Friday, 20 February 2009

சிறீலங்கா தலைநகர் கொழும்பு மீது தமிழீழவிமானப்படை தாக்குதல்

சிறீலங்கா தலைநகர் கொழும்பு மீது தமிழீழவிமானப்படை தாக்குதல்
பிந்திய செய்தி:
4)கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் புலிகள் 2 விமானங்களில் சென்று நேற்றிரவு தற்கொலைத் தாக்குதல்! ஒன்று கட்டடத்துடன் மோதி வெடித்தது; மற்றது சுட்டு வீழ்த்தப்பட்டது
[21 பெப்ரவரி 2009, சனிக்கிழமை 5:25 பி.ப இலங்கை] யாழ் உதயன்
தமிழீழ விடுதலைப்புலிகள் நேற்று இரவு, இரண்டு சிறிய ரக விமானங்களில் வந்து கொழும்பிலும் கட்டுநாயக்காவிலும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தினர்.கொழும்பில், விமானப்படை தலைமையகத்துக்கு முன்பாக உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக் களத்தின் பதின்மூன்று மாடிக்கட்டடத்துடன் ஒரு விமா னம் மோதித் தற்கொலைத் தாக்குதல் நடத்தியது.கட்டுநாயக்காவில் உள்ள விமானப் படைத் தளம் மீது புலிகளின் இரண்டாவது விமானம் தாக்குதல் நடத்தியதாக நேற்றிரவு தகவல் வெளியாகியிருந்தது.ஆனால், அதனை விமானப்படையினர் சுட்டு வீழ்த்தியதாக பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை விடுத்த அறிக்கையில் அறிவித்தது.முதலாவது விமானம் கொழும்பில் இலங்கை விமானப் படைத் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக டிரான்ஸ் ஏஸியா ஹோட்டலுக்கு சற்றுத் தள்ளி உள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதின்மூன்று மாடிக் கட்டடத்துடன் மோதி வெடித்துள்ளது.இதில் கட்டடத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த சில விமானப் படையினர் உட்பட 47 பேர் இந்தச் சம்பவத்தில் காயமுற்றுள்ளனர். அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்தனர்.எனினும், இந்தக் கட்டடம் மீது புலிகளின் விமானம் குண்டு வீசியது என்று மட்டுமே முதலில் செய்தி வெளியாகியது. ஆனால் இன்று அதிகாலையில் வெளியான தகவல்கள் இந்தக் கட்டடத்துடன் புலிகளின் விமானம் நேரடியாக மோதியது எனத் தெரிவித்தன.புலிகளின் மற்றைய விமானம் கட்டுநாயக்கா விமானத் தளத்தை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அழிக்கப்பட்டதாகவும் அந்த விமானத்தின் விமானியின் சடலம் மீட்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை அறிவித்தது.புலிகளின் இந்த விமானம் கட்டுநாயக்கா விமான தளத்துக்குச் சற்றுத் தொலைவில் வாவியை அண்டிய காட்டுப் பகுதியில் வீழ்ந்ததாகக் கூறப்பட்டது.கட்டுநாயக்காவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 6 பொதுமக்கள் காயமடைந்தனர். அவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று மிகப் பிந்திய தகவல்கள் தெரிவித்தன.இந்த அனர்த்தத்தை அடுத்து கட்டுநாயக்கா விமான நிலையப் பகுதிக்கான போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டது.புலிகளின் விமானங்கள் புத்தளம், கற்பிட்டி பகுதியில் வந்துகொண்டிருக்கின்றமை பற்றிய தகவல் ராடரில் அவதானிக்கப்பட்டமையை அடுத்தே தென்னிலங்கை உஷார்படுத்தப்பட்டது. இரவு 9.45 மணியளவில் தென்னிலங்கையில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. கொழும்பும் புறநகர்ப் பகுதிகளும் இருளில் மூழ்கின.பல முனைகளில் இருந்தும் வானத்தை நோக்கி ஏவப்பட்ட "லேஸர்" ரக சிவப்பு குண்டுகளால் கொழும்பு நகரத்தின் ஆகாயத்தில் வானவேடிக்கை நிகழ்ந்தது போன்ற காட்சியை பார்க்க முடிந்தது. தரையிலிருந்து வானத்தை நோக்கி தேடுதல் ஒளிக்கற்றையும் பாய்ச்சப்பட்டு வானம் கண்காணிக்கப்பட்டது.இவற்றுக்கு மத்தியில் உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் ஒளிப்பிளம்பும் காதைச் செவிடாக்கும் சத்தமும் அங்கு எழுந்தன. எனினும் இரவு 11 மணியளவில் நிலைமை வழமைக்குத் திரும்பியது.இந்த இரு விமானங்கள் மூலமும் தற்கொலைத் தாக்குதலே நடத்தப்பட்டன என்பதனைப் புலிகள் இனி அறிவிப்பார்கள் என சில செய்தி வட்டாரங்கள் இன்று அதிகாலை தகவல் வெளியிட்டன.விமானியின் சடலம் கண்டெடுப்பு விடுதலைப்புலிகளின் இரண்டு விமா னங்களும் கொழும்புக்கு மேலாகப் பறப் பது நேற்றிரவு 9.45மணிக்குக் கண்டறியப் பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக வான் பிரதேசப் பாதுகாப்பு நடவடிக்கை பலப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக புலிகளின் இரண்டு விமானங்களும் தமது தாக்குதலை கைவிட நேர்ந்ததுஇரண்டாவது விமானம் வான் பாதுகாப்பு பிரதேசத்தை விட்டு தப்பிச் செல்ல முயன்ற வேளை நீர்கொழும்புக்கு மேலா கப் பறந்து சென்றபோது சுட்டு வீழ்த்தப் பட்டதுவீழ்த்தப்பட்ட விமானத்தின் பாகங்க ளும், விமானியின் சடலமும் கட்டுநாயக்க விமானத் தளத்துக்குச் சமீபமாக கண் டெடுக்கப்பட்டன என்று பாதுகாப்பு அமைச்சு இன்று அதிகாலை விடுத்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
3) Tamil Tiger planes raid Colombo
Two planes belonging to Sri Lanka's Tamil Tiger rebels have attacked the capital Colombo, damaging a government building, officials say.
Both planes were downed, one of them hitting inland revenue offices, killing one person and injuring at least 40 others, officials said.
The other plane was shot down near the city's airport, which has been closed.
The raid comes as the army has driven the
Tigers into a shrinking zone of jungle in the north of Sri Lanka.
A pro-rebel website, TamilNet, said the Liberation Tigers of Tamil Eelam (LTTE), had carried out the attack.
Correspondents say the attack amounts to a major embarrassment for Sri Lanka's government, which had claimed to have destroyed all the rebels' hidden runways and put its small air force out of action.
'Massive explosion'
The city was put on full alert at about 2130 (1600 GMT) as electricity was cut and searchlights and tracer fire from anti-aircraft guns cut through the night sky.
Briton Barry Walker told the BBC that he was in a central Colombo hotel when the blackout hit.
"We were sitting by the swimming pool when we heard firing of heavy anti-aircraft guns. Heavy shell fire. This lasted 20-25 minutes... then there was a massive explosion," he said.
Another witness told the BBC he saw a low-flying aircraft and then heard a huge explosion by the city's fort, where many government offices are located.
The air force headquarters, which is in the same area, may have been the target, correspondents say.
Air force jets scrambled
The ministry of defence said a tax office of the inland revenue department was in flames after one of the planes went down into the building.
The other plane was shot down next to the international airport, just outside Colombo, and the body of its pilot had been found, defence spokesman Keheliya Rambukwella said.
Witnesses at the airport told Associated Press news agency that anti-aircraft guns had been firing followed by an explosion.
Military spokesman Brig Udaya Nanayakkara said the alert began when a suspected Tamil Tiger aircraft was spotted north-east of Colombo and the capital's air defences were activated.
“ We were right in the middle of an arc of gunfire and there were search lights into the sky trying to pick out aircraft ” Barry Walker British man in Colombo
Air force jets were scrambled to engage the planes.
The attack comes as a major Sri Lankan army offensive has inflicted a series of defeats on the Tamil Tiger forces, pushing the rebels into a narrow area of jungle in the north of Sri Lanka.
The Tigers have used light planes in the past to attack Colombo.
In October 2008, suspected Tamil Tiger rebels carried out air strikes on oil tanks near the capital, Colombo, and in north-western Sri Lanka.
Colombo was also targeted in another raid in March 2007.
About 70,000 people have died in the last 25 years as the Tigers have been fighting for a separate homeland in the north and east of the country.
2)Tiger aircraft bombs Colombo, 38 wounded
[TamilNet, Friday, 20 February 2009, 16:25 GMT]
At least two bombs were dropped by Tiger aircraft in Slave Island area where Sri Lanka Air Force Headquarters is situated, according to reports from Colombo. 38 persons, including Sri Lanka Air Force (SLAF) airmen, were rushed to hospital. Several of the wounded have sustained serious injuries, the sources said. The building of Inland Revenue Department, located in front of the SLAF HQ, was on fire, according to military sources in Colombo. Tension prevails in the city, which is still in dark, an hour after the initial attack. Thousands of tracer bullets were fired from all the corners of the city, including the Katunaykae International Airport.
Meanwhile, sources close to LTTE in Vanni also confirmed the Tamileelam Air Force mission.
Power supply was cut off and anti aircraft fire was reported from several sentry posts in Colombo city Friday night around 9:30 following reports of Tiger aircraft being spotted over Vavuniyaa. Sri Lanka Air Force (SLAF) fighter jets were flying over the coastal area north of Colombo.
Sri Lankan soldiers were firing tracer bullets using anti aircraft weapons from their sentry posts.
Power cut is also reported in Jaffna.

1)சர்வதேச விமான நிலையம் மேல் புலி விமானம் பறந்தது.
47 பேர் படுகாயம்!





சிறீலங்கா தலைநகர் கொழும்பு மீது தமிழீழ விமானப்படை தாக்குதல்.
தமிழீழ விடுதலைப் புலிகள் சிறீலங்கா தலைநகர் கொழும்பு மீது 20-02-09 வெள்ளிக்கிழமை இரவு பத்தரை மணியளவில் தமது இரு தமிழீழ விமானப்படை விமானங்களை பறக்கவிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அல்-ஜசீரா தொலைக்காட்சி அவசர செய்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
27 பேர் "சிகிச்சைக்குள்ளானதாகவும்" விமானத்தாக்குதலுக்கு இலக்கான இடம் "வருமான வரி திணைக்களம்" எனவும் சிறீலங்கா அரசுத் தகவல்களை ஆதாரமாகக்கொண்ட அல்-ஜசீராவின் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விபரங்களுக்கு SKY சர்வதேச தொலைக்காட்சியில் அல் ஜசீரா இணைப்பைப் பெறவும்.
ENB-தமிழ்

No comments: