நாளுக்கு இருபது அகதிகள் பாம்புக்குப் பலி!
''இந்திய அரசுக்கு இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் சிறிலங்கா அரசு இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடனேயே கூட்டுச் சேர்ந்ததுதான் கடந்தகால வரலாறாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களே இந்தியாவின் நலனிற்காக குரல்கொடுத்தும் செயற்பட்டும் வந்துள்ளமை வரலாற்று உண்மையாகும். இதை இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது எம்முடைய அவாவாகும். சிங்கள தேசத்திற்கு இந்திய அரசு உதவுவதைவிட தமிழர் தேசத்திற்கு உதவுவதே இந்தியாவின் பாதுகாப்பிற்குப் பலமாகும். எதிர்காலத்திலாவது உண்மையான நேச சக்திகளுக்கு உதவ முன்வரவேண்டும்."
பா.நடேசன் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர்
வன்னியில் பேரவலம்: பாம்பு கடியில் 120 தமிழ் அகதிகள் பாதிப்பு- 13 நாளேயான பச்சிளம் குழந்தை பலி
[வியாழக்கிழமை, 16 ஒக்ரோபர் 2008, 12:15 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்]
சிறிலங்கா படையினர் வலிந்த தாக்குதல்களால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களில் ஒரு வார காலத்தில் 120 பேர் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 நாளேயான பச்சிளம் குழந்தை பலியான சோகமும் நிகழ்ந்துள்ளது. இந்தப் பேரவலம் குறித்து மாகாண சுகாதார திணைக்கள பிரதி இயக்குநர் பி.பிர்ங்க்டன் கூறியுள்ளதாவது:
ஒரு வார காலத்தில் 120 தமிழ் அகதிகள் பாம்பு கடிக்குள்ளாகியுள்ளனர். 13 நாள் பச்சிளம் குழந்தை பலியாகியுள்ளது. 53 வயது பெண் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாம்பு கடி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கான மருந்துகள் அவசரமாகத் தேவைப்படுகிறது. ஆனால் வன்னிப் பெருநிலப்பரப்புக்குள் மருந்து சுமையூர்திகள் அனுமதிக்கப்படுவதில்லை என்றார் அவர்.
போதுமான மருந்துகள் இன்றி பிறந்து 13 நாளேயான பச்சிளம் குழந்தை கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தது.
கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை தற்போது தர்மபுரத்தில் இயங்கி வருகிறது. அங்கு சுமார் 300 உள்ளக நோயாளிகளும் 800 முதல் 1,200 வரையிலான வெளிநோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போதுமான இடமின்றி மருத்துவமனையின் தரைகளில் அந்த நோயாளர்கள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இப்படிப் பேரவலத்துக்குள்ளானோரில் பெரும்பாலானோர் அண்மைய சிறிலங்கா படையெடுப்பினால் இடம்பெயர்ந்த புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த புளியம்பொக்கனை மற்றும் விசுவமடு பகுதியைச் சேர்ந்த மக்களே என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடிநீர் பற்றாக்குறை- கழிப்பிட வசதியின்மை ஆகியவற்றால் அப்பகுதி மக்கள் பெரும் அவலத்துள்ளாகி வருவதாகவும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய அவலத்தால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு நாளாந்தம் அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகின்ற பெரும் அவலம் நிகழ்ந்து வருகிறது. மேலும் தோல் நோய்களும் அம்மக்களைப் பாதித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக குடியேறுவதால் அப்பகுதிகளில் பாரிய எண்ணிக்கையிலான வீதி விபத்துகளும் நிகழ்கின்றன. இந்த வீதி விபத்துகளில் பாதிக்கப்படுவோர் சிறார்களாகவும் இருக்கின்றனர்.
அண்மையில் வீதி விபத்து ஒன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்த அவலத்தையும் மருத்துவர் பிரிங்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மழையும் பெய்து வரும் நிலையில் வெட்ட வெளிகளில் கேட்பாரற்று நம் தமிழ் உறவுகள் உணவு- உடை- உறைவிட வசதிகளின்றி அல்லல்படும் அவலத்தை எப்படிச் சொல்வது என்று வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து தகவல் தெரிவிப்போர் கூறுகின்றனர்.
6 comments:
well its nice to know that you have great hits here.
im here because of few cents for you. just dropping by.
sure, why not!
im your favorite reader here!
i think you add more info about it.
haha.
Post a Comment