வதை முகாமில் உள்ள தமிழர்கள் சொந்த நிலத்தில் குடியமர்த்தும் வரை "திறப்பு" போராட்டம் தொடரும்
திகதி: 27.08.2009 // தமிழீழம்
சிறீலங்கா இராணுவ வதைமுகாம்களின் இரும்புப்பிடியில் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்து மீண்டும் தமது சொந்த நிலத்தில் குடியமர்த்தும் வரை பாரிய முனைப்புடன் தொடர் போராட்டமாக "வதைமுகாம்களை திறந்துவிடு" என்ற "திறப்பு" போராட்டத்தை பிரித்தானிய தமிழர் பேரவையானது ஆரம்பித்துள்ளது.இப்போராட்டத்தின் தொடர் நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்.
நிகழ்வு 1 : 27/08/2009
சம்பிரதாய ஆரம்ப நிகழ்வு.
"Unlock the Concentration Camps in Sri Lanka - 100th day behind barbed wire " From 4:00 PM to 6:00 PM , Boothroyd suite, Portcullis House, House of Parliament (அண்மித்த புகையிரத நிலையம் -Westminster Station) மக்கள் தமது தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இதில் கலந்து கொள்ள அழைக்கலாம்.
நிகழ்வு 2 : 28/08/2009
கவன ஈர்ப்பு போராட்டம். வெள்ளிகிழமை பிரித்தானிய பிரதமரின் வாசல் தலத்திற்கு முன் காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை கவன ஈர்ப்பு போராட்டம்.
இடம் : 10, Downing street . காலம் : 28/08/2009: காலை 11.00- மாலை 04.00 (அண்மித்த புகையிரத நிலையம் -Westminster Station)
நிகழ்வு 3 : 29/08/2009
சனிக்கிழமை முதல் தொடர்ச்சியான முறையில் திறப்பு போராட்டம் ஆரம்பமாகும். லண்டன் நகரின் முக்கிய பகுதிகளில் திறப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இப்போராட்டம் தொடர்பான தகவல்களுக்கு பிரித்தானிய தமிழர் பேரவையோடு தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment