Sunday, 25 May 2008

மரண விழாவில் வாழ்ந்த மனிதன்.

மரண விழாவில் வாழ்ந்த மனிதன்.

உன் மூச்சடங்கிப் போனதோ,
உன் மூச்சடங்கிப் போனதோ,

பகையின் விழிக்குள் நின்று குமுறிய எரிமலையே
நீ அடங்கிப் போனாயோ,
நீ அடங்கித்தான் போனாயோ,
நம்ப மனம் மறுக்கிறதையா!
உன்னை நோய் பிடித்துச் சென்றபோதும்,
உன்னை நோய் பிடித்து அணுவணுவாகத் தின்றபோதும்,
நீ பாய் விரித்துப் படுப்பதில்லையே,
நீ பாய் விரித்துப் படுத்ததில்லையே!
பகையைத் தேடித்தேடி சுழன்றடித்த சூறாவளியே,
பகையைத் தேடித்தேடி சுழன்றடித்த சூறாவளியே,
உன் மூச்சடங்கிப் போனதோ,
உன் மூச்சடங்கிப் போனதோ.
(பிரிகேடியர் பால்ராஜின் மரணவிழா ஊர்வலத்தில் பாடப்பட்ட புலம்பல் பா. 23-05-2008)

No comments: