Friday 5 February, 2010

செங்கல்பட்டு கருணாநிதி ஆட்சியின் வெலிக்கடை

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்!
2010-02-04 07:03:49
தமிழ்நாடு, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் மீது நேற்று முன்தினம் இரவு சிறப்பு அதி ரடிப் பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்
செங்கல்பட்டு, பெப்.04
தமிழ்நாடு, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் மீது நேற்று முன்தினம் இரவு சிறப்பு அதி ரடிப் பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர் எனக் தெரிவிக்கப்படுகிறது. இக் கொடூரத் தாக்குதலினால் மூன்று முகாம் வாசிகள் உயிருக்குப் போராடும் நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும்
கூறப்பட்டது.
அத்துடன், பன்னிரண்டு பேருக்கு மேற்பட்டோர் சென்னை புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகாமில் மீத முள்ள 16 பேருக்குத் தண்ணீர் கொடுக்கக் கூட ஆள் இல்லை என்றும் கூறப்பட்டது.
கடவுச்சீட்டுச் சிக்கல்கள் மற்றும் விடு தலைப் புலிகளின் தொடர்பாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 33 ஈழத் தமிழர்கள் செங்கல்பட்டு சிறப்பு முகாமிலும், பூவிருந்தவல்லி சிறப்பு முகாமிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உள்ள முகாம்வாசிகள் தங்களை விடுதலை செய்யவோ அல்லது நீதிமன்றத்தில் நிறுத்தவோ வலியுறுத்தியும், நீதி வழங்கக்கோரியும் அவ்வப்போது உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் ரமாணா (வயது 33), முகமது ரக்சன் (வயது 24) மற்றும் சேகர் (வயது 27) ஆகியோர் முகாமில் உள்ள மரத்தின் மீது ஏறிக் கொண்டும், மற்ற முகாம்வாசிகள் கீழே தரையில் அமர்ந்தும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். மாலை நேரமாகியும் உண்ணாவிரதத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டனர். கியூ பிரிவு உயர்
அதிகாரிகள் தங்களை நேரில் சந்தித்து உறுதிமொழி அளிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்து வந்தனர். உயர் அதிகாரிகள் இவர்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காததால், இரவாகியும் போராட்டத்தைக் கைவிட அவர்கள் மறுத்துவிட்டனர்.
இரவு 9.30 மணிக்கு திடீரென நான்கு பட்டாலியன் அதிரடிப் பொலிஸார் ஆயுதங்களுடன் செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்குள் நுழைந்து, அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைத்து முகாம்வாசிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கூறப்பட்டது.
மரத்திலிருந்தவர்கள் கீழே கொண்டு வரப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். பயங்கரத் தாக்குதலால், பல முகாம்வாசிகள் படுகாயப்படுத்தப்பட்டனர். இதில் மூன்றுபேர் உயிருக்குப் போராடும் நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிரடிப் படையினர் முகாம்வாசிகளை அடித்ததோடு, முகாம்வாசிகளின் பயன்பாட்டிற்கு அறைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு முதலிய பொருட்களையும், துணி வகைகளையும் நடுகூடத்திற்குக் கொண்டுவந்து போட்டு எரித்துள்ளனர். அத்தோடு இரவோடு இரவாக 12 இற்கும் மேற்பட்ட முகாம்வாசிகளை சென்னை புழல் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
முகாமில் தற்போது உள்ள 16 முகாம்வாசிகளுக்குத் தண்ணீர் கொடுக்கக்கூட முடியாத நிலை நிலவி வருகிறது. தற்போது வெளித் தொடர்புகள் அற்ற நிலையில், செங்கல்பட்டு சிறப்பு முகாம்வாசிகளின் உறவினர்கள் கவலையடைந்துள்ளனர்.

No comments: