Posted on : Thu Apr 3 9:15:00 2008
கிழக்கு மாகாணத் தேர்தல்: அரசின் திட்டமிடப்பட்ட சதி!
தமிழ்க் கூட்டமைப்பு அதனைப் புறக்கணிக்கும் என அறிவிப்பு
தந்திரோபாயக் குள்ளத்தன நடவடிக்கைகள் மூலம் வடக்கிலிருந்து பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில், இப்போது அவசர அவசரமாக
நடத்தப்படவிருக்கும் இந்த மாகாணசபைத் தேர்தல் ஒரு கொடூரமான சதித்திட்டமாகும்.இவ்வாறு தெரிவித்து அத்தேர்தலைப் புறக்கணிக்கும் தனது முடிவை அறிவித்திருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர்
மாவை. எஸ். சேனாதிராஜாவும் ஒப்பமிட்டு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.அந்த அறிக்கையின் முழு விவரமும் வருமாறு:2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய, மகாஜன எக்சத் பெரமுன, ஜனதா விமுக்தி பெரமுன போன்ற கட்சிகளின் ஆதரவுடன் நூலிழையில் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஒரு தீவிர சிங்கள தேசியவாதப் போக்கைக் கடைப்பிடித்து அரசியல் ரீதியாக, இராணுவ ரீதியாக அல்லது மனிதாபிமான ரீதியாக எடுத்த ஒவ்வொரு முடிவிலும் தீவிர சிங்கள தேசியவாதத்தைக் கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டே செயற்பட்டு வந்திருக்கின்றார். அதன்மூலம் அவர் தன்னைத் தீவிர சிங்கள தேசியத் தலைவராக அடையாளம் காட்டி வந்திருக்கின்றார்; வருகிறார்.18 மாதங்களாகக் கலந்தா லோசனை செய்யப்பட்டதன் பின்பு, 19 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசமைப்பில் உள்ள விதிகளையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து தற்போது மேற்கொள்ளப்படும் எத்தனம் தேசியப் பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வைக் காணவேண்டுமென்று எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் முயற்சி ஒரு போலித்தனமான பாசாங்கு என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.தற்பொழுது நடைமுறைக்கு வருவதற்குப் பிரேரிக்கப்பட்டிருக்கும் தீர்வு யோசனைகள் தற்பொழுது இருக்கும் விதிகளுக்கும் குறைவானவையே.
ஆரம்பத்தில் இருந்த இணைந்த வடக்கு கிழக்கிற்குப் பதிலாகத் தற்பொழுது பிரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு, பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள்
மறுக்கப்பட்டு நீதிமன்றத் தீர்மானங்களின் மூலமாகப் பெருமளவில் தரங்குறைக்கப்பட்ட ஏனைய விதிகள் ஆகும்.நியாயம் கேட்கவும் அனுமதி மறுப்புமிகவும் பெரும்பான்மையாகத் தமிழ் மொழிவாரி யானதும், தொடர்ச்சியானதுமான வடக்கு கிழக்கு மாகாணங்கள் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட
இந்திய இலங்கை சர்வதேச ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒன்றாக இணைக்கப்பட்டன. -(ENB குறிப்பு:1)இந்திய இலங்கை ஒப்பந்தம் சர்வதேச ஒப்பந்தம் அல்ல. 2) இ.இ.ஒப்பந்தப்படி வடக்கு கிழக்கு தற்காலிகமாகவே இணைக்கப்பட்டது. நிரந்தரஇணைப்புக்கு கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும் என விதிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் நடத்தி பிரிக்கும்படி இந்தியா 1987 இல் திட்டமிட்டதை -2007 இல்ஒரு படி மேலே போய்பிரித்தபின்னால் தேர்தல் நடத்தி பக்ச பாசிஸ்டுக்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள்.பக்ச பாசிசத்துக்கும் 'இந்திய ஜனநாயகத்துக்கும்' வித்தியாசம் இவ்வளவே!) இணைக்கப்பட்ட இப்பிரதேசம் 18 வருடங்களுக்கும் மேலாகத்
தொடர்ந்து நிலைபெற்று அடுத்தடுத்து வந்த நான்கு ஜனாதிபதிகளால் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள் ளப்பட்டது. 18 வருடங்களுக்குப் பின்பு
இணைப்பை ஏற்படுத்திய நடைமுறையில் ஒரு தவறு இருப்பதாக அடிப்படை மீறல் வழக்கு ஒன்றின் மூலம் ஜே.வி.பி யினால் நீதிமன்றத்
தீர்ப்பொன்றைப் பெற முடிந்தது. சரித்திர ரீதியாகக் கிழக்கில் வாழ்ந்துவந்த தமிழ் குடி மக்கள் வழக்கில் தலையிட்டுத் தங்கள் நியாயத்தை
முழுமையாகவும், நற்பயன் பெறக்கூடியவகையிலும் முன்வைக்கக் கோரப்பட்ட கோரிக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நான்கு ஜனாதிபதிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இணைப்பில் இருப்பதாகக் கூறப்பட்ட நடைமுறைத் தவறைத் திருத்தி சர்வதேச ஒப்பந்தத்தைக்
கடைப்பி டிப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தால் அதை நாடாளுமன்றத்தில் நிறை வேற்றுவதற்குத் தயார் நிலையில்
உள்ளமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட் டது. சமாதான முயற்சிகளைத் தொடர்வதற்கு நடை முறையில் இருக்கும்
இணைந்த வடக்கு கிழக்குப் பிரதேச ஒழுங்கு ஓர் அத்திவாரக் கல்லாக அமையும் என்றும், அது எவ்விதத்திலும் குழப்பப்படக்கூடா தென்றும் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு சர்வ தேச சமூகத்தால் வலியுறுத்திக் கூறப்பட்டது. இருப் பினும், ஜனாதிபதி தமது தீவிர சிங்கள தேசியவாதப் போக்கைக்
கடைப்பிடித்து தன்னைத் தீவிர சிங்கள தேசியத் தலைவராக அடையாளம் காட்டிக்கொண் டார். அதன் மூலமாக இந்திய இலங்கை சர்வதேச
ஒப்பந்தத்தின் மூலம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த தமிழ்பேசும் மக்களுக்கு கிடைக்கப்பெற்ற நன்மைகள் மறுக்கப்பட்டன.மிகவும் மோசமானதாக்குதல்கள்பெரும்பான்மையான தமிழ் மொழி வாரியானதும், தொடர்ச்சியானதுமான வடக்கு கிழக்குப் பிரதேசத் தில் தமிழ் குடிமக்கள் வாழும் கிராமங்கள் மீது
மிகக் கடுமையான விமானத் தாக்குதல்கள், கண்மூடித் தனமான பல்குழல் எறிகணை வீச்சுகள் உட்படத் தீவி ரமான இராணுவத் தாக்குதல்களை
மஹிந்த ராஜபக்ஷ அரசு ஆரம்பித்தது. குறிப்பிட்ட இராணுவத் தாக்கு தல்கள் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீதானவை எனக்
கூறப்பட்ட பொழுதும் பலியானவர்கள் மிகக் கூடுதலாகத் தமிழ் பொது மக்களும், சில சமயங்களில் முஸ்லிம் மக்களுமாவர்.பல நூற்றுக்கணக்கான குடிமக்கள் கொல்லப்பட் டார்கள். பல நூற்றுக்கணக்கானவர்கள் அங்கவீனப் பட்டும், படுகாயமடைந்தும் உள்ளார்கள். குடிமக்க
ளின் சொத்துகள், வீடுகள், தோட்டங்கள், பயிர்கள், கா ல்நடைகள், விவசாயம், கடற்றொழில் உபகரணங்கள் அழிக்கப்பட்டன. ஐந்து லட்சத்திற்கும்
மேற்பட்ட தமிழ் மக்கள் குடிபெயர்ந்து, வாழ்வாதாரங்களை இழந்து அநாதைகளாகவும் அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். வணக்க ஸ்தலங்கள்,
பாடசாலைகள் போன்ற பொதுக் கட்டடங்களும் அழிக்கப்பட்டன. அதேவேளை, இலங்கை அரசுப் படைகளினாலும் அரசுப் படைகளு டன் இணைந்து
செயற்படும் துணை இராணுவக் குழுக்களினாலும் விசேடமாக வடக்கு கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் தமிழ் மக்கள் சட்டத் திற்கு
விரோதமான கொலைகளுக்கும் பலவந்தமான ஆட்கடத்தல்களுக்கும் தொடர்ச்சியாக உட்படுத்தப் பட்டு வருகின்றார்கள். இச் செயல்களின் நோக்கம் தமிழ் மக்களைப் பயமுறுத்தி அவர்களை நாட்டை விட்டு வெளியேறச் செய்வதாகும்.இந்தத் தேர்தல் திட்டமிட்ட சதி!மஹிந்த ராஜபக்ஷவினுடைய அரசின் கடும் இராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெறு கின்றன. இவ்வரசின் இறுதி இலக்கு தமிழ் மக்களை
இராணுவ ரீதியாக அடிபணிய வைத்து அடக்கி ஆட்சி புரிவதேயாகும். ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அரசியல் தீர்வை உருவாக்குவதற்கு விருப்பமற்ற,
வல்லமை யற்ற ராஜபக்ஷ அரசு, ஒரு பெறுமதியற்ற அரசியல் ஒழுங்கை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்கள் மீது திணிப்பதற்கு
முயற்சிக்கின்றது.பிரிக்கப்பட்ட கிழக்கில் அவசரம் அவசரமாக நடத் தவிருக்கும் இத் தேர்தல் ஒரு திட்டமிட்ட கொடூரமான சதி நடவடிக்கையாகும்.தமிழ் மக்கள் மீது நிறைவேற்றப்படும் பாதகமான செயல்களை மறைப்பதற்கு ஒரு புகைமண்டலமாகத் தன்னுடைய தீய நோக்கங்களை
அடைவதற்காக ராஜ பக்ஷ அரசு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (பிள்ளையான் குழு) என்ற ஆயதத் தமிழ்த் துணைக்குழு வுடன் இணைந்து
செயற்படுகின்றது.உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் போதிய சுயாட்சி என்ற தமிழ்பேசும் மக்களின்
நியாய பூர்வமான அரசியல் அபிலாஷைகளைத் தடை செய் வதே ராஜபக்ஷ அரசின் திடமான நோக்கமாகும். மேலும் இப்பாதையில் இடம்பெற்றிருக்கும்
முன்னேற்றங் களைப் பின்நோக்கித் தள்ளுவதும் ராஜபக்ஷ அரசின் நோக்கமாகும். அரசுக்குத் தேவைஒரு கையாள்தான்அபிவிருத்தி என்ற போர்வையில் வடக்கு கிழக் குப் பிராந்தியத்தின் கிழக்குப் பகுதியில் குறிப்பிட்ட பிரதேசங்களை உயர் பாதுகாப்பு வலயங்களாகவும்
தொழில் வளர்ச்சி வலயங்களாகவும் சுற்றுச்சூழல் பாது காப்பு வலையங்களாகவும் பிரகடனம் செய்து கிழக்குப் பகுதியைச் சிங்கள மயமாக்கும்
நோக்கத்துடன் அபிவி ருத்தி வேலைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான நிதியுதவியைத் திரட்டுவதற்கு அரசுக்கு ஒரு தமிழ் கையாள்
தேவைப்படுகின்றது.ராஜபக்ஷ அரசினுடைய தயவில் தங்கியிருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு ராஜபக்ஷ வின் கட்டளைகளை நிறைவேற்றத் தயாராக
உள்ளது. ராஜபக்ஷ அரசு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மூலம் தமிழ் மக்களைக் கட்டாயப்படுத்தி வாக்க ளிக்கச் செய்து அதன்மூலம் பெறப்படும்
ஆதரவை தமிழ் மக்கள் தனது அரசின் கொள்கைகளுக்கு வழங் கிய ஆதரவாகக் காட்டுவதற்கு முற்படுகின்றது. மிக வும் கொடூரமான இராணுவத்
தாக்குதல் மூலம் மோச மாகப் பாதிக்கப்பட்டு, தொடர்ந்தும் இராணுவ மயமாக் கப்பட்ட சூழலில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள் ,தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகளின் பலவந்தமான கோரிக் கைகளுக்கு அடிபணிந்து செயற்படுவார்கள் என்று அரசு எதிர்பார்க்கின்றது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆயுத பலம் பெற்ற அரச துணை ஆயுதக் குழு. தமது பலவந்தமான கோரிக்கைகளை மீறும் தமிழ்பேசும் மக்களைத்
தேர்தலுக்குப்பின் தண்டிப்பதற்கு தமிழ் மக்கள் விடுத லைப் புலிகள், அரசு அனுமதி பெற்றவர்களாகக் கரு தப்படுகின்றார்கள். சட்ட ஒழுங்குக்குப்
பொறுப்பான அரச கட்டமைப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளி னால் அடுத்தடுத்து இடம்பெற்ற சட்டமீறல்கள் சம்பந் தமாக உரிய
நடவடிக்கைகளை ஒருபோதும் எடுக்க வில்லை. இதைத் தமிழ் மக்களும் தமிழ் மக்கள் விடுத லைப் புலிகளும் நன்கு அறிவார்கள்.தமிழருக்குத் தீங்கிழைத்த மிக மோசமான அரசுகடந்த 2 வருடங்களுக்குள் இந்த அரசினால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அளவற்ற தீங்குகளும், சேதங்களும் நாடு சுதந்திரமடைந்த பின்
ஆட்சியிலி ருந்த எந்த அரசாலும் செய்யப்படவில்லை. அவர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் அவர்க ளைக் குழிதோண்டிப்
புதைப்பதற்காக அரசு திட்டமிட் டுள்ள பயங்கரமான பொறிக்குள் தமிழ்பேசும் மக்கள் அகப்படக்கூடாது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளி னதும் அரச
ஆயுதப் படைகளினதும் வெளிப்படை யான அல்லது வெளிப்படையற்ற ஆயுதப்பலம் மற் றும் ஏனைய பலவந்தமான பலங்களினூடாக இத் தேர் தல்
மூலம் தனது கபடமான அரசியல் நிகழ்ச்சித்திட் டத்தை நிறைவேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எத்தனிக்கின்றார்.மிகவும் கவனமான ஆலோசனைகளின் பின்பு, எமது அடிப்படை அரசியல் கொள்கைகளைப் பாதக மான முறையில் விட்டுக்கொடுப்பதையோ அல்லது
எமது அடிப்படைக் கொள்கைகளுக்கு முற்று முழுதாக எதிராக நடத்தப்படும் தேர்தலில் பங்கெடுப்பதையோ, கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகத்
தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அடிப்படைக் கொள்கைகளுக்கு மாறாக செயற்படுவதையோ ஏற்க முடியாது என்ப தால் கிழக்குத் தேர்தலில்
நாம் போட்டி யிடுவதில்லை என்ற தீர்மானத்தை எடுத் திருக்கின்றோம். என்று உள்ளது.
02 April, 2008 - Published 16:54 GMT
BBC Sinhala
LTTE political party hands in nominations.
Peoples Front of Liberation Tigers (PFLT), the political party of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) registered with the Election Commissioner's
Department has handed over nomination papers for the forthcoming Eastern Provincial Council Elections.
The nomination papers were handed on Wednesday to the Ampara Government Agent, Sunil Kannangara.
Seventeen candidates including two women handed over the nomination papers signed by the Secretary of the Peoples Front of Liberation Tigers, Yogaratnam Yogi.
All of the candidates have in their applications given their address as No.392, Galle Road, Colombo.
Asked about the authenticity of the nomination papers handed over by the PFLT, a spokesman for the Election Commissioner's Department said as long as
nomination papers had been signed by a Justice of the Peace (JP), the department is obliged to accept them.
"The signatures will be checked and the identity will not be questioned", he said.
Only fourteen of the seventeen applicants have given their National Identity Card numbers in the nomination papers which were on public display at the Ampara
District Secretariat.
Since this is the first time PFLT is fileding candidates for an election, attempts by the BBC Sandeshaya to obtain a verification from the LTTE on the authenticity of
the nominations has not been successful.
The Peoples Front of Liberation Tigers (PFLT) was formed in 1989.
கிழக்குத் தேர்தல் களத்தில் ஹக்கீம், ஹசன் அலி, பசீர்
[03 - April - 2008]
* எம்.பி.பதவியை துறந்தனர்; இன்று வேட்பு மனு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட மூன்று எம்.பி.க்கள் தமது
பதவியை நேற்று புதன்கிழமை இராஜிநாமா செய்ததுடன் இன்று வியாழக்கிழமை வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடன் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி, தவிசாளர் பசீர் சேகு தாவூத் ஆகியோரே இராஜிநாமா
செய்திருக்கின்றனர்.
இவர்கள் மூவரும் நேற்று புதன் கிழமை பிற்பகல் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக கித்துல்கொடவிடம் தமது பதவி விலகல்
கடிதங்களை கையளித்தனர்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவதற்காகவே தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜிநாமா செய்வதாகவும் அம்மூவரும் தெரிவித்தனர்.
ஐ.தே.க.வுடனான தேர்தல் உடன்பாட்டுக்கமைய திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமை வேட்பாளராக ரவூப் ஹக்கீமும், அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளராக ஹஸன் அலியும், மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளராக பஸீர் சேகு தாவூத்தும்
களமிறங்கவுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை இவர்கள் மாவட்டங்களுக்குச் சென்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.
இதேவேளை, ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டத் தவறிய எம்.
நவ்ஸாத் (சம்மாந்துறை) நியமிக்கப்படவுள்ளார்.
ஏனைய இரு பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடங்களுக்கு எவரை நியமிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் மிக விரைவில் தீர்மானிக்குமென தெரிவித்த அக்கட்சியின் செயலர் ஹஸன் அலி மேலும் தெரிவித்ததாவது;
முஸ்லிம் காங்கிரஸை அழிக்க காத்திருக்கும் சக்திகளுக்கு தக்கபாடம் புகட்டவும், முஸ்லிம் முதலமைச்சர் கனவை நனவாக்கவுமே இத்தீர்மானத்தை நாம் மேற்கொண்டோம்.
முஸ்லிம் சமூகத்தின் நலன்கருதி மேற்கொள்ளப்பட்ட இத் தியாகம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி வைத்தியமளித்திருக்கும். கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களுடைய அபிலாஷைகளை நிறைவேற்ற இதன்மூலம் மேலும் பலன்கிட்டியுள்ளது என்றார்.
இதேசமயம், இராஜிநாமா செய்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்கள் நேற்று ஜாவத்தை முஸ்லிம் பள்ளியில் சமய நிகழ்வில்
ஈடுபட்டனர். இதில் பெரும் எண்ணிக்கையிலான கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
மன்னாரில் படையினரும் புலிகளும் பரஸ்பர எறிகனை(ணை) வீச்சு
வீரகேசரி இணையம் 4/1/2008 3:20:17 PM
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் இன்று அதிகாலை முதல் உயிலங்குளம் மற்றும் மாந்தை மேற்கு பகுதிகளில் கடும்
சண்டை இடம்பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து படையினர் மன்னார் தள்ளாடி படை முகாம்,மற்றும் த(வ!)ங்காலை தோமஸ் படை முகாம் ஆகியவற்றில் இருந்து புலிகளின்
இலக்குகள் மீது தொடர்ச்சியான ஷெல் தாக்குதலைனை மேற்கொண்டனர்.
இதன் போது புலிகளின் பகுதியில் இருந்தும் படையினரின் இலக்குகள் மீது எறிக(ணை)னை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. சில எறிகனை(ணை)கள் முருங்கன் அரசினர் வைத்தியசாலை வளாகத்தினுள் வீ(ழ்)ந்து வெடித்தன.
இச்சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன் போது 02 கட்டிடங்கள் சேதமடைந்(த்)தன.
அருகிலுள்ள பாடசாலை வளாகத்தினுள்ளும் எறிக(ணை)னைகள் வீ(ழ்)ந்து வெடித்த போதும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை.இத்தாக்குதலை புலிகளே மேற்கொண்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இரு தரப்புக்கிடையிலும் தொடர் மோதல்கள் இடம்பெற்ற போதிலும் சேத விபரங்கள் வெளியாகவில்லை.
No comments:
Post a Comment