்' -விடுதலைப்புலிகள் வெற்றிப்பெருமிதம்.
செய்தித் தொகுப்பு- enb
திங்கள்(22-10-2007) அதிகாலை 3.20 மணிக்கு இலங்கையின் வடமத்திய மாகாணம்அனுராதபுரத்தில் அமைந்துள்ள, ஈழதேச மக்களை அன்றாடம் குண்டு வீசிக்கும் கொன்றொழிக்கும் ஸ்ரீறிலங்கா அரசின் பிரதான யுத்த விமானத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்தனர். சுமார் எட்டு மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இத்தாக்குதலில் தமிழீழ வான்படையும் பங்குகொண்டு வெற்றிகரமாக ஈழதேசம் திரும்பியது. சேதாரம் பற்றிய ரம்புக்வெலவின் புள்ளிவிபரங்களை ஆராய்வது வெறும் நேர விரையம் மட்டுமே.21 கரும்புலிக் கொமாண்டோக்கள் அணி இத்தாக்குதலில் ஈடுபட்டதாக கறுத்தச் சீருடை தரித்த அவர்களது புகைப்படங்களையும் தமிழ் நெற் இணைய தளம் வெளியிட்டுள்ளது.ஸ்ரீறிலங்கா அரசு அண்மையில் கொள்வனவு செய்த பல நவீனரக யுத்த விமானங்கள் தாக்கியழிக்கப்பட்டுள்ளன.இவற்றின் எண்ணிக்கை சுமார் 12இலிருந்து 18 வரை இருக்கலாம் என இக்பால் அத்தாஸ்-'தேசப்பற்று இல்லாமல்'- கருத்து வெளியிட்டுள்ளார்.மேலும் அவர் இது ஸ்ரீறிலங்கா அரசின் கடல் கண்காணிப்பு நடவடிக்கைக்கு பலத்த அடி எனவும் தெரிவித்துள்ளார்.
2002 இல் செய்து கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிடப்பில் போட்டு விட்டு,ஏகாதிபத்திய வாதிகளும் இந்திய விஸ்தரிப்புவாத அரசும் ராஜபக்சவின் பேடித்தனமான, ஈழதேசத்தை கட்டாயமாக ஸ்ரீலங்காவுடன் கட்டிவைத்திருக்க முயலும் அநீதியான யுத்தத்திற்கு பக்கத்துணையாக உள்ளனர்.யுத்தத்தின் மூலம் தீர்வு சாத்தியமில்லை என எமக்கு உபதேசம் செய்து கொண்டு எம்மீது யுத்தத்தை ஏவுகின்றனர்.கட்டாய இணைப்பை எதிர்த்து தமிழ் மக்கள் 1977 இலேயே பிரிவினைக்கு ஆணையிட்டனர்.அதனால் இந்த யுத்தம் யனநாயக விரோத, தேச விரோத, மக்கள் விரோத அநீதியான யுத்தமாகும்.
அவர்கள் அனைவருக்கும் இது ஒரு நீதியான பதிலடி! மும்மணிகளுக்கு இதுபோல் நல்லாசிகள் கிட்டுவதாக!!
No comments:
Post a Comment