Thursday 19 April, 2007

எச்சரிக்கை : " ஜனநாயக தலைமை "

சங்கரி - சித்தார்த்தன் - பத்மநாபா அணிஐக்கியப்பட்டு செயற்படுவதற்கு முடிவுஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு கொழும்பு,
ஏப்ரல் 19வீ.

ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, த.சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா அணி) ஆகியன ஐக்கியப்பட்டுச் செயற்படத் தீர்மானித்திருப்பதாக அறிவித்திருக்கின்றன.தங்களது நிலைப்பாட்டுடன் இணைந்து செயற்பட விரும்பும் அனைத்து அரசியல், சமூக சக்திகளுடனும் தாங்கள் ஐக்கியமாகச் செயற்ப்படத் தயார் என இந்த அமைப்புகளின் தலைவர்கள் கூட்டாக அறிவித்திருக்கின்றனர்.இது தொடர்பாக புளொட் தலைவர் என்ற வகையில் த.சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் என்ற வகையில் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எவ். பொதுச்செயலாளர் என்ற வகையில் தி.சிறிதரன் ஆகியோர் ஒப்பமிட்டு கூட்டு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டனர். இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக மேற்படி மூன்று கட்சிகளும் விடுக்கும் கூட்டறிக்கை என்ற தலைப்பில் அது அமைந்திருந்தது. அதன் முழு விவரம் வருமாறு: எமது மக்களின் அவல நிலையையும், வன்முறைக் கலாசாரத்தையும், ஏற்பட்டுவரும் அழிவுகளையும் கருத்திற்கெடுத்து, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எய்துவதை அடிப்படை இலக்காகக் கொண்டு முதற்படியாக தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா)ஆகிய மூன்று கட்சிகளும் ஐக்கியப்பட்டுச் செயற்பட்டு வருகின்றோம்.இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண அடிப்படையான சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். அதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இந்திய அமைப்பு முறையில் அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் என்பதை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றார். தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் சர்வகட்சிக் குழுவின் முன்னால் நேரில் சமுகமளித்து சமஷ்டி முறையிலான தீர்வினை வலியுறுத்தினார்.ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா) ஒரு விரிவான அரசியல் தீர்வுத் திட்டத்தை அனைத்துக் கட்சிக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது. மேற்படி யோசனைகள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான, அதிகாரப் பகிர்ந்தளிப்பு தொடர்பான கலந்துரையாடல்களை செயற்பாடுகளை மேலும் செழுமைப்படுத்திச்செல்ல அடிப்படைகளாக அமையும்.
நன்றி: யாழ் உதயன்

No comments: