Monday 10 November, 2008

போர் நிறுத்தமும் பேச்சுவார்த்தையும்?

* போரை நிறுத்த தாம் தயார் என்பதை புலிகள் அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
* விடுதலைப் புலிகள் எப்போதும் போர் நிறுத்தத்துக்கு தயார்-பா.நடேசன்
* புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதி தீர்வுக்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
* நிபந்தனைகள் இன்றி ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வந்தால் மாத்திரமே புலிகளுடன் எந்தப் பேச்சையும் அரசாங்கம் நடத்தும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அரசாங்கம் தொடர்ந்து நடத்தும்- அமைச்சர் மைத்திரிபால சிறிசேன
* புலிகளுடனான போரை ஒருபோதும் நிறுத்த மாட்டோம்: சிறிலங்கா அறிவிப்பு

புலிகளுடனான போரை ஒருபோதும் நிறுத்த மாட்டோம்: சிறிலங்கா அறிவிப்பு [திங்கட்கிழமை, 10 நவம்பர் 2008, 07:30 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். வரவு-செலவு திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர், விடுதலைப் புலிகளுடன் எத்தகைய இணக்கப்பாட்டையும் அரசாங்கம்
செய்து கொள்ளாது என்றும் கூறினார்.
சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று திங்கட்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு பண்டார தலைமையில் கூடியது.
நாள் பணிகள் முடிவடைந்ததும் வரவு-செலவு திட்ட விவாதம் தொடங்கியது.
விவாதத்தில் அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது குறுக்கிட்ட ஜே.வி.பி உறுப்பினர் ரணவீர பத்திரன, விடுதலைப் புலிகள்
போர் நிறுத்தத்தை செய்வதற்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே, அரசாங்கம் போர் நிறுத்தம் செய்யுமா என்று
கேட்டபோதே அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.
நிபந்தனைகள் இன்றி ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வந்தால் மாத்திரமே புலிகளுடன் எந்தப் பேச்சையும் அரசாங்கம் நடத்தும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அரசாங்கம் தொடர்ந்து நடத்தும் என்றும் அவர் கூறினார்.

புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதி தீர்வுக்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் [ஞாயிற்றுக்கிழமை, 09 நவம்பர் 2008, 07:38 பி.ப ஈழம்] [ந.ரகுராம்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதித் தீர்வுக்கு வழிகாண இந்திய அரசு முயற்கிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான, வானூர்தி, தரைப்படைத் தாக்குதலை நிறுத்தி விட்டு, அமைதியான சூழ்நிலையை உருவாக்கி, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண முயல வேண்டும் என்ற கோரிக்கையை, சிறிலங்கா அரசுக்கு, இந்திய மக்களின் சார்பில் இக்கோரிக்கையை வலியுறுத்துமாறு கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இயக்கம் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே!
தமிழக அரசு கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்திலும் போரை நிறுத்த வேண்டும் என்பதை முதல் கோரிக்கையாக ஏற்று அனைத்துக் கட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றின.ஆனால், போர் தொடர்ந்து நடந்து வருகிறது. மக்கள் கொல்லப்படுவது நீடிக்கிறது. இந்திய அரசு போர் நிறுத்தம் குறித்து
சிறிலங்காவுடன் பேசவே இல்லை என சிறிலங்கா அரசின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
இதன் தொடர்பாக, போர் நிறுத்தம் என்றால், இருதரப்பும் அதை ஏற்க வேண்டும் மாறாக சிறிலங்கா அரசை மட்டும் வற்புறுத்துவது
பொருந்தாது என்றும், விடுதலைப் புலிகள் போரை நிறுத்த மாட்டார்கள் என்றும் பரவலாக கருத்து பரப்பப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் எனவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் நேரடியாகத் தொடர்பு கொள்ள இயலவில்லை.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் இதற்கான சரியான பதிலை கூற இயலாது.
எனவே சிறிலங்கா அரச படைகளுடன் மோதிக் கொண்டிருக்கும், மறுதரப்பின் நிலையைத் தெளிவுப்படுத்தக் கோரி பத்திரிகை, ஊடகங்கள் மூலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்க வேண்டுகோளை விடுத்தது.
போராடி வரும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், குறிப்பாக விடுதலைப் புலிகளும், போர் நிறுத்தம் குறித்து கருத்தை வெளியிட வேண்டும் என்று நவம்பர் 7 ஆம் நாள் அறிக்கை ஒன்றை கட்சியின் சார்பில் வெளியிட்டோம்.
இச்செய்தியைக் கண்டவுடன் 7 ஆம் நாள் இரவே இணையத்தளத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் அரசியல் தலைமைப் பொறுப்பாளர் பி.நடேசன் திட்டவட்டமான பதிலை வெளியிட்டுள்ளார்.
முதல் தேவை போர் நிறுத்தமே என்பதை விடுதலைப் புலிகள் தொடக்கம் முதல் வற்புறுத்தி வருவதாகக் கூறும் நடேசன், "சிறிலங்கா அரசு தான், படை கொண்டு போரை நடத்தி வருகிறது. தாக்குதலிலிருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே தமிழ்மக்கள் போராடி வருகிறோம். எனவே சிறிலங்கா அரசு போரை நிறுத்தினால் தாங்களும் தற்காப்புப் போர் நடத்தி வருவதையும் நிறுத்தி
விடுவோம்" என்று கூறுகிறார்.
இதன் மூலம் விடுதலை புலிகளும் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்பது தெளிவாகி விட்டது.
எனவே இந்த அறிவிப்பினை அடிப்படையாக் கொண்டு இந்திய அரசு, சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும்.
நோர்வே நாட்டின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் நாள் போர் நிறுத்த ஒப்பந்தம், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கு இடையில் கையெழுத்தானது.
இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை, சிறிலங்கா அரசு 2008 ஜனவரி 16 ஆம் நாள் இரத்துச் செய்வதாக தன்னிச்சையாக அறிவித்து,
நோர்வே நாட்டுப் பிரதிநிதிகளையும் திருப்பி அனுப்பி விட்டது.
போர் நிறுத்தத்தை சிறிலங்கா அரசு கைவிட்டதை நோர்வே, சுவீடன், டென்மார்க், ஐஸ்லாண்டு, பின்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாகக்
கண்டித்து ஜனவரி 4, 2008 அன்று அறிக்கை வெளியிட்டன.
ஐ.நாவின் பொதுச் செயலாளர் பான்-கி-மூனும், சிறிலங்கா அரசின் செயலைக் கண்டித்தார். அமெரிக்க அரசும், அமைதி வழியில் அல்லாது இராணுவ ரீதியில் சிக்கலைத் தீர்க்க முயல்வது வெற்றி பெறாது என்பதோடு, வன்முறையும், உயிர்ச் தேசமுமே அதிகப்படும் என எச்சரித்துள்ளது. கனடாவும் சிறிலங்கா அரசைக் கண்டித்துள்ளது. உலக நாடுகளின் கருத்தை நிராகரித்து விட்டு, மக்களுக்கு எதிரான போரை பல நாட்டுப் படைகள், ஆயுத உதவிகளுடன் சிறிலங்கா அரசு நடத்தி வருகிறது.
எனவே பொறுப்புள்ள ஒரு அரசு என்ற முறையில் சிறிலங்கா அரசு போர் நிறுத்தத்ததை அறிவிக்க வேண்டும். இந்திய அரசு அதை வலியுறுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகளின் வாக்குறுதியை ஏற்று அமைதித் தீர்வுக்கு வழிகாண இந்திய அரசு முயற்கிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைப் புலிகள் போர் நிறுத்த வேண்டும் உடன்பாடுட்டுக்கு ஆதரவு தெரிவித்தததை வரவேற்பதுடன் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்று இந்திய மக்கள், தமிழ் மக்கள் சார்பில் இலங்கைத் தமிழ் மக்களின் தலைவர்கள் அனைவரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது.
இலங்கை தமிழ் மக்களின் மனித, ஜனநாயக அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க உலக மக்களின் ஆதரவையும் திரட்ட வேண்டும். குறிப்பாக இந்தியத் தமிழ்மக்கள் இது குறித்து, மாறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு உரிமைகள் மீட்கப்படும் வரை குரல் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.
தடைகளைத் தாண்டி போர் நிறுத்த உடன்பாட்டுக்கு மீண்டும் உறுதியை தந்த விடுதலைப் புலிகளின் இயக்கத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மனமார பாராட்டுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் எப்போதும் போர் நிறுத்தத்துக்கு தயார்
[10 - November - 2008] [Font Size - A - A - A]
அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் தெரிவிப்பு
போர்நிறுத்தம் தேவை என்ற நிலையிலேயே தாங்கள் எப்போதும் இருப்பதாகவும் தங்களது அந்த நிலைப்பாட்டை மீண்டும்
வலியுறுத்துவதில் தங்களுக்கு ஒருபோதும் எவ்வித தயக்கமும் இருந்ததில்லையெனவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இடம்பெறும் இனப்படு கொலையைத் தடுத்து நிறுத்த அங்கு உடனடியாகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்படவேண்டுமென தமிழக முதலமைச்சர் உட்பட தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இலங்கை அரசு உடனடியாக அங்கு போர் நிறுத்தத்தை அறிவித்து விடுதலைப்புலிகளுடன் உடனடியாகப் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டுமென இலங்கை அரசை வற் புறுத்துமாறு தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி இந்திய மத்திய அரசையும் வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையிலேயே, விடுதலைப்புலிகளின் தலைவர்களும், போர் நிறுத்தம் குறித்த தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை பகிரங்க அறிக்கை மூலம் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கையிலேயே, போர் நிறுத்தத்திற்கு தாங்கள் எப்போதும் தயாரென விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் "தமிழ் நெற்' இணையத்தளத்திற்கு நேற்று ஞாயிற்றுக் கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடேசன் மேலும் கூறுகையில்;
நாங்கள் எப்போதுமே போர்நிறுத்தத்தையே வலியுறுத்தி வந்துள்ளோம். அந்த நிலைப்பாட்டில் எங்களிடம் மாற்றமோ அல்லது தயக்கமோ இருந்ததில்லை.
உண்மையிலேயே இலங்கை அரசுதான் போர்நிறுத்தத்தைஒருதலைப்பட்சமாக முறித்தது. தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு பெரும் போரைத் தொடுத்துள்ளது. புலிகள் இப்போதும் தற்காப்புப் போரிலேயே ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறானதொரு நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
போர்நிறுத்தம் நடைமுறையில் இருக்கவேண்டும் என்பதில் புலிகள் உறுதியுடன் உள்ளனர். அதனை தாங்கள் மீண்டும் மீண்டும்
வலியுறுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்த தாம் தயார் என்பதை புலிகள் அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை [சனிக்கிழமை, 08 நவம்பர் 2008, 09:50 பி.ப ஈழம்] [கி.தவசீலன்]
இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.
போரை நிறுத்துமாறு ஒரு தரப்புக்கு மட்டும் நிர்ப்பந்தம் கொடுக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ள கருத்தை அடுத்தே தா.பாண்டியன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு நடத்தி வரும் போரை நிறுத்த வேண்டும் என்று இந்திய மக்களும், தமிழ் மக்களும் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வைத்துள்ள மனிதாபிமான கோரிக்கையை பொதுவாக பலரும் ஆதரிக்கின்றனர்.
இந்த பின்னணியில் மத்திய அரசும், தமிழக முதல்வரும் சிறிலங்கா அரச தரப்பில் மட்டும் போரை நிறுத்துவது எவ்வாறு சாத்தியப்படும். மறுதரப்பும் (விடுதலைப் புலிகள்) போரை தொடர மாட்டோம் என்று அறிவிக்க வேண்டாமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். பொதுமக்களிடமும் இது குறித்த ஐயப்பாடு இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் இலங்கை தமிழர்களின் ஜனநாயக உரிமைக்காக போராடி வருபவர்களும் குறிப்பாக இதில் விடுதலைப் புலிகளின்
சார்பாக அதன் பொறுப்பாளர்களும், தாங்களும் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் அமைதி வழியில் தீர்வுகாண
தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Note no. 480 10-Nov-2008
SRI LANKA: Operational Developments in the Eelam War – Update No. 155
Col R Hariharan
Operational fronts
The security forces put two weeks of sunny weather to good use, advancing their offensive further both along the Mannar coast and the axis Akkarayankulam-Kilinochchi, southwest of the administrative capital of the Liberation Tigers of Tamil Eelam (LTTE). According to the security sources Task Force-I formed out of 58 Division advancing on a broad front south east of A32 Mannar-Pooneryn axis are six km short of Pooneryn on October 10, 2008. They came under heavy LTTE resistance at Palayilkulam and Uruthirapuram on way.
The LTTE appears to be reducing its strength in Pooneryn. It is reported to have pulled out its three 130 mm How guns from Kalmunai point in the
Pooneryn salient. This would indicate that the LTTE would then pull out from Pooneryn in small trickles even as it resists the advancing forces.
The LTTE have the options to infiltrate into Jaffna peninsula and the Kayts Island group, and Kilinochchi. The Kilinochchi option might not come through
as the Task Force-I is moving to cut off Pooneryn - Paranthan road which joins the A9 Kandy-Jaffna highway. We can expect the navy to come into
action in the last phase of Pooneryn operations both to contain and hunt down the LTTE cadres getting out through the lagoons around Pooneryn. The
navy is reported to have deployed special boat squadrons to prevent such moves of LTTE.
The capture of Pooneryn would open up the A32 maintenance route to Jaffna in the coming weeks through the Sangupiddy ferry, relieving a major
burden on the security forces in providing air and sea logistic support to Jaffna administration. After shifting from Kalmunai, the LTTE guns would not be
able to engage Palali airfield and Jaffna forces headquarters.
57 Division advancing west of A9 captured by October 6 the well sited Akkarayankulam defence complex after three weeks of intermittent operations. It
also claimed to have neutralized the long bund obstacle after fighting a few bitter battles. Its progress is slow due to strong opposition from the LTTE
as well as heavy booby trapping of the route of advance. Forces of 57 Division are said to have reached Kokkavil on the A9 highway increasing the
pressure on Kilinochchi. 57 Division is said to be consolidating itself 9 km southwest of Kilinochchi beyond Akkarayankulam.
In a bid to prevent any intrusion of the eastern flank of 57 Division from the LTTE, which is dominating the A9 highway from Mankulam to Kokkavil, the
Army Commander Lt Gen Sarath Fonseka inducted the newly created Task force-III into this area. The task force, a weak division, operating parallel to
the A9 highway on the west is said to have gained control of three km stretch of road from Mankulam northwards. This operation further increases the
options available to Gen Fonseka to further progress the offensive.
LTTE's options
The increase in force levels of the security forces following the induction of Task Force-III has further reduced the options available to the LTTE to
launch a counter offensive at a place of its choosing. After the fall of Pooneryn, the Sea Tiger operations also would be curtailed if not stopped along
western coast from Mannar to Southern Jaffna coast.
So the LTTE will do what it knows best. Increase its guerrilla operations - the whole bouquet of sneak raids, suicide bombings, and killings - making
them more deadly, catching the security forces on the back foot well away from the battlefield. The recent air strikes on Kelaniya power station and
Thalladi military base in Mannar district are examples of such efforts. The air strikes succeeded because the air force elements in the rear areas were
not mentally ready for taking on the wily LTTE intruder. For this purpose the LTTE is trying out novel methods to smuggle in material for suicide
bombings and raids particularly in the eastern province and in Vavuniya district. Attacks on TMVP cadres and the STF, attributed to the LTTE have also
increased in the east. However, so far the LTTE had not been able to disturb the government focus on war or trigger any major change in operational
situation.
As pressure is building up on Kilinochchi defences, the LTTE could beef them up with cadres from Muhamalai front. Perhaps to prevent this possibility,
53 Division from Muhamalai had been keeping an offensive posture carrying out small but sharp attacks on the LTTE's forward defence lines. There is a
strong possibility that the LTTE had already thinned out a major strength from Pooneryn along with the long range artillery moved out earlier. This
would enable to strengthen the LTTE core strength in area Kilinochchi up to forward lines of Muhamalai front in the north. Thus the LTTE's sphere of
operations is likely to be further constricted as more sunny days are predicted by weather watchers.
The recent 'reiteration' LTTE's readiness for ceasefire made by Nadesan, the political head of the LTTE, should be seen in this operational context. It is
likely the LTTE would play its political strong suite with the Tamil Nadu card with emphasis on ceasefire as the core theme in Prabhakaran's Maveerar
Day (Heroes Day) address in two weeks time. If the LTTE announces a unilateral ceasefire, the Tamil Nadu politicians' call for a ceasefire would get a
new lease of life brushing aside the cynicism clouding the political moves in Tamil Nadu. That could create a lot of embarrassment for Prime Minister
Manmohan Singh and the Tamil Nadu Chief Minister Karunanidhi. If this is calculus is in the thoughts of Sri Lanka, we might see a large scale
escalation of offensive in most of the war fronts in the coming two weeks.
Battle Casualties
According to the details given in Sri Lanka parliament, during last month the security forces suffered 171 killed and 1122 injured in operations, most of
them around the Akkarayan defence complex. In comparison, during the operations in July 2008 the security forces lost 106 men and 662 were
wounded. The large increase in the security forces casualties would indicate the fierce resistance put up by the LTTE. According to security sources
the LTTE suffered nearly 700 killed, more than four times suffered by the security forces in the same period in October 2008.
Though these figures have not been verified by other sources, it is clear that casualties are hurting the LTTE more than the security forces as their
overall strength and bank of recruits are much less. With the continuing exodus of civilians from the war affected areas, the LTTE would probably press
more people of all ages into the war effort. This would further increase civilian casualties.
The morale of hardcore LTTE fighters defending the approaches to Kilinochchi is apparently still high as indicated by their ability to inflict high
casualties on the troops, despite their own loss of men and territory. On the other hand, the security forces appear to be mentally prepared to press
ahead with the offensive regardless of their casualties.
Lt Gen Sarath Fonseka, the Army Commander, in an interview claimed that 80 percent of the operation against the LTTE was over. Yet he estimated the
LTTE strength at 12000. (In my own estimate, the LTTE strength of 12000 if accurate would probably be made up of 4000 hardcore cadres, and 2000-
3000 young recruits. The rest are probably civilian auxiliaries pressed into service.) This appears to contradict the success claimed in the so called war
strategy of attrition and annihilation of the LTTE. The government for the time being is probably only aiming to regain control over major parts of LTTE
controlled north and open up a land based logistic route to Jaffna peninsula than carry on the war of attrition forever against the LTTE.
Veracity of information
The battle zones in the north are closed to independent media.Now international NGOs operating in the area have also vacated under the orders of the
government. The only major source of information on operations is the defence spokesman and the government media. Under the new government
regulatory dispensation for media, even the state TV is reported to be undergoing live censor. The LTTE, a closed organization, usually does not report
the whole truth on casualties or operational details. Now the LTTE propaganda and media organs are mostly silent on the war. They are giving little
additional information. So all operational assessments now suffer from a lack of verification through independent and unbiased sources of information
Despite this handicap and the asymmetry of insurgency environment, operational analysis follows inevitable military logic and reasoning on which
warfare is based. By this yardstick, however much the information sources are suspect, a few home truths can be ferreted out in the present war
situation in Sri Lanka. This tells us the LTTE has lost a major portion of its territory in the north and the whole of the east since January 2006. In the
course of this, the LTTE has suffered heavy casualties, many times more than the security forces tally. Overall, the LTTE is now poised to lose its vital
grip on the Jaffna peninsula's logistics jugular. In times to come this would reduce LTTE's influence on Tamils, provided their grievances are attended
to by the government. Only time will tell whether the government would seize the opportunity, instead of talking only in terms of attrition, because so
many such opportunities in the past were frittered away.
(Col. R Hariharan, a retired Military Intelligence specialist on South Asia, served as the head of intelligence of the Indian Peace Keeping Force in Sri Lanka 1987-90. He is associated with the South Asia Analysis Group and the Chennai Centre for China Studies. E-mail:colhari@yahoo.com)

No comments: