Saturday 19 September, 2009

'சிலுவை சுமந்த திலீபனும்' சிலுவையில் அறைந்த பதிவு இணையமும்!

இந்திய விஸ்தரிப்புவாத அரசின் 1987 இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தும், இந்திய ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்தும் போராட தமிழீழ மக்களை தட்டியெழுப்பும் பொருட்டு யாழ்-நல்லூரில் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து தன் இன்னுயிரை தமிழீழத்துக்காக அர்ப்பணித்த தியாக தீபம் திலீபனின் 22 ஆவது நினைவு தினம் வரும் 26-09-2009 ஆகும்.
இந்நாளை நினைவு கூருவதாகக் கூறி புதுவை இரத்தினதுரையின் நினைவழியா நாட்கள் கவிதைத் தொகுதியில் இருந்து 'சிலுவை சுமந்த திலீபன்' எனும் கவிதையை தணிக்கை செய்து வெளியிட்டுள்ளது பதிவு இணையம்.அக் கவிதையில் பதிவு இணையம் தணிக்கை செய்த வரிகள் வருமாறு:
உன் இறுதி மூச்சு இங்கு புயலானது....(தணிக்கை ஆரம்பமாகின்றது)
====================================
பூகம்பத்தை எதிர்க்கும் புதிய பலத்தைத் தந்தது.
இந்திய அரசு,'' காக்க வரவில்லை தாக்கவே வந்தது''என்று...சதிகாரரை சரியாகவே இனம் கண்டு கூறினாய்.
பாரத அரசின் ஆதிக்க வேடத்தை ''கோட்டை வாசலில்'' துகிலுரிந்து காட்டினாய்.
"உன் மரணம் பலருக்கு ஜனனம்'' என்று பேசிய தலைவன் நீ!
திலீபனே உன்னை இழந்தோம்,
திலீபனே உன்னோடு உலவிய வீரர்கள் பலரை வீதியிலே நாமிழந்தோம்.
ஆதிக்கப் போருக்கு அர்ச்சனை செய்வதற்கு
நீதிக்கு வாழா------நீசர்கள் சில பேரால்
தியாக மலர்கள் இங்கு தெருவிலே கிடக்கிறது,
( தணிக்கை முடிகிறது)

மேலும்,
வேங்கையின் விழிகள் தூங்குவதில்லை
தாங்கிய கொடிகள் சரிவதுமில்லை.
உன்விழிகள் தேடிய வழியில்
நடப்பார் புலிகள்.
என முடியும் அக்கவிதையின்,நடப்பார் புலிகள் என்ற இறுதி வரியை (தொடர்ந்தும் நடப்போம்..) என பதிவு இணையம் திரிபுபடுத்தியுள்ளது.
===============
இந்திய விஸ்தரிப்புவாதத்தை எதிர்ப்பதற்கு அச்சம், புலிகள் என்ற சொல்லை உரைப்பதற்கு அச்சம் என்றால், பாரத மணிக்கொடிக்கு தலை தாழ்த்தி ஜன கண மண பாடலாமே ஏன் "அஞ்சற்க என்று அறிவித்த" நம் திலீபனுக்கு நினைவு நாள் கொண்டாட வேண்டும்? கூட இருந்து குழி பறிக்கவா? இல்லையெனில் இத்தணிக்கையை உடனே நீக்குமாறு பதிவு இணைய தள நிர்வாகிகளை தமிழீழமக்களின் பேரால் கேட்டுக்கொள்கின்றோம்.
===============
இதோ கவிக்கடல் புதுவை திலீபனுக்கு எழுதிய கவிதை பதிவு இணையம் கருவறுத்த வடிவில்!
சிலுவை சுமந்த திலீபன்.
இனிய திலீபனே!
எங்கள் நெஞ்சில் குடிகொண்ட நெருப்பே!
அஞ்சற்க என்று அறிவித்த புயலே
நீ...இயங்காது விட்டு இரண்டு (பல) வருடங்களாகிவிட்டது!
நேற்று நடந்தது போல்.. அந்த நிகழ்வு.
காற்று, கடல், வானம் யாவும் அழுதநிகழ்ச்சி உன்னுடைய மரணத்தில் நிகழ்ந்தது.

நல்லூரின் வீதியில் நீ கிடந்ததையும்
நாவரண்டு நீ சுருண்டதையம் நாங்கள் மறப்போமா?
உன்னை...தொட்டு மேடையில் இருத்தியதையும்
தூக்கி பாடையில் வளர்த்தியதையும்
மரணத்தின் பின்னரே நாங்கள் மறப்போம்!

எல்லோருக்கும் மரணம் வாழ்க்கையின் முடிவு.
உனக்கு...மரணமே வரலாற்றின் தொடக்கம்
நீ...ஒரு வரலாறு.
சரித்திரமானது உன் சாவு.
திலீபனே!
தியாக வேள்வியில் ஆகுதியானவனே!
திசைகள் யாவையும் தேம்பிடச் செய்தவனே!
உன் இறுதி மூச்சு இங்கு புயலானது....(தணிக்கை)====================================
பதிவு இணையம் தணிக்கை செய்த பகுதி!
இங்கு புயலானது..... பின்வருமாறு தொடர்கிறது....!====================================
பூகம்பத்தை எதிர்க்கும் புதிய பலத்தைத் தந்தது.
இந்திய அரசு,
'' காக்க வரவில்லை தாக்கவே வந்தது''
என்று...சதிகாரரை சரியாகவே இனம் கண்டு கூறினாய்.
பாரத அரசின் ஆதிக்க வேடத்தை ''கோட்டை வாசலில்'' துகிலுரிந்து காட்டினாய்.

"உன் மரணம் பலருக்கு ஜனனம்'' என்று பேசிய தலைவன் நீ!
திலீபனே உன்னை இழந்தோம்,
திலீபனே உன்னோடு உலவிய வீரர்கள் பலரை வீதியிலே நாமிழந்தோம்.
ஆதிக்கப் போருக்கு அர்ச்சனை செய்வதற்கு
நீதிக்கு வாழா------நீசர்கள் சில பேரால்
தியாக மலர்கள் இங்கு தெருவிலே கிடக்கிறது,
============================
திலீபனே... நீ தீயில் குளித்தவன்
தியாகத்தின் எல்லையை மீறி (உழுதவன்) எழுந்தவன்
மக்களின் வேரிலே மலர்ந்தவன்.
மக்களுக்காக உலர்ந்தவன்
உன்பாதை நெடியது... பயணம் கொடியது.
என்றாலும் எங்கள் பயணம் தொடரும்...
வேங்கையின் விழிகள் தூங்குவதில்லை
தாங்கிய கொடிகள் சரிவதுமில்லை.
உன்விழிகள் தேடிய வழியில் (தொடர்ந்தும் நடப்போம்..)நடப்பார் புலிகள்
புதுவை இரத்தினதுரை அவர்களின் நினைவழியா நாட்கள் கவிதைத் தொகுப்பிலிருந்து
குறிப்பு:அடைப்புக்குறிக்குள் இருப்பவை பதிவின் இதர திருத்தங்கள்

No comments: