Friday, 31 October 2008

பரந்தனில் அரசு, கொழும்பில் புலிகள் :விமானத்தாக்குதல்!

தள்ளாடி தரைப்படைத்தளம்- அனல் மின் உற்பத்தி நிலையம் மீது வான்புலிகள் குண்டுத்தாக்குதல்: விடுதலைப் புலிகள்
[புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 05:58 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மன்னார் தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீதும் சிறிலங்காவின் கொழும்பு களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீதும் வான்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தி அழிவினை ஏற்படுத்தியுள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா தரைப்படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10:20 நிமிடத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் தள்ளாடி தரைப்படைத்தளம் பலத்த சேதமடைந்துள்ளது. பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். அதேநேரம், சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள களனி திச அனல் மின் உற்பத்தி நிலையம் மீது நேற்று இரவு 11:45 நிமிடத்துக்கு வான்புலிகள் வெற்றிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்த இரு இடங்களிலும் தாக்குதலை நடத்தி விட்டு வானூர்திகள் பாதுகாப்பாக தளம் திரும்பியுள்ளன என்று விடுதலைப் புலிகள்
மேலும் தெரிவித்துள்ளனர்.

பரந்தனில் சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 3 பேர் பலி; 11 பேர் காயம்; 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்
[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 06:53 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பாடசாலைக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தில் 1,300 மாணவர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர். பரந்தன் குமரபுரம் கிராமத்தில் உள்ள பரந்தன் இந்து வித்தியாலயத்துக்கு அருகான மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:15 நிமிடமளவில் சிறிலங்கா வான்படையின் மிக் - 27 ரக வானூர்திகள் இரண்டு
குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன.மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து வீதியை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.சுமார் 1,300 மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருந்த வேளையில் பரந்தன் சந்தை மற்றும் நகரம் செறிவான மக்களுடன்
இயங்கிக்கொண்டிருந்த வேளையில் மக்களுக்கு அவலத்தையும் அழிவையும் ஏற்படுத்தும் வகையில் மக்கள் குடியிருப்புக்கள் மீது
சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின.இதில் வீதியால் சென்று கொண்டிருந்த மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களின் எட்டு வீடுகள் அழிந்துள்ளதுடன் பத்து வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. வீடுகளில் இருந்த பொதுமக்கள் மூவரும், மாணவர்கள் மூவருமாக
ஆறு பேர் காயமடைந்தனர்.குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது பாடசாலை மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்தனர். வான்படையின் மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலால் மாணவர்கள் பதறி- அவலப்பட்டு- சிதறி ஓடினர்.மாணவர் அவலப்பட்டு காப்பகழிகளுள்ளும் வெளியிலும் கதறி அழுதவாறு சிதறியோடினர். பாடசாலை வளாகத்திலும்
வகுப்பறைகளிலும் குண்டுச்சிதறல்கள் வீழ்ந்துள்ளன. இதில் மாணவர்கள் காயமடைந்தனர்.வான்படையின் குண்டுத்தாக்குதலினால் பரந்தன் நகரம் அவலப்பட்டு சிதறி ஓடியது.திட்டமிட்டு சிறிலங்கா வான்படை மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.குண்டுத்தாக்குதலில் கிறிஸ்டி (வயது 16) எனும் மாணவனின் வாயில் குண்டுச்சிதறல் தாக்கியுள்ளதுடன் கனிஸ்டன், தனுசன்
ஆகிய மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.வீடுகளிலிருந்து காயமடைந்த சுகுமார் ரதி (வயது 47), பத்மசீலன் (வயது 37), வீ.காண்டீபன் (வயது 29) ஆகியோர் கிளிநொச்சி நகரில் இயங்கிவரும் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வீதியில் சென்று கொண்டிருந்த நிலையில் கொல்லப்பட்ட மூன்று பேரும் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை. மேலும் ஐந்து பேர் பேர் சிறுகாயங்களுக்குள்ளாகினர்.ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஏற்பட்ட பெரும் எழுச்சி காரணமாக இராஜதந்திர அழுத்தங்களுக்கு அஞ்சி கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பொதுமக்கள் மீதான வான்தாக்குதலை இடைநிறுத்தி வைத்திருந்த சிறிலங்கா அரசு-எக்காரணம் கொண்டும் மத்திய அரசுக்கு நெருக்கடியை தரமாட்டோம் என்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அறிக்கை
விடுத்ததன் மூலம் தான் முன்னர் விதித்திருந்த பதவி விலகல் காலக்கெடுவிலிருந்து விலகியதனையடுத்து-சிறிலங்கா அரசு பொதுமக்கள் மீதான வான் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பரந்தன் வான் தாக்குதலுக்கும் அதனை மூடிமறைத்த சிறிலங்கா இராணுவப் பேச்சாளருக்கும் நா.உ. கஜேந்திரன் கண்டனம்
[புதன்கிழமை, 29 ஒக்ரோபர் 2008, 08:15 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியில் சிறிலங்கா வான்படை நேற்று நடத்திய தாக்குதலுக்கும், அதனை மூடிமறைத்தசிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்காரவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சியின் பரந்தன் சந்தியை அண்டிய குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை நேற்றுசெவ்வாய்கிழமை (28.10.08) அன்று நடத்திய குண்டுத்தாக்குதலில் வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று பொதுமக்கள்தாக்குதல் நடைபெற்ற இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.குமரபுரம் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஆறு அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.வான் தாக்குதல் கரணமாக 10 வீடுகள் முற்றாக தரைமட்டமாக அழிவடைந்துளதுடன் மேலும் பல வீடுகள் பகுதியளவில்சேதமடைந்துள்ளன.தாக்குதல் வானூர்திகள் வானத்தில் வட்டமிட்டபோது வீடுகளில் தங்கியிருந்த பொதுமக்கள் தமது வீடுகளில் அமைத்துவைத்திருந்த பதுங்கு குழிகளுக்குள் சென்று பதுங்கிக்கொண்டமையினால் பெரும் உயிரழிவில் இருந்து மக்கள் தப்பிக்கொண்டனர்.தாக்குதல் நடைபெற்றபொழுது நாடாளுமன்ற உறுப்பினராகிய நான் சம்பவம் நடைபெற்றதையறிந்து அந்த இடத்திற்கு நேரில்சென்று பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடினேன்.தாக்குதல் நடைபெற்ற பொழுது பொதுமக்கள் தமது வீடுகளில் இருந்த பதுங்கு குழிகளுக்குள் சென்று பாதுகாப்புத் தேடியிருக்காவிட்டிருந்தால் ஆகக்குறைந்தது 16 பொதுமக்களாவது கொல்லப்பட்டிருப்பார்கள். மக்களது தற்காப்பு நடவடிக்கையினால் பெரும்மனித அழிவு தவிர்க்கப்பட்டுள்ளது.பரந்தன் இந்து மகா வித்தியாலயம் அமைந்துள்ள இடத்திலிருந்து சுமார் 250 மீற்றர் தூரத்தில் குண்டுத்தாக்குதல்நடைபெற்றுள்ளது.தாக்குதல் நடைபெற்ற சமயம் சுமார் 1,300 மாணவர்கள் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டிருந்ததாக பாடசாலையின் பதில்அதிபர் தெரிவித்தார்.தாக்குதல் நடைபெற்ற பொழுது மாணவர்கள் சிதறி ஓடியபோது வான் குண்டுத்தாக்குதலில் மூன்று மாணவர்கள்படுகாயமடைந்துள்ளனர் வகுப்பறைகளும் சேதமடைந்துள்ளன.தாக்குதலில் கொல்லப்பட்டவர்களது பெயர் விபரங்கள் வருமாறு:சங்கரலிங்கம் சிவநாதன் (வயது 36)சிவநாதன் சிவமணி (வயது 24)தங்கநாதன் சிவநேசன் (வயது 29)காயமடைந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு:மாணவன் கிறிஸ்ரி (வயது 16)மாணவன் கனிஸ்ரன் (வயது 15)மாணவன் தனுசன் (வயது 15)சுகுமார் ரதி (வயது 41)வி.காண்டீபன் (வயது 29)அ.பத்மசீலன் (வயது 37)தாக்குதல் நடைபெற்ற இடத்தில் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து வந்து தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்துவந்திருந்தனர். தாக்குதலில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள மக்களது வீடுகள் பல அழிவடைந்துள்ளன.தாக்குதல் நடைபெற்ற இடத்தினை பார்க்கும் பொழுது இத்தாக்குதலானது பொதுமக்களை இலக்குவைத்து பொதுமக்கள் செறிவாகவாழும் குடியிருப்பு பகுதி மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாகவே உணர முடிகின்றது.நேற்றய நாள் நடைபெற்ற இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்றய நாள் பிபிசி செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த,இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார அப்படியானதொரு தாக்குதலை தாம் நடாத்தவில்லை எனவும் அது வெறும்கட்டுக்கதை என்றும் கூறி உண்மையை மூடிமறைத்துள்ளார்.இராணுவப் பேச்சாளரின் இக்கருத்தினை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன். தாக்குதல் நடைபெற்ற இடத்தினை நான் நேரில்சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு சம்பவத்தினை உறுதிப்படுத்தியுள்ளேன்.தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடவடிக்கையை மூடிமறைக்க இராணுவப் பேச்சாளர் முயற்சித்துள்ளார் என்பதனையே அவரதுகூற்றில் இருந்து உணர முடிகின்றது.சிறிலங்கா அரசின் தூதுவராக பசில் ராஐபக்ச அவர்கள் இந்தியாவுக்கு சென்று அங்கு தமிழ் மக்களது பாதுகாப்பு தொடர்பாகஉறுதிமொழி வழங்கி இரண்டு நாட்கள் கழிவதற்குள் இவ்வாறான படுகொலையை சிங்கள வான்படை நிகழ்த்தியுள்ளது.இந்திய மத்திய அரசிற்கு தமிழ் மக்களது பாதுகாப்புத் தொடர்பாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் கூட தமிழ்மக்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகளில் எந்தவித மாற்றமும் இன்றி சிறிலங்கா அரச படைகளால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

No comments: