Wednesday, 9 May 2007

சமரச வழியில் ஈழப்போரைச் சிதைக்க அமெரிக்கா பகீரதப் பிரயத்தனம்-ENB

* அமெரிக்கத் தரப்பிலிருந்து அரசுக்கு வருகின்ற எதிர்பாராத அழுத்தங்கள்!
* பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை பதவி நீக்குமாறு ஐ.தே.க. நெருக்குதல்
தெற்கு வார ஏடுகளில் வெளியான அரசியல் விமர்சனங்களின் தொகுப்பு

நாட்டில் மனித உரிமை மீறல்கள் அத்துமீறிப் போய்க் கொண்டிருப்பது குறித்து சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது பல வகைகளிலும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருவது தெரிந்ததே. ஆனால், அரசாங்கமோ மக்கள் மத்தியில் தனக்குள்ள செல்வாக்குக் குறைந்து போய்விடாமல் இருக்க என்னசெய்யலாம் என்பதைப் பற்றியே அதிக அக்கறை கொண்டு செயற்படுவதாக மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகளும் செய்திகளும் எடுத்துக்காட்டுக்கின்றன.மாதத்தின் முதல் வாரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது கட்சிக் கூட்டமொன்றில் உரை நிகழ்த்தியபோது அரச நிர்வாகத்தின் மக்கள் நலன் சார்ந்த தன்மைகளை ஊடகங்கள் மூலம் பரப்புரை செய்யும்படி வற்புறுத்தியதை இங்கு கூறலாம்.இதேவேளை, அரசின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பதிலும், அது தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக வெளிப்படுத்துவதிலும் முழுமூச்சாக இறங்கியுள்ளது எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சி. பாதுகாப்புத்துறைச் செயலாளரான கோதபாய ராஜபக்ஷவை உடனடியாக நீக்கிவிட்டு அந்த இடத்தில் வேறு ஒருவரை நியமிக்கும் படியும் அக்கட்சி வற்புறுத்திவருகிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துவருவதன் ஓர் அம்சமாக அமெரிக்கத் தரப்பிலிருந்து குறிப்பிட்ட கிழமையில் மேலும் ஒரு நெருக்குதல் வந்துள்ளது. அதன் தாக்கத்தை எவரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அமெரிக்க செயற்பாடும் அதன் எதிர்ப்பும் கடந்த காலங்களில் பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுவதற்கு அரசாங்கத்திற்குத் தாராளமாகவே அமெரிக்கா உதவி வழங்கி வந்துள்ளது என்பதை மறந்துவிடமுடியாது. ஏன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள்மீது கைவைத்தும் உள்ளது. பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து அதனை நீக்கவும் மறுத்துவந்துள்ளது. இதற்கெல்லாம் மாற்றீடாக நாட்டின் மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தமிழ்மக்களின் சட்டபூர்வ அபிலாஷைகளை நிறைவேற்றிவைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அமெரிக்கா எதிர்பார்த்தது. அமெரிக்கா நினைத்த நிலைமை மாறியதுஉண்மையில் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்தில் இலங்கை இனப்பிரச்சினைக்கு உண்மையான ஒரு தீர்வு முயற்சி எடுக்கப்பட்டதாகக் கருதியதன் பின்னரே அமெரிக்கா இலங்கையில் பாதுகாப்புத்துறையின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவத் தொடங்கியிருந்தது. போர்நிறுத்த உடன்பாட்டின் கீழும் டோக்கியோ பிரகடனத்தின் கீழும் அமைதியைக் கொண்டுவருவதற்கான உண்மையான நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்கா கருதியிருந்தது. ஆனால், அந்த நிலைமை விக்கிரமசிங்க பதவி இழந்த கையோடு முற்று முழுதாக மாறிப்போய்விட்டது. மனித உரிமை மீறல்கள், கருத்துச் சுதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணம் என்பவற்றில் இந்த அரசாங்கம் காட்டிய பிரதிகூலமான அணுகுமுறையினால் இவை எல்லாமே தவிடுபொடியாகிவிட்டன. அமெரிக்காவும் ஏனைய நாடுகளும் காட்டிய நல்லெண்ணப் போக்கும் மாறத் தொடங்கிவிட்டது.செவிடன் காதில் ஊதிய சங்கு2006டிசம்பர் மாதம் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த 38உறுப்பினர்களும் செனட் சபையின் நான்கு முக்கிய உறுப்பினர்களும் இலங்கையில் மனித உரிமைகள் படுமோசமான நிலைமைக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருப்பது குறித்து நினைவுறுத்தி, போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பேச்சுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் அவசியத்தையும் அறிவுறுத்தியிருந்தார்கள். ஆனால், அது செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே போய்விட்டது. மேலும் ஏனைய எல்லா முனைகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ள அரசாங்கம், புலிகள் மீதான இராணுவ வெற்றிகள் மக்களை மகிழ்ச்சியில் வைத்திருக்கும் என்பது பொதுவான கருத்தாக இருந்துள்ளது. அதனால் அந்த முனையில் துரிதமாகவும் வேகத்துடனும் செயல்படுவதில் அரசு ஊக்கம் காட்டி வந்தது. கட்டுநாயக்க விமான தாக்குதலையடுத்து..ஆனால், கட்டுநாயக்க விமானத்தளம் மீது புலிகள் நடத்திய திடீர் தாக்குதல், அரசுத் தரப்பினரை அதிர்ச்சி யுடன் விழிப்படையச் செய்வதாக இருந்தது. இந்த நிகழ்வு பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது என வெளிப்படுத்தி சர்வதேச ஆதரவை அரசுக்கு ஆதரவாக பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சி பலனளிக்கவில்லை.!புலிகளின் விடயத்தில் முழுக்கவும் அக்கறையில்லாமல் இந்தியா இருந்தமைதான் இந்தத் தாக்குதலுக்கு வழி செய்தது என இந்தியா மீது பழிசுமத்த முயன்றமை மேலும் இலங்கையைத் தனிமைப்படுத்துவதாக அமைந்துவிட்டது.இந்த நிலையில் அமெரிக்கத் தரப்பிலிருந்து வரும் அழுத்தங்களை மேலும் இறுக்குபவையாகவும் உள்ளன. மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கவனம் செலுத்தி இராணுவ முனைப்பைக் கைவிட்டு பேச்சுகளை ஆரம்பிக்கும் படி வற்புறுத்துவதாய் அவை உள்ளன. ஜனநாயகக் கட்சி காங்கிரஸ் உறுப்பினர் விடுத்த கண்டனம்இந்நாட்டில் ஆள்கள் காணாமல் போதல் அதிகரித்துள்ளமையைக் கண்டித்து கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் ரொம் லான்ரொஸ் கடுஞ்சொற்களில் விடுத்த அறிக்கை இதைத் துலாம்பரமாக வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.வெளிநாட்டு அலுவல்கள் குழுவின் தலைவரான லான்ரொஸ் பேச்சுகளை நோக்கிய திசையில் இலங்கை அரசாங்கத்தை நெருக்கித் தள்ளும்படியும் சர்வதேசத்துக்கு கோரிக்கை விடுத்தார். மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றன. சிறுவர் படை, நீதிக்குப் புறம்பான கொலைகள், ஆள்கடத்தல்கள் போன்றமை நாட்டின் சில பகுதிகளில் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன. உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது என்றவாறான செய்திகள் எம்மைக் கவலையில் ஆழ்த்துகின்றன. போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உண்மையாக மதிப்பளித்து மீண்டும் பேச்சு மேசைக்குத் திரும்பும் படி சகலரையும் வற்புறுத்துகிறேன். இந்த வன்செயல்களை இராணுவ நடவடிக்கையினால் முடிவுக்குக் கொண்டுவர முடியாது. ஏற்கனவே மோசமாகியுள்ள மனித உரிமைகளை இது விரிவு படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்."பிறீடம் ஹவுஸ்' விடுத்துள்ள அறிக்கைஇவரது அறிக்கைக்கு முன்னர் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளின் மத்தியில் செல்வாக்குப்பெற்ற "பிறீடம்ஹவுஸ்' (சுதந்திர இல்லம்) என்ற அதிகாரமிக்க அமைப்பு விடுத்திருந்த மிக மோசமான விளைவுகளை இலங்கை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவரான எவினோர் ரூஸ் வெல்டின் பாரியாரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு வாஷிங்டனில் அதிக செல்வாக்கைக் கொண்டதாகும். நிதி உதவிகளை நிறுத்துமாறு சிபார்சுஇலங்கைக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்திவிட வேண்டும் என்று இந்த அமைப்பு விடுத்துள்ள அறிவிப்பு பாரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மோதலில் ஈடுபட்டுள்ள தரப்புகளை சமமாகக் கண்டித்துள்ள இந்த அமைப்பு அரசாங்கத்தின் செயற்பாடுகள் மனித உரிமைகளை வெகுவாகப் பாதித்திருப்பதாகக் குறிப்பிட்டுக் கண்டித்துள்ளது. 2006ஆம் ஆண்டளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் மெதுவாக சிவில் யுத்தத்துக்குள் சென்றார்கள்; இதனால் இருதரப்புக்குமிடையிலான அமைதி ஒப்பந்தம் அர்த்தமற்றதாகப் போனது. ஆனால், அரசாங்கத்தின் எதிர் நடவடிக்கைகளோ அடிப்படை மனித உரிமைகளையே மீறுவதாக அமைந்துவிட்டன என்று மேலும் தெரிவிக்கின்றது.ரணில் கிளப்பியுள்ள புதிய சர்ச்சைநாட்டின் பாதுகாப்பு நிலை சீர்குலைந்து போயுள்ளமைக்கு பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபாய ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். இந்த மாதம் 10ஆம் திகதி ஐ.தே.கட்சி தலைமைப் பணிமனை சிறிகோதாவில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க போதபாய ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று மட்டுமல்ல பாதுகாப்பு அமைச்சில் நிலவும் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதற்கு வெளிநாட்டில் அரச தூதுவராகப் பணிபுரியும் ஜானக பெரேராவை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் யோசனை தெரிவித்தார்.சில கட்சிகளின் உறுப்பினர்கள் கடத்தப்படவில்லை என்பதைப் பகிரங்கமாகத் தெரிவித்து கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பாகத் தாம் அறிந்திருக்கிறார் என்பதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒப்புக்கொண்டிருக்கிறார். அதனால் அதற்கு அவர் சட்டபூர்வ பொறுப்பாளியாகிவிட்டார். அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு வேறு ஒருவர் அவ்விடத்தில் ஜானகபெரேரா போன்ற ஒருவர் அமர்த்தப்பட வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.இந்த விதமான புதிய அரசியல் மற்றும் சர்வதேச பிரதிபலிப்புகள் அரசாங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை.ஆள்கடத்தல்கள் பற்றி ராதா கிருஷ்ணன்அலரிமாளிகையில் ஜனாதிபதி தனது கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஏப்ரல் முதல் வாரத்தில் சந்தித்தபோது இந்த விடயங்கள் தலைதூக்கின.இந்த கூட்டத்தில் ஆள் கடத்தல்கள் தொடர்பாகப் பிரதிஅமைச்சர் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டு பிரச்சினை எழுப்பினார். இ.தொ.காவைச் சேர்ந்த ஆர்.யோகராஜன் அவரதுகூற்றை ஆதரித்தார். ஜனாதிபதிக்கு இது சங்கடமாகவே இருந்திருக்கும் பிரதி அமைச்சர் ராதா கிருஷ்ணன் பேசும்போது ஆள்கடத்தல்கள் தமிழ் வர்த்தகர்கள் மத்தியில் அச்சத்தைக் கிளப்பியுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் அதேசமயம் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் இது தொடர்பாக கடத்தப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதில் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிவித்தார்.கடத்தப்பட்டவர்களின் உறவினர்களைச் சந்தித்து அவர்களுக்கு சில உறுதிமொழிகளையாவது கொடுப்பீர்களா என்று ராதாகிருஷ்ணன் ஜனாதிபதியிடம் கேட்டார். இதற்கு ஒரு நேரத்தையும் ஒதுக்கினார். இந்த விவாதம் மேலும் நீடித்துச் செல்லாமல் தடுக்க விரும்பிய ஜனாதிபதி அந்த சந்திப்பிற்கு ஈ.பி.டி.பியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். ""டக்ளஸ் நீங்களும் வாருங்கள் அவர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க முடியும் என்று புன்னகையுடன் கூறினார். பின்னர் அவர் வருவதில் ஆட்சேபனை ஏதும் உண்டா என்று ராதாகிருஸ்ணனிடமும் கேட்டார். அவர் இல்லையென்று பதிலளித்தார்.
தொகுப்பு: நந்தன் யாழ் உதயன் 09/05/07

No comments: