Thursday, 2 October 2008

சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சி

கிளிநொச்சி நகரச் சூழலில் அகோர விமானத் தாக்குதல்கள்!
பொதுமக்கள் இருவர் பலி; 13 பேர் படுகாயம்;குண்டுச் சிதறல்கள் ஆஸ்பத்திரி மீதும் விழுந்தன [02 ஒக்டோபர் 2008, வியாழக்கிழமை 10:00 மு.ப இலங்கை]
கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் நகரத்தின் சூழலில் உள்ள இடங்களில் நேற்று அகோர விமானத் தாக்குதல்கள்
நடத்தப்பட்டன. நேற்று முற்பகல் 10.20 மணியளவில் கனகாம்பிகைக்குளம் வீதியில் இரண்டு கிபிர் விமானங்கள் சுழன்று சுழன்று வந்து நான்கு
தடவைகள் குண்டுகளைப் பொழிந்தன.அதன்போது பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டனர். குழந்தைகள் இருவர் உட்பட 13 பேர்
காயமடைந்தனர். இந்தத் தாக்குதலின்போது, கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலை மீதும் குண்டுச் சிதறல்கள் வீழ்ந்து, கூரையும் யன்னல்
கண்ணாடிகளும் சேதமடைந்தன. மீண்டும் பி.ப 2.30மணியளவில் நகரை அண்டிய பாரதிபுரம் 155ஆம் கட்டைப் பகுதியிலும் நான்கு தடவைகள் கிபிர்
விமானங்கள் குண்டுகளை அள்ளி வீசின. அந்தத் தாக்குதலின்போது ஆறு வீடுகள் முற்றாக நாசமாகின. 13 வீடுகள் சேதமடைந்தன. மக்கள் எவரும் பாதிக்கப்படாமல்
தப்பினர். இதேவேளை கிளிநொச்சி நகருக்கு வட கிழக்கே அமைந்துள்ள பிரமணாளங்குளம் பகுதியில் நேற்று அதிகாலை அகோரக்
குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையில்கனகாம்பிகைக்குளம் வீதியில் நடத்தப்பட்ட விமானத் தாக்குத லினால் 13 பேர் காயமுற்றனர். அவர்களின் விவரம் வருமாறு: பரந்தாமன் கௌரி (வயது 2), தர்மன் கோகுலவாசன் (வயது 4), இராமையா விஜயதர்ஷினி (வயது 16), செல்லையா யோகராணி (வயது 68), ஜெபமாலை இந்திராணி (வயது 28), அருள்ஜோதி ஆரோக்கியா (வயது 49), காந்தரூபன் சுபாஜினி (வயது 28),
கந்தசாமி சத்தியஞானதேவி (வயது 57), வர்ணகுலசிங்கம் ராஜேந்திரன் (வயது 47), செல்லர் சுப்பிரமணியம் (வயது 55), செல்வநாயகம் பெருமாள் (வயது 65), விக்னேஸ்வரன் கமலாதேவி (வயது 26), வேலு லட்சுமிப்பிள்ளை (வயது 66). இதனைத் தொடர்ந்து மேலும் இரு தடவைகள் கிபீர் விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தின. அவற்றின் போது சேதவிவரங்கள்
நேற்றுமாலை வரை தெரியவரவில்லை. இதேவேளை கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்குத் தெற்காக உள்ள விடுதலைப் புலிகளின் மகளிர் அணியின் முகாம் மீதும் விமானங்கள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியதாக படைத்தரப்பு தெரிவித்தது. அதேவேளை, கிளிநொச்சி நகரப் பகுதியில் இருந்து சுமார் வடகிழக்கே சுமார் மூன்று மீற்றர் தொலைவில் உள்ள
பிரமணாளங்குளப் பகுதியில் விடுதலைப் புலிகள் ஒன்று கூடும் தளத்தை இலக்கு வைத்து நேற்று அதிகாலை 5.30 மணியளவிலும், கிளிநொச்சி நகருக்கு வடக்கே திருவையாற்றுப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனியின் சிறப்புப் படையணியின் தளம் மற்றும் பெண் போராளிகளின் பயிற்சித்தளத்தை இலக்கு வைத்து முற்பகல் 10.30 மணியளவிலும் கிளிநொச்சி நகரில் இருந்து தெற்கே சுமார் மூன்றரைக் கிலோமீற்றர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின்
விநியோகத்தளங்களை இலக்குவைத்து பிற்பகல் 2.30 மணியளவிலும் விமானப்படையினரின் ஜெற் விமானங்கள் தாக்குதல்களை நடத்தின என்றுபடைத்தரப்பில் அறிவிக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணிமனை, சமாதான செயலகம் சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் அழிப்பு
[வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 05:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
அனைத்துலக பிரதிநிதிகள், அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளை சந்தித்து உரையாடும் தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை செயலகம், சமாதான செயலகம் என்பன சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில்அழிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகர மையத்தில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணிமனை மற்றும் சமாதான செயலகம்
அனைத்துலக நிறுவனங்களுக்கான விடுதலைப் புலிகளின் தொடர்பகம் அருகான மக்கள் குடியிருப்புக்கள் என்பன அமைந்துள்ள
பகுதியை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் 16 குண்டுகளை வீசியுள்ளன.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் 12:50 நிமிடமளவில் வந்த இரண்டு வானூர்திகள் தாழப்பறந்து குண்டுகளை வீசியுள்ளன.
வானூர்திகளால் வீசப்பட்ட 16 குண்டுகளும் வீழ்ந்து வெடித்துள்ளன.
இதில் தமிழீழ அரசியல்துறை நடுவப்பணிமனை, சமாதான செயலகம் அனைத்துலக நாட்டு நிறுவனங்களுக்கான தொடர்பகம்
என்பன முற்றாக அழிந்தும் சேதமாகியும் உள்ளன.
2002 ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டின் பின் உருவான பேச்சுவார்த்தை காலம் தொடக்கம் அனைத்துலக
பிரதிநிதிகள், அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் விடுதலைப் புலிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்தும்
உரையாடும் இடமாக நடுவப்பணிமனை, சமாதானச்செயலகம் என்பன இயங்கி வந்தன.
இறுதியாக ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனப் பிரதிநிதிகள் இங்குதான் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடியிருந்தனர்.
அனைத்துலக நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அனைத்துலக செஞ்சிலுவை சங்கக்குழுப் பிரதிநிதிகள் தமது பணி ஒழுங்கமைப்புக்களை விடுதலைப் புலிகளின் தொடர்பாளருடன் தொடர்புகொள்ளும் தொடர்பகமும் இப்பகுதியில் அமைந்திருந்தது. அதுவும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
மேலும் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்களின் 17 வீடுகளும் தாக்குதலில் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன.
இதில் பொதுமக்கள் இருவர் கொல்லப்ப்பட்டனர். 16 பேர் காயமடைந்தனர்.
பொதுமக்களுக்கான அரசியல் இராஜதந்திரச் செயற்பாட்டின் விடுதலைப் புலிகளின் மையத்தின் மீது சிறிலங்கா வான்படைநடத்திய அழிப்புத்தாக்குதல் அதன் தெளிவான முடிவை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
தங்கவேல் ரகு (வயது 30),சுப்பையா சிவலிங்கம் (வயது 48),இராசலிங்கம் சந்திரா (வயது 40),ஐயாத்துரை மகாலிங்கம் (வயது 55)
சங்கரப்பிள்ளை ஆனந்தசிவம் (வயது 60),சின்னக்குட்டி வேலும்மயிலும் (வயது 70).சந்திரராசா வினோத் (வயது 15)
சிவகுருராசா டெனிஸ் (வயது 22), மகேந்திரராசா சந்திரகுமாரி (வயது 14)
கருணாநந்தநேசராசா சந்திரசேனன் (வயது 24)
செல்வநாயகம் கந்தசாமி (வயது 64)
தேவகுருசேனன் குருகுலதேவன் (வயது 34)
சிவசற்குணராசா சங்கரன் (வயது 27)
விமலநாதன் சிவகாந்திமதி (வயது 18)
தேவராசா கருணாகரன் (வயது 21)
கோகுலராசா சண்முகதர்சினி (வயது 18)
ஆகியோர் இதில் காயமடைந்தனர்.
கொல்லப்பட்ட இருவரும் வீதியில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆவர். இவர்களின் பெயர் விவரம் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.
சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் கிளிநொச்சி உயர்தொழில்நுட்ப நிறுவனம் அழிப்பு
[வியாழக்கிழமை, 02 ஒக்ரோபர் 2008, 06:07 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
கிளிநொச்சியில் இயங்கி வந்துள்ள உயர்தொழில்நுட்ப நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனம் மீது சிறிலங்கா வான்படை
நேற்று புதன்கிழமை பிற்பகல் 2:30 நிமிடமளவில் குண்டுவீசி அழித்துள்ளது. கல்வி மேம்பாட்டுக்காக செயற்பட்டு வந்த கணிநுட்பக்கூட்டு நிறுவனம் கணினி கற்பித்தல் மற்றும் ஆசிரியர்களை உருவாக்குதல்
கணனி கற்கையை ஊக்குவித்தல் போன்ற கல்விப்பணிகளை செய்து வருகின்றது.
அத்துடன் மாணவர்களின் கணினி கல்வி வளர்ச்சிக்காக புலமைப்பரிசில் திட்டங்களையும் அது செயற்படுத்தி வருகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட உயர்கல்வி நிறுவனமான கணிநுட்பக்கூட்டு நிறுவனத்தின் பணிமனைத் தொகுதி
சிறிலங்கா வான்படையினால் நேற்று பிற்பகல் குண்டுவீசி அழிக்கப்பட்டது.
திட்டமிட்டு தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை தடுப்பதற்காக இந்த கல்வி நிறுவனத்தின் மீதான அழிப்புத்தாக்குதலை
சிறிலங்கா அரசு நடத்தியுள்ளது என்று கல்வியிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்கா அரசின் திட்டமிட்ட கல்வி அழிப்புத்தாக்குதலாக இது அமைந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள தமிழ்க்கணனி நிபுணர்களின் துணையுடன் கணிநுட்பக்கூட்டு நிறுவனம் தனது பணியை கல்விச் சமூகத்துக்கு ஆற்றி வந்துள்ளது.
நேற்று ரம்ழான் நாளானதால் நிறுவனத்தின் பணியாளர்கள் பணிக்கு வராததால் உயிர் இழப்புக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

No comments: