Tuesday 17 April, 2007

ஈழ விடுதலைப் போரை கருவறுக்கும் இந்திய மத்திய மாநில அரசுகள்

ஈழ விடுதலைப் போரை கருவறுக்கும் இந்திய மத்திய மாநில அரசுகள்.

இந்திய மத்திய மாநில அரசுகள் ஈழத்தமிழர்களின் நண்பர்கள் என பசப்பிக்கொண்டு, ஈழ அகதிகளுக்கெதிராகவும், விடுதலைப் புலிகளுக்கெதிராகவும், தமிழக கடற் தொழிலாளர்களுக்கெதிராகவும் செயற்பட்டுவருகின்றன.

ஈழவிடுதலைப் போராட்டத்துக்குள், 1983 இல் நண்பன் என்ற போர்வையில் புகுந்து, 1985 இல் திம்புவில் சுயநிர்ணய உரிமைக்கு குழிபறித்து, 1987இல் ஆக்கிரமிப்பு ஒப்பந்தம் மூலம் இலங்கை அரசை அடிமைப்படுத்தி, ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போரை வேரறுக்க ஆக்கிரமிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

83 இல் ஈழத்தமிழரைக் காக்க இந்திய படையை அனுப்பு என ஓலமிட்ட மாநில திராவிடத் தரகர்கள், பின்னர் 87 இல் கொல்லாதே கொல்லாதே தமிழனைக் கொல்லாதே என ஓலமிட்டனர். எந்தக்காலத்திலும் 'இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து வாய் திறக்கவேயில்லை.......ஏன்?

20 ஆண்டுகளுக்குப் பின்னால், இலங்கை இந்தியாவின் அரசியல், இராணுவ, பொருளாதார கலாச்சார காலனியாகிவிட்டது.

இதனால் இலாபம் அடைந்தவர்கள் ஏகாதிபத்திய தரகர்களான மத்திய ஆளும் கும்பல் மட்டுமல்ல, அவர்களுடைய மானில தரகர்களான மானில திரவிட ஆளும் கும்பல்களும் தான்!

இலங்கையின் இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் பாதுகாப்புக்கு தான் பொறுப்பு என இந்தியா உரிமை கொண்டாடுகிறது!

இதனை சட்டபூர்வ ஒப்பந்தத்தால் உறுதி செய்துள்ளது.

ஈழத்தமிழர்களது திருகோணமலை எண்ணைக்குதங்களை இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்து அபகரித்துள்ளது!

சேது சமுத்திர திட்டம் அமூலாகிவருகிறது,
காங்கேசன் துறைத் துறைமுகம், பலாலி விமான நிலையம், காங்கேசன் சீமேந்து தொழிற்சாலை, மன்னார் எண்ணை ஆராய்ச்சி என விஸ்தரிப்புவாதத்தின் கழுகுக் கண்கள் பரந்து விரிந்து பார்த்துக் காத்துக் கிடக்கின்றன.

ஏகாதிபத்தியவாதிகளின் பிராந்திய தரகனாக இருந்து, சோசலிஸ ஜனநாயக இயக்கங்களை கருவறுத்து, தேசிய விடுதலை இயக்கங்களை சீரழித்து இல்லையேல் கொன்றொழித்துத்தான் இந்தப் பிற்போக்குக் கொத்தளம் தன்னை தற்காத்துவருகிறது, வந்திருக்கிறது.

இலங்கையின் இனவெறிக் கடற்படை தமிழகமீனவர்களைக் கொன்றொழிப்பது இந்திய மத்திய மாநில ஆளும்கும்பல்களுக்கு பயங்கரமாக தெரியவில்லை, ஏனெனில் அவர்களுக்கு இலங்கை மைய அரசு வழங்கியுள்ள ஆதாயங்கள்தான்!

ஈழத்தமிழர்களின் நண்பர்களாக நடித்து இத்தனை ஆதாயங்களையும் அடைந்துவிட்ட இந்திய மத்திய மாநில அரசுகள்,
அகதிகள்என்றபோர்வையில் விடுதலைப் புலிகள் தமிழகத்துக்குள்
ஊடுருவுவதாக குற்றம் சுமத்துகின்றனர்!

இலங்கை அரசு ஒரு இனப்படுகொலைத்தாண்டவத்தை கட்டவிழ்த்துவிட்டு 5இலட்சம் மக்களை - சமாதான காலத்தில் - ஏதிலிகள் ஆக்கியுள்ள நிலையில் நம்மை நிராயுதபாணியாக்க இந்தியா கங்கணம் கட்டி நிற்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா என்கிற கருங்காலியை விலைக்கு வாங்கி, போஸித்து, பாதுகாத்து, ஆயுதபாணியாக்கி, கிழக்கில் இறக்கிவிட்டுள்ள இந்தியா, விடுதலைப் புலிகளை பயங்கர வாதிகள் என்று சொல்கிறது!

பயங்கரம்: ஆயுதமா? அரசியலா?

இந்திய மத்திய மாநில அரசுகள் ஈழத்தமிழர்களின் நண்பர்கள் என்றால் அவர்களுடைய அக்கறைக்குரிய விடயம்,

இலங்கையின் ஒருமைப்பாடா? ஈழத்தமிழரின் சுயநிர்ணய உரிமையா?

இந்த சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் தமிழக பிரச்சாரப்பீரங்கி கோபாலசாமியின் கூட்டணிக்கட்சித் தலைவர் அடிமைப்பெண் ஜெயலலிதா
" தமிழகம்தீவிரவாதிகளின்ஆயுதக்கிடங்காக மாறி விட்டதால் கவனர் ஆட்சியை
கொண்டுவர வேண்டும்" என முழங்குகிறார்!

இவை எல்லாவற்றையும் சிரிப்புக்குரிய விடயங்களாக எடுத்துக்கொண்டால், வயிறு குலுங்க சிரிக்க இன்னுமொரு விடயம் இருக்கிறது!

விடுதலைப் புலிகள் கட்டுநாயக்காவில் எறிந்த இரண்டு குண்டுகளின் சேதாராம் இன்னும் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்கே தெரியாது!

இது நடந்த கையோடு மூன்றாவது குண்டை விடுதலைப் புலிகள் போட்டது
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது:

இதோ அந்தக் குண்டு:

"தமிழிழீழ வான் படை-விடுதலைப் புலிகள் என வாசிக்க- இந்திய நலன்களுக்கு எதிராக செயற்படாது"!!

இந்தியாவுடன் நமது உறவு சுயநிர்ணய உரிமையா? சமரச சந்தர்ப்பவாதமா?

விடுதலைக்கான பாதை எது??

No comments: