தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்படின் பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது
பிரித்தானிய அமைச்சர் வீரகேசரி இணையம் 9/19/2008 11:31:11 AM
இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு உருவாக்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் ஆதரிக்காது என பிரித்தானியாவின் ஆசிய மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான அமைச்சர் லோர்ட் மலொச் பிரவுண் தெரிவித்தார்.
இலங்கையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் காணப்படுகின்றன. விடுதலை புலிகள் அமைப்பு ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபடுகின்றது . தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் காணப்படுகின்றது.எனவே இலங்கையில் தமிழர்களுக்கான தனி நாடு வழங்கப்படின் அதனை பிரித்தானிய அரசாங்கம் அதனை ஆதரிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
வன்னிக் களமுனைகள் பலவற்றில் புலிகள்-படையினர் உக்கிரச் சமர்!
[19 செப்டம்பர் 2008, வெள்ளிக்கிழமை 9:20 மு.ப இலங்கை]
வன்னிக்களமுனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்றும் பல இடங்களில் உக்கிர சமர்கள்
இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றும் நோக்குடன் இராணுவத்தினர் தொடர்ந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு
வருகின்றனர். வன்னேரிக்குளம் பகுதி நோக்கி நேற்றுக்காலை பெருமெடுப்பில் இராணுவம் முன்னேற முயன்றவேளையில் அங்கு இரு
தரப்புகளுக்கும் இடையே போர் மூண்டது. ஏறக்குறைய நான்கு மணித்தியாலயங்கள் நடந்த இந்தச் சண்டையில் குறைந்தது 22
படையினர் கொல்லப்பட்டனர். நாற்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இராணுவத்தை சற்றுத்தூரம் முன்னேறவிட்டு, பிறகு எமது படையணிகள் தீவிர முறியடிப்புப் பாய்ச்சலை மேற்கொண்டன.
அப்போது உயிரிழந்த தமது சகாக்கள் சிலரது சடலங்களையும் கனரக ஆயுதங்கள் உட்பட பெருந்தொகையான
படைப்பொருள்களையும் கைவிட்டுவிட்டு இராணுவத்தினர் தமது பழைய நிலைகளுக்குப் பின்வாங்கி ஓடிவிட்டனர். என்று
வன்னியிலுள்ள புலிகளின் முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக இராணுவத் தரப்பிலிருந்து நேற்றுமாலை வரை எந்தத் தகவல்களும் வெளியாகவில்லை. இதேவேளை வன்னி வடிளாங்குளத்தில்... வன்னி விளாங்குளம் மன்னகுளம் புதூர் பகுதிகளை நோக்கி பெருமெடுப்பில் முன்னேற முயன்ற இராணுவத்தினரை தமது
படையணிகள் தீவிர எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இந்தச் சமரில் 10 இராணுவத்தினர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர் என்றும் புலிகள் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் நகர்வை ஆரம்பித்த படையினர், நேற்றுமுன்தினம் மாலையில் அங்கிருந்து பின்வாங்கி தமது பழைய நிலைகளுக்குச் சென்றனர் என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சமரின்போது இராணுவத்தினர் கைவிட்டுச் சென்ற படைப்பொருள்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டது. அக்கராயன் குளத்தில் நாச்சிக்குடா பகுதியில் உள்ள கரம்பைக்குளம் குளக்கட்டு பகுதியிலும், அக்கராயன் குளம் பிரதேசத்திலும் நேற்றுமுன்தினம் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் மோதல்களில் கொல்லப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தலைமையகம் நேற்று அறிவித்தது. பெரும் எண்ணிக்கையான படையினர் இதில் காயமடைந்து விட்டனர் எனத் தெரிவித்த இராணுவத் தலைமைப்பீடம், இந்தச் சண்டைகளில் 40 விடுதலைப் புலிகள் இறந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டது. அதேவேளை வன்னேரிக்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மோட்டார் மற்றும் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும்
இடங்களை இலக்குவைத்து நேற்றுமதியம் 12 மணிக்கும், 12.30 மணிக்கும் ஜெற் மற்றும் எம்.ஐ. 24 ரக ஹெலிக்கொப்டர்கள் தாக்குதலை நடத்தின என்று படைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் மண்டபப் பகுதியில் விமானத்தளம் அமைப்பதற்கு இந்திய விமானப்படை ஆய்வு
புலிகளின் ஊடுருவலைத் கண்காணிப்பதற்காம்
[18 செப்டம்பர் 2008, வியாழக்கிழமை 9:55 மு.ப இலங்கை]
புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவும் வாய்ப்புள்ளது என இந்திய இராணுவம் கருதுகிறது. இதையடுத்து தமிழகத்தின் மண்டபம் பகுதியில் விமானத்தளம் மற்றும் மேலதிக ராடர்தளம் என்பவற்றை அமைப்பதற்கு இந்திய விமானப்படை அதிகாரிகள் ஆய்வு செய்துவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையிலான மோதலில் புலிகள் விமானத் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால்
இராமேஸ்வரம் மண்டபம் அருகே விமானத்தளம் அமைப்பதற்கான இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேற்படி நடவடிக்கைகளுக்காக இந்திய விமானப்படைத் தளபதி உபேதா கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்திலிருந்து மண்டபம் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு இதற்கான ஆய்வுகளை நடத்தியுள்ளார். தற்போது மண்டபம் அருகே சுந்தரமுடையான் பகுதியில் உள்ள ராடர் தளம் மூலம் இந்திய வான்வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சுந்தரமுடையானில் உள்ள ராடர் தளம் சென்ற தளபதி உபேதா அங்கிருந்த அதிகாரிகளுடனும் ஆலோசனை
நடத்தியுள்ளார். கடந்த மார்ச் 17ஆம் திகதி விமானப் படை எயார் மார்ஷல் ரானே, மண்டபம் வந்து ராடர் தளத்தைப் பார்வையிட்டார். அப்போது
மண்டபம் பகுதியில் 22 ஏக்கரில் விமானத்தளம் மற்றும் மேலும் ஒரு ராடர் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். தற்போது இலங்கையில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், புலிகள் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப் புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை யடுத்தே வான்வழிக் கண்காணிப்பை மேம்படுத்த, மண்டபம் பகுதியில் விமானத்தளம் மற்றும் மேலதிக ராடர்கள் தளம் அவசியம் என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
வன்னியிலிருந்து இன்று ஐ.நா. முழுமையாக வெளியேறுகிறது
[16 - September - 2008]
* ஓமந்தை வரை பயணப் பாதுகாப்புக்கு புலிகள் வலியுறுத்தல் வன்னியில் எஞ்சியுள்ள ஐ.நா.பணியாளர்களும் இன்று செவ்வாய்க்கிழமையுடன் அங்கிருந்து வெளியேறவுள்ள நிலையில், அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை விடுதலைப்புலிகள் வழங்கி யுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வன்னியிலிருந்து சர்வதேச மற்றும் உள்ளூர் தொண்டர் அமைப்புக்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டுமென கடந்த திங்கட்கிழமை (8 ஆம் திகதி) அரசு அறிவித்த நிலையில் பெரும்பாலான தொண்டர் அமைப்புக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தன. எனினும் ஐ.நா. அமைப்புக்கள் சிலவற்றை (அகதிகளுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகராலயம் உட்பட) அங்கிருந்து வெளியேற மக்கள் அனுமதிக்கவில்லை. ஐ.நா. அலுவலகங்கள் முன்பாக கடந்த சில தினங்களாக ஆயிரக்கணக்காகக் கூடிய மக்கள்,
வன்னியிலிருந்து வெளியேறவேண்டாமெனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனால் வன்னியிலிருந்து வெளியேறுவதை ஐ.நா.அமைப்புக்கள் சில நாட்களுக்கு ஒத்திவைத்த நிலையில், அவர்கள் அங்கிருந்து
எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் வெளியேறிவிடவேண்டுமென அரசு கடும் உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த நிலையிலேயே வன்னியிலிருந்து வெளியேறுவது தொடர்பாக ஐ.நா.பிரதிநிதிகள் கடந்த இரு நாட்களாக விடுதலைப்
புலிகளுடன் நடத்திய பேச்சுக்களையடுத்து, அங்கிருந்து அவர்கள் பாதுகாப்புடன் முற்றாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள்
உத்தரவாதமளித்தனர். இதற்கமைய இன்று காலை, மக்களின் பலத்த எதிர்ப்பையும் மீறி புலிகளின் பூரண பாதுகாப்புடன் வன்னியிலிருந்து ஐ.நா.
அமைப்புக்கள் முற்றாக வெளியேறவுள்ளன.
இது தொடர்பாக, இலங்கைக்கான ஐ.நா.வதிவிடப்பிரதிநிதி கோர்டன் வைஸ் கூறுகையில்; கிளிநொச்சியில் மீதமிருந்த ஐ.நா.பணியாளர்கள் அனைவரும் வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை விடுதலைப் புலிகள் ஐ.நா.வுக்கு அளித்துள்ளனர்.
இவர்கள் அனைவரையும் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஒரே வாகனத் தொடரணியில் கிளிநொச்சியிலிருந்து அழைத்துவரப்போகின்றோம்.
எமது பணியாளர்களுக்கும் அவர்களின் வாகனங்களுக்கும் ஒமந்தை இராணுவ சோதனை நிலையம் வரை விடுதலைப் புலிகள் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.
தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து கிளிநொச்சியிலிருந்து பணியாற்றுவதென்பது மிகவும் ஆபத்து நிறைந்ததென்பது எங்களது
பாதுகாப்பு மதிப்பீட்டின் மூலம் தெரியவந்ததால் நாங்கள் தற்காலிகமாக இடம்பெயரவேண்டிய சூழலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
எங்களது மனித நேயப் பணிகளை வவுனியாவில் இருந்து செய்வதற்காக சிரேஷ்ட அதிகாரிகள் வவுனியாவுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம், கிளிநொச்சியிலிருந்து உங்களை வெளியேற வேண்டாமென அங்குள்ள பொதுமக்கள் போராட்டம் நடத்தி உங்களை தடுப்பதாக ஞாயிற்றுக்கிழமை கூறினீர்கள்.அப்படி இருக்கும் போது, மக்கள் தடுப்பதையும் மீறி அங்கிருந்து நீங்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் எப்படி உங்களுக்கு பாதுகாப்பான வழியை வழங்க முன்வந்துள்ளார்கள் என்று கேட்டதற்கு பதிலளிக்கையில்;
விடுதலைப்புலிகள் தான் அங்கு மறைமுகமாக அதிகாரம் செலுத்துகின்றார்கள். காவல்துறை மூலம் பொதுமக்களை காவல்
காக்கும் பணியையும் அவர்கள் தான் செய்கின்றார்கள். எனவே நாங்கள் வன்னியிலிருந்து வெளியேறிச் செல்லலாமென்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்துள்ளார்கள்.
உலகில் மற்றப்பகுதியிலிருக்கும் நடைமுறைப்படி, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை யார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்களே அங்கு பணிபுரியும் மனிதநேயப் பணியாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்கவேண்டும்.
இதனை நாங்கள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்து உணர்த்தினோம். நாளை (இன்று) காலை பத்து மணிக்கு நாம் வெளியேறப்போகின்றோம் என்பதையும் அனைவரும் ஒரேவாகனத்தில் தொடரணியில் செல்லப்போகின்றோம் என்பதையும் அவர்களுக்குத் தெளிவாகத் தெரிவித்து விட்டதாகவும் கூறினார்.
அப்படியானால் அங்குள்ள பொதுமக்களின் விருப்பத்துக்கு மாறாக நீங்கள் வெளியேறுவதற்கு விடுதலைப்புலிகள் உங்களுக்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்தித் தருகின்றார்களா எனக் கேட்ட போது;
அது பற்றியெல்லாம் மக்களிடம்தான் கேட்கவேண்டும். ஆனால், ஏற்கனவே சொன்னதைப்போல் முரண்பட்ட சக்திகள் இங்கே இருக்கின்றன. நாங்கள் வெளியேறக்கூடாதென்று கூறி எங்கள் அலுவலகங்களைச் சுற்றி போராட்டங்கள் நடத்தி எங்களை பொதுமக்கள் தடுத்து வருகின்றார்கள்.
அதேசமயம் நாங்கள் வெளியேற வேண்டிய தருணம் வந்து விட்டது என்பதை விடுதலைப்புலிகளுக்கு நாம் தெளிவாகத் தெரிவித்ததுடன் தொடர்ந்து அங்கே தங்குவது ஆபத்தானதென்பதையும் விளக்கினோம்.
நாங்கள் வெளியேறலாம் என்ற உத்தரவாதத்தை அவர்கள் எங்களுக்கு அளித்திருக்கின்றார்கள். கிளிநொச்சியிலிருந்து ஓமந்தை வரை நாம் செல்வதற்குப் பாதுகாப்பான வழியை ஏற்படுத்தித்தருவார்கள் என்று நாம் நம்புகின்றோம். அதன் மூலம் வவுனியாவிலிருந்து மனிதாபிமானப் பணிகளை நாங்கள் தொடர வழி கிடைக்குமென்றார்.
கிளிநொச்சியில் ஆபத்தான சூழல் என்று நீங்கள் கூறுவது எதைக் குறிக்கின்றது எனக்கேட்டபோது;
அங்கு மோதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. மோதல்கள் கிளிநொச்சிக்கு அருகாமையில் வந்துவிட்டது. தினந்தோறும் ஷெல் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. எங்கள் அலுவலக வளாகங்களுக்கு அருகில் ஷெல்கள் வீழ்ந்து வெடித்த சம்பவங்களும் உண்டென்றார்.
இந்தச் ஷெல் தாக்குதல்கள் எங்கிருந்து வருகின்றன எனக் கேட்டபோது;
இந்த ஷெல் தாக்குதல் குறித்து கூறுவதற்கு நாமொன்றும் வெடி குண்டு நிபுணர்கள் அல்ல. இந்த ஷெல்கள் அரசுப் படைகளிடமிருந்துதான் வந்திருக்கக் கூடும். மோதல்கள் நடக்கும் முன்னணிப் போர் நிலைகள் கிளிநொச்சிக்கு அருகில் வந்துவிட்டன.
வன்னியிலிருந்து வெளியேறும் மு டிவை நாங்கள் விரும்பி எடுக்க வில்லை. அங்குள்ள மக்கள் குறித்து கரிசனை உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் "உதவி" மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது: மகிந்த ராஜபக்ச [செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 09:19 பி.ப ஈழம்]
[சி.கனகரத்தினம்] சிறிலங்காவுக்கான இந்தியாவின் "உதவி"கள் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான வெளிநாட்டு ஊடகவியலாளர்களை மகிந்த ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை சந்தித்துப் பேசினார்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாவது:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடபகுதியில் நடைபெற்று வரும்தாக்குதல்கள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருப்பதாக எமது
படைத்தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்போம். இருப்பினும் படையினரின் வெற்றிக்கான கால எல்லையை தெரிவிக்க இயலாது. அதற்கு குறிப்பிட்ட காலமாகும். புலிகளை படை ரீதியாக நாங்கள் தோற்கடித்தாலும் கூட சில புலிகள் பதுங்கித்தான் இருப்பார்கள்.
வடபகுதியில் போராளிகளின் பகுதிகளைக் கைப்பற்றிய பின்னர் அங்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்.
கிழக்கில் மேற்கொள்ளப்பட்டதைப் போல் வடபகுதியிலும் தமிழர்கள் தங்களது தலைவர்களையும் பிரதிநிதிகளையும் தெரிவு செய்ய அனுமதிக்கப்படுவர்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் வழித் தீர்வுக்கான நடவடிக்கைகளை அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினூடே நாம் முன்னரே மேற்கொண்டிருக்கிறோம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது ஆயுதங்களுடன் சிறிலங்கா அரசாங்கத்திடம் சரணடைந்த பின்னரே பேச்சுக்கள்
நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
புலிகள் சரணடைய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஒருபோதும் இனியொரு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படமாட்டாது. எதிர்காலத்தில் புலிகளுடன் பேச்சுக்கள் நடத்துவதற்கான தேவை எதுவும் இருக்காது என்றே நினைக்கிறோம்.
புலிகளை ஆதரிக்கும் புலம்பெயர் தமிழர்கள், தாயகத்துக்குத் திரும்பி ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.
பிரபாகரனும் புலிகளின் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அம்மானும் தமது ஆயுதங்களுடன் சரணடைய வேண்டும்.
அவர்கள் மீண்டும் ஆயுதங்களுடன் நடமாட நான் அனுமதிக்க மாட்டேன்.
நாங்கள் பிரபாகரனை பிடித்தால் முதலில் இந்தியாவிடம்தான் ஒப்படைப்போம். இருந்தாலும் வன்னிக் காடுகளில் பிரபாகரனின்
சரியான இருப்பிடம் குறித்து எமக்குத் தெரியவில்லை.
இந்தியாவின் உதவியானது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கக் கூடியது. மேலதிகமாக அதனை நாங்கள் விவரிக்க விரும்பவில்லை.
அரச சார்பற்ற நிறுவனங்களை அவர்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே நாங்கள் வன்னியிலிருந்து வெளியேறுமாறு
கேட்டுக் கொண்டோம். இது ஒரு குறுகிய கால நடவடிக்கையே. விரைவில் அந்த நிறுவனங்கள் மீண்டும் அப்பகுதிகளுக்குச் சென்று மக்களுக்குச் சேவையாற்றலாம். இருப்பினும் அதற்குரிய எம்மால் காலவரையறையை வெளியிட இயலாது என்றார் அவர்.
அக்கராயன் மோதலில் 22 படையினர் பலி; 4 உடலங்கள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் மீட்பு
[செவ்வாய்க்கிழமை, 16 செப்ரெம்பர் 2008, 05:58 மு.ப ஈழம்] [க.நித்தியா]
கிளிநொச்சி மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள அக்கராயன் பகுதியை நோக்கி முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினருக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நேற்று நடத்திய கடுமையான எதிர்த்தாக்குதலில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 22-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டும், 53-க்கும் அதிகமானவர்கள்
காயமடைந்தும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படையினர் பின்வாங்கிச் சென்றுள்ள அதேவேளையில், படையினரின் நான்கு உடலங்களும், பெருமளவு ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இம்மோதலில் தமது தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்புக்கள் தொடர்பாக விடுதலைப் புலிகள் தகவல்கள்
எதனையும் வெளியிடாத போதிலும், குறைந்தளவு இழப்புக்களே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றனர்.
நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் தொடங்கி படையினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் போது பல்குழல் எறிகணைத்
தாக்குதல்கள் பெருமளவுக்கு இடம்பெற்றிருக்கின்றது.
இதனைவிட படையினரின் தாக்குதல் நடவடிக்கைக்கு உதவியாக வான்படையின் எம்.ஐ.-24 ரக உலங்குவானூர்தி ஒன்றும்
தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.மோதல் இடம்பெற்ற பகுதியில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையை நேற்றிரவு வரையில் மேற்கொண்டிருந்தனர்.
எஞ்சிய தொண்டர் நிறுவனங்களையும் வன்னியிலிருந்து வெளியேற்றுவதில் தீவிரம்
[15 - September - 2008]
நிவாரணப் பணிகளை அரசு கவனித்துக்கொள்ளுமென்று அறிவிப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
வன்னியில் தங்கியிருக்கும் எஞ்சிய சர்வதேச தொண்டர் நிறுவனங்களையும் அங்கிருந்து முற்று முழுதாக வெளியேற்றுவதில் அரசாங்கம் தீவிரம் காட்டிவருகின்றது. நிவாரணப்பணிகளை அரசு கவனித்துக்கொள்ளுமெனவும் ஒரு தொண்டர் அமைப்புக்கேனும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது எனவும் அரசு கடுமையாக அறிவித்துள்ளது.
வன்னியிலிருந்து அனைத்து தொண்டர் அமைப்புகளும் வெளியேறி விடவேண்டுமென அரசு அறிவித்ததையடுத்து அங்குள்ள மக்கள்
பெரும் அச்சம்கொண்ட நிலையில் வன்னியிலிருந்து ஐ.நா.அமைப்புகள் வெளியேறக்கூடாது என்று வலியுறுத்தி வெள்ளிக்கிழமை
ஆரம்பித்த முற்றுகைப்போராட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து இடம்பெற்றது.
வன்னியின் தற்போதைய நிலைமைகுறித்து இலங்கையிலுள்ள ஐ.நா.அதிகாரிகள் ஐ.நா.தலைமையகத்துக்கு அறிவித்து அங்கிருந்து பதில் கிடைக்கும் வரை தமது வெளியேற்றத்தை தாமதப்படுத்திவருகின்றனர். நேற்று மாலை வரை ஐ.நா.தலைமையகத்திடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என வன்னியிலுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில் அங்கு எஞ்சியிருக்கும் தொண்டர் நிறுவனங்களின் சகல பிரதிநிதிகளும் தமது உபகரணங்களுடன் உடனடியாக வெளியேறவேண்டுமென அரசு வலியுறுத்தி வருகின்றது.
கிளிநொச்சியில் முல்லைத்தீவு பகுதியிலிருந்து வெளிநாட்டு உதவியாளர்கள் வாபஸ் பெறப்படுவதால் அங்கு மனித நேய நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்று பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார்.
அந்தப்பணியில் ஒன்றாகச் செயற்படக் கூடிய அரச அமைப்பு முறியும் ஊழியர்களும் இருப்பதால் எந்தப் பிரச்சினையும்
ஏற்படப்போவதில்லை. எதிர்பாராத சம்பவங்களை தவிர்ப்பதற்காகவே அரசு உறுதியான தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும்
பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களும் விடுவிக்கப்படாத பகுதிகளில்
அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவை இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள
முடியாது. எனவேதான் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வருமாறு இவர்கள் கோரப்பட்டனர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்தும் வன்னிப் பகுதியிலேயே இருப்பார்களானால் அவர்களது பாதுகாப்புக்கான பொறுப்பை அரசு
ஏற்காது. வன்னியில் அரசநிருவாகம் சீராக நடைபெறுவதால் மனித நேய உதவிகளை வழங்குவது தொடர்பில் வழமையான
நடைமுறை பின்பற்றப்படுமெனவும் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருக்கிறார். இதற்கு மேலாக வடக்கு, கிழக்கு மாகாண வைத்திய சாலைகளில் கடமைபுரியும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களின் வைத்திய
அதிகாரிகள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிடவேண்டுமென சுகாதார அமைச்சு நேற்று அறிவித்துள்ளது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் வைத்திய அதிகாரிகளுக்குப் பதிலாக வைத்திய நிபுணர்களை நியமிக்க சுகாதார அமைச்சு
நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் முற்றுமுழுதான முயற்றிகளைப் பார்க்கும்போது வன்னியிலிருந்து கடைசித் தொண்டர் நிறுவனமும் உடனடியாக
வெளியேறவேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதையே காணக்கூடியதாகவுள்ளது.
அரசின் இந்த கடும் நடவடிக்கை காரணமாக வன்னியில் தங்கியிருக்கும் இரண்டரை இலட்சம் மக்களும் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய நிலைமையில் வன்னியிலிருக்கும் ஐ.நா.அதிகாரிகள் அரசின் வேண்டுகோளுக்கிணங்க வன்னியிலிருந்து வெளியேறி வவுனியாவிலிருந்து செயற்படத் தயாராகிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு மனிதாபிமான நிவாரணப் பணிகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கத்தயாராக இருப்பதாக ஐ.நா.வின் இலங்கைக்கான அதிகாரி கோல்டன் வைஸ் தெரிவித்திருக்கிறார்.
அரசின் வேண்டுகோளுக்கமைய கடந்த வாரம் தமது அமைப்பு தமக்குச் சொந்தமான பல்வேறு உபகரணங்களையும் கிளிநொச்சியிலிருந்து அகற்றிக்கொண்டுள்ளனர்.
வவுனியாவில் ஏ 9 வீதிக்கு அண்மித்த பகுதியில் மீண்டும் அலுவலகத்தை அமைக்க ஐ.நா.அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வன்னியில் மீண்டும் எப்போது ஐ.நா.அதிகாரிகள் தமது பணிகளை ஆரம்பிப்பர் எனக் கேட்டபோது. வன்னியில் மோசமான சூழ்நிலை தொடர்வதால் அது குறித்து உடனடியாக எதனையும் தெரிவிக்க முடியாதுள்ளதாக கோல்ட்ன் வைஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த சாஹித்திய விழாவை கிளிநொச்சியில் நடத்துவோம் - ஜனாதிபதி தெரிவிப்பு
வீரகேசரி நாளேடு 9/14/2008 11:03:13 PM
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை படையினர் துரிதமாகவும் தூரநோக்குடனும் முன்னெடுத்து கொண்டிருக்கின்ற நிலையில் அடுத்த சாஹித்த விழாவையை கிளிநொச்சியில் நடத்துவோம்
என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கம்புறுப்பிட்டிய உபாலி விஜேவர்தன மண்டபத்தில் இன்று நடைபெற்ற தேசிய சாஹித்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான நடவடிக்கைகளை படையினர் முன்னெடுத்து கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கம் அவர்களுக்கு பூரண
ஒத்துழைப்பை நல்குகின்றது.
மக்களுக்கு அதற்கு ஒத்துழைப்பு நல்குகின்றனர் இவ்வாறானதொரு நிலையிலேயே தேசிய சாஹித்திய விழா நடத்தப்படுகின்றது.
தேசியத்திற்கு சாஹித்த விழா எவ்வளவு முக்கியமானதோ அதேபோல பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விரைவில் கௌரவமான
சமாதானம் ஏற்படுத்தப்படும் அதேவேளை அடுத்த தேசிய சாஹித்த விழா கிளிநொச்சியில் நடத்தப்படும்
விமானப்படைக்கு தொழில்நுட்ப உதவி வழங்கும் ஒப்பந்தத்தை இந்தியா இடைநடுவில் கைவிடமுடியாது இலங்கைத் தரப்பில் வலியுறுத்து
[14 செப்டம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:30 மு.ப இலங்கை]
இலங்கைக்கும்இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந் தத்தின்கீழ் விமானப்படைக்கு தொடர்ந்து இந்தியா தொழில்நுட்ப வசதியை வழங்க வேண்டும். அது இந்தியாவுக்குரிய கடப்பாடாகும். அதனை உரிய காலத்திற்கு முன்னர் கைவிட முடியாது. இலங்கை அரசு தரப்பில் இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. இலங்கை விமானப்படையினரின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் எமது நாட்டுக்கும்
இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியிருந்தது. அந்த ஒப்பந்தம் இன்னும் காலாவதியாகவில்லை. அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்வரை, நடைமுறையில் உள்ளவரை, இந்தியாவின் தொழில்நுட்ப உதவிகள் தொடரவேண்டும்.
இது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது இவ்வாறு விமானப்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்காரவும் இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்காரவும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா படைத்தளம் மீதான தரைவழித் தாக்குதலுக்கு விடுதலைப்புலிகளின் படையணி எங்கிருந்து வந்தது?
[12 - September - 2008]
படைத்தரப்பு தீவிர விசாரணை வவுனியா கூட்டுப் படைத்தளம் மீதான தரைவழித் தாக்குதலை நடத்திய விடுதலைப்புலிகளின் அணி எங்கிருந்து வந்ததென்பது குறித்து படைத்தரப்பு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
வன்னி இராணுவத் தலைமையகத்திற்கு எல்லைப் புறமாகவுள்ள கிராமமொன்றில் இந்தத் தாக்குதல் அணி இரு நாட்களாகத்
தங்கியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
சமளங்குளம் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த இவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை இப்பகுதியிலிருந்தும் ஆசிகுளம்
மற்றும் கோமரசன்குளம் போன்ற கிராமங்களிலிருந்து வந்தே தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிய வருவதாகவும் படைத்தரப்பு கூறியுள்ளது.
இராணுவத் தலைமையகம் மீதான தாக்கு தலுக்கான உளவு வேலைகளை இந்தப் பகுதிகளில் தங்கியிருந்த புலிகளே மேற்கொண்டிருப்பதாகவும் படையினர் கருதுகின்றனர்.
இந்தத் தாக்குதலை நடத்திய கரும்புலிகள் செய்மதித் தொலைபேசி ஊடாக வன்னியிலுள்ள தங்கள் தலைவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டு அதற்கேற்ப தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் விசாரணையாளர்கள் கருதுகின்றனர்.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் தாக்குதலில் இந்தியப் பொறியியலாளர்கள் இருவர் காயம்? வீரகேசரி இணையம் 9/10/2008 9:16:54 AM
வவுனியாவில் இராணுவ மற்றும் விமானப்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய சமயம், அத்தளத்திலுள்ள ரேடார்களை பாராமரிப்பதற்காக அங்கு தற்காலிமாகத் தங்கியிருந்த இரண்டு
இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது..
இராணுவதளத்தில் ரேடார் பராமரிப்பு வேலைகளுக்காக இந்திய ரேடார் தொழில்நுட்பப் பணியாளர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தார்கள் என்றும், தாக்குதலின்போது காயமடைந்த அவர்கள் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைபெற்று வருவதாகவும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகப் பேச்சாளர் திங்கர் அஸ்தானா தெரித்தார்..
இவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிர் ஆபத்து அற்றவை என்று கூறப்படுகிறது..
ஆனால் இந்த இராணுவத் தளத்தில் இந்தியப் பிரஜை எவரும் இருக்கவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய
நாணயக்கார தெரிவித்துள்ளார தெரிவித்துள்ளதாக பிபிசி தமிழோசை செய்தி வெளியிட்டுள்ளது. இராணுவ முகாமுக்குள் வெளிநாட்டவர்கள் எப்படி வருவார்கள்?
18 வருடங்களின் பின்னர் புலிகளின் தாக்குதலில், அதுவும் விமானத் தாக்குதலில் இந்தியப் படையினர் இருவர் காயம்
[10 செப்டம்பர் 2008, புதன்கிழமை 8:00 மு.ப இலங்கை]
இலங்கையில் இருந்து அமைதி காக்கும் படையினர் 1990 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர், 18 வருடங்களின் பின்னர் புலிகளின் தாக்குதலில், அதுவும் விமானத் தாக்குதலில் இந்தியப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர் என்று இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான ஹிந்துஸ்தான் ரைம்ஸ் விமர்சித்துள்ளது. வவுனியாவில் உள்ள இலங்கை விமானப்படை ராடர் தளத்தை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய விமானப் படைத் தொழில்நுட்பவியலாளர்களும் காயமடைந்திருக்கின்றனர். இந்திய விமானப் படையின் சார்ஜண்ட் தர நிலையைச் சேர்ந்த சிந்தாமணி ரவூத் மற்றும் ஏ.கே.தாக்கூர் ஆகியோரே இத்தாக்குதலில் காயமடைந் திருக் -கின்றனர். சம்பந்தப்பட்ட இந்திரா II ரக ராடரை இந்தியாவே இலங்கைக்கு வழங்கியிருந்தது என்பது தெரிந்ததே. அந்த ராடரை இயக்குவது
மற்றும் பராமரிப்பது போன்ற பணியை இந்திய விமானப்படையைச் சேர்ந்த இந்த தொழில்நுட்பவியலாளர்களே கவனித்து வந்தனர்
என்றும் ராடர் கட்டமைப்பு மீதான தாக்குதலில் அவர்கள் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த இருவரும் உடனடியாக விமானம் மூலம் கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டனர். கொழும்பில் அப்பலோ
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இருவருக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றும், அவர்களது உயிருக்கு
ஆபத்து ஏதுமில்லை என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. புலிகளின் விமானங்களின் பறப்பு நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக இந்தியா தனது இந்திரா II ரக ராடர்களை இலங்கைக்குக் கொடுத்துதவியது என்ற தகவல் முன்னர் வெளியாகியிருந்த போதிலும், அந்த ராடர்களை இந்திய விமானப் படையினரே நேரடியாகப் பிரசன்னமாகி இலங்கைத் தரப்புக்கு இயக்கி, தொழில்நுட்ப ஆலோசனை வழங்கி, பராமரித்து வருகின்றனர் என்பது வெளியே தெரிந்திருக்கவில்லை. புலிகளின் நேற்றைய தாக்குதல் இந்த விடயத்தில் குட்டைப் போட்டு உடைக்கச் செய்துவிட்டது எனச் சுட்டிக்காட்டும் செய்தி வட்டாரங்கள், புலிகளுக்கு எதிரான இலங்கைப் படைகளின் போரில் இந்தியப் படையினர் நேரடியாக சம்பந்தப்பட் -டிருக்கின்றமை இந்தத் தாக்குதலினால் அம்பலமான நிலையில் இந்த விவகாரம் இலங்கையிலும், இந்தியாவிலும், புலம்பெயர் தமிழர்கள் வாழும்
பிரதேசங்களிலும் பலத்த அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவிக்கும் என்றும் தெரிவித்தன. புலிகளின் நேற்றைய தாக்குதல் தொடர்பான விடயம் நேற்று நண்பகல் கொழும்பில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய
நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலும் எதிரொலித்தது. வவுனியாத் தளம் மீதான புலிகளின் தாக்குதலில் வெளிநாட்டவர்கள் யாரும் காயமடைந்தனரா? அவர்களுக்குப் பாதிப்பு
ஏற்பட்டதா? என்று செய்தியாளர் ஒருவர் அங்கு கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய
நாணயக்கார இராணுவ முகாமுக்குள் வெளிநாட்டவர்கள் எப்படி வருவார்கள்? என்று பதில் கேள்வி கேட்டு சமாளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராடார் நிலையம் உட்பட பல நிலைகள் அழிப்பு இரு விமானங்களும் பாதுகாப்பாகத் திரும்பின
10 - September - 2008
விடுதலைப் புலிகள் அறிவிப்பு வவுனியா கூட்டுப் படைத் தலைமையகத்தின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கரும்புலிகள் நடத்திய தாக்கு தலில் அங்கிருந்த கண்காணிப்பு ராடார் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் வான்புலிகளின் வானூர்திகளும் தளத்தின் மீது தாக்குதல்
நடத்திவிட்டு பாதுகாப்பாகத் திரும்பியுள்ளதாகவும் படைத்தளத்தின் மீது கேணல் கிட்டு பீரங்கி படைப்பிரிவினர் நடத்திய கடும்
ஆட்லறி தாக்குதலில் படையினருக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கைப் படையினரின் வன்னித்தலைமையக வளாகத்திலுள்ள விமானப் படையினரின் வான் கண்காணிப்பு ராடார்
நிலையத்தை இலக்குவைத்து அதிகாலை 3:05 மணிக்கு கரும்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதில் அந்த ராடார்
நிலையம் முற்றாக அழிக்கப்பட்டது.
அதியுயர் பாதுகாப்புக்கொண்ட விமானப்படை மற்றும் வன்னி கூட்டு நடவடிக்கை தலைமையகம் உள்ளடங்கிய தளத்திற்குள்
கரும்புலிகள் ஊடுருவி உள்நுழைந்து தாக்குதல் நடத்திய அதேவேளை, இவர்களின் உதவியுடன் படைத்தளத்தின் மீது
வான்புலிகளின் வானூர்தி தாக்குதல்களும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரின் செறிவான ஆட்லறி பீரங்கித்தாக்குதலும்
நடத்தப்பட்டன.
இத்தாக்குதல்களில் படையினரில் 20 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். வெடிபொருள்
களஞ்சியங்களும் தொலைத்தொடர்புக்கோபுரமும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப ஆய்வகமும் வானூர்தி எதிர்ப்பு ஆயுதமும்
முற்றாக தாக்கி அழிக்கப்பட்டன. படையினரின் வன்னித்தலைமையகமும் விஷேட படையணியின் வன்னித்தலைமையகமும்
பெரும் சிதைவுக்குள்ளாகின.
தாக்குதல் நடத்திய வான்புலிகளின் வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பின. இத்தாக்குதல்களில் கரும்புலிகளிள் பத்துபேர்
உயிரிழந்துள்ளனர். அரச படைத்தலைமைக்கும் அரசுத் தலைமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதலில்,
கரும்புலிகளான லெப்டினன்ட் கேணல் மதியழகன், மேஜர் ஆனந்தன், கப்டன் கனிமதி,கப்டன் முத்துநகர், கப்டன் அறிவுத்தமிழ்,
லெப்டினன்ட் கேணல் வினோதன், மேஜர் நிலாகரன், கப்டன் எழிலகன், கப்டன் அகிலன், கப்டன் நிமலன் ஆகியோர்
உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment