Sunday, 26 April 2009

ஆயுதங்களை ஒப்படை! ஐ.நா.விடம் சரணடை!! விடுதலைப்புலிகளுக்கு ஒபாமா அரசு கட்டளை!!

ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு மூன்றாம் தரப்பினரிடம் சரணடையுமாறு புலிகளிடம் கோருகிறது அமெரிக்கா!


மோதல்களைத் தவிர்க்குமாறும் இரு சாராரிடமும் வலியுறுத்து.

[26 ஏப்ரல் 2009, ஞாயிற்றுக்கிழமை 5:15 மு.ப இலங்கை]
தமிழீழ விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, மூன்றாம் தரப்பு ஒன்றிடம் சரண்அடைய வேண்டும்.அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொபேட் வூட் வெள்ளிக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் வைத்து இக்கருத்தை வெளியிட்டார்.ஆனால் அவர் தாம் கருதும் மூன்றாவது நாடு எது என்பதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.அதே வேளை இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் மோதல்களை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொபேட் வூட் வழமையான தமது பத்திரிகையாளர் மாநாட்டை வெள் ளிக்கிழமை நடத்தினார். அப்போது இலங்கை விவகாரம் குறித்துக் கூறியதாவது:விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு மூன்றாவது தரப்பு ஒன்றிடம் சரணடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதேவேளை ராஜபக்ஷ அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் மோதல்களை நிறுத்துமாறு வேண்டுகின்றோம்.இடம்பெயர்ந்த பெரும் எண்ணிக்கை யான மக்களுக்கு சர்வதேச நாடுகளே உதவி செய்யப் போகின்றன செய்யவேண்டியுள்ளது. ஆகையால் அங்கு நடைபெறும் பேரை நிறுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும்.இலங்கையில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிவகைகள் குறித்து இணைத்தலைமை நாடுகளும் ஜி8 நாடுகளும் கூட்டாக மிகநெருக்கமாக ஆராய்ந்து வருகின்றன.முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள மிகுதிமக்களின் பாதுகாப்புக் குறித்து அமெரிக்கா மிகவும் கரிசனையாக உள்ளது.அந்தப் பிரதேசத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறி விட்ட போதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னமும் அங்கேயே தங்கியுள்ளனர்.அங்கிருந்த பெரும் எண்ணிக்கையான மக்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியாவின் விசேட தூதுவர்கள் இருவர் இலங்கையில் நடைபெறும் போர் குறித்து இந்திய அரசின் கவலையையும் கரிசனையையும் கொழும்பு அரசிடம் தெரிவிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக எமக்கு அறிய வந்துள்ளது என்றார் றொபேட் வூட்.

புலிகள் வேறொரு நாட்டிடம் சரணடைவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது!

பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்காவுக்குப் பதிலடி

[26 ஏப்ரல் 2009, ஞாயிற்றுக்கிழமை 5:10 மு.ப இலங்கை]

விடுதலைப்புலிகள் அவர்களது ஆயுதங்களை மூன்றாந்தரப்பு ஒன்றிடம் இன்னொரு நாட்டிடம் கையளிப்பதற்கோ அல்லது அந்த நாட்டிடம் சரணடைவ தற்கோ இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.இலங்கையில் நடைபெறும் போர் எங்களினுடைய உள்நாட்டு விவ காரம். அதில் வேறு எந்த வெளிநாடும் எந்த வகையிலும் எந்தத் தோற்றத்திலும் தலையிட நாம் அனுமதிக்க மாட்டோம்.அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் றொபேர்ட்வூட் வெள்ளிக்கிழமை அன்று நியூயோர்க்கில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ "சண்டை ஒப்சேவர்" பத்திரிகைக்கும் இந்தியாவின் "என்.டீ ரீவி"க்கும் வழங்கிய பேட்டிகளில் மேற்கண்ட கருத்துக்களை ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.பாதுகாப்புச் செயலாளர் மேலும் கூறியதாவது:விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தினால் கொல்லப்பட்டவர்களும், பாதிக்கப்பட்டவர்களும் இலங்கை மக்களே. ஆகையால் வெளிநாடொன்றிடம் விடுதலைப்புலிகளை ஆயுதங்களைக் கையளித்து விட்டு சரணடையுமாறு கேட்பது எந்த விதத்திலும் நியாயமானதல்ல.விடுதலைப்புலிகள் இலங்கை அரசின் பாதுகாப்புப் படைகளுடனேயே போர் நடத்துகிறார்கள். கடந்த 30 வருடங்களாக எமது மக்களே கொல்லப்பட்டுள்ளனர். அதன் விளைவுகளையும் தாக்கங்க ளையும் வேறு எவரையும் விட நாங்களே அதிகம் உணர்வோம் என அமெரிக்காவுக்குக் கூற விரும்புகிறேன். முல்லைத்தீவில் பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள ஒவ்வொரு பொதுமகனையும் பாதுகாப்பாக நாம் வெளியேற்றுவோம்.விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடிக்கும் வரை எங்களுடைய இராணுவ நடவடிக்கை தொடரும். இப்பொழுது அவர்கள் வசம் உள்ள முழுப்பகுதியையும் கைப்பற்றும் வரை எங்கள் இராணுவ நடவடிக்கை தொடரும்.பாதுகாப்பு வலயத்தில் சிக்குண்டுள்ள 98 சத வீதமான பொதுமக்களும் விடுவிக்கப்பட்ட பகுதிகளை வந்தடைந்து விட்டனர். அந்த மக்களின் சுதந்திர வாழ்வுக்காக மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இராணுவத்தின் இப்போது முதற்பணியாக அமையும் என்றார் பாதுகாப்புச் செயலாளர்.

No comments: