Tuesday, 15 May 2007
இலங்கையில் தமிழன் பிக்குவானாலும் கொல்லப்படுவான்
தமிழரான புத்த பிக்கு நேற்றுதிருமலையில் சுட்டுக்கொலை! திருகோணமலை,மே 14திருகோணமலையில் வசித்து வந்த பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத நபர் கள் இவரைச் சுட்டுக் கொன்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்றும் கூறப்படுகின்றது.வண. சந்துண்கமுவ நந்தரட்ண தேரர் என்பவரே கொல்லப்பட்டவராவர். அவரது விகாரைக்குள் வைத்தே அவர் சுடப்பட்டுள் ளார் என்று அதிகாரிகள் தெரிவித் தனர். திருகோணமலை மாவட்டம் மொர வௌ செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிரா மத்தில் உள்ள ஸ்ரீபஸ்பதாராம விகாரை யின் விகாராதிபதியாகக் கடமையாற்றி வந்தார்.தமிழராக இருந்து பௌத்தத்தைப் பின் பற்றி பௌத்த தேரராக மாறியவர் இவர் என்று அறியப்படுகின்றது என ரொய்ட் டர் செய்தி நிறுவனம் தெரிவித்தது. இவ ரது கொலைக்கு எந்த ஓர் அமைப்பும் இது வரை உரிமை கோரவில்லை.2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் இவரை அழைத்து சுட்டுக்கொன்ற னர் என்று பொலிஸாரின் ஆரம்ப விசா ரணைகளில் தெரியவந்துள்ளது.இதற்கிடையே, வடக்கு, கிழக்கில் கடந்த சனிக்கிழமை தாம் நடத்திய தாக்குதலில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று இராணுவம் தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் யாழ்ப்பா ணத்திலும் புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று அது மேலும் தெரிவித் தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment