Wednesday 18 April, 2007

மண்டபம் முகாம் அகதிகள்- கியூ பிரிவு அட்டகாசம்

மண்டபம் முகாமிலிருந்த 3 இளைஞர்கள்விசாரணையின் பின்னர் தடுத்து வைப்பு-விடுதலைப் புலிகளின் உளவாளிகள் என்ற சந்தேகத்தில்
சென்னை,ஏப்.17

மண்டபம் முகாமில் தங்கியிருந்த ஈழ அகதிகளில் மூவர் "கியூ' பிரிவு பொலிஸாரால் சென்னைக்குக் கூட்டிச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இரகசிய விசா ரணையின் பின்னர் அவர்கள் மூவரும் செங்கல்பட்டுச் சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தேவஜோதீஸ்வரன் (வயது 28), மன்னாரைச் சேர்ந்த ஜஸ்டின்ராஜ் (வயது 20), சுகந்தன் (வயது 27) ஆகியோரே சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆவர்.இலங்கையில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரித்த தால் இவர்கள் மூவரும் அகதிகளாக வந்து மண்டபம் முகாமில் தங்கியிருந்தனர்.சம்பந்தப்பட்ட மூவரும் விடுதலைப் புலிகளின் உள வாளிகளாக இலங்கையில் செயற்பட்டவர்கள் என்று விசாரணைகளில் இருந்து அறியவந்துள்ளதாகப் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.விசாரணைகளின் பின்னர் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:மண்டபம் முகாமில் அகதிகள் போர் வையில் விடுதலைப் புலிகள் ஊடுருவி இருப்பது இதற்கு முன்பும் நடந்தது இரு கிறது. ஆனால் உளவாளிகள் ஊடுருவி அவர்கள் எங்களின் பிடியில் மாட்டிக் கொண்டது இதுவே முதல் முறையாகும். அவர்கள் தமிழக மக்களின் மனோ நிலையை அறிந்து கொள்ளவும் இங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ளவும் வந்திருக்கலாம் என்று நாங் கள் கருதுகிறோம்.இதற்காக விடுதலைப் புலிகள் அல் லது அவர்களின் உளவாளிகள் பலர் அகதி கள் போர்வையில் தமிழகத்திற்குள் ஊடு ருவி இருக்கலாமோ என்ற சந்தேகம் ஏற் பட்டு உள்ளது என்றார்.இதேவேளை தமிழகத்தின் அனைத்து அகதிகள் முகாம்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதிரடி சோதனைகளும் நடத்தப்படுகிறது. அகதி கள் ஒவ்வொருவரும் தனித் தனியாக கண் காணிக்கப்படுகிறார்கள்.
நன்றி: யாழ் உதயன்

No comments: