Wednesday, 22 October 2008

காங்கேசன் துறையில் கடற் போர்! அரச ஆயுதவிநியோக கப்பல்கள் தாக்கி அழிப்பு!!


காங்கேசன் துறையில் கடற் போர்! அரச ஆயுதவிநியோக கப்பல்கள் தாக்கி அழிப்பு!!
வன்னிப்போர்க்களத்துக்கு ஆயுதம் கடத்திச்சென்ற இரு ஸ்ரீறிலங்கா அரச படைக்கப்பல்கள் காங்கேசன் துறை தமிழீழக் கடற்பரப்பில் கடற்புலிகளால் இடைமறித்து தாக்கி அழிப்பு.
இன்று புதன் கிழமை அதிகாலை இலங்கை நேரம் 5.10 மணியளவில் வன்னிப்போர்க்களத்துக்கு ஆயுதம் கடத்திச்சென்ற இரு ஸ்ரீறிலங்கா அரச படைக்கப்பல்கள் காங்கேசன் துறை தமிழீழக் கடற்பரப்பில் கடற்புலிகளால் இடைமறித்து தாக்கி
அழிக்கப்பட்டதற்கான ஆதாரத்தகவல்களை ஸ்ரீறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.இத்தாக்குதலுக்கு இலக்கான படகுகள் Ruhuna and Nimalawa என்பனவாகும். இது குறித்து செய்தி வெளியிட்ட AFP செய்தி ஸ்தாபனம் ஆறு விடுதலைபுலிகளைச் சுமந்து வந்த மூன்று கடற்புலிப்படகுகள் இத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், சிறீலங்கா
அரசின் ஒரு படகு முற்றாக அழிக்கப்பட்டதாகவும் மற்றையது சேதம் அடைந்ததாகவும் அரசு தரப்பை மேற்கோள்காட்டி செய்தி
வெளியிட்டுள்ளது. இபிராந்தியம் 1995 இல் சிறிலங்கா அரசபடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டதில் இருந்து அரசின் கட்டுப்பாட்டின் கீழ்
13 ஆண்டுகளாக இருக்கிறது.சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இப்படகுகள் தமிழ்மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், இத்தாக்குதல் விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளின் கோழைத்தனமான செயல் என்றும் வீரத்தனமாக விளம்பியுள்ளது.
எனினும் அரசபடைகள் வன்னிப்போர்க்களத்தில் சிக்குண்டு போன நிலையில் ஆயுதத்தளபாட விநியோகத்தைத் தடுத்து நிறுத்தியதானது,
ராஜபக்சவின் யுத்தப் பேரிகைக்கு விழுந்த பேரிடியென இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Enb-News

யாழ். கடற்பரப்பில் இரு விநியோகக் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதல் [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:02 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் சிறிலங்காவின் இரு விநியோகக் கப்பல்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சிறிலங்கா கடற்படை பேச்சாளர் டிகேபி.தசநாயக்க தெரிவித்திருப்பதாவது:
காங்கேசன்துறை மயிலிட்டி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த விநியோகக் கப்பல்களான றுகுண, நிமலவ ஆகியவற்றினை இலக்கு வைத்து இன்று புதன்கிழமை அதிகாலை 5:10 நிமிடமளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் தாக்குதல் நடத்தின.
இதில் ஒரு கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றைய கப்பலுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. விடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சியினை முடியடித்துள்ளோம் என்றார் அவர்.
இத்தாக்குதல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக எதனையும் வெளியிடவில்லை. நன்றி: புதினம்

No comments: