Saturday 21 April, 2007

ஆயுத வியாபார போட்டியில் அம்பலமான இந்தியா

தாக்குதல் ரக ஆயுதங்களையும்இலங்கைக்கு வழங்கியது இந்தியா!பாகிஸ்தான் "இணையத்தளம்' தகவல்
கொழும்பு, ஏப்.21


தற்பாதுகாப்புக்கான ஆயுத தளபாடங்களைத் தவிர, பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் எவற்றையும் இலங் கைக்கு வழங்குவதில்லை என்று வெளிப்பகட்டுக்குக் கூறி வரும் இந்தியா, அந்நிலைப்பாட்டுக்கு மாறாக தாக்குதல் ரக ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியிருக்கின்றது. இவ்வாறு தெரிவித்து, இலங்கைக்கு இந்தியா வழங் கியதாகக் கூறப்படும் ஆயுதங்களின் பட்டியலையும் குறிப் பிட்டு, விவரமான செய்தி ஒன்றை பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இணையத்தளம் ஒன்று நேற்று முன்தினம் வெளியிட்டிருக்கின்றது. இந்திய மத்திய அரசு, தனது ஆட்சிப் பங்காளியான தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாட்டைப் புறக்கணித்து தாக் குதல் ரக ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியிருப்பதா கவும் அச்செய்தி தெரிவித்தது. ஆபத்து ஏற்படுத்தாத தற்காப்புக்குத் தேவையான ஆயுத தளபாடங்களையே இலங்கைக்கு வழங்குவது என்ற தனது வெளிப்படையான நிலைப்பாட்டை இந்தியா எவ்வாறு மறைமுகமாக மீறியிருக்கின்றது என்பதை செய்தியாளர் ஒருவர் கண்டுபிடித்த ஆவணம் ஒன்று அம் பலப்படுத்தியிருப்பதாக அந்த இணையத்தளச் செய்தி மேலும் தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி குறித்து கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தொடர்புகொண்டு உண்மை நிலை குறித் துக் கருத்துக்கேட்டபோது, கருத்து ஏதும் தெரிவிக்கத் தூத ரகம் மறுத்துவிட்டது. இணையத் தளச் செய்தியில், இந்தியா இலங்கைக்கு வளங்கிய தாக்குதல் ஆயுதங்களும் அடங்கிய பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
நன்றி: யாழ் உதயன்

No comments: