Monday, 21 July 2008

தட்டுங்கள் திறக்கப்படாது.

தட்டுங்கள் திறக்கப்படாது.

சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு
[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 12:01 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர். இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:
பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவதுதடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.
சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம்பெற்றுவருகின்றது.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.
சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப் படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.
செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.
உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம்.
இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.
தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.
இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது,
அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில்
மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.
மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும்
தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்க் மாநாட்டை குழப்ப மாட்டோம்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு [ஞாயிற்றுக்கிழமை, 20 யூலை 2008, 03:29 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்]
சார்க் மாநாட்டை குழப்புவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும்
சுதந்திரப் பேராட்டத்திற்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "த சண்டே லீடர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் வழங்கிய பேட்டியின் முழுவிபரம்:
அரசாங்கம் அண்மையில் 1-4 பேஸ் மற்றும் மன்னார் நெற்களஞ்சியம் ஆகிய முகாம்களை கைப்பற்றியதன் மூலம் தமிழீழ
விடுதலைப் புலிகளின் மரபு ரீதியான போர் ஆற்றலை வலுவிழக்கச் செய்துள்ளதாக அறிவித்திருந்தது. உங்களின் பார்வையில்
விடுதலைப் புலிகள் எவ்வளவு பலவீனமடைந்துள்ளனர்?
1-4 பேஸ் என்ற முகாம் தற்போது எமது கைவசம் இல்லை. சிறிலங்காப் படையினர் மன்னார் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்வதனால் அவர்கள் இடம்பெயர நேரிட்டுள்ளது.
இந்த வயல்வெளிகள் மக்கள் மக்களின் பிரதான வாழ்வாதாரமாக காணப்படுகின்றது. குறித்த பிரதேச மக்களை வெளியேற்றி அதன் மூலம் மன்னார் நெற்களஞ்சியம் பகுதியை கைப்பற்றியதாக அறிவிப்பதன் மூலம் சிங்கள அரசாங்கத்தின் மனோநிலை தெளிவாக புலனாகின்றது.கடந்த 30 ஆண்டு காலமாக சிறிலங்கா அரசாங்கங்கள் இவ்வாறான போலியான பிரசார நடவடிக்கைகளை வலிந்து மேற்கொண்டு வருகின்றன.
அனைத்து காலங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் மரபு ரீதியான போராற்றலின் மூலம் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து தமிழ் மக்களை பாதுகாத்து வந்துள்ளது. களநிலைமைகளுக்கு ஏற்ப நாம் மாறுமட்ட அணுகுமுறைகள் மற்றும் தந்திரோபாயங்களை பயன்படுத்துகின்றோம்.
கடந்த காலங்களிலும், தற்போதும் எந்த வகையிலான இராணுவத் தாக்குதல்களையும், சவால்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய வல்லமையை விடுதலைப் புலிகள் மிகத்தெளிவாக உலகிற்கு பறை சாற்றியுள்ளனர்.
சமீப காலமாக தெற்கில் பேருந்து மற்றும் தொடருந்துகளில் தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன, இந்த சம்பவங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மீதே குற்றம் சுமத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக பலவீனமடைந்த காரணத்தினாலா பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன?
ஒருபோதும் பொதுமக்களை இலக்கு வைத்து நாம் தாக்குதல் மேற்கொள்ளவில்லை. நாம் பலவீனமடையவில்லை, தாயகப்
பிரதேசத்தில் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்தும் மேற்கொள்வோம். சிறிலங்கா அரசாங்கமே பொதுமக்களை
இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்கின்றது.
உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீது மகிந்த அரசாங்கம் போர் தொடுத்துள்ளது. இதனை ஏன் நீங்கள்
இவ்வாறு நோக்கக் கூடாது?
ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களின் மூலம் படைத்தரப்பைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும், முகவர் நிறுவனங்களும் பாரியளவு வருமானம் ஈட்டுகின்றனர். இவர்கள் போர் முடிவுக்குக் கொண்டுவருவதனை ஒருபோதும் விரும்ப
மாட்டார்கள். துணை இராணுவக் குழுக்களை பயன்படுத்தி இழி செயல்களை மேற்கொண்டு போர் தொடர்வதை இவர்கள் உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு மிகவும் பலமானதோர் புலனாய்வு வலையமைப்பு காணப்படுகின்றது. விடுதலைப்
புலிகள் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்ளாவிடின் உங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி யார் இதனை மேற்கொள்கின்றனர்?
ஆம். எம்மிடம் மிகவும் வலுவான ஓர் புலனாய்வு வலையமைப்பு காணப்படுகின்றது. அதன் மூலம் எமது மக்களையே நாம்
பாதுகாப்பதற்கு விழைகின்றோம். தேவையற்ற விடயங்களை ஆராய்வதில் எமது நேரத்தை வீணடிக்க நாம் தயாரில்லை.
எனினும் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்வோர் தொடர்பில் ஊகங்களை வெளியிட முடியும். இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் தரப்பினரை அடக்குமுறைக்கு உள்ளாக்குவதற்கு ஒர் குழு இயங்கி வருகின்றது.
மேர்வின் சில்வா போன்ற நபர்கள் இந்த குழுவின் முக்கிய உறுப்பினர்களாகும். அரசியல் ரீதியான அதிகாரத்தைப்
பெற்றுக்கொள்வதற்காக சிங்கள மக்களைக் கொன்று குவிப்பதற்குக் கூட இவர்கள் தயக்கம் காட்ட மாட்டார்கள்.
இந்தத் தாக்குதல் குறித்து உங்கள் அமைப்பின் மீதே குற்றம் சுமத்தப்படுகின்றது. அனைத்துலக ரீதியிலும் இந்தத்
தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளே காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இது குறித்து உண்மை நிலையை
வெளிப்படுத்த வேண்டுமல்லவா?
எந்தவொரு ஆதாரமும் இன்றி நாம் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்வதாக அனைத்துலக சமூகம் எடுக்கும்
தீர்மானங்களையிட்டு நாம் கவலையடைகின்றோம். 1971, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சிங்கள இளைஞர்களை படுகொலை
செய்வதற்கு சிங்கள அரசாங்கங்கள் சற்றும் தயங்கவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
தென்பகுதி தாக்குதல்களை விடுதலைப் புலிகள் மேற்கொள்ளாவிடின், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்
மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நியாயப்படுத்தல்களையும் ஏற்றுக்கொள்ள நேரிடும் அல்லவா?
இந்தத் தாக்குதல்களை அரச படையினர் மேற்கொள்கின்றனர் என்பதனை நிரூபிப்பதற்கு எம்மிடம் போதியளவு சான்றுகள்
உள்ளன. சிறிலங்கா அரசாங்கம், அனைத்துலக சமூகம் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு வழங்கினால் இந்த ஆதாரங்களை
அம்பலப்படுத்த முடியும்.
1991 ஆம் ஆண்டு கிழக்கில் 600 காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கம்
விசாரணை ஆணைக்குழுவொன்றை நிறுவியுள்ளது. அண்மையில் லண்டனிலிருந்து நாடு திரும்பிய கருணா, இந்தப்
படுகொலைகளை தாம் மேள்கொள்ளவில்லை எனவும், புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானிடம் குறித்த
காவல்துறை உறுப்பினர்கள் ஒப்படைக்கப்பட்தாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து உங்களின் கருத்து என்ன?
நாம், ஓர் போராட்ட இயக்கமாகும், ஒழுக்க விதிகளை நாம் மிகவும் உச்சளவில் பேணிப் பாதுகாக்கின்றோம். கருணா மீது ஒழுக்க
விதிகளை மீறிச் செயற்பட்டமைக்கு எதிராக தண்டனை வழங்க ஆயத்தமாகும் போது தப்பிச் சென்று விட்டார். தற்போது
அரசாங்கத்துடன் இணைந்து துணை இராணுவக் குழுக்களுடன் செயலாற்றி வருகின்றார். ஜெனீவா உடன்படிக்கையின் பிரகாரமே
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படையினருடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை களைந்தால் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தயார் என அரச தலைவர் மகிந்த ராஜபக்ச
அண்மையில் அறிவித்திருந்தார். நீங்கள் பேச்சுக்குத் தயாரா? இல்லையெனில் என்ன காரணம்?
நிபந்தனைகளற்ற சூழ்நிலையில் சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். 30 வருடங்களுக்கு முன்னர் எமது மக்களை
பாதுகாப்பதற்காக நாம் ஆயுதங்களை கையில் ஏந்தினோம். மகிந்த ராஜபக்சவின் பொறுப்புணர்ச்சியற்ற வேண்டுகோளுக்காக எமது
மக்களை காப்பாற்றும் தலையாய கடமையிலிருந்து விடுபடுவதற்கு நாம் ஒருபோதும் தயாராக இல்லை.
2006 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 9 ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 ஆயிரம்
விடுதலைப் புலி உறுப்பினர்களே எஞ்சியிருப்பதாகவும், இந்தக் காலப்பகுதியில் 1 ஆயிரத்து 700 படையினர்
கொல்லப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம்
தெரிவித்திருந்தார். இந்தத் தகவல்களை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா? இல்லையெனில் உங்களின் கருத்துப்படி களநிலவரங்கள்
எவ்வாறு அமைந்துள்ளது?
அவர் அநேக சந்தர்ப்பங்களில் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின்றார். அவரின் தகவல்கள் சிங்கள
மக்கள் மற்றும் அனைத்துலக சமூகத்தை பிழையான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடும். அப்பாவி சிங்கள இளைஞர்கள் தமது
உயிர்களை தியாகம் செய்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் அரசியல் தலைமைகளும், இராணுவத் தளபதிகளும் சொகுசு
வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஆயிரம் போராளிகளைக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இன்னும் 20 ஆண்டுகள் வரை தமது போராட்ட நடவடிக்கை
மேற்கொள்ள முடியும் எனவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியவாத ஆதரவு கிட்டும் வரை விடுதலைப்
புலிகள் தொடர்ந்து இயங்கக்கூடிய இயலுமை கிட்டும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு
நியாயமான தீர்வுத் திட்டங்களை அரசாங்கத்தினால் வழங்க முடியுமா?
கடந்த 50 ஆண்டு காலப்பகுதியில் எந்தவொரு அரசாங்கமும் தமிழர் பிரச்சினையை சரியான முறையில் அணுகவில்லை. இதற்கு
பண்டா-செல்வா உள்ளிட்ட பல உதாரணங்களை முன்வைக்க முடியும். சிங்கள அரசாங்கங்களின் தோல்வி காரணமாக தமிழீழ
விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க நேரிட்டுள்ளது. தமிழர்களுக்கு நியாயமான முறையில்
அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் விடுதலைப் போராட்டம் தொடரும்.
அனைத்து கட்சிக்குழுவினால் முன்வைக்கப்படும் சமஷ்டி தீர்வுத் திட்டத்தின் மூலம் தமிழர்களுக்க நியாயமான தீர்வுத்திட்டங்கள்
கிடைக்கப்பெற்றால், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை தமிழ் மக்கள் நிராகரிக்கக்கூடும் என்ற அச்சம்
நிலவுகின்றதா?
அனைத்து கட்சிக்குழு மற்றுமொரு ஏமாற்று நாடகமாகும். மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அனைத்துலக சமூகத்தை
ஏமாற்றுவதற்காகவே இந்தத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
அனைத்து கட்சிக்குழு பரிந்துரைகளில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன. இந்தப் பரிந்துரைகள் தமிழர்களின் நியாயமான
கோரிக்கைக்கு ஒருபோதும் தீர்வுத் திட்டமாக அமையாது.
சார்க் மாநாடு நடைபெறாமல் இருப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி மேற்கொண்டு வருவதாகத்
தெரிவிக்கப்படுகின்றது?
சார்க் மாநாட்டை குழப்புவதற்கு நாம் முயற்சிக்கவில்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் சுதந்திரப் போராட்டத்திற்கு
பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கின்றோம்.
விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தியுள்ளதாக சிறிலங்காப் படைகள் அறைகூவல் விடுக்கின்றன. 2005 ஆம் ஆண்டு அரச
தலைவர் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிப்பிலிருந்து புறக்கணித்தமை ஓர் மாபெரும் தவறாக நீங்கள் தற்போது
கருதுகின்றீர்களா?
ஐக்கிய இலங்கையையும், அரச தலைவர் தேர்தல் முறையையும் தமிழ் மக்கள் நிராகரித்தனர். இதனால் சிறிலங்காவின் அரசியல்
கட்டமைப்பில் செல்வாக்கைச் செலுத்துவதற்கு தமிழ் மக்கள் என்றுமே நாட்டம் காண்பிக்கவில்லை. சுதந்திர தமிழர்
தாயகமொன்றுக்கான ஆணையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளனர்.
ஒன்றிரண்டு வான் தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அரச படையினர் புலிகளின் வானூர்திகளுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய சிறந்த பலத்தை கொண்டுள்ளனர் என்பதே
இதன் மூலம் அர்த்தப்படுகின்றதா?
இது மிகவும் பிழையானதோர் மதிப்பீடு. இதன் மூலம் எமது தந்திரோபயங்களையோ திட்டங்களோ வெளிப்படுத்தப்பட மாட்டாது.
போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்கனவே இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கை இரண்டாகப் பிரித்து கிழக்கில் மாகாண
சபைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளது. எதிர்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சு மேற்கொள்ளத் தயாரானால் ஓர் புதிய
போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமா?
தமிழர் தாயக மக்கள் பிரிக்கப்படவில்லை. தமிழர் தாயகப் பிரதேசம் வடக்கு-கிழக்கை ஒன்றிணைத்த ஒன்றேயாகும். போர் நிறுத்த
உடன்படிக்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஓர்
பின்னணியை உருவாக்கியிருந்தது. அரசாங்கமே போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்துச் செய்தது.
இலங்கையின் தேசியப் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து உங்களின் கருத்து என்ன? அண்மைக்காலமாக
இரு நாடுகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து விடுதலைப் புலிகள்
கவலையடைந்துள்ளனரா?
தமிழ் மக்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு பற்றி அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த ஒத்துழைப்பின் மூலம் தமிழர்களை
அழிக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சி மேற்கொள்வதனை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். கடந்த காலங்களிலும் சிறிலங்கா
அரசாங்கங்கள் இவ்வாறான அடக்குமுறைகளை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருந்தது. இந்திய பிரச்சினைகளை சந்திக்கும்
போது அதனை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டது.
சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் இந்தியா
அதிருப்தி வெளியிட்டிருந்தது. இந்த நாடுகளிடமிருந்து கிடைக்கப் பெறும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் உங்களின்
நிலைப்பாடு என்ன?
சிறிலங்கா அரசாங்கம் இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை தனது போர் முயற்சிக்காக
பயன்படுத்துகின்றது. எனினும், இது சுலபமான காரியமல்ல. எனினும், இந்த நாடுகள் தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்தை
ஏற்றுக்கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதே எனது கருத்தாகும்.
பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமித்ததன் மூலம் இணைக்கப்பட்ட மாகாணங்களில் எவ்வித பலனும்
இல்லை என சிறிலங்கா அரசாங்கம் உலகிற்கு வெளிக்காட்ட முயற்சி மேற்கொண்டுள்ளது?
பிள்ளையான் ஒழுக்க விதிமுறைகளை மீறிய ஒரு துணை இராணுவக்குழு உறுப்பினர் ஆவார். சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில்
பல்வேறு கொலைகளை மேற்கொள்ளும் ஓர் குழுவின் தலைவராகவே செயற்படுகின்றார். எனவே உங்களின் கருத்து
வெகுவிரைவில் தகர்த்தெறியப்படும்.
அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளின் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த
நிலைமை நிதி திரட்டல் நடவடிக்கைகளை எங்கனம் பாதிக்கும்?
குறித்த நாடுகளில் வசிக்கும் சகோதரர்கள் தங்களின் தாய்நாட்டில் அல்லலுறும் சகோதரர்களுக்கே நிதி சேகரிக்கின்றனர். தமிழர்
புனர்வாழ்வுக் கழகம் போன்ற மனிதாபிமான உதவிகளை வழங்கிய நிறுவனங்கள் தடை செய்யப்படுதன் ஊடாக தாயக மண்ணில்
உள்ள மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் பிரச்சாரங்கள் மற்றும் மனிதாபிமான
உதவிகளுக்கான தடைகளின் மூலம் தமிழாகள் மேலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைகள்
கட்டவிழ்த்துவிடப்படுகின்றது.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப்பீடமேறினால் ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும்: புதினத்துக்கு வழங்கிய பேட்டியில் இல.கணேசன் [திங்கட்கிழமை, 21 யூலை 2008, 04:58 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
இந்தியாவின் மத்திய அரசில் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றத்தின் மூலம், தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி ஆட்சிப்பீடமேறினால், ஈழத்தமிழர்களின் உரிமைகளை பெற்றுத்தரக்கூடிய வகையில் இம்முறை நடவடிக்கை எடுக்கும் என்று பாரதீய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். "புதினம்" இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பேட்டியின் முழுவிவரம் வருமாறு:
இந்தியாவில் அரசு மாற்றம் ஒன்று ஏற்பட்டால் ஆட்சிக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி,
அவ்வாறு ஆட்சிபீடமேறும் பட்சத்தில் - இம்முறை - ஈழத்தமிழர்கள் விடயத்தில் எந்தவிதமான நிலைப்பாட்டை கடைப்பிடிக்கும்
என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
ஏற்கனவே, இது தொடர்பில் வாஜ்பாய் அவர்கள் மிகத்தெளிவாக கருத்து தெரிவித்திருக்கின்றார். இலங்கையில் வாழ்ந்து
கொண்டிருக்கின்ற தமிழர்களுக்கு அடிப்படை உரிமைகள் இப்போது மறுக்கப்படுகின்றன. அந்த உரிமைகளை தமிழர்களுக்கு
வழங்குமாறு சிறிலங்கா அரசைக்கோரும் சகல உரிமைகளும் பாரத அரசுக்கு இருக்கின்றது.
இலங்கையில் தமிழர்கள் படும் அவதியைக்கண்டு, பக்கத்திலிருக்கும் பாரதம் சும்மா இருக்க இயலாது. அங்குள்ள விடுதலைப்
புலிகள் போன்ற அமைப்புக்களை மாத்திரம் காரணம் காட்டி, சிறிலங்கா அரசால் தமிழர்கள் படும் அவதியை பாரதம் காணாமல்
இருக்கமுடியாது.
"இலங்கையில் தமிழர் படும் அவதியைக் கண்டு பக்கத்திலிருக்கும் பாரதம் சும்மா இருக்க இயலாது"
இப்படியான நிலைப்பாடு ஆட்சிக்கு வரும் முன்னர் - கடந்த தடவையும் - இருந்திருக்கின்றதே தவிர, ஆட்சிக்கு வந்த பின்னர்
பாரதீய ஜனதா கட்சி ஈழத்தமிழர்கள் விடயத்தில் எந்தவிதமான உருப்படியான - காத்திரமான -நடவடிக்கையும்
மேற்கொள்ளவில்லையே?
அதற்கு சிறிலங்காவும் ஒரு காரணம். ஒருமுறை இந்திய அரசாங்கம் அதற்கான முயற்சியை மேற்கொண்டபோது, அதற்கு
சிறிலங்கா அரசாங்கம் எப்படி நடந்துகொண்டது என்பது உங்களுக்கு தெரியும். அங்கு தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக
சொல்லிக்கொள்ளும் விடுதலைப் புலிகள் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
பாரத நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலையான பிறகு, சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கின்ற ஒரு மாற்றத்தின் காரணமாக, பின்னடைவு
ஏற்பட்டிருக்கின்றது என்பதும் உங்களுக்குத் தெரியும்.
பின்னடைவு என்று நீங்கள் கருதுவது என்ன? ராஜீவ் காந்தி கொலைக்குப் பின்னர் உங்களால் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு
கிடைக்க உதவிசெய்ய முடியாதுள்ளது என்று கூறுகின்றீர்களா?
ராஜீவ் காந்தி கொலைக்கு முன்னர், தமிழ்நாட்டிலிருக்கும் ஒவ்வொரு கிராமத்திலும்கூட, விடுதலைப் புலிகளைச்
சார்ந்தவர்களுக்கே மக்கள் ஆதரவு தந்தார்கள். நானே பார்த்திருக்கின்றேன்.
ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. சாதாரணமாக, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லக்கூடியவர்கள்கூட
அது குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்க தயக்கம் காட்டுகின்றனர்.
அப்படியானால், முன்னைய நிலை தற்போது இல்லை என்று கூறுகின்றீர்களா?
ஆம். தற்போது நிலைமை மாறியிருக்கின்றது.
ஆனால், ஆயிரம் காரணமிருந்தாலும், இன்று இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழர்களுக்கான உரிமைகளை - சம
உரிமைகளை - பெற்றுக்கொடுக்கவேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது.
தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவது தொடர்பில், இதுவரை எழுத்திட்ட எந்த ஒப்பந்தத்தையும் சிறிலங்கா அரசு
கடைபிடிக்கவே இல்லை. இதுதான் இப்பிரச்சினை இவ்வளவு தூரம் இழுபட்டுக்கொண்டிருப்பதற்கு காரணம்.
இந்த ஒப்பந்தங்களையெல்லாம் சிறிலங்கா அரசு கடைப்பிடித்ததைவிட மீறியதே அதிகமாக இருப்பதால், மேற்கொண்டு இவ்வாறு
நடைபெறாமலிருப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டால் மாத்திரம் போதாது. அது கடைப்பிடிக்கப்படுகின்றதா என்பதை
பார்த்துக்கொள்ளவேண்டிய கடமை இந்தியாவுக்கு இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.
"தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவது தொடர்பில், இதுவரை எழுத்திட்ட எந்த ஒப்பந்தத்தையும் சிறிலங்கா அரசு
கடைப்பிடிக்கவே இல்லை"
ஆட்சிக்கு வரும் உங்களின் பி.ஜே.பி. கூட்டணி அரசின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடு, காங்கிரஸ் அரசினது
அணுகுமுறையிலும் பார்க்க எவ்வாறு வேறுபட்டு நிற்கப்போகின்றது?
ஈழத்தமிழர்கள் விடயத்தில் காங்கிரஸ் அரசு ஏன் ஒரு மெத்தனப்போக்கை கடைப்பிடிக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனாலும், எமது நாட்டு அரசாங்கம் குறித்து அதிகம் விமர்சனம் செய்ய இப்போது நான் விரும்பவில்லை.
தற்போது ஆட்சியில் இருக்கின்ற கட்சிக்கு எதிர்க்கட்சி என்ற வகையிலும் - தமிழக கட்சி என்ற ரீதியிலும் உங்களின் கருத்தை
தெரிவிக்கலாம் இல்லையா?
ஆம். அரசியல் ரீதியாக அவர்களை விமர்சனம் செய்தாலும் கூட ஒரு அந்நிய நாட்டு ஊடகத்தில் எமது நாட்டு அரசு பற்றி
விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை.
உங்களின் கட்சி உட்பட எந்தக்கட்சியும் ஆட்சிக்கு வருவதற்கு முனனர், சார்பான நிலைப்பாட்டையும், ஆட்சிப்பீடமேறிய பின்னர்
தனது நிலைப்பாட்டை மாற்றிவிடுவதாகவும் உள்ளது. அது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?
இங்கு சூழ்நிலை என்பது முக்கியமான விடயம். அன்றுள்ள சூழ்நிலையை பொறுத்துத்தான் அரசாங்கம் முடிவு செய்யும்.
கடந்த தடவை நாம் ஆட்சியிலிருந்தபோது காணப்பட்ட சூழ்நிலை உங்களுக்குத் தெரியும். இப்போது இந்த ஐந்தாண்டுகளில்
சூழ்நிலை மாறியிருக்கின்றது.
நிச்சயமாக, ஆட்சிக்கு வரும் எமது அரசு இப்போது இருக்கின்ற சூழ்நிலையை கருத்திற்கொண்டு பணிபுரியும். அப்படி
செய்யும்போது, அது இலங்கை தமிழர்களுக்கு சாதகமாகவும், அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதாகவும்தான் அமையும்.
அந்தவகையில், நான் நிச்சயமாக எனது அரசாங்கத்துக்கு குரல் கொடுப்பேன்.
ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான மத்திய அரசின் கொள்கை வகுப்பில் தமிழகக்கட்சிகள் எவ்வளவு தூரம் செல்வாக்கு
செலுத்தக்கூடியதாக உள்ளது?
மத்தியில் இருக்கின்ற கட்சிகளைப் பார்த்தால், இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளது. ஆட்சியில் பங்கேற்றுள்ளனர்.
இதுபோன்ற கட்சிகள், மத்தியில் உள்ள அரசை வற்புறுத்துவதாக இல்லை. காரணம், ஏற்கனவே இது போன்ற பிரச்சினைகளில்
ஈடுபட்டு கையைச் சுட்டுக்கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் கட்சி இது குறித்து எதுவும் சிந்திப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஆனால், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை, நாம் இது குறித்து பல்வேறு விதமான கூட்டங்கள், கருத்தரங்குகள்,
ஆய்வரங்குகள் நடத்திவருகின்றோம். பிரச்சினைகளை தீர்க்கமாக - ஆழ்ந்து - சிந்தித்து வருகின்றோம்.
மலையக தமிழர்கள், வடக்கு-கிழக்கு தமிழர்கள் எல்லோரின் பிரச்சினைகளையும் ஆராய்ந்து வருகின்றோம். எனவே, எமது புதிய
அரசு வரும்போது நிச்சயமாக ஒரு மாற்றம் தெரியும் என கருதுகின்றேன்.
"இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு விடயத்தில் தமிழக கட்சிகளாகிய எமக்குள் வேறுபாடு உள்ளது என்பது உண்மை"
அப்படியானால், கடந்த தடவை உங்களின் கட்சி கடைப்பிடித்தது போன்று அல்லாமல் - தற்போது காங்கிரஸ் கடைப்பிடிப்பது
போன்றும் அல்லாமல் - இம்முறை உங்களின் கட்சி ஆட்சிக்கு வந்தால், ஈழத்தமிழர்களுக்கு சார்பான ஒரு போக்கை
கடைப்பிடிக்கும் என்று கூறலாமா?
கடந்த தடவை எமது அரசு அப்போதிருந்த சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு நடவடிக்கை எடுத்தது. அதில் எந்த தவறும் இல்லை.
இப்போது இருக்கின்ற சூழ்நிலையை ஆராய்ந்து எமது அரசு நடவடிக்கை எடுக்கும். அந்த நடவடிக்கை தமிழர்களுக்கு உரிமைகளை
பெற்றுத்தருவதாக அமையும்.
உங்கள் அரசின் அந்த நடவடிக்கை தமிழர்களின் போராட்டத்தை அங்கீகரிப்பதாக அமையுமா?
அது எந்தவகையில் அமையும் என்பதெல்லாம் தற்போது பேசி முடிவு எடுக்கவேண்டியது அல்ல.
எப்படி வருகின்றது என்பது முக்கியமல்ல. எது வருகினறது என்பதுதான் எமக்கு முக்கியம்.
அந்தவகையில், தமிழர்களுக்கு நல்வாழ்வு, அமைதி, அங்கிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்பி
அங்கே அமைதியாக வாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்குதல் இவைதான் எமக்கு முக்கியம்.
அந்தவகையில், தற்போது தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுடன்
இணைந்து எவ்வளவு தூரம் உங்களின் கட்சி பங்காற்றுகின்றது?
எம்மிடம் அவர்கள் வரட்டும் பேசுவோம். இந்த விடயத்தில் எல்லோருமே கருத்தொற்றுமையுடன் இருக்கின்றோம் என்று சொல்ல
இயலாது. பல்வேறு கோணங்களில் சிந்திக்கின்றோம்.
இலங்கை தமிழர்கள் நல்வாழ்வு என்று சொன்னாலும்கூட, அதில் எமக்குள் வேறுபாடு உள்ளது என்பது உண்மை.
இனரீதியான பிரச்சினையாக உள்ள ஈழத்தமிழர்கள் விடயத்துக்கு பகிரங்கமாக குரல் கொடுப்பதற்கு உங்களின் கட்சி தவறினாலும்
கூட, உங்களின் கட்சி இந்து மதம் சார்ந்த ஒரு மதவாதக்கட்சி என்ற ரீதியில் பார்த்தால், ஈழத்தில் பாதிக்கப்படுகின்ற இந்துக்கள்
குறித்தோ அல்லது அங்கு சிறிலங்காப் படைகளால் அழித்தொழிக்கப்படும் ஆலயங்கள் குறித்தோ உங்கள் தரப்பிலிருந்து எந்தக்
கண்டனங்களும் வெளிவரவில்லையே?
இது மத ரீதியான பிரச்சினை அல்ல. பாரதீய ஜனதா கட்சி இந்த விடயத்தில் தலையிடவேண்டும் என்பதற்காக இந்துக்கள்தானே
தாக்கப்படுகின்றனர் என்று பார்க்கக்கூடாது.
அங்கு பாதிக்கப்படுபவர்கள் இந்துக்கள்தான் என்று போராடுபவர்கள் குரல் கொடுத்திருப்பார்களேயானால், இன்று நாடு தழுவிய
பேரெழுச்சி ஏற்பட்டிருக்கும். அதுபோன்று செய்யத்தவறியதால்தான் இப்போது இந்த நிலமை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.
ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படும்போது - அவர்களுக்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்கள் -
மேற்கொள்ளப்படும்போது - அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தயாராக உள்ள நீங்கள், பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு எதிரான அரச
அடக்குமுறைக்கு போராட்டம் தீர்வு என்று முடிவெடுத்து போராடுகின்றபோது அதற்கு பகிரங்கமான உங்கள் ஆதரவையோ
அல்லது கருத்தையோ ஏன் தெரிவிக்க மறுக்கின்றீர்கள்?
இல்லை. அது குறித்து நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஏனெனில், எப்படிப்பட்ட வழியில் விடுதலை கிடைக்கவேண்டும் என்று
முடிவு செய்வது அந்த நாட்டு மக்களின் முடிவு. அது குறித்து நான் கருத்துச் சொல்ல விரும்பவில்லை. அவர்களின் முயற்சியை
விமர்சனம் செய்யவும் விரும்பவில்லை. எனது கருத்தையும் எனது கட்சியின் கருத்தையும்தான் நான் சொல்லியிருக்கின்றேன்
என்றார் அவர்.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உத்தேச அணுசக்தி உடன்படிக்கை தொடர்பாக எழுந்த சர்ச்சைகளையடுத்து
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நாளை
செவ்வாய்க்கிழமை இந்திய நாடாளுமன்றம் கூடவுள்ளது.
545 உறுப்பினர்களைக்கொண்ட இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையான லோக் சபையில் அறுதிப்பெரும்பான்மை பலத்தை
அரசாங்கம் தக்கவைத்துக்கொள்ள 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.
545 உறுப்பினர்களில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஆசனம் வெற்றிடமாக உள்ளது. மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர்
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாத சட்டப்பிரச்சினை உள்ளது.
இந்நிலையில் 272 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்துக்கு
நாளை தேவைப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. -----------------Karunanidhi demands Katchatheevu back from SlAt a fast in Tamil Nadu today against attacks on Indian fisherman allegedly by the Sri Lankan Navy, Chief Minister M Karunanidhi said the
Indian Central government should help get back Katchatheevu from Sri Lanka. -------------மன்னார் வளைகுடாவிலுள்ள 6 தீவுகளில் காவல் அரண்கள் அமைக்க நடவடிக்கை தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்தல்கள் இடம்பெறுவதைத் தடுப்பதற்காக மன்னார் வளைகுடாவில் உள்ள 6
தீவுகளில் நிரந்தரக் காவல் அரண் கள் அமைக்கப்படவுள்ளன என்று இந்தி யக் கரையோரப் பொலிஸார் தெரிவித்தி ருக்கின்றனர்.தமிழகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படும் பொருள்கள் விடுதலைப் புலிகளுக்குச் சென்று சேர்கின் றன எனத்
தமிழகப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதை அடுத்தே, இந்தக் காவல் அரண்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது.இதன் பிரகாரம் மன்னார் வளைகுடாவிலுள்ள முயல்தீவு, குருசடைத்தீவு மற்றும் நல்லதண்ணித் தீவு உட்பட 6 தீவுகளில் இந்தக்
காவல் அரண்கள் அமைக்கப்படவுள்ளன.இராமேஸ்வரம் பகுதியிலிருந்து மன்னார் வளைகுடா வரையிலான பகுதியில் சுமார் 21 தீவுகள் வரை உள்ளன. இந்தத்
தீவுகளுக்குச் செல்ல தமிழகப் பொலிஸரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தீவுகளிலேயே கடத்தல்காரர்கள்
தமது பொருள்களை பதுக்கி வைக்கின்றனர் எனவும் தமிழகப் பொலிஸார் கூறியிருக்கின்றனர்.

The master plays his cards
[TamilNet, Sunday, 20 July 2008, 14:37 GMT]
Kalaignar M. Karunanidhi, chief minister of the Tamil Nadu state of India, cautioned the Indian Government on Saturday that his state wouldn't hesitate to seek the retrieval of Kachchatheevu from Sri Lanka if the rights of the Tamil Nadu fishermen are not safeguarded. The
timing and intensity of the demand leads to wide-ranging speculations among observers.
After inaugurating a state wide, day-long fast by the Dravida Munnetra Kazhagam (DMK), the state's ruling party, he called upon New Delhi
to take up the issue of Sri Lanka Navy's attacks on Indian fishermen, at the SAARC summit to be held in Colombo in August. A delegation of
DMK's Members of Parliament is expected to call on the Indian Prime Minister on Sunday, seeking his immediate intervention in the fishermen's issue, according to news reports from Chennai.
The active stand on Kachchatheevu taken by Kalaignar at this juncture, which is in striking contrast to his detachment and baffling silence over the genocide of Eezham Tamils, has raised questions whether his demand is a tactic to deviate the attention of the people of Tamil Nadu from looking at him as a question mark.
Analysts largely see the ongoing war in Sri Lanka against Eezham Tamils as India's proxy war, abetted by Indian arms, training, naval patrolling, intelligence-sharing, logistical support and encouragement.
In such a background, the grievances of the Tamil Nadu fishermen could have easily been sorted out, had the Indian government really wanted them to be resolved, say analysts.
It is doubtful whether the Indian government, guilty of the proxy war, really wants the free movement of Tamil Nadu fishermen in the seas between Sri Lanka and India, when it is paranoid about spontaneous collaboration of Tamil brethren on either side of the Indo - Sri Lankan waters.
The token fast for the fishermen's rights by DMK, a partner of the Congress establishment of Delhi, is therefore perceived as a smokescreen to bail out the Centre as well as the state government from the wrath of the resenting masses of Tamil Nadu, especially when the elections are around the corner.
Some observers come out with a different speculation. The Congress government faces a serious political crisis at the moment, leading to anticipations of its collapse at any time. Assessments of observers are negative in indications for the coming back of Congress to power in the
forthcoming elections. In Tamil Nadu politics, possibilities are seen for the emergence of a powerful third front, other than the DMK and the AIDMK.
Whether Kalaignar's current move has anything to do with manoeuvring political equations in Tamil Nadu and India, is the question of analysts, who are familiar with the modus operandi of the veteran chief of DMK.

Iran becomes the top donor to Sri Lanka
Tuesday ,15 July 2008( Posted : 02:07:57GMT)
(Colombo) Iran, which granted USD 450 million to build the Uma Oya hydropower project and upgrade the Sapugaskanda oil refinery, has
emerged as Sri Lanka 's biggest donor this year, officials said.
In the five months to May, Sri Lanka received USD 1.05 billion in foreign aid, of which project loans accounted for USD 959 million and
grants for USD 90 million, the Treasury said in its mid-year fiscal report.
Other key donors include Denmark (USD 155.2 million), India (USD 109.2 million), the Asian Development Bank (USD 90 million), the
World Bank (USD 43.1 million) and Japan (USD 42.2 million).

No comments: