Wednesday, 22 July 2009

சர்வதேச நாணய நிதியம் 0.5% வட்டியில் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகேட்ட இலங்கை அரசுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வாரி வழங்கியுள்ளது!

சர்வதேச நாணய நிதியம் 0.5% வட்டியில் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகேட்ட இலங்கை அரசுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வாரி வழங்கியுள்ளது!
======================================================================================
செய்திகள்:
Virakesari.lk
சர்வதேச நாணய நிதியக் கடனைப் பெற இலங்கை அரசு இணக்கம்
வீரகேசரி இணையம் , Posted on : 7/21/2009 12:00:00
சர்வதேச நாணய நிதியத்திடம் விண்ணப்பித்திருந்த 2.5 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுக் கொள்ளுவதற்கு இணக்கம் தெரிவித்து சர்வதேச நிதி நிறுவனத்திற்கு அரசாங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக கடிதத்தில் மத்திய வங்கி ஆளுநரும் நிதி அமைச்சரும் கைச்சாத்திட்டுள்ளனர். இக்கடிதமானது நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் வைத்திருக்க அரசு முன் வைத்திருக்கும் யோசனைகளை விரிவாக உள்ளடக்கியதாகும்.
இதில் வரவு-செலவுத்திட்டத்தில் துண்டுவிழும் தொகை, இலக்குகளை எட்டுவதற்கான நிதிக் கொள்கை என்பன உள்ளடக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இணக்கப் போக்கை கடைப்பிடிக்கும் திட்டத்தை உள்ளடக்கிய ஆவணத்திலேயே இப்போது கைச்சாத்திடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் எடுக்கும் நிறைவேற்றுச் சபையின் அங்கீகாரத்திற்காகக் காத்திருப்பதாக அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை தெரிவித்தனர்.
`நோக்கம் தொடர்பான கடிதத்தில் நாம் கையெழுத்திட்டிருக்கிறோம்` என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித்நிவாட் கப்ரால் தெரிவித்ததாக லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் குறிப்பிட்டிருக்கின்றது.
சர்வதேச பொருளாதார நெருக்கடிகளைத் தொடர்ந்து 2008 இன் இறுதி 4 மாத காலப் பகுதியில் இலங்கையின் கையிருப்புகள் அரைவாசியாக குறைவடைந்ததையடுத்து கடந்த மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் கோரி விண்ணப்பித்தது.
யுத்தத்தை நிறுத்துமாறு மேற்கு நாடுகள் கோரிய போதும் அதனை நிராகரித்ததால் மேற்கு நாடுகள் கடனை தாமதப்படுத்தியாக அரசு தெரிவித்திருந்தது. அரசின் நோக்கத்திற்கான மேற்படிக் கடிதமானது கடன் மற்றும் நிபந்தனைகளை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளும் ஆவணமாகக் கருதப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கைக்கு 25 ஆயிரம் கோடி ரூபா கடன் வழங்க நாணய நிதியம் இணக்கம் இறுதி முடிவு வெள்ளியன்று வெளியிடப்படும்

[22 யூலை 2009, புதன்கிழமை 3:20 மு.ப இலங்கை] உதயன்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உதவுவதற்கு என 250 கோடி டொலர் களை (25 ஆயிரம் கோடி ரூபாவை) கடனாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தற்காliகமாக தீர்மானித்துள்ளது. அதேவேளை, இது குறித்த இறுதி முடிவை வெள்ளிக்கிழமை நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை தீர்மானிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
186 நாடுகள் அங்கம் வகிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை அங்கீகாரமளிக்கும் பட்சத்தில் இலங்கையால் உடனடியாக 31 கோடியே 300 லட்சம் டொலர்களைப் பெறமுடியும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் பொருளாதார திட்டமொன்று குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதற்கு 20 மாத கடனடிப்படையில் 250
கோடி டொலர் ஆதரவு வழங்கப்படும் என நாணய நிதியத்தின் முகாமைத்துவ இயக்குநர் டொமினிக் ஸ்ட்ரோஸ் கான் தெரிவித்துள்ளார்.இலங்கை அரசுதொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை சமாளிப்பதற்குச் சர்வதேச சந்தையிலிருந்து கிடைக்கக்கூடிய குறுகிய காலநிதியை நம்பியிருந்தது எனவும், எனினும்
சர்வதேச பொருளாதார நெருக்கடி அந்த ஏற்பாட்டை இப்போது பாதித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சர்வதேச நிதி நெருக்கடி காரணமாக இந்த குறுகிய கால நிதி கிடைப்பதும், மூலதன வருவாயும் பாதிக்கப்பட்டதால் இலங்கையின் வெளிநாட்டு நாணய சேமிப்பு குறிப்பிடத்தக்களவிற்கு
குறைவடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.சமீபத்தில் மூலதனங்கள் கிடைத்துள்ள போதிலும், இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் உள்நாட்டு மோதல் முடிவடைந்துள்ளமை எதிர்காலத்தில் உயர் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கான பொருளாதார சீர்திருத்தம் மற்றும் புனர்நிர்மாணத்தை
முன்னெடுப்பதற்கான தனித்துவமான வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு அவசியமாகவுள்ள புனர்நிர்மாணத்துக்கான நிதி மற்றும் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு ஸ்திரநிலையையும் மீண்டும் ஏற்படுத்துவதற்கான நிதி
ஆகியவற்றுக்கு இலங்கை அரசுதிட்டமொன்றை உருவாக்கியுள்ளது என டொமினிக் ஸ்ட்ரோஸ் கான் தெரிவித்துள்ளார்.இலங்கை அதிகாரிகள் முன்னெடுத்துள்ள வலுவான நடவடிக்கைகள் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாவில் 400 வீதமான அளவிற்கு நிதி உதவிகளை
வழங்குவதை நியாயப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.நான்கு வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவடைந்ததை தொடர்ந்து மார்ச் மாதம் அரசுசர்வதேச நாணய நிதியத்திடம் 190 கோடி டொலர்
கடனுதவிகளை கோரியிருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: