Thursday, 3 July 2008

காறி உமிழுங்கள் இந்தக் 'காந்தி தேசத்தை'!!

இலங்கைக்கு வழங்கப்படும் இராணுவ ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படவுள்ளது Wednesday, 02 July 2008 12:56
இலங்கைப் படையினருக்கு இந்தியாவினால் வழங்கப்படும் இராணுவ பயிற்சி உள்ளிட்ட ஏனைய ஒத்துழைப்புக்கள்
விரிவுபடுத்தப்படவுள்ளதாக டெகான் ரொனிகல் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இலங்கைக்கு வழங்கப்படும் ஆயுத உதவிகளையும் பெருமளவில் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவினருடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையைத்
தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொறியியல் மற்றும் இலத்திரனியல் பயிற்சிகளை விரிவுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது வழங்கப்பட்டுவரும் இராணுவப் பயிற்சிகளை மேலும் விஸ்தரிப்பதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
இதுவரையில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இராணுவ உதவிகளை இந்திய விஸ்தரித்துள்ளதாக இலங்கையின் இராணுவத் தளபதி
சரத் பொன்சேகா இந்திய பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
நன்றி: LANKA DESENT

No comments: