Monday, 15 September 2008

ஈழதேசம் மீதான விமான ஆக்கிரமிப்புத்தாக்குதல்களின் சூத்திரதாரி இந்தியா!

விமானப்படைக்கு தொழில்நுட்ப உதவி வழங்கும் ஒப்பந்தத்தை இந்தியா இடைநடுவில் கைவிடமுடியாது இலங்கைத் தரப்பில் வலியுறுத்து __________________[14 செப்டம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 9:30 மு.ப இலங்கை] _______________________________
ஆக ஈழ தேசம் மீதான விமான
ஆக்கிரமிப்புத் தாக்குதல்களின்
சூத்திரதாரி இந்தியா __________________________
இலங்கைக்கும்இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந் தத்தின்கீழ் விமானப்படைக்கு தொடர்ந்து இந்தியா தொழில்நுட்ப வசதியை வழங்க வேண்டும். அது இந்தியாவுக்குரிய கடப்பாடாகும். அதனை உரிய காலத்திற்கு முன்னர் கைவிட முடியாது. இலங்கை அரசு தரப்பில் இவ்வாறு வலியுறுத்தப்படுகிறது. இலங்கை விமானப்படையினரின் செயற்பாடுகளுக்கு உதவி வழங்குவது தொடர்பாக இந்தியாவுக்கும் எமது நாட்டுக்கும்
இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தாகியிருந்தது. அந்த ஒப்பந்தம் இன்னும் காலாவதியாகவில்லை. அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும்வரை, நடைமுறையில் உள்ளவரை, இந்தியாவின் தொழில்நுட்ப உதவிகள் தொடரவேண்டும்.
இது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது இவ்வாறு விமானப்படைப் பேச்சாளர் ஜானக நாணயக்காரவும் இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்காரவும் தெரிவித்துள்ளனர்.

No comments: