ENB குறிப்பு: உலகமயமாக்கலுக்கு சேவகம் செய்ய ஒன்றுபடும் SLFP, UNP,'உதயன்' தமிழர். இந்த நாசகார சிந்தனை தொடரும் வரை ஈழதேசிய விடுதலை பகற்கனவே!
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பாக சர்வதேச கொள்கைக்கு ஏற்றவகையில் அரசியலமைப்பில் தேவையான வகையில் மாற்றங்களை
ஏற்படுத்தப்படல் வேண்டும்.
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை -ஏகாதிபத்திய வர்த்தக நிபந்தனைகளுக்கமைய enb-மறுசீரமைப்பதற்கு அரசாங்கத்தின் பரிந்துரைகளுக்கு ஐ.தே.க பூரண ஆதரவு. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ரணில் கடிதம்
வீரகேசரி இணையம் 4/4/2008 10:40:00 PM -
இலங்கை புடைவைக் கைத்தொழில் பிரிவிற்காக 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பை மறுசீரமைப்பதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்படுகின்ற பரிந்துரைகளுக்கு பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய தேசியக்கட்சி பூரண ஆதரவை வழங்கும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி, தலைவருமான ரணில் விக்ரம சிங்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பாக சர்வதேச கொள்கைக்கு ஏற்றவகையில் அரசியலமைப்பில் தேவையான வகையில் மாற்றங்களை
ஏற்படுத்தப்படல் வேண்டும்.உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைவாகவே இந்த பரிந்துரைகள் தேவைப்படுகின்றது.சிவில் மற்றும் அரசியல் உரிமைகள்
தொடர்பாக சர்வதேச கொள்கை உள்ளிட்ட உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.
எனினும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இலங்கையில் சட்டரீதியான பெறுமதி இல்லை என்பதையே எடுத்தியம்புகின்றது.ஐக்கிய தேசியக்கட்சி
அரசாங்கத்தின் போது சர்வதேச கொள்கையை 1980 ஆம் ஆண்டே இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேபோல முதலாவது மறுசீரமைப்பு
யோசனைகளை 1997 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இவற்றை முன்னெடுப்பதற்கு தேசிய ரீதியிலான சட்டம் தேவையில்லை என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு
இருந்த அரசாங்கத்தினால் இந்த சட்டம் அமுல் படுத்தப்பட்டாலும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
இவ்வாறானதொரு சூழ் நிலையில் அரசியலமைப்பு மறுசீரமைப்பிற்கான பரிந்துரைகளை அரசாங்கம் முன்வைக்குமானால் எவ்விதமான
எதிர்ப்புகளுமின்றி பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
---------------------------------------------
யாழ் உதயன்: ஆசிரியர் தலையங்கம்!
மேற்குலகின் காதிலும் பூ!
ஏற்கனவே தனது போர்த் தீவிரப் போக்கினால் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கோட்டைவிட்டு, சிக்கலில் மாட்டி நிற்கும் இலங்கை அரசு, இப்போது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார, ஏற்றுமதி சலுகைகளையும் பறிகொடுத்து, நாட்டை நட்டநடுவீதியில் கொண்டுபோய் நிறுத்தப் போகின்றது என்பது பெரும்பாலும் துலாம்பரமாகி வருகின்றது.ஏற்றுமதிச் சலுகைகளை நீடிப்பதற்கு கட்டாயம் நிறைவு செய்யப்படவேண்டிய கடப்பாடு என ஐரோப்பிய நாடுகள் விதித்திருக்கும் நிபந்தனையை
அம்சத்தை நிறைவு செய்யாமல் உச்சுவதற்கு, இலங்கை அரசியலில் தான் வழமையாகக் கையாளும் அதே தந்திரோபாயத்தைக் கைக்கொள்ள
எத்தனிக்கின்றது மஹிந்தவின் நிர்வாகம்.இலங்கையிலிருந்து தைக்கப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஐரோப்பிய நாடுகளில் அவற்றை இறக்குமதி செய்வதற்கு விசேட
வரிச்சலுகைகளை ஐரோப்பிய நாடுகள் வழங்குகின்றன. இதன் காரணமாக ஏனைய மூன்றாம் மண்டல நாடுகளை விட அதிகளவிலும் போட்டிபோட்டுக்
கொண்டும் ஏற்றுமதியில் ஈடுபட இலங்கையினால் முடிகின்றது.அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளை ஊக்குவித்து, மேம்படுத்திவிடும் நோக்குடன் இந்த விசேட சலுகைகளை வழங்கும் மேற்குலகம், இந்தத்
தாராளத்தைப் பெறும் நாடு மனித நேயத்தைப் பேண வேண்டும் என்பதில் மிக உறுதியாக உள்ளது.அதாவது, வேறு வார்த்தைகளிற் சொல்வதானால் இந்த வசதியின் கீழ் விசேட வாய்ப்புகளையும், சிறப்புச் சலுகைகளையும் பெறும் ஒரு தேசம்
ஒருபுறம் இதன் மூலம் இலாபமீட்டிக்கொண்டு, மறுபுறம் அந்த நயத்தில் கிடைக்கும் நிதி மூலம் மனித நேயத்தைக் குழிதோண்டிப் புதைக்கக்கூடாது
என்பதே மேற்குலகத்தின் கருத்து நிலை. ஆனால், மேற்குலகம் எது நடக்கக் கூடாது என எதிர்பார்க்கின்றதோ, அந்த நாசப்போக்குத்தான் பெருமெடுப்பில் இலங்கையில் நடந்தேறுகின்றது
என்பதே இங்கு துரதிஷ்டமாகும்.இந்தச் சலுகைகளைப் பெறும் நாடு ஒன்று. மனித உரிமைகளைச் சரிவர நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக சர்வதேச சிவில், அரசியல் உரிமைகள் அடங்கிய பட்டயத்தை ஓர் அளவுகோலாக நியமம் செய்திருக்கும் மேற்குலகு, அந்தப் பட்டயத்தை ஏற்று, அங்கீகரித்து, அதில் உள்ள அம்சங்களைத் தனது சட்டத்தில் சேர்த்துக்கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்தும் நாடுகளுக்கே இந்த விசேட வரிச்சலுகைகள் உட்பட்ட உதவிகளை வழங்க முடியும் என நிபந்தனை விதித்துள்ளது.இந்த நிபந்தனையை நிறைவு செய்ய முடியாத அல்லது நிறைவு செய்வதின் மூலம் மனித உரிமைகளை நிலைநிறுத்த விருப்பமும், இசைவும்,
திறனும், லாயக்குமற்ற இலங்கை, அதிலிருந்து தப்பிப் பிழைத்துக் கொள்வதற்காக தந்திரோபாய அரசியல் உச்சுதல் ஒன்றில் ஈடுபட்டிருக்கின்றது.சர்வதேச சிவில், அரசியல் பட்டயத்தை இலங்கை உயர் நீதிமன்றின் பரிசீலனைக்கு விட்ட இலங்கை ஜனாதிபதி, அந்தப் பட்டயத்தில் உள்ள
பெரும்பாலான முக்கிய அம்சங்கள் இலங்கையின் அரசமைப்பிலும் சட்டங்களிலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன என்ற உயர்நீதிமன்றின் கருத்தைப்
பதிலாகப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்.அதை வைத்துக்கொண்டு மேற்படி சர்வதேசப் பட்டயத்தில் உள்ள விடயங்கள் இலங்கைச் சட்டங்களிலும், அரசமைப்பிலும் பெரும்பாலும் இருப்பதனால்
அவற்றைத் தனியாகச் சட்டமாக்கத் தேவையில்லை என்றும், இனித் தனியான சட்டங்களைக் கொண்டுவந்துதான் அந்த சர்வதேசப் பட்டயத்தின்
ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த முடியும் என்ற நிலைமை இல்லை என்றும் இலங்கை அரசுத் தரப்பில் இப்போது சாக்குச் சொல்லப்படுகின்றது.இலங்கையின் இந்த சளாப்பல் மேற்குலகைத் திருப்திப் படுத்துமா? மஹிந்தரின் வழக்கமான அரசியல் தந்திரோபாய ஏமாற்று எத்தனத்துக்கு ஏனைய
தரப்புகள் பலியாகின்றமைபோல மேற்குலகும் எடுபட்டுப் போகுமா? என்பவற்றைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.எது எப்படியோ, இவ்விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்து, ஒரு தீர்ப்புப் போல கட்டுப்படுத்தும் நியாயாதிக்கமோ சட்ட வலுவோ
கொண்டதல்ல. அது ஜனாதிபதிக்கான வெறும் ஆலோசனை மட்டுமே. ஒரு விடயத்தை ஒட்டி உயர்நீதிமன்றின் கருத்தை ஜனாதிபதி கேட்டார். தனது
ஆலோசனையை உயர்நீதிமன்றம் வழங்கியது. அவ்வளவே. "ஆலோசனை நியாயாதிக்கம்' என்ற அரசமைப்பின் பிரிவின் கீழ் வழங்கப்பட்ட வெறும்
யோசனை மட்டுமே அது என்பது கவனிக்கத்தக்கது.எனவே, மேற்படி ஆலோசனையை ஒரு தீர்ப்புப் போல பாவனை காட்டி, இத்தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கி விட்டதால் சர்வதேச சிவில், அரசியல்
உரிமைப் பட்டயத்தில் உள்ள விடயங்கள் எல்லாம் இலங்கைச் சட்டங்களில் அடங்கிவிட்டன என்று "பேய்க்காட்டுவதற்கு' ஏமாற்றுவதற்கு எடுபடும்
அளவுக்கு மேற்குலகின் சட்ட அறிவு அவ்வளவுக்கு ஒன்றும் சீர்கெட்டுவிடவில்லை.ஆகவே, அடிப்படைக் கடப்பாட்டை நிறைவு செய்யாமல் தவறுவதன் மூலம் மேற்குலகுக்கான ஏற்றுமதிச் சலுகையை கொழும்பு நிர்வாகம்
கோட்டைவிட்டுப் பறிகொடுக்கப் போகின்றது. வருடாந்தம் சுமார் இருபதாயிரம் கோடி ரூபாவுக்கு மேற்பட்ட ஏற்றுமதிச் சலுகை பறிபோகப் போகின்றது.
பல நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகள் செயலிழக்கப் போகின்றன.இவற்றுக்கு அப்பால் பல்லாயிரக்ணக்கில் தொழிலாளர்கள் வேலை
இழக்க, அவர்களின் குடும்பங்கள் நடுவீதிக்கு வரப்போகின்றன."கெடுவான் கேடு நினைப்பான்.' அவனை யாரும் திருத்த முடியாதே.....!
குறிப்பு:அழுத்தம் நமது
குடா நாட்டில் கடந்த 2 வருடங்களில் மாத்திரம் 750 பேர் வரை காணமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இணையத்தள நிருபர் 4/5/2008 3:36:10 PM -
யாழ்.குடா நாட்டில் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் சுமார் 750 பேர் காணாமல போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . இது தொடர்பான முறைப்பாடுகள் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகததில் செய்யப்பட்டு;ள்ளன. அதேநேரம் மேலும் பலர்
காணாமல் போயுள்ளமை தொடர்பாக உறவினர்கள் தமது முறைப்பாடுகளை செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்குத் தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச அவதானிகளை வரவழையுங்கள் பிரிட்டிஸ் லிபரல் கட்சி இலங்கை அரசிடம் வலியுறுத்து
இணையத்தள நிருபர் 4/5/2008 1:45:25 PM
மே 10 இல், இடம் பெற உள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச
கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என பிரிட்டிஸ் லிபரல் ஜனநாயகக் கட்சி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ரோஹித
போகொல்லாகமவிடம் நேரில் வலியுறுத்தி உள்ளது .
பிரிட்டீஸுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிற்கும் பிரிட்டிஸ் லிபரல் ஜனநாயகக் கட்சியின்
நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவியிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே இது குறித்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஒன்றின் நம்பகத் தன்மையும் , சட்ட பூர்வத்தன்மையும் கண்காணிப்பாளர்களின் பிரசன்னத்திலேயே தங்கியுள்ளன என இலங்கை
வெளிவிவகார அமைச்சருக்கு மேற்படி பிரிட்டிஸ் எம்.பி . தெளிவிபடுத்துயுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
37 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 1316 பேர் போட்டிக்களத்தில் குதிப்பு
[04 - April - 2008]
* கிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பூர்த்தி மே 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 1,316
வேட்பாளர்கள் குதித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கா நேற்று வியாழக்கிழமை பிற்பகல் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபைக்கு 37 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும்
வேட்பு மனுத் தாக்கல் செய்யும் இறுதி நாளான நேற்று அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 377 வேட்பாளர்களினதும் மட்டக்களப்பில் 378 வேட்பாளர்களினதும் அம்பாறையில் 561 வேட்பாளர்களினதும்
நியமனப்பத்திரங்கள் மாவட்ட தெரிவத்தாட்சி உதவித் தலைமை அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல் செயலக வட்டாரங்கள்
தெரிவித்தன.
திருகோணமலையில்...
திருகோணமலை மாவட்டத்தில் பத்து ஆசனங்களுக்காக பத்து அரசியல் கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 377 வேட்பாளர்கள்
களத்தில் குதித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இந்தத் தேர்தலுக்காக 14 அரசியல் கட்சிகளும் 19 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
எனினும், இதில் முஸ்லிம் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பு, ஈழவர் ஜனநாயக முன்னணி, அகில இலங்கை தமிழ்க்
கூட்டணி ஆகியவற்றின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதற்கமைய இத்தேர்தலில் திருமலை மாவட்டத்திலிருந்து 10 கட்சிகளைச் சேர்ந்த 130 வேட்பாளர்களும் 19 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 247
வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். இவர்களை 2,42,463 வாக்காளர்கள் தெரிவுசெய்வர்.
மட்டக்களப்பில்....
மட்டக்களப்பில் 11 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 378 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தத் தேர்தலுக்காக 14 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.
எனினும், இதில் ருகுணு ஜனதாக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றினதும் ஏ.எல்.எம்.பாரூக் தலைமையிலான சுயேச்சைக்
குழுவினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதற்கமைய இத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 12 கட்சிகளைச் சேர்ந்த 168 வேட்பாளர்களும் 15 சுயேச்சை குழுக்களைச் சேர்ந்த 210
வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். இவர்களை 3, 30, 459 வாக்காளர்கள் தெரிவு செய்வர்.
இந்த மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் ஜனநாயக தேசியக் கூட்டணி, ஈழவர் ஜனநாயக முன்னணி, ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி., ஐக்கிய சோசலிசக் கட்சி, விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, ஷ்ரீ லங்கா தேசிய முன்னணி, முஸ்லிம்
விடுதலை முன்னணி, ஷ்ரீ லங்கா மக்கள் முற் போக்கு முன்னணி மற்றும் சிங்கள மகா சம்பந்த பூமிபுத்திர கட்சி என்பன போட்டியிடுகின்றன.
இதற்கமைய மட்டக்களப்பு, பட்டிருப்பு மற்றும் கல்குடா தொகுதிகளிலிருந்து 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
அம்பாறையில்...
அம்பாறையில் 14 ஆசனங்களுக்காக 11 அரசியல் கட்சிகள் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 561 வேட்பாளர்கள் களத்தில் குதித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் இந்தத் தேர்தலுக்காக 14 அரசியல் கட்சிகளும் 26 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
எனினும், இதில் ஷ்ரீலங்கா முற்போக்கு முன்னணி, அகில இலங்கை தமிழர் கூட்டணி, ஷ்ரீலங்கா தேசிய முன்னணி கட்சிகளதும் நான்கு சுயேச்சைக்
குழுக்களதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதற்கமைய இத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலிருந்து 11 கட்சிகளைச் சேர்ந்த 187 வேட்பாளர்களும் 22 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 374
வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர். இவர்களை 4,09,308 வாக்காளர்கள் தெரிவுசெய்வர்.
விமல் வீரவன்ச இடைநிறுத்தம் ஜே.வி.பி.மத்திய குழு தீர்மானம் [05 - April - 2008] எம்.ஏ.எம்.நிலாம்
ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்றக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச அக்கட்சியிலிருந்து நேற்று
வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நேற்றுக் கூடிய ஜே.வி.பி.யின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமையவே அவர் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து
இடைநிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலமாக ஜே.வி.பி.க்குள் விமல் வீரவன்சவின் செயற்பாடுகள் குறித்து மிக அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்துள்ளது. வீரவன்சவின்
கருத்துகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பி. தொழிற்சங்கத் தலைவருமான லால்காந்தவும் கட்சியின் உயர் மட்டத்தைச் சேர்ந்த
பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
சமீபத்தில் பிள்ளையான் குழுவின் ஆயுதப்பாவனை குறித்து விமல் வீரவன்ச தெரிவித்த கூற்றுக்கள் ஜே.வி.பி.க்குள் பெரும் சலசலப்பை
ஏற்படுத்தியது. அத்துடன் ஜே.வி.பி. அரசை கடுமையாக விமர்சிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வீரவன்ச அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு
மறைமுகமாகச் செயற்பட்டமையும் ஜே.வி.பி. உயர் மட்டத்தை சினம் கொள்ளச் செய்திருந்தது.
இந்த நிலையிலேதான் நேற்று வெள்ளிக்கிழமை கூடிய ஜே.வி.பி.யின் மத்திய குழுக்கூட்டத்தில் வீரவன்சவின் செயற்பாடுகள் தொடர்பாக நீண்ட நேரம்
ஆராய்ந்ததன் பின்னர் அவரைக் கட்சி உறுப்புரிமையிலிருந்து இடை நிறுத்தம் செய்வதென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சியின் நேற்றைய
மத்திய குழுக் கூட்டத்தில் விமல் வீரவன்ச கலந்துகொள்ளாத நிலையிலேயே கட்சி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை, கடந்த சில வாரங்களாக விமல் வீரவன்சவும் ஏற்கனவே கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்
நந்தனகுணதிலக்கவும் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளதாகவும் இருவரும் தொடர்ந்து அரசுக்கு பக்க பலமாக இருந்து செயற்படத்
தீர்மானித்திருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
No comments:
Post a Comment