சரத் பொன்சேகா இந்திய அரசிடம் முன் வைத்த மூன்று கோரிக்கைகள்
கடந்த மாதம் டெல்லி சென்ற பொன்சேகா இந்திய அரசிடம் மூன்று கோரிக்கைகளை முன்வைத்ததாகச் செய்தியறிந்த வட்டராங்கள் கூறுகின்றன.
1. வரும் சூன் மாத வாக்கில் விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் உள்ள வன்னிப் பெருநிலத்தைக் கைப்பற்ற சிங்களப் படை போர் தொடுக்கும். அப்போரை இந்திய அரசு எதிர்க்கக் கூடாது.
2. அப்போரில் சிங்களப் படைக்கு இந்தியக் கப்பற்படை வழியாக ஆயுதங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்களை இந்தியா வழங்க வேண்டும்.
3. ஒரு வேளை ஆனையிறவில் சிங்களப் படை தோற்று சிக்கிக் கொண்டது போல், வன்னிப் போரில் விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக் கொண்டால், அப்படையினர்க்கு உயிர்ச்சேதம் இல்லாமல் அவர்களை மீட்டுக் கொணரும் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொள்ளவேண்டும்.
இதுதான் சிங்களத் தளபதி பொன்சேகா இந்திய ஆட்சியாளர்களுடன் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு என்று சொல்லப்படுகிறது.
Posted by Orukanani at 9:43 AM
No comments:
Post a Comment