Wednesday 3 March, 2010

இந்தியா எனது உறவுக்காரன் ஏனையோர் நண்பர்கள்

''நாட்டின் ஜனாதிபதி நானே நாட்டின் தலைவரும் நானே. அவர்கள் என்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்னுடன் உரையாட வேண்டும். என்னுடன் இணைந்து செயல்பட முடியாதென அவர்கள் கருதினால் புதிய தலைவர்கள் வருவார்கள். அவர்களுடன் நான் கலந்துரையாட வேண்டி நேரும்'' .===============================

பொது தேர்தலின் பின்னர் தமிழ்பேசும் தலைவர்கள் என்னுடன் பேச வேண்டும்- ஜனாதிபதி
வீரகேசரி வாரவெளியீடு _ 2/21/2010 9:01:04 AM 2
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுப்பிரச்சினையையும் ஆராயாமல் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ் பேசும் தலைவர்கள் தன்னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். தற்போதைய சூழலில் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அனைத்தும் அமுல்படுத்தக்கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஹிந்து பத்திரிகைக்குஅளித்த செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறுகூறி யுள்ளார். சீனாவுடனான எனது தொடர்புகள் குறித்து அவர்கள் (இந்தியர்கள்) சற்று கவலையடைந் துள்ளனர். சீனா ஜப்பான் உட்பட பல நாடுகள் இங்கு முதலீடு செய்கின்றன. ஆனால் இந்தியா எனது உறவு நாடு. ஏனைய நாடுகள் நண்பர்கள் என்றே நான் எப்போதும் கூறுகிறேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த தெரிவித்துள்ளார்..

அச்செவ்வியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:.

ஜனாதிபதி தேர்தலில் மிகப் பெரிய வெற்றி

ஜனாதிபதித் தேர்தலில் 18 சதவீத அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியமை குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. ஏனெனில், மாகாண சபைகளில் பெரும்பான்மையைக் கணக்கிட்டால் அது 2.5 மில்லியனாகும். அதில் ஒரு மில்லியனை நீக்கினால் 1.5 மில்லியன் பெரும்பான்மையில் நான் வெற்றி பெற்றிருப்பேன் என்பது எனக்குத் தெரியும். அத்துடன் கிராமங்களில் உள்ள மக்களின் நாடியை அறிந்தவன் நான். கொழும்பு மாவட்டத்தில் கூட, மாநகர சபைக்கு வெளியே எனக்கு மக்கள் நல்ல பெரும்பான்மையைத் தந்தார்கள். ஆரம்பம் முதலே எனக்கு பெரும்பான்மை அங்கு கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். .

வடக்கு கிழக்கு மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை என்பது குறித்து நான் கவலைப்படவில்லை. அதனால் நான் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளேன். மக்கள் வாக்களிக்க வேண்டுமென்பதற்காகவும் தமது சொந்த ஜனாதிபதியை அவர்களாகவே தேர்ந்தெடுக்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நான் தேர்தலை நடத்தினேன். அதில் 26 சதவீதம் எனக்கு திருப்தியேற்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் எனக்கு சில வாக்குகள் கிடைத்துள்ளன.

இறுதியான வெற்றியின் பின்னாலுள்ள காரணிகள்.

மக்கள் அனுபவத்தை எதிர்பார்த்தார்கள். தமது நாட்டை வழிநடத்த ஒரு அரசியல்வாதியை விரும்பினார்கள். 40 வருட காலமாக நான் அரசியலில் இருந்து வருகிறேன். திடீரென ஒரு இராணுவ மனிதர் உள்ளே வருகிறார். அவர் மீது மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர் மக்கள் மத்தியில் பேசிய விதத்தாலும் போட்ட சத்தத்தாலும் மக்களை இழிவுபடுத்தியதாலும் அவர்கள் பயமுறுத்தப்பட்டார்கள். பொருளாதார விவகாரங்களில் அவர் (சரத் பொன்சேகா) தனது அனுபவமின்மையைக் காட்டினார். .

தவறான இலக்கின் மீது....

உண்மையில் என்னைப் பற்றி எதுவும் அவர் கூறவில்லை. இறுதி நாட்களில் மாத்திரம் சில வார்த்தைகளைக் கூறியுள்ளார். "அவரைக் கைது செய்து விளக்கமறியலில் வைப்பேன்'. "அவரை உதைத்து வெளியில் தள்ளுவேன்' என்று சோமவன்ச (ஜே. வி. பி. தலைவர் அமரசிங்க) கூறியதை அவர் அங்கீகரித்தார். ""7 மணிக்கு நான் அங்கு சென்று அவரைக் கைது செய்து 2து2 சுற்றளவுள்ளதும் ஆகக் கூடிய பாதுகாப்பு சிறையுமான கண்டி போகம்பரை சிறையில் அடைப்பேன்'' என்றும் கூறினார். இதுதான் இராணுவம் என்று அவர் நினைத்தார். அவருக்கு சரியான முறையில் அறிவுரை கூறப்படவில்லை. .

அவர்களது முழு பிரசாரமுமே ஒரு குடும்பத்திற்கு எதிராக சேறு வீசுவதாக இருந்தது. இலங்கையின் கிராமப் புறங்களில் பாரிய அளவில் ஆதரவு எனக்குக் கிடைத்தது. கிராம அபிவிருத்தித் திட்டங்கள் காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன். .

"அதிக உணவு பயிரிடும்' இயக்கமும் இதில் ஒன்றாகும். 1948 முதல் 2005 வரையான காலப் பகுதியில் தனி நபரின் வருமானம் 1000 டொலராக உயர்ந்துள்ளது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கூட எனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் அது 2200 டொலராக எட்டியுள்ளது. இந்த அபிவிருத்தி மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் மாற்றமடைந்துள்ளது. அதனை அவர்கள் (பொன்சேகா முகாமைச் சேர்ந்தவர்கள்) புரிந்து கொள்ளவில்லை. நான் எதிர்க்கட்சியில் இருந்திருந்தõல் வாழ்க்கைச் செலவைத் தவிர வேறொன்றையும் பேசியிருக்க மாட்டேன். கடைசியாக அவர்கள் அதனைப் பேச முற்பட்ட போது காலம் பிந்தி விட்டது. விடை எங்களுக்கு கிட்டியது. .

பிரசாரத்தை அவர்கள் நடத்திய விதத்தை கிராமங்களில் உள்ள மக்கள் விரும்பவில்லை. அதாவது, என்னைக் கைது செய்வது உதைத்து வெளியில் தள்ளுவது, கொலை செய்வது போன்றவைதான். அவ்வாறு நடப்பதை மக்கள் விரும்பவில்லை. கிராம மக்களின் ஆதரவு எனக்கு இருப்பதை அவர்கள் (பொன்சேகா முகாம்) அறியாமல் தப்புக்கணக்குப் போட்டு விட்டார்கள். கொழும்பை விட சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் எனக்கு வாக்களித்துள்ளார்கள். கண்டியில் சிலரும் ஏனைய நகரங்களிலும் எனக்கு வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. அவர்களின் விருப்பமெல்லாம் சமாதானம் நிறைந்த ஒரு வாழ்வாகும். அவர்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் பதவிக்கு வருவதை அவர்கள் விரும்பவில்லை. .

விடுதலைப் புலிகளை அழித்த உரிமை யாருக்கு?.

எனக்கு வாக்குகளை அளித்ததன் மூலம் மக்கள் கௌரவத்தை எனக்கே வழங்கியுள் ளனர். தாஜ்மகாலைக் கட்டியவர் யார்? மக்கள் நினைவு கூர்வது தாஜ் மஹாலை நிர்மாணித் தவரையா? மேசனையா? அல்லது பிரதம பொறியியலாளரையா?.

நாடாளுமன்ற தேர்தல் பற்றி....

நாடாளுமன்றத் தேர்தலில் நாம் சுலபமாக வெற்றி பெறுவோம் என நினைக்கிறேன். மக்கள் எங்களுடன் இருப்பார்கள். ஏழு வருட காலத்திற்கு அரசாங்கம் உறுதி நிலையில் இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். .

மூன்றிலிரண்டு பெரும்பான்மை.

இந்தப் பெரும்பான்மையைப் பெற அல்லது அதற்குக் கிட்டிய வகையில் வெற்றி பெற எமக்கு சாத்தியமாகும் எனக் கருதுகிறேன். ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தார் பின்னர் வந்து என்னுடன் இணைவார்கள். (சிரிப்பு) .

ரணில் பிரதமராவாரா?.

இது தொடர்பில் எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் அவர் அதை செய்யமாட்õர். (நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயற்படமாட்டார்) எனவே அப்படி ஒரு சூழ்நிலை எழாது. பிரசாரத்திற்காக ரணில் தமிழ்ப் பிரதேசங்களுக்கு சென்ற போது எனக் காகவே பிரசாரம் செய்தார். நான் தமிழிலில் பேசி வந்தேன். தனக்கும் தமிழ் தெரியும் என்பதைக் காட்டுவதற்காக சில வார்த்தைகளை அவர் பேசியுள்ளார். "போடா. மஹிந்த ராஜ பக்ஷ போடா' "' கோத்தாபய போடா' "பஸில் போடா' என்றார். மக்கள் அதிர்ச்சியடைந் தார்கள்..

எதிர்க்கட்சியின் பங்கு.

எதிர்க்கட்சி பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். விமர்சனங்களையும் கூற வேண்டும். ஆனால் எந்நேரமும் சேற்றை வீசக்கூடாது. அரசாங்கம் கொண்டு வரும் எல்லாவற்றையும் எதிர்க்கக்கூடாது. இலங்கை யில் இது ஒரு துரதிர்ஷ்ட விடயமாகவுள்ளது. வடக்கு கிழக்கு விவகாரத்தில் நாம் கொண்டு வரப் போகும் எத்தகைய தீர்விற்கும் எதிர்க்கட்சி பங்களிப்புச் செய்ய வேண்டும். ஏனெனில் எமக்குத் தேவை நிரந்தரமான சமாதானம். .

13 ஆவது திருத்தம்.

13 ஆவது திருத்தம் அவசரத்தில் கொண்டு வரப்பட்டதாகும். முழுப் பிரச்சினையும் நன் றாக ஆராயப்படவில்லை. நாட்டின் பூகோளவியல் பற்றியும் பிரச்சினையின் வரலாறு பின்னணி குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதனைப் புரிந்து கொள்ளாமல் நாட்டிற்குப் பொருத்தமான தீர்வொன்றினைக் கொண்டுவர முடியாது. அது ஒரு நடைமுறைத் தீர்வாக இருக்க வேண்டும். இச் சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படலாம். 13 ஆவது திருத்தச்சட்டம் அரசியல் அமைப்பில் உள்ளது. அது ஏனைய பிரதேசங்களில் அமுல்படுத்தப்படுகிறது. காணி மற்றும் எல்லாமே அமுல்படுத்தக் கூடியவை. வட மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தினோம். ஏப்ரல் 8 நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளோம். முதலில் மக்களை மீள் குடியமர்த்த நினைத்தேன். இப்போது இடம்பெயர்ந்தோர் முகாம்களில் 50,000 ற்கும் குறைவானவர்களே உள்ளனர். அவர்களில் பலர் போக விரும்பவில்லை. .

மேற்கு நாடுகள் இதனை புரிந்து கொள்ளவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அறிக்கை விடுகிறார்கள். மனிதாபிமான உதவிகள் பற்றிக் கேட்கிறார்கள். மனிதாபிமான உதவி தேவையில்லை என நான் கூறுகிறேன். எமது மக்களுக்கு உணவு வழங்கி அவர்களை நாங்கள் பராமரித்துக் கொள்கிறோம். இந்தியாவிலிருந்து எந்த நேரத்திலும் உணவை பெற்றுக் கொள்ளலாம். அபிவிருத்தி உதவியே (வடக்கில்) எங்களுக்குத் தேவையெனக் கூறினேன். சமாதானமின்றேல் அபிவிருத்தியில்லை; அபிவிருத்தியின்றேல் சமாதானமில்லை.

பொலிஸ் சேவையில் தமிழர்கள்

கிழக்கு மாகாணத்திலிருந்து சுமார் 500 தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் 450 வெற்றிடங்களுக்கு 7500 இளைஞர்கள் வந்தனர். தேர்தலுக்குப் பின் நியமனங்கள் வழங்கப்படும். அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள். மீண்டும் பயிற்சி அளிக்கத் தேவையில்லை. பொலிஸ் கடமைகளை மட்டும் அவர்கள் கற்க வேண்டும். தமிழ் பகுதிகளில் அநேகமாக அவர்களை பணிக்கமர்த்தினாலும் தெற்குப் பிரதேசங்களுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

தமிழ் முஸ்லிம் பெரும்பான்மை

கொழும்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்த நிலை மாறி இன்று அவர்கள் 30 வீதமாகியுள்ளனர். கொழும்பின் மேயரும் ஒரு முஸ்லிம் இனத்தவரேயாகும்.

அதிகாரப் பரவலாக்கல் குறித்த பேச்சுவார்த்தை

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் சகல அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவேன். தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ்க் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றை பலமுறை அழைத்தேன். அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. பிரபாகரன் இருந்தவரை இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடத்துவதே வழி என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். .

நாட்டின் ஜனாதிபதி நானே நாட்டின் தலைவரும் நானே. அவர்கள் என்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்னுடன் உரையாட வேண்டும். என்னுடன் இணைந்து செயல்பட முடியாதென அவர்கள் கருதினால் புதிய தலைவர்கள் வருவார்கள். அவர்களுடன் நான் கலந்துரையாட வேண்டி நேரும். மேற்கு நாடுகள் என்னை விரும்புவதில்லை. எனது சுயாதீனக் கருத்துக்களையும் அவர்கள் விரும்புவதில்லை. எனது நாடே எனக்கு முக்கியம். மற்றொரு நாட்டுக்கு நான் ஏன் விசுவாசமாக இருக்க வேண்டும். நான் கிறீன்கார்ட் வைத்திருப்பவரல்ல. இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு உதவியுள்ளன. யுத்தம் முடிந்து விட்டது. இப்போது நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லவேண்டியுள்ளது. நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் உதவ முன்வரும் ஏனைய நாடுகளையும் ஏற்றுக்கொள்ள தயாராகவுள்ளேன். அபிவிருத்தி உதவிகளே இப்போது தேவையாக உள்ளது.

சரத்பொன்சேகா கைது

பொதுச்சட்டத்திலும் பார்க்க இராணுவ சட்டம் வித்தியாசமானது. சரத்பொன்சேகா இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவத் தளபதியின் கீழ் இப்போது அவர் உள்ளார். சொகுசான மாடியொன்று வழங்கப்பட்டுள்ளது. அவர் வெற்றி பெற்றிருந்தால் நான் போகம்பரையில் 2ஙீ2 சுற்றளவான அறையில் இருந்திருப்பேன். அவரைப் பார்க்க சட்டத்தரணிக்கும் அவரது மனைவிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொஸ்கோவில் விருந்தொன்றில் இருந்த என் மனைவியுடன் அவர் (அனேõமா) தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறினார். "கேளுங்கள், அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவீர்கள் ' என அவருக்குக் கூறப்பட்டது. சாத்தியமான யாவுமே அனுமதிக்கப்பட்டது. அவரைத் தொந்தரவு செய்ய நாம் விரும்பவில்லை. எதைச் செய்தாயோ அதன் பலனை அப்பிறவியிலேயே அனுபவிப்பாய் என புத்த சமயத்தில் கூறப்பட்டுள்ளது. நல்லதோ கெட்டதோ மறுபிறவி வரை காத்திருக்கத் தேவையில்லை. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். யாரோ ஒருவர் எம்மைக் கண்காணித்துக்கொண்டிருக்கிறார். விஷ்ணுவின் பார்வை இருந்தால் ஒருவரும் தீங்கு செய்ய முடியாது என்கிறார்கள். அதனால் இந்த நாட்டின் நலனுக்காக திருப்பதிக்கு சென்றேன்.

பொன்சேகா வென்றிருந்தால்... .

பொன்சேகா வென்றிருந்தால் தேர்தல் முடிவுகள் வித்தியாசமானதாக அமைந்திருந்திருக்கும். இரத்தம் சிந்த நேரிட்டிருக்கும். எங்கெங்கும் சடலங்கள் காணப்படும். வீடுகள் தீப்பற்றியெரியும். தேர்தலுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு 26 ஜனவரியில் உங்களுக்காக நாம் வருவோம் என அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டிருந்தது.

No comments: