விடுதலைப் புலிகள் இரண்டு தடவைகள்தானேவிமானக் குண்டுவீச்சு நடத்தியிருக்கிறார்கள்அரசு 100 தடவைகளுக்கு மேல் நடத்தியதாகக் கூறுகிறார் அமைச்சர்
லண்டன், ஏப்.26
கிழக்கு, வன்னி என்று நூறு தடவைக ளுக்கு மேல் நாங்கள்விமானத் தாக்குதல்கள் நடத்திவிட் டோம். இரு தடவைகள்தான் புலிகள் தாக்கு தல் நடத்தி உள்ளார்கள்.அதுவும் இரவில் மட்டும் வந்து தாக்கு தல் நடத்துகின்றார்கள். முடிந்தால் பகலில் வந்து தாக்குதல் நடத்தட்டுமே.இப்படிக் கூறுகிறார் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே.பலாலியில் தமிழீழ விடுதலைப் புலிக ளால் நடத்தப்பட்ட விமானத் தாக்குதலை அடுத்து அமைச்சர்கள் குழு ஒன்று நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பலாலிக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வை யிட்டது.அந்தக் குழுவில் அங்கம் வகித்த ஒருவ ரான வீதி அபிவிருத்தி மற்றும் பெருந் தெருக்கள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண் டோபுள்ளே பி.பி.ஸியின் தமி ழோசைக்கு வழங்கிய பேட்டியில் மேற் கண்டவாறு தெரி வித்தார்.இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்:தாக்குதல் நடத்தவந்த புலிகளின் விமா னத்தை எமது படையினர் சுட்டு விரட்டியுள் ளனர். அதன்போது புலிகள் 3 குண்டுகளைப் போட்டுள்ளனர். அதில் இரண்டு குண்டுகள் கட்டடம் ஒன்றின் மீது வீழ்ந்ததில் கட்டடம் சேதமடைந்துள்ளது. 3ஆவது குண்டு புலிக ளின் விமானத்தைச் சுட்டுக்கொண்டிருந்த படையினர் நின்ற இடத்தில் வீழ்ந்ததில் 6 படையினர் பலியாகியுள்ளனர்.இச்சம்பவம் இடம்பெற்ற நேரம் எமது படையினர் நன்றாகச் செயற்பட்டுள்ளனர் என்றுதான் கூறவேண்டும்.பலாலி விமானத்தளத்திற்கு எந்தவித மான சேதமும் இல்லை. அங்கு ஒரு குண்டும் போடப்படவில்லை. விமானத் தளத்துக்குச் செல்லும் பாதையில் கூட குண்டுகள் போடப் படவில்லை. பலாலி விமானத்தளத்திற்கு வெளியேதான் குண்டுகள் போடப்பட்டுள் ளன.இதேவேளை நாங்கள் ஒரு மாதத்தில் நூறு தடவை களுக்கு மேல் வன்னி, கிழக்கு போன்ற இடங்களுக்குச் சென்று விமானத் தாக்குதல் களை நடத்துகின்றோம் .அவர்கள் இரண்டு தடவை மட்டும் தாக்குதல்களை நடத்தியுள் ளனர் .இது பெரிய விடயம் அல்ல. அதுவும் புலிகள் இரவு வந்துதானே தாக்குகிறார்கள். பகல்வந்து அடிக்கட்டும். அதன் பின்னர் பார்ப்போம் என்றார். (அ203)
நன்றி: யாழ் உதயன்
No comments:
Post a Comment