Tuesday 27 April, 2010
விடுதலைப் புலிகளைப் பின்பற்றி புதிய குழுவொன்று உருவாகுவதைத் தடுக்க நாம் விழிப்பாக இருக்க வேண்டும். கோத்தபாய
புலிகளின் சர்வதேசக் கட்டமைப்பை முடக்க புலம்பெயர் தமிழர்கள் தடையாக உள்ளனர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய சொல்கிறார்
யாழ் உதயன் 2010-04-26
விடுதலை புலிகளின் சர்வதேச கட்டமைப்பை முடக்கும் நடவடிக்கைகளுக் கான ஒரேயொரு தடையாகப் புலம்பெயர்ந்த தமிழர்களே உள்ளனர் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரி வித்துள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுதலை புலிகளின் சர்வதேச கட்டமைப்பை முடக்கும் நடவடிக்கைகளுக் கான ஒரேயொரு தடையாகப் புலம்பெயர்ந்த தமிழர்களே உள்ளனர் எனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரி வித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு ஆய்வு சஞ்சிகைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் தனது புலனாய்வுத் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், தமது பேட்டியின் போது தெரிவித்துள்ளவை வருமாறு:
கேள்வி: சரத் பொன்சேகா அரசியலில் நுழைந்தமை குறித்து அரசு என்ன கருதுகின்றது?
பதில்: தளபதி தனிப்பட்ட ஆசைகளுக்குப் பலியானார். நான்கு வருடங்களுக்கு மேலாக எம்முடன் எமது அணியில் ஒருவராக இணைந்து செயற்பட்டவர்.
பின்னர் ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணங்கள் எதுவுமின்றி விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை விமர்சித்த எதிர்க்கட்சிகளுடன் அவர் இணைந்து கொண்டார்.
அரசுக்கு எதிரானவர்களுடன் இணைந்து கொண்டார். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக எமது தேசிய நோக்கத்திற்கு அவர் துரோகமிழைத்தார்.
கேள்வி: இலங்கை அரசு அவர் தேசத்துரோகமிழைத்தார் எனக் கூறுகிறதே?
பதில்: பொன்சேகா அரசியலுக்கு வருவதற்குத் தீர்மானித்த தருணத்திலிருந்து அவர் எமது இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்து பொது மக்களின் அனுதாபத்தைப் பெற முயன்றார்.
கேள்வி:இதன் காரணமாகவா அவர் கைது செய்யப்பட்டார்?
பதில்: அரசு எடுத்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டவையல்ல.
நாங்கள் சரியான விடயத்தையே செய்கிறோம். எவருக்கும் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கான உரிமையுள்ளது. அந்த உரிமையைப் பயன் படுத்தும் போது சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
இராணுவத்தை அரசியல் மயப்படுத்தினார்
கேள்வி: பொன்சேகாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் என்ன?
பதில்: அவர் மிகப் பெரிய பாதிப்பை இராணுவத்திற்கு ஏற்படுத்தினார்.
பல வருடங்களாக எமது இராணுவம் அரசியல் பக்கச்சார்பின்றிச் செயற்பட்டு வந்துள்ளது. முப்படைகளும் அவ்வாறே செயற்பட்டுள்ளன.
துரதிஷ்டவசமாக சரத்பொன்சேகா இராணுவத்தை அரசியல்மயப்படுத்தினார்.
இராணுவத்திலிருந்து முற்றுமுழுதாக விலகிய பின்னரே அவர் அரசியலில் ஈடுப்பட்டிருக்க வேண்டும்.
இராணுவம் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஓர் அமைப்பு. அவர் அதில் 38 வருடங்களாகப் பணியாற்றியுள்ளார். இராணுவத் தளபதியாக அவர் பதவி வகித்துள்ளர். இராணுவத் தளபதியாகப் பணி புரியும் போது அவர் தொடர்ச்சியாக ஒழுக்க நெறி பற்றி தெரிவித்து வந்துள்ளார்.
எனினும் தனது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக அவர் இராணுவத்தைப் பயன்படுத்தியுள்ளார். தனிப்பட்ட நலன்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளார்.
பொன்சேகா சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைத் தனது அரசியல் பிரசாரத்திற்கு பயன்படுத்தினார்.அவர் தனது அரசியல் பிரசாரத்தை இராணுவத் தளபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திலிருந்தே ஆரம்பித்தார்.இராணுவத் தளபதி என்பதால் கண்களை மூடிக்கொண்டிருக்க முடியாது
இராணுவத் தளபதி என்ற காரணத்தினால் அரசு அவருக்கு ஒதுக்கிய வளங்களை அரசியல் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார்.
அவர் பல சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
வெறுமனே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார் என்பதற்காக நாங்கள் கண்ணை மூடிக் கொண்டிருக்க முடியாது.
கேள்வி:அரசு இராணுவத்தை எம்போதும் உஷார் நிலையில் தயார் நிலையில் வைத்துள்ளதே. ஏன்?
பதில்:விடுதலைப் புலிகள் மீண்டும் வருவதற்கு தலைதூக்குவதற்கு அனுமதிக்க முடியாது. முதலாம்கட்ட யுத்தம் முடிந்து விட்டது.
இரண்டாவது கட்ட யுத்தம் வேறு வடிவத்திலிருக்கும்.
இராணுவ நடவடிக்கைக்காக நாம் தயார் நிலை உயர் நிலையில் இருக்க வேண்டும். நாங்கள் அயர்ந்திருக்க முடியாது.
கேள்வி: யுத்தத்தில் ஈடுபடுவதை விட அமைதியைப் பாதுகாப்பது மிகவும் கடினமானதா?
பதில்: புலனாய்வுத் தகவல்களைத் திரட்டுவதற்கான எமது திறமையையும் வழிமுறைகளையும் நாம் அதிகரிக்க வேண்டும்.
இராணுவப் புலனாய்வை இன்னும் பலப்படுத்த வேண்டும். தேசியப் புலனாய்வுக் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்.
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் தளங்களை அமைப்பதைத் தடுப்பதற்காக காடுகளை நாம் எமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். கரையோரப் பகுதிகளில் எமது ஆதிக்கம் அவசியம் கடல் வழியாக ஆயுதங்கள் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்காக கரையோரப் பகுதிகளில் நாங்கள் ஆதிக்கம் செலுத்தவேண்டும்.
விடுதலைப் புலிகளின் கப்பல்கள் மூலம் பெருமளவு ஆயுதங்கள் ஆட்லரிகள் கொண்டுவரப்பட்டன என்பது எமக்குத் தெரியும்
விடுதலைப் புலிகளைப் பின்பற்றி புதிய குழுவொன்று ஆயுதங்களைக் கொண்டுவருவதைத் தடுப்பதற்கு கடலோரக் கண்காணிப்பு மிக முக்கியமானது.
இதேவேளை நாங்கள் இயல்பு நிலையை மீண்டும் கொண்டுவர விரும்புகின்றோம்.
எமது பாதுகாப்பு பிரசன்னம் என்பது பெருமளவிற்கு கண்களுக்குத் தென்படாததாகவும் புலனாய்வுத் தகவல்களைப் பெறுவதில் கவனம் செலுத்துவதாகவும் காணப்படும்.
பல நாடுகளில் வலுவான புலம்பெயர் சமூகம்
கேள்வி: இலங்கைக்கு வெளியே எஞ்சியுள்ள விடுதலை புலிகள் அமைப்பு ஆபத்தானதாகவுள்ளதா?
பதில்:விடுதலைப் புலிகள் இலங்கைக்கு வெளியே சிறந்த வலையமைப்பை உருவாக்கியுள்ளனர்.
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அவர்கள் சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளனர். நிதி திரட்டும் வழிவகைகளையும் உருவாக்கியுள்ளனர்.
பல நாடுகளில் வலுவான இலங்கைப் புலம் பெயர் சமூகம் உள்ளது. இவர்களுக்குள் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளனர்.
நிதி திரட்டுவதற்கான திறமை அவர்களுக்கு உள்ளது. சிறந்த கப்பல் ஆயுதக் கொள்வனவுப் பிரசாரத் திறனுமுள்ளது.
விடுதலைப் புலிகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் நியாயமான வர்த்தகங்களில் முதலீடு செய்துள்ளனர்.
இலங்கைக்கு வெளியே பல விடுதலைப் புலிகள் இன்னும் செயற்படுகின்றனர். எனக் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment