எதிர்ப்பின் மத்தியிலும் கிழக்கில் தமிழர்கள்வேறு இடங்களில் மீளக் குடியமர்த்தப்படுகின்றனர்கூட்டமைப்பு கூட்டத்தில் கண்டனம்.
கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தாமல், வேறு இடங்களில் தொடர்ந்தும் குடியேற்றி வருகிறது.நாடாளுமன்றக் குழு அறையில் நேற்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக நீண்டநேரம் ஆராய்ந்தனர்.மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இடம்பெயர்ந்துள்ள தமிழ் அகதிகளை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தாமல் ஏதேதோ காரணங்களைக் கூறி மக்களின் விருப்பத்துக்கு மாறாக வேறு இடங்களில் அரசாங்கம் குடியேற்றி வருகிறது.இது குறித்துப் பலதடவைகள் அரசிடம் எடுத்துக் கூறியும் அது செவிசாய்ப்பதாக இல்லை என்று திருமலை மாவட்ட எம்.பி. துரைரட்ணசிங்கம் கூட்டத்தில் நீண்டநேரம் விளக்கினார்.வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைக்கப்படாமை குறித்தும் நேற்றைய கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது.வடக்கு கிழக்கில் உள்ள மொத்தம் 31 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22 பேர் கூட்டமைப்பினர். அவர்களை மேற்படி கூட்டங்களுக்கு அழைத்திருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று சுட்டிக்காட்டப்பட்டது.வடக்கு கிழக்கில் இடம்பெறும் கொலைகள், ஆட்கடத்தல்கள், கைதுகள், கொள்ளைகளை நிறுத்த அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் கூட்டத்தில் விசனம் தெரிவிக்கப்பட்டது.
நன்றி : யாழ் உதயன்
No comments:
Post a Comment