Monday, 21 May 2007

தாயகச் செய்தித் தீகள் 21-05-07

ஈழச்செய்திகளின் பின்னணியில்

இனவெறிப் பாசிச ராஜபக்ச அரசே,

பதினொரு உலகக் கொள்ளைக்கார அரசுகளின் சிறகுகளுக்குள் பதுங்கி இருந்து பயங்கரவாதம் பற்றிப் பிதற்றுகிறாயே;
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நீ கட்டவிழ்த்திருக்கும் தமிழ்த்தேசிய இன அடக்குமுறை யுத்தம் அரச பயங்கர வாதம் இல்லையா?

பெரிய பதினொரு உலகக் கொள்ளையர்களே,
நீங்கள் சமாதான விரும்பிகள் அல்ல! சாவு வியாபாரிகளே!

விடுதலைப்புலிகளே,

ஐந்தாண்டுகள் காய் நகர்த்துவதாகச் சொல்லி, 'சர்வதேச சமூகத்துக்கு' பாய் விரித்தது போதும்.
தீர்வு: நிலையானதா? நிலைக்காததா? என்பதல்ல கேள்வி,
கேள்வி எல்லாம் தீர்வு எத்தகையது என்பதுதான்.
உங்களுடைய 'அகசுயநிர்ணய உரிமை' என்கிற 'தேசத்தின் குரல்' அடிமைத்தனமான அதிகாரப்பரவலாக்க சமரசமே! இந்தப் பேரத்துக்கு பலம் சேர்க்கவே 'வலுச்சமநிலை' பற்றி பெசுகிறீர்கள்!
" புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்" என்பதும், " தேசத்தின் குரல் அகசுயநிர்ணய உரிமை" என்பதும் இருவேறு பாதைகள்!
விடுதலைச் சுதந்திரமா? அடிமைச் சமரசமா? எது உங்கள் பாதை??


ஈழத்தமிழ் உழைக்கும் மக்களே;

சுயநிர்ணய உரிமையே சுதந்திரத் தீர்வு!
அரசை உருவாக்குவதும், ஆயுதம் ஏந்துவதும் ஈழதேசத்தின் அடிப்படை உரிமை!
அநீதியான யுத்தத்தை நீதியான யுத்தத்தால் எதிர்ப்பது அடிப்படை ஜனநாயகம், பயங்கரவாதம் அல்ல!
அரசியல் முறையில் தீர்வுகாணும் வழி மூடு திரை போட்டு நடத்தும் பேச்சுவவார்த்தைப் பேரங்கள் அல்ல;
வடக்கு கிழக்கு மாகாண மக்கள் இடையேயான சர்வஜன வாக்கெடுப்பே!

தாயகச் செய்தித் தீகள் 21-05-07

வன்னியில் புலிகளின் பீரங்கி நிலைகளை பின்தள்ள அரசுப் படைகள் தயாராகின்றன கொழும்பு, மே 21

அரசுப்படைகள் விடுதலைப்புலிகளின் ஓமந்தையில் உள்ள முன்னரங்கப் பாது காப்பு நிலைகளை முல்லைத்தீவை நோக் கிப் பின்தள்ளுவதற்கான படை நடவடிக் கைக்கு ஆயத்தமாகி வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் வன்னி யில் புளியங்குளம், மாங்குளம் ஆகியபிர தேசங்களை நோக்கி முன்னேறுவதற்கும் படைகள் ஆயத்தமாகி வருகின்றன என்று கொழும்பு பாதுகாப்புச் செய்தி வட்டாரங் கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.இது தொடர்பாக ஆங்கில வார ஏடு ஒன்றின் பாதுகாப்பு பத்தி எழுத்தாளர் வெளி யிட்டிருக்கும் தகவல்கள் வருமாறு:மன்னார்ப் பகுதியிலுள்ள 450 வருடங்கள் பழைமையான மடு தேவாலயம் வடக்கு, தெற்கு என எல்லாப் பகுதிகளிலும் இருந்து பெருமளவான கத்தோலிக்க மதத்தவர்களைக் கவரும் பகுதியாகும்.அமைதி முயற்சிகள் நடைபெற்ற காலப் பகுதியான 2002 2005ஆம் ஆண்டுகளில் பெருமளவான பக்தர்கள் தெற்கில் இருந்து அங்கு சென்று வந்துள்ளனர். அண்ணள வாக ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் பேர் சென்று வருவதுண்டு.மோதல்கள் காரணமாக கடந்த ஆண்டு தெற்கில் இருந்து பக்தர்கள் எவரும் அங்கு செல்லவில்லை. கடந்த மாதம் இத்தாலிக்குச் சென்ற மஹிந்த, வத்திக்கான் செயலாளரிடம் மடுவுக்கு மக்கள் இலகுவாகச் சென்று வர அனுமதிக்கப்படவேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.எனினும், சில மாதங்களுக்கு முன்னரே மடுப்பகுதியில் இராணுவ நடவடிக்கை கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. அங்கு மேற் கொள்ளப்பட்டுவரும் இராணுவ நட வடிக்கைகளினால் மடுவிலும் அதன் சுற்றாடலிலும் இருந்த மக்கள் வடக்கே பெரிய மடுவை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர்.எனவே மடுவையும் அதனை அண்டியபகுதிகளையும் மீட்பதற்கான மட்டுப்படுத் தப்பட்ட இராணுவ நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது என்பதே இதன் பொருள்.மதவாச்சி, மன்னார் நெடுஞ்சாலையான ஏ 14 வீதியின் தென்புறம் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், அதன் வடபுறம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்த சாலையின் தலைமன்னார் பகுதி கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.மன்னாருக்கும் வவுனியாவுக்கும் இடையிலான முக்கியமான இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 57 ஆவது படையணியின் முதலாவது, 2ஆவது, 3 ஆவது பிரிகேட்டுகளை நிறுத்தியுள்ளது.பல ரெஜிமென்ட்களில் உள்ள படையினரில் இருந்து தரமான படையினரைத் தெரிந்தெடுத்து இந்தப் புதிய 57 ஆவது படையணி பிரிகேடியர் சுமித் மானவடு தலைமையில் அண்மையில் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படையணியே மன்னாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.மேலும் புதிய தளபதியான கேணல் நிர்மல் தர்மரட்ன தலைமையிலான சிறப்புப் படையினரின் முதலாவது ரெஜிமென்டுகளும், கஜபா ரெஜிமென்டின் 8 ஆவது பற்றலியனும், சிங்க ரெஜிமென்டின் 4 ஆவது பற்றலியனும், விஜபா ரெஜிமென்டின் 9 ஆவது பற்றலியனும், 21 ஆவது தேசிய காவல் படையினரும் இந்த நடவடிக்கைகளில் பங்குபற்றி வருகின்றனர்.தொப்பிகலவில் தொப்பிகல காட்டுப் பகுதியில் சிறப்பு கொமாண்டோப் படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் அதே சமயம் சிறப்புப் படையினர் மன்னார் காட்டுப்பகுதியிலும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.வன்னிப்பகுதியில் இந்தவாரம் நடைபெற்ற கடும் மோதல்களில் 4 அதிகாரிகளும், 30 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அதிகாரிகளில் சிறப்புப்படை அதிகாரியான கப்டன் நிருசாவும் அடங்குவார். இதில் காயமடைந்த படையினரில் 18இற்கும் மேற்பட்ட படையினர் அநுராதபுரம் மற்றும் கொழும்பு மருத்துவமனைகளுக்கு ஹெலிக்கொப்டர்கள் மூலம் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.எனினும் இந்த மோதல்களில் இறந்த படையினரின் எண்ணிக்கை இராணுவத்தரப்பு கூறுவதைவிட அதிகம் என படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.தற்போது கனகராயன் குளத்தில் உள்ள தமது பீரங்கிகளை புளியங்குளத்திற்கு நகர்த்திய விடுதலைப்புலிகள் கடுமையான பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். நகர்த்தக்கூடிய இந்தப் பீரங்கிகள் நெடுங்கேணியில் இருந்து மூன்று முறிப்பு பகுதிக்கு நகர்த்தப்பட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் மீண்டும் பழைய நிலைகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.இராணுவத்தின் இருமுனை நகர்வுத்திட்டமாக விடுதலைப்புலிகளின் முன்னணி நிலைகளை ஓமந்தை ஊடாக முல்லைத்தீவு நோக்கி பின்தள்ளுவதுடன், புளியங்குளம், மாங்குளம் போன்ற பகுதிகளையும் கைப்பற்றுவதாகவே உள்ளது. எனினும் இது கிழக்கில் இடம்பெற்ற நடவடிக்கைகளைப் போல இலகுவானதல்ல. இன்றுவரை மன்னாரில் நடைபெற்றுவரும் இராணுவ நடவடிக்கைகளினால் 1,700 2,000குடும்பங்கள் மடு, பெரிய பண்டிவிரிச்சான், சின்னப்பண்டிவிரிச்சான் பகுதிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் தற்போது மடுவில் இருந்து வடக்கு நோக்கி 10கி. மீ தொலைவில் உள்ள பெரியமடு பகுதியில் தங்கியுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒரே குரலில் பேசுவோம்! ஜி11 மாநாட்டில் ஜனாதிபதி உரை அம்மான், மே 21

பயங்கரவாதத்திற்கு எதிராக ஜி11 நாடுகள் அனைத் தும் ஒரே குரலில் பேசவேண்டும். தீவிரவாதத்தை அடக்கும் விடயத்தில் நாடுகள் ஒன்றுக்கொன்று துணையாக இருக்கவேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ் வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜி11 நாடுகள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜோர் தான் சென்றுள்ள ஜனாதிபதி அங்கு உரையாற்றுகையி லேயே இந்த வேண்டுகோளை விடுத்தார். சில வளர்ந்த நாடுகள் பயங்கரவாதிகள் விடயத்தில் வேறுபாடு காட்டுகின்றன. பயங்கர (06 ஆம் பக்கம் பார்க்க)வாதிகளின் முன்னணி அமைப்புக்கள் சிலவற்றை தமது நாடுகளில் இயங்குவ தற்கு அவை அனுமதித்துள்ளன என்றும் அவர் குற்றஞ் சாட்டினார். ""உலக பயங்கரவாதத்திற்கு எதிராக ஏற்கனவே எங் களால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வளர்ந்த நாடுகளின் கவனத்தை இங்கு ஈர்க்க விரும்புகின்றேன். அம்மான், இஸ்லாமாபாத், லண்டன் அல்லது கொழும்பு என எங்கு தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றாலும் அவை கட்டாயம் கண்டிக்கப்பட வேண்டியவை. பயங் கரவாதம் எங்கிருந்தாலும் பயங்கரவாதம்தான்'' என்றார் ஜனாதிபதி.""துரதிர்க்ஷ்டவசமாக சில வளர்ந்த நாடுகள் குறிப்பிட்ட சில பயங்கரவாத அமைப்புக்களை குறைந்த ஆபத்தானவையாகக் கருதுகின்றன. இத்தகைய அமைப்புக்கள் கிளர்ச்சிவாதிகளாகவோ சுதந்திரத்திற்காகச் சண்டையிடு பவர்களாகவோ நோக்கப்படுகின்றனர். ஏனெனில் அவ ர்கள் குறித்த நாடுகளில் எந்த வன்முறைச் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதில்லை என்பதனால். சில நாடுகள் ஜனநாயகத்தின் பேரால் பயங்கரவாத அமைப்புக்கள் தமது முன்னணி அலுவலகங்களை இயக்குவதற்கும் அமைப்புக்களை நடத்துவதற்கும் தொண்டு அடிப்படையிலான செயற்பாடுகளுக்கும் தத்தம் நாடுகளில் அனுமதி அளித்துள்ளன. இதன் மூலம் அவர்கள் பயங்கரவாதத்தில் வேறுபாடுகளைக் காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.'' என மேலும் கூறினார் ஜனாதிபதி.

நிலையான தீர்வுக்கு வலுச் சமநிலையான அணுகுமுறை அவசியம் விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி குறைந்தளவு தீர்வைத் திணிக்க நினைப்பது மடமை என்கிறார் தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி,மே 21

இனப்பிரச்சினைக்கு நீடித்து நிலைக்கத்தக்க தீர்வொன்றைக் காண்பதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமானதாக அமைய வேண்டுமானால் தமிழீழ விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் சமவலு நிலையிலும் சம அந்தஸ் துடனும் இருக்க வேண்டியது மிகப் பிரதானமானதாகும்.விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி, குறைந்த பட்ச தீர்வு ஒன்றை திணிக்கலாம் என நினைப்பது பெரும் மடமையாகும்; அது ஏமாற்றத்தையே தரும்.இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன்."தமிழ் நெற்' இணையத் தளத்திற்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.அவரது செவ்வியின் முக்கிய பகுதிகள் வருமாறு:இனப் பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ் மக் களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங் களை எல்லாம், அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் முறித்துக்கொண் டன.அவற்றின் விளைவாகவும், இனவாதத் தூண்டுதலுடன் தமிழர்கள் இனப் படு கொலை செய்யப்பட்டதுமே தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை நாடுவதற்கு வழி எடுத்துக் கொடுத்தன.தமிழர்களின் தற்காப்புக்காகத் தொடங் கப்பட்ட ஆயுதப் போராட்டம், அவர்களை இராணுவ ரீதியாகத் தோற்கடித்து அவர் களைப் பேச்சு வார்த்தைக்கு கொண்டுவர முடியும் என்ற சிங்களவர்களின் நம்பிக்கை யைச் சிதறடித்தது.ஆகவே தமிழர்கள் பலமாக இருந்தால் மட்டுமே சிங்களத் தலைவர்கள் பேச்சு வார்த்தைக்கு வரும் சந்தர்ப்பம் உருவாகும் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. ஆகப் பிந்தி நடைபெற்ற பேச்சுக்களும் அத்தகைய சூழ்நிலையிலேயே நடைபெற்றன.இலங்கை அரசாங்கத்தின் பிந்திய தந் திரம் என்னவெனில், தமிழர்களை பலவீன மாக்கி, அவர்களுக்கு எதிரான இன அழிப்பை நடத்துவதற்கு சர்வதேச ஆதரவைப் பெறு வதாகும்.தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும், சூழ் நிலை யிலும் தாம் இராணுவ ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ பலவீனமுற்றிருக் கும் போது பேச்சுவார்த்தை மேசைக்குச் செல்லமாட்டார்கள்.அனைத்துலக நாடுகள் விடுதலைப் புலி கள் மீது நியாயமற்ற தடைகளை விதித்து அந்தந்த நாடுகளில் தமிழர்களின் அரசியற் செயற்பாடுகளை கட்டுப்படுத்தியமை ஸ்ரீ லங்கா அரசு தனக்குச் சாதகமாக பயன் படுத்தி இராணுவத் தீர்வை நோக்கிய தமது கடுமையான போக்கை முன்னெடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. முப்பது வருடங்களுக்கு முன்னரே தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட தீர்வு முயற் சிகளை தற்போது வெளியிடுவதனால் எவ் வித பயனும் கிடைக்கப்போவதில்லை.தமிழரின் உண்மையான அபிலாசை களை சிங்கள தேசம் உண்மையாக உணரும் போதே சரியான தீர்வை அவர்களால் முன் வைக்க முடியும்.சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறியவாறு தற்போது முன்னெடுத்துவரும் இராணுவ நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்வதைப் போலான அனைத்துலக நாடுகள் சிலவற் றின் அணுகுமுறை, சிங்கள தேசம் உண்மை யான தீர்வை நோக்கி நகர்வதற்கு ஒரு போதும் உதவமாட்டாது.கடந்த ஐந்தாண்டு காலப் பகுதியில் சமா தான முயற்சியில் ஈடுபட்டிருந்த போதும் ஸ்ரீலங்கா அரசு தமிழர்களுக்கு நியாயமான தீர்வு எதனையும் முன்வைக்க வில்லை என் பதனை அனைத்துலக சமூகத்தினர் யதார்த்த மாக உணர்ந்திருப்பார்கள். ஆனால் சர்வதேச நாடுகள் சிலவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய் யப்பட்டு அரசியல் வேலைகளுக்கான கட் டுப்பாடுகளை தமது இராணுவத் தீர்வுக் குக் கிடைத்த அங்கீகாரமாக ஸ்ரீலங்கா அர சாங்கம் கருதுகிறது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமானால் முதலில் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புப் போர் நிறுத்தப்படவேண்டும். இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தும் நீதிக்குப் புறம்பான கொலைகள், காணாமற்போகச் செய்தல் ஆகியன உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளும், பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட வேண்டும்தமிழர் பிரதேசங்களை இராணுவ மயமாக்கலினால் உண்டாக்கப்படும் மனிதப் பேரவலங்களுக்கு முடிவு கட்டப்பட வேண் டும். போர் நிறுத்தப்பட வேண்டும். சமாதான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும். சர்வதேச சமூகத்தின் உதவியுடன், இரு தரப்புகளும் இணைந்து உருவாக்கிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழு அளவில் செயற்படுத்துவதே நிறைவேற்றுவதே சமா தானத்தை எய்துவதற்கான மிகப் பொருத்தமான மார்க்கம் என்பதே எனது கருத்தாகும் என்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன். பாலமோட்டையை நோக்கி நேற்று தொடர் ஷெல் வீச்சு மாங்குளம், மல்லாவிக்கு மக்கள் இடம்பெயர்வு வவுனியா பாலமோட்டைப் பகுதியை நோக்கி நேற் றுப் பிற்பகலில் இருந்து தொடர்ச்சியான ஷெல் தாக்கு தல் இரவுவரை நடத்தப்பட்டது. அதனால் அப்பிரதேச மக்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான பாலமோட்டைப் பகுதியை நோக்கி தொடர் ஷெல் தாக்கு தல்கள் நேற்று மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக அப்பிரதேச மக்கள் இடம்பெயர்ந்து மாங்குளம், கனகராயன்குளம், மல்லாவி ஆகிய பகுதியை நோக்கிச் செல்வதாகப் பிந்திக் கிடைத்த செய்திகள் தெரி வித்தன. மன்னார் மாவட்டத்தில் மடு பிரதேசத்திற்கு கிழக்கிலும் வவுனியா மாவட்டம் ஓமந்தைக்கு மேற்கிலும் உள்ள இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் இரா ணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக் கும் இடையில் மோதல்கள் இடம்பெற் றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் விடுதலைப் புலி களின் பிரதேசத்தை நோக்கி தொடர்ச்சி யாக ஷெல் தாக்குதல்களை நடத்தி வருவ தாகவும் குறிப்பாக பாலமோட்டை, கோவில் குஞ்சுக்குளம் உட்பட்ட பிரதேசங் களில் ஷெல்கள் வீழ்ந்து வெடிப்பதாக வும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின் றன. இதேவேளைமன்னார் மாவட்டம் மடு பிரதேசத் திற்கு கிழக்கே இராணுவ முன்னரங்கப் பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடை யில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மோதல் ஒன்றில் 2 விடுதலைப் புலிகளும்இரா ணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட் டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகத் தக வல் மையம் தெரிவித்துள்ளது. எனி னும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப் பில் இருந்து தகவல்கள் எதும் வெளியாக வில்லை.

No comments: