Wednesday, 9 May 2007

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்

மன்னார் குறிசுட்டகுளம் பகுதியில் இராணுவம் முன்நகர்வு முயற்சி
எதிர்ச்சமரில் 2 போராளிகள் சாவு


மன்னார் குறிசுட்டகுளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் நேக்கி நேற்று பிற்பகல் 2மணியளவில் படையினர் முன்நகர்வு முயற்சியை மேற்கொண்டனர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றனர்.
முறியடிப்புத் தாக்குதலில் போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். கொல்லப்பட்ட படைத்தரப்பபைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தையும் ஏகே. எல்.எம்.ஜி. துப்பாக்கி 1, ரி56 2 ரக துப்பாக்கிகள் 2, 40 மில்லிமீற்றர் குண்டு செலுத்தி 1 ஆகியன உட்பட படையினரின் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றினர் என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பில் வான் தாக்குதல் முல்லைத்தீவு, மே 9

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் விமா னப்படையின் விமானங்கள் மக்கள் குடி யிருப்புக்கள் மீது குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
புதுக்குடியிருப்பு கர்ணன் குடியிருப் புப் பகுதி மீது நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இரு மிக்27 ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத் தின.
இதில் ஏழு பிள்ளைகளின் தாயாரான கர்ணன் குடியிருப்பைச் சேர்ந்த மாரிமுத்து கனகம்மா என்பவர் காயமடைந்துள்ளார்.
தாக்குதலில் குடியிருப்புக்கள் உட்பட பயன்தரு மரங்கள் சேதமடைந்துள்ளன.

அமெரிக்க இராஜாங்க அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்
நேற்றிரவு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு

கொழும்பு, மே 9

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று கொழும்பு வந்து சேர்ந்த மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச் சர் றிச்சர்ட் பௌச்சர் இன்று யாழ்ப்பாணம் வருகின்றார்.
சமய மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும், அரச உயர் அதிகாரிகளையும் அவர் சந்தித்து, குடாநாட்டின் நிலைமை குறித்து கலந்துரையாடுவார் என்று தெரியவந்துள்ளது.
அவர் நேற்றிரவு வெளிவிவகார அமைச்சர் ரோகித போகெல்லாகமவைச் சந்தித்து சமாதான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை குறித்துக் கலந்துரையாடினார். நாளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்கும் அவர் அன்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்துவார்.
Source: Yaal Uthayan

No comments: