Thursday, 25 June 2009

கைதிகள் பிரச்சனை:

பக்ச பாசிஸ்டுக்களே,சிங்கள இனவெறிப்பாசிச அரசு எந்திரமே!
* விடுதலைப் போராளிகள் மீது அரசியல் விசாரணையை தொடக்கு!
* தாயக விடுதலைக்காக ஆயுதம் ஏந்துவது ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை என்பதால் அவர்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க சந்தர்ப்பம் வழங்கு!
* பெண்கைதிகள் மீது ஏவி விட்டுள்ள ஈனத்தனமான நடடிக்கைகளை உடனே நிறுத்து!
* ஈழவிடுதலை யுத்தக் கைதிகளை சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்படுத்தி நடத்து!
* அள்ளி வாரிச் சென்று கொன்று குவிக்கும் பாசிச முறையைக் கைவிடு!
* பாசிச தடுப்பு மற்றும் விசாரணை முகாம்களில் உள்ள அனைவரதும் பெயர் முகவரி அடங்கிய விபரப் பட்டியலை பகிரங்கமாக்கு!
* தடுப்பு முகாம் அகதிகளுக்குள் துப்பறியும் வேலையை நிறுத்து!
* போர்க்கைதிகள் மீதும் பொதுமக்கள் கைதிகள் மீதும் கட்டவிழ்த்துள்ள சித்திரவதைகளை உடனே நிறுத்து!
* போராளிகளின் குடும்பங்களையும் குழந்தைகளையும் பழிவாங்குவதை நிறுத்து!
* வயது முதிர்ந்தோர், படுகாயமடைந்தோர்,அங்கவீனப்பட்டோர் அனைவரையும் உடனே விடுதலை செய்!
* அனத்து அரசியல் மற்றும் யுத்தக் கைதிகளும் சட்ட ஆலோசனை பெற வழிவகை செய்!
* இடைக்காலத்தடுப்புமுகாம்கள் என்ற போர்வையில் நடத்தும் பாசிசத் திறந்தவெளி வதைமுகாம்களை உடனே கலை!
* தமிழ் மக்கள் தம் சொந்த நிலங்களில் குடியமர அநுமதி!
* சிதைந்து போன குடும்பங்களை ஒன்று சேர்க்க தனிச் சேவை நிறுவனத்தை ஆரம்பி!
* நீ ஏவிய கோர யுத்தத்தின் விளைவான உடல், மற்றும் மன படுகாயங்களுக்கும் ஊனங்களுக்கும் சிகிச்சை அளிக்க அவசர மருத்துவப் பிரிவை உடனே அமை!
* யுத்த அழிவுகளுக்கும் மீள் நிர்மாணத்துக்கும் நஸ்ட ஈடு வழங்கு!
* அனைத்து யுத்தகால குழந்தைகளுக்கும் விசேட ஆரம்பக் கல்வித்திட்டம் அமைத்து கல்வியூட்டு !

*ஈழத்தமிழ்மக்களின் விடுதலை யுத்தத்தைத் தோற்கடிக்க இறுதிக்கணம் வரைக்கும் இலங்கை அரசுக்குத் துணை நின்ற ''சர்வதேச சமூகமே'' பாசிச தடுப்பு முகாம்களுக்கு நிதி வழங்கி ஈழத்தமிழரை திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடக்கி வைக்கும் திட்டத்தைக் கைவிடு!

*உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே!
ஈழத்தமிழர்களாகிய நமது நீதியான நேர்மையான ஜனநாயக ரீதியான மனிதாபிமானக் கோரிக்கைகளுக்கு ஆதரவு தாருங்கள்!
---------------------புதிய ஈழப் புரட்சியாளர்கள்---------------

No comments: