Sunday, 23 December 2007

கூலிப்படை

ஹெய்ட்டிக்கு சி.ஆர்.பி.எப். படையை அனுப்ப
இந்தியாவிடம் ஐ.நா. வேண்டுகோள்

[23 - December - 2007]

போர்ட் ஒப் பிரின்ஸ்: கலவரத்தால் சீரழிந்து வரும்
ஹெய்ட்டிக்கு அமைதி காக்கும் பணிக்காக சி.ஆர்.பி.எப்.
படைப் பிரிவை அனுப்பி வைக்கும் படி இந்தியாவை
ஐ.நா. அணுகியுள்ளது. இந்த கோரிக்கையை இந்தியாவும் பரிசீலனை செய்து
வருகிறது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
லத்தீன் அமெரிக்காவில் விடுதலை பெற்ற முதல் நாடு
ஹெய்ட்டி. அது வன்முறை, கலவரபூமியாக மாறி
வருகிறது.
இந்நிலையில் அங்கு அமைதி ஏற்படுத்தும் நோக்கில்
ஐ.நா. அமைதி காப்புப்படை 1993 ஆம் ஆண்டிலிருந்து
செயல்பட்டு வருகிறது. 1995 ஆம் ஆண்டில் தேர்தல்
நடந்த போது தேர்தல் பணிக்கு உதவியாக சி.ஆர்.பி.எப்.
தரப்பிலிருந்து 123 அதிரடிப்படை வீரர்களை இந்தியா
அனுப்பியது.
ஹெய்ட்டியில் செயல்படும் ஐ.நா. அமைதி காப்புப்
படையில் தற்போது 8,889 வீரர்கள் உள்ளனர். இவர்களில்
7.060 பேர் இராணுவ வீரர்கள், மற்றவர்கள் பொலிஸ்
மற்றும் சிவில் தரப்பு ஊழியர்கள்.
இவர்கள் பாகிஸ்தான், சீனா, இலங்கை, நேபாளம்,
அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில், ஆர்ஜென்டீனா, துருக்கி,
நைஜீரியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளைச்
சேர்ந்தவர்கள்.

No comments: