Wednesday, 26 December 2007

ஈழச்செய்திகள் 26122007:சங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் டெல்கியில்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 உள்ளூராட்சி சபைகளுக்கு
வேட்பு மனு கோரல்
[25 - December - 2007]
டிட்டோகுகன்- மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 9 உள்ளூராட்சி
மன்றங்களில் தேர்தல்களை நடத்துவதற்கான வேட்பு
மனுக்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி
தொடக்கம் 21 ஆம் திகதி வரை கோரப்படவுள்ளதாக
அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை அறிவித்திருக்கிறது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய திகதியிட்டு
விடுக்கப்பட்டிருப்பதாக மாகாண சபைகள் மற்றும்
உள்ளூராட்சி அமைச்சரான ஜனக பண்டார தென்னக்கோன்
தெரிவித்தார்.
இதன் பிரகாரம் ஜனவரி 4 ஆம் திகதி முதல் வேட்பு மனு
கோரல்களுக்கான நடவடிக்கைகளை தேர்தல்
ஆணையாளர் மேற்கொள்வாரென்றும் இதற்கான
சிபார்சுகள் தேர்தல் திணைக்களத்திற்கு
வழங்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தென்னக்கோன்
கூறினார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
உள்ளூராட்சிமன்ற விசேட ஏற்பாடுகள் சட்டத்தின்
அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 9
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்த
நடவடிக்கை எடுக்கபட்டிருக்கிறது.
இந்த விசேட ஏற்பாடுகளுக்கு அமைய, ஏற்கனவே
கோரப்பட்டு பாதுகாப்பு நிலைமைகள் காரணமாக தேர்தல்
நடத்த முடியாது போன வேட்பு மனுக்கள் ரத்து
செய்யப்பட்டு புதிதாக வேட்பு மனுக்கள்
கோரப்படவுள்ளன.
இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும்
மண்முனைப்பற்று, மண்முனைப்பற்று தெற்கு-
இருவில்பற்று, போராத்தீவுப் பற்று, மண்முனைப்பற்று
தென்மேற்கு, மண்முனைப்பற்று மேற்கு, கோரளைப்பற்று,
ஏறாவூர்பற்று, கோரளைப்பற்று வடக்கு ஆகிய 9
உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களே
கோரப்படவிருப்பதாக அமைச்சர் ஜனக பண்டார
தென்னக்கோன் தெரிவித்தார்.
வேட்பு மனு கோரல்கள் முடிந்ததன் பின்னரான 5
வாரங்களுக்கும் 7 வாரங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில்
அரசாங்க விடுமுறை இல்லாதவொரு தினத்தில் தேர்தலை
நடத்த தேர்தல் திணைக்களம் நடவடிக்கை எடுக்குமென்று
வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் பின்னர்
கிழக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மேலும்
தெரிவித்தார்.

* சங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் டில்லியில்
இலங்கைத் தமிழர் நெருக்கடிக்கு ஒற்றையாட்சிக்குள்
தீர்வுகாணமுடியாது; இந்திய தலைவர்களுக்கு
எடுத்துரைப்பு
[25 - December - 2007]
* சங்கரி, சித்தார்த்தன், ஸ்ரீதரன் டில்லியில் பி. ரவிவர்மன்
புதுடில்லிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள மூன்று
தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடந்த இரு
தினங்களில் அங்குள்ள முக்கிய அரசியல்கட்சி
பிரதிநிதிகளை சந்தித்து இலங்கைத் தமிழ் மக்கள்
எதிர்கொண்டுள்ள அவலநிலைமைகள் தொடர்பாக
எடுத்துக்கூறியுள்ளனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.
ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம்(புளொட்)
தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப். -பத்மநாபா)யின்
தலைவர் ரி. ஸ்ரீதரன், ஆகியோரே இலங்கைத் தமிழர்களின்
இன்றைய அவலநிலைமை குறித்து அங்குள்ள
உயர்மட்டத் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக
சென்றுள்ளனர்.
கடந்த சில தினங்களாக புதுடில்லியில் தங்கியிருக்கும்
இவர்கள் இந்திய அரசியல் கட்சிகளின் முக்கிய
பிரமுகர்கள், அமைச்சர்கள் உட்பட பல்வேறு
தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் பிரிவு தலைவர்
பிரகாஷ்கரத், அரசியல் உயர்பீட உறுப்பினர் வரதராஜன்
ஆகியோருடனான சந்திப்பின் போது
இனநெருக்கடித்தீர்வின் அவசியம் குறித்தும் அது
தொடர்பான இந்தியாவின் பங்களிப்பு என்பன தொடர்பாக
தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்
தீர்வொன்றைக்காண முடியாது என்பதை இலங்கை
அரசின் உயர்மட்டத்திற்கும் இந்திய மத்திய அரசுக்கும்
தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதாகவும் அது தொடர்பான
தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவுள்ளதாகவும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மார்க்சிஸ்ட் பிரிவு
தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணிய
சுவாமியுடனான விசேட சந்திப்பொன்றும்
இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போதும் இலங்கைத் தமிழர்களின்
அவலங்களை நீக்கி நீதியானதும் நேர்மையானதுமான
தீர்வொன்றைக் காண்பதற்கு இந்திய அரசியல்
கட்சித்தலைவர்கள் முன்வரவேண்டுமென்று
கேட்டுக்கொண்டனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சமாதான வழியில்
நீதியான தீர்வொன்று வழங்கப்பட வேண்டுமென்பதில்
ஜனதாக்கட்சி, உறுதியாகவுள்ளதாக தெரிவித்த
சுப்பிரமணிய சுவாமி முன்னாள் இந்தியப்பிரதமர்
ராஜீவ்காந்தியின் படுகொலையை ஒருபோதும்
மன்னிக்கவும் முடியாது மறக்கவும் முடியாது என்றும்
இந்த சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய மத்திய அரசின் தொழில்துறை
வேலைவாய்ப்பு அமைச்சர் ஒஸ்கா பெனான்டஸுக்கும்
மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின்
தலைவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்
ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தற்போதைய உள்நாட்டு விவகாரங்களை
மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறோம்.
அமைதியை உருவாக்க வேண்டுமென்பதில்
அக்கறையாகவுள்ளோம். அதற்கான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஒஸ்கா
பெனான்டஸ் இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்திய மத்திய அரசின் முக்கிய
அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கே.ஆர்.
நாராயணன், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்
ஆகியோரையும் புதுடில்லியில் சந்தித்து இலங்கைத் தமிழ்
மக்களின் இன்றைய அவலநிலை குறித்து முறையிட
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடில்லி சந்திப்புக்களையடுத்து தமிழ்நாட்டுக்கு விஜயம்
செய்யவுள்ள மூன்று தமிழ் அரசியல் கட்சிகளின்
தலைவர்களும் அங்குள்ள முக்கிய அரசியல் கட்சி
பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடுவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

பிரபாகரன் காயமடைந்ததாக கூறப்படுவதை இந்தியா
நம்பவில்லை'
[25 - December - 2007]

விமானப் படையினரின் வான் தாக்குதலில்
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்
காயமடைந்ததாகக் கூறப்படுவதை இந்திய அரசு
நம்பவில்லையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 26 ஆம்திகதி கிளிநொச்சி ஜெயந்திநகரில்
இடம்பெற்ற விமானத் தாக்குதலில் பிரபாகரன்
படுகாயமடைந்ததாகவும் அவரது 200
மெய்ப்பாதுகாவலர்களில் 116பேர் கொல்லப்பட்டதாகவும்
படைத்தரப்பு கூறிவருகின்றது.
படுகாயமடைந்த பிரபாகரனை மருத்துவச் சிகிச்சைக்காக
இந்தியாவுக்கு கொண்டு செல்ல புலிகள் பலத்த
முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் படைத்தரப்பு
தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இலங்கை விமானப்படையின்
தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்ததற்கான நம்பத்தகுந்த
தகவல்களெதுவும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லையென
இந்திய இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.
விமானத் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்ததாகவும்
அவர் வெளிநாடொன்றில் சிகிச்சை பெற முயல்வதாகவும்
கூறப்படுவதானது, புலிகளுக்கெதிராகமேற்கொள்ளப்பட்டு
வரும் உளவியல் போரின் ஒரு பகுதியே என்று இந்திய
பாதுகாப்புத்தரப்பினர் நம்புகின்றனர்.
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நெருங்கிய
தொடர்புகளைக் கொண்டுள்ள இந்திய பாதுகாப்புத் தரப்பும்
இந்தச் செய்தியை நம்பவில்லை.
அத்துடன், `பிரபாகரன் காயமடைந்தாரென நம்பக் கூடிய
எவ்வித புலனாய்வுத் தகவல்களும் தங்களுக்கு
கிடைக்கவில்லையென்பதை மட்டுமே தற்போது தங்களால்
கூறமுடியும்' என்றும் அவர்கள் இணையத்தளமொன்றுக்கு
தெரிவித்துள்ளனர்.

LTTE should accept IEC: Devananda
Tuesday, December 25,2007 COLOMBO:

Social Services and Social Welfare Minister and
EPDP leader Douglas asserts the LTTE will have no choice but
to accept proposals for an Interim Executive Council (IEC) to
conduct the affaires in the North East as it is agreeable to all
stakeholders to the conflict. Minister Devananda who has proposed the IEC to President
Mahinda Rajapaksa, however emphasised it is not the final
solution but will be a start towards the final solution and will
conduct the affairs in the North East by restoring civil
administration in a bid to bring peace and stability to the
province. “This will bring the LTTE to the position of a fish in a kettle.
They will not have an alternative but to accept it. In 1994 when
the Parliamentary elections were announced the LTTE
boycotted it and threatened to kill those who contest labelling
them as traitors. Ultimately they forced themselves into
Parliament through the TNA. The same happened in 1998 and
the LTTE forwarded nominations for 2006 local government
polls even for areas under uncleared areas, he pointed out,”
Minister Devananda said MondayDevananda expressed confidence that President Rajapaksa
would accept his proposals and appoint the IEC taking into
considering the grievances of Tamil people and the mayhem
created by the LTTE in the country. The Minister explained the proposals are “something agreeable
to all stakeholders to the conflict. However, this is not the final
solution. This will act as a good start for the final solution”. The IEC shall meet at least once a month and the proceedings
of the meetings shall be in the form and style adopted by the PC
assembly. All members of both IECs together with Chief
Secretaries will constitute the Joint Executive Council (JEC)
which will be co – chaired by both chairmen. The Chairman of
the JEC shall take up any matter directly with the President that
needs direct ruling or directive, Mr. Devananda noted. “When implemented these proposals you can convince the
Sinhala Community that the south can devolve power without
creating a separate state or disintegrating the country. The Tamil
people will also understand that there is a solution to their
grievances within one country,” Devananda said.

TNA to go to courts against polls in East
*Says ground not conducive to hold polls
*Claims it’s going to be big political fraud
*TMVP also vows to contest elections
*Nominations open from Jan. 4 to 21

By Kelum Bandara
The Tamil National Alliance yesterday vowed to take legal
action against moves to hold local government elections in the
East on the ground that there is no conducive atmosphere in the
province for people to exercise their franchise freely and fairly.
TNA Jaffna district parliamentarian N. Srikantha told the Daily
Mirror the party took a unanimous decision to file a case in the
Supreme Court, because the climate was not conducive at all
for holding free and fair elections in the East where a certain
group roams in the area brandishing weapons and committing
various crimes.
Mr. Srikantha said the right of franchise was not a ‘joke’, but
an essential ingredient of the sovereignty of country as enshrined
in the Constitution.
He said he believed the sole idea of holding an election now
was to perpetrate a political fraud on the people of Batticaloa
who are at the receiving end of the Nature’s fury as well.
He said that there is a ‘sinister design’ in this case, and the TNA
saw it with due seriousness.
“It is going to be a big political and electoral fraud,” he said
recalling that three of its members representing Batticaloa were
unable to exercise their franchise during the third reading of the
budget following threats from this armed group.He also said the
East had been liberated from one armed group to be handed
over to another.
The government has already planned to receive nominations for
local government polls from January 4 to 21 next year from
recognized political parties and independent groups fielding
candidates to eight Pradheshiya Sabhas and the Batticaloa
Municipal Council in the East.
The Pradheshiya Sabhas are Manmunai Pattu, Manmunai South
and Eruvil Pattu, Porativu Pattu, Manmunai South-West Pattu,
Manmunai West, Koralai Pattu, Eravur Pattu and Koralai
Pattu-North.
Meanwhile, the TMVP yesterday said it would contest the local
government election in the Eastern province and look forward
to filing nominations for the nine local government bodies.
TMVP spokesman Azath Maulana told the Daily Mirror that
they were trying their best to get the Party registered with the
Elections Commissioner’s Department early next month before
the filing of the nominations begins.
“We will hold discussions with the other political parties like the
TULF, EPDP and EPRLF to see whether there is a possibility
of forming an alliance to contest the upcoming local government
election,” Mr. Maulana said.

No comments: