Thursday, 3 January 2008

''முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்''; அமூலில் இருக்கிறது ஒஸ்லோ பிரகடனம்!


''முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்''; அமூலில் இருக்கிறது ஒஸ்லோ பிரகடனம்!

2002 பெப்ரவரி 22- 2008 ஜனவரி 03 கறைபடிந்த ஆறு ஆண்டுகள்

முறிந்தது போர் நிறுத்த ஒப்பந்தம்

விலகுவதற்கு அரசாங்கம் முடிவு

நோர்வேக்கு இன்று அறிவிக்கப்படும்

அப்போதைய ஐ.தே.க. அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட
போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகுகிறது. இதுகுறித்த உத்தியோகபூர்வமான முடிவு நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.பிரதமர் ரட்ணசிறி விக்கிரநாயக்க இது சம்பந்தமாக அமைச்சரவைக்குச் சமர்ப்பித்த யோசனை கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக
பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல கூறினார்.தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையை கருத்திக்கொண்டும் இந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் பத்தாயிரம் தடவைகளுக்கு மேல் மீறி
இருக்கின்றார்கள் எனத் தெரி வித்தும் நாட்டின் பாதுகாப்புக்கு போர் நிறுத்த உடன்படிக்கை அச்சுறுத்தலாக உள்ளது எனவும் சுட்டிக்காட்டி இந்த
ஒப்பந்தம் அவசியம் இல்லை என்ற யோசனையை நேற்றைய கூட்டத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க முன்வைத்தார். போர்நிறுத்தத்திலிருந்து அரசு விலக்கிக் கொள்வதாக 14 நாள் முன்னறிவித்தல் கொடுக்கப்படும். சமாதான அனுசரணையாளரான நோர்வேக்கும் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு வுக்கும் அரசின் முடிவை அறிவித்தல் மற்றும் அது சம்பந்தமான
விவகாரத்தை கையாள் வதற்கு பிரதமர் தலைமையிலான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சந்திரபால
லியனகே மற்றும் தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் இயக்குநர் நாயகம் லஷ்மன் ஹுலுகல்ல ஆகி யோரும் உறுதி செய்தனர். நோர்வேக்கு இன்று அறிவிக்கப்படும்போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வில கிக்கொள்ளும் அரசாங்கத்தின் முடிவு அனேகமாக இன்று சமாதான அனுசரணை யாளரான நோர்வேக்கு
அறிவிக்கப்படும் எனத் தெரியவந்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படவேண்டும் என்றும் அதன் பின்னர் விடுதலைப் புலிகளைத் தடை செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பு
அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரனுமான கோத்தபாய ராஜபக்ஷ ஐந்து நாள்ளுக்கு முன்னர் அரசங்கப் பத்தி ரிகையான ""டெய்லி
நியூஸ்'' ஆங்கில நாளிதழுக்கு விசேட பேட்டி அளித்திருந் தார்.அவரது கருத்து அரசாங்கத்தின் முடி வுக்கான ஒரு முன்னோடி (கணூஞுடூதஞீஞு) அறி விப்பு எனக் கருதப்பட்டது. நேற்று அர சாங்கம் அந்த முடிவை
எடுத்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 1983 இல் போர் தொடங்கிய பின்னர் சுமார் 70,000 மக்கள் உயிரிழந்தனர்.
2006ஆம் ஆண்டு முற்பகுதியில் ஆரம்பித்த மோதல் களின் பின்னர் மட்டும் சுமார் 5,000 பொது மக்கள் பலியாகியுள்ளனர். நடைமுறையில் உள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கிக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்திருப்பதால் இரு தரப்புக்களை தூர விலகி நிற்கச்
செய்யும். அதனால் போர் தீவிரமடைந்து பெரும் அழிவுகளுக்கு வழி கோலும் என்று ஆய்வா ளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

------------------------- (2)
விசாரணைகளை திசை திருப்பும் முயற்சியில் அரசு
[03 - January - 2008]
*எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு -எம்.ஏ.எம். நிலாம்-
பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் படுகொலை விசாரணைகளை திசை திருப்பும் முயற்சியில் அரசு தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக குற்றம்
சுமத்தியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸ்மா அதிபரின் கூற்று அதிகாரிகளால் விசாரணையை நேர்மையுடன்
முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இந்திய விஜயத்தை இடை நடுவில் முடித்துக் கொண்டு நேற்று புதன் கிழமை காலையில் நாடு திரும்பிய ரணில் விக்கிரமசிங்க விமான
நிலையத்திலிருந்து நேரே மகேஸ்வரனின் வெள்ளவத்தை இல்லத்துக்குச் சென்று பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அதன் பின்னர் அங்கு நின்ற ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது;
பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்ததன் காரணமாக அவருக்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் பாதுகாப்பை
நீக்கியதன் மூலம் அரசாங்கம் அவரின் படுகொலைக்கு பாதையை சீர் செய்து கொடுத்தது. இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றே
ஆகவேண்டும். யார் இப்பாதகச் செயலை செய்திருந்தாலும் மகேஸ்வரனின் உயிருக்குப் பாதுகாப்பளிக்கத் தவறிய குற்றம் அரசையே சாரும்.
பட்ஜட் விவாதத்தின்போது மகேஸ்வரனை அரசுபக்கம் ஈர்த்தெடுப்பதற்குப் பல பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர் மீது அழுத்தங்களும்
அச்சுறுத்தல்களும் கூட பிரயோகிக்கப்பட்டன.இது குறித்து உடனுக்குடன் மகேஸ்வரன் எனக்குத் தெரியப்படுத்தினார். ஆனால் மகேஸ்வரன் எதற்கும்
அஞ்சாமல் கட்சியின் முடிவுக்கமைய பட்ஜட்டுக்கு எதிராகவே வாக்களித்தார். இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த 12 பாதுகாப்பு
உத்தியோகத்தர்களில் 10 பேர் உடனடியாகவே வாபஸ் பெறப்பட்டிருந்தனர். இதன்மூலம் மகேஸ்வரனின் படுகொலைக்கு அரசு பாதையைத் திறந்து
கொடுத்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்த பிரச்சினைதான் இக்கொலையைச் செய்தவர்கள் யார் என்பது? இப்படுகொலை தொடர்பில் பாரபட்சமற்ற நேர்மையான விசாரணையையே
முழுநாடும் எதிர்பார்க்கின்றது. இந்த வேளையில் கடந்த சிலவாரங்களில் மகேஸ்வரன் தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில் கவனம் செலுத்த
வேண்டும். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கடத்தல்கள், படுகொலைகள் தொடர்பாக எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போது
ஆதாரங்களுடன் பகிரங்கப்படுத்தப்போவதாக அவர் கூறியிருந்தார்.
அத்துடன் அவரது ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு ஈ.பி.டி.பி. போன்ற சில அமைப்புகளால் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் பற்றியும் அவர்
குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இப்படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். மகேஸ்வரனின் பாதுகாப்பு உத்தியோகத்தரும்
காயமடைந்திருக்கின்றார். இவர்கள் பூரணமாக விசாரிக்கப்பட்ட பின்னரே எந்த முடிவுக்கும் வரமுடியுமென புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள்
தெரிவித்திருக்கின்றனர்.
24 மணி நேரத்திற்குள் எதுவும் கூற முடியாது. கொலையாளி மற்றும் சந்தேக நபர் கொட்டாஞ்சேனைக்கு எப்போது வந்தார் எப்படி வந்தார், அவரது
கடந்தகால நடவடிக்கைகள், நடமாட்டங்களை விசாரித்தறியும் வரை இறுதி நிலைப்பாட்டுக்கு வரஇயலாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், செவ்வாய்க்கிழமை மாலையாகும்போது பொலிஸ்மா அதிபர் விடுத்திருக்கும் தகவல் எம் எல்லோரையும் சந்தேகப்பட வைத்துள்ளது.
விசாரணைகளின் பின்னர் புலிகள் மீதான சந்தேகத்தை வெளியிட்டிருப்பின் அது வேறு விடயம். பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருக்கும்
நிலையில் அதனை திசை திருப்பிக் குழப்பும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் திடீரென புலிகள் மீது பழியைப் போடும் விதத்தில் கருத்து
வெளியிட்டிருக்கின்றார்.
புலனாய்வுப் பிரிவினர்கள் இதனால் குழப்பமடைந்து காணப்படுகின்றனர். தாங்கள் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதாகக் கூறுகின்றனர். இதனடிப்படையில்
விசாரணைகளில் உண்மைத்தன்மையை எதிர்பார்க்க முடியாதுள்ளது. விசாரணைகள் முடக்கப்படும் நிலை கூட ஏற்படலாம்.
பொலிஸ் மா அதிபர் இந்த விசாரணைகளில் வீணாக தலையிட்டிருப்பது தவறானதாகும். அரசின் தாளத்துக்கு அவர் ஆட முற்பட்டிருக்கின்றார்.
மகேஸ்வரனுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய குற்றச்சாட்டுடன் அவரது கொலை குறித்த பாரபட்சமற்ற விசாரணையைக் குழப்பும் குற்றச்சாட்டுக்கும்
அரசு பொறுப்பேற்க வேண்டும்.
அரசின் இந்தத் தவறான வழிநடத்தல்கள் காரணமாக நாட்டு மக்களின் இறைமைக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளது. அரசு நீதியான விசாரணையை நடத்தத்
தவறும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மாற்று நடவடிக்கைகளை உடனடியாகவே முன்னெடுக்கத் தயங்கப்போவதில்லை எனவும் ரணில்
விக்கிரமசிங்க இங்கு கூறினார்.
---------------------------(3)
ரூபவாஹினி அலுவலகத்தில் மேர்வின் அடாவடி! ஊழியர் தாக்கியதில் அவரது மண்டை உடைந்தது!!
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாப னத்துக்குள் நேற்றுக்காலை தமது மெய்ப்பாதுகாவலர்கள், பரிவாரங்கள் சகிதம் நுழைந்த தொழில் உறவுகள் மற்
றும் மனித வள பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா, செய்திப்பணிப் பாளரைத் தாக் கியதைத் தொடர்ந்து ரூபவாஹினி ஊழி யர்களினால் தாக்கப்பட்டார்.சுமார் மூன்று மணிநேரம் கூட்டுத் தாபன ஊழியர்களுக்குப் பயந்துபோய் அறை ஒன்றுக்குள் ஒளிந்திருந்த அமைச் சர் மேர்வின் சில்வாவை
இராணுவத்தி னரும் பொலிஸாரும் கடும் பிரயத்தனத் துக்கு மத்தியில் வெளியே கூட்டி வந்தவேளை, ஆவேசத்துடன் சூழ்ந்துகொண்ட ஊழியர் கள்
பொலிஸாரின் எதிர்ப்பையும் மீறி அமைச்சரை நையப்புடைத்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.மண்டை உடைந்து இரத்தம் பீறிட்ட நிலையில், ரூபவாஹினி ஊழியர்களின் கூச்சல்கள், நையாண்டிகளுக்கு மத்தியில் இராணுவத்தினரால் அங்கிருந்து
கூட்டிச் செல்லப்பட்டார் அமைச்சர். அமைச்சரின் குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.தொழில் உறவுகள் மற்றும் மனிதவள பிரதி அமைச்சர் மேர்வின் சில்வா தனது உரைக்கு ரூபவாஹினியில் முக்கியத்துவம் கொடுக்கப்படாதமை
குறித்து முறையிடுவதற்காக நேற்றுக்காலை ரூபவாஹினிக்குச் சென்றுள்ளார்.நேற்றுமுன்தினம் புதன்கிழமை ஆழிப்பேரலை அனர்த்தத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றவேளை
அமைச்சரும் அதில் கலந்து கொண்டிருந்தார்.குறிப்பிட்ட நிகழ்வில் தான் ஆற்றிய உரைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் மேர்வின், அது குறித்து செய்திப்
பணிப்பாளரிடம் முறையிட்டுவிட்டு அவரைத் தாக்கினார் எனத் தெரிவிக்கப்பட்டது.“"மேர்வின் சில்வாவும் அவரது குழுவினரும் காலை 10.05 மணியளவில் ரூபவாஹினியின் செய்திப் பிரிவிற்கு வந்தனர். அமைச்சரின் உரை ஒளிபரப்பு
செய்யப்படாதமை குறித்து முறையிட்டனர். பின்னர் திடீரென அமைச்சர் என்னை கழுத்தில் பிடித்து எமது நிறுவனத் தலைவரின் அறைக்கு இழுத்துச்
சென்றார். அங்கு வைத்து என்னைத் தாக்கினார். நான் வெளியே வரமுயன்றேன். எனினும் அமைச்சரும் அவரது குழுவைச் சேர்ந்த ஒருவரும் என்னை
பிடித்து வெளியே இழுத்துத் தாக்கினர்'' என செய்திப்பணிப்பாளர் டி.எம்.ஜி.சந்திரசேகர தெரிவித்தார்.தமது செய்திப் பணிப்பாளர் தாக்கப்பட்டமையால் சீற்றமடைந்த ரூபவாஹினி ஊழியர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவை சூழ்ந்து கொண்டு அவரை
தாக்க முற்பட்ட போது அமைச்சர் ஓடிச்சென்று நிறுவனத் தலைவரின் அறைக்குள் தஞ்சம் புகுந்தார்.மன்னிப்பு அல்ல; கவலைஅதன் பின்னர் அந்த அறையை சுற்றிவ ளைத்த ஊழியர்கள், குறித்த சம்பவத்துக் காக மேர்வின் சில்வா மன்னிப்புக்கோர வேண்டும் என்று கேட்டனர்.
தவறினால் அறையை விட்டு வெளியே வரும்போது அடிவிழும் என எச்சரித்தனர். ஆனால், செய்திப்பணிப்பாளரைத் தாக்கி யமைக் காக மன்னிப்புக்கோர மறுத்த மேர்வின் சில்வா "வேண்டுமானால் அந்தச் சம்பவத்துக் காக கவலை
தெரிவிக்கிறேன்' என்று பதிலளித்தார்.அவரை அங்கிருந்து மீட்டுச்செல்வதற்கு படையினரும் பொலிஸாரும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஊடக அமைச்சரின் கண்டனமும் உத்தரவும்!ரூபவாஹினியின் செய்திப்பணிப்பாளர் தாக்கப்பட்டமையை தாம் கண்டிப்பதாக தெரி வித்த ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன,
பிரதியமைச்சர் மேர்வின் சில்வாவை பொலிஸார் அழைத்துச்செல்வ தற்கு அனுமதிக்குமாறு ரூபவாஹினி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்."இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். நடக்கக்கூடாத நிகழ்வு'என்றும் அவர் விவ ரித்தார். எனினும் ஊழியர்கள் மசிந்துகொ டுக்கவில்லை. அதனால்
ரூபவாஹினி தலை வரின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் சுமார் மூன்று மணித்தியாலங்கள் "அறைக்கைதி' யாக இருந்தார் மேர்வின் சில்வா.
இதற்கிடையில் ஆத்திரமடைந்த ஊழியர்கள் குளிரூட்டியையும் நிறுத்தினர். இராணுவத்தினர் அதிரடிஊழியர்கள் தர்ம அடி!நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டதையடுத்து இராணுவத்தின் விசேட பிரிவு ஒன்று (பணயக் கைதிகளை மீட்கும் பிரிவு) களத்தில்
இறக்கப்பட்டது. கூட்டுத்தாபன வளாகத்தைச்சுற்றி கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர். பணயக்கைதிகளை மீட்கும் பிரிவும், சிவி லுடையணிந்த பொலிஸாரும் ரூபவாஹினி ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதிரடியாக நுழைந்து
அமைச்சரை வெளியே மீட்டுவந்தனர். இவ்வாறு வெளியே கூட்டிவரப்பட்ட சமயம் கூட்டுத்தாபன வளாகத் துக்குள் நின்ற ஊழியர்கள் அமைச்சரை சுற்
றிவளைத்துத் தாக்கத் தொடங்கினர். ஊழி யர்களின் அடியில் மேர்வின் சில்வாவுக்கு மண் டையுடைந்து இரத்தம் வழிந்தது. அமைச்சரின் வாகனத்தை
நோக்கியும் கற்கள் வீசப் பட்டன. அமைச்சரின் வெள்ளை நிற ஆடை மீது சிவப்புநிறச் சாயமும் ஊற்றப்பட்டது. ஆண்கள் மட்டுமல்லாது ஊழியர்களான
பெண்களும் இந்தத் தாக்குதலில் பங்கேற்று தமது பங்களிப்பை வழங்கினர் எனவும் தெரி விக்கப்பட்டது.ஊழியர்கள் கடுமையாகத் தாக்கியதில் மண்டை உடைந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்த நிலையில் அமைச்சர் மேர்வின் சில்வா அவரது வாகனத்தில்
ஏற்றப்பட்டு அங்கிருந்து வெளியே கூட்டிச் செல்லப்பட்டார். பின்னர் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப் பட்டார். அங்கு அமைச்சரின் தலையில் ஐந்து
தையல்கள் போடப்பட்டதுடன் உடல் முழுவதும் இருந்த உட்காயங்களுக்கும் சிகிச் சை அளிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் அமைச்சருடன் கூட வந்திருந்தவர்களில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

No comments: