தாயகச் செய்திகள்
படுவான்கரை இராணுவ நடவடிக்கையின் போது 17 பொது மக்களை காணவில்லையென புகார்
[19 - May - 2007]
சிரேஷ்ட அத்தியட்சருக்கு தங்கேஸ்வரி கடிதம் மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கையின் போது 17 பொதுமக்கள் காணாமல் போயுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. க.தங்கேஸ்வரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் படுவான்கரையில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட விஷேட அதிரடிப் படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் பெரேராவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இது குறித்து முதலில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தங்கேஸ்வரி பின்னர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது;
கடந்த மார்ச் மாதம் படுவான்கரை பகுதியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையினால் படுவான்கரை பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு தற்போது அவர்கள் மட்டக்களப்பில் பல்வேறு முகாம்களிலும் தங்கியுள்ளனர்.
இந்தப் படை நடவடிக்கையில் 17 பேர் காணாமல் போயுள்ளனர்.
இவர்கள் எந்த அகதி முகாம்களிலும் இல்லை. எனவே இவர்களை தேடிக் கண்டுபிடித்து தர வேண்டும்.
இந்த இராணுவ நடவடிக்கை நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் மேற்படி கிராமங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஞானமுத்து செல்வராசா (40 வயது) புதுமண்டபத்தடி, கந்தப்போடி தவராசா (42 வயது) கன்னன்குடா, குமாரசாமி கேசவப்போடி (32 வயது) மண்டபத்தடி, பாலிப்போடி உசுமுண்டாப்போடி (80 வயது) பிள்ளையாரடி, தம்பிப்போடி விசுவலிங்கம் (55 வயது) குறிஞ்சாமுனை, கிருஷ்ணபிள்ளை நடராசா (45 வயது) புதுமண்டபத்தடி, சின்னப்பொடியன் கணபதிப்பிள்ளை (61 வயது) இலுப்படிச்சேனை, மாணிக்கப்போடி தம்பிப்பிள்ளை (65 வயது) படையாண்டவெளி, வேலாப்போடி கதிராமப்போடி (65 வயது) படையாண்டவெளி, கதிரமலை பரமநாதன் (60 வயது) படையாண்டவெளி, இராமன் சீனித்தம்பி (40 வயது) கன்னன்குடா, வேலாப்போடி மயில்வாகனம் (55 வயது) புதுமண்டபத்தடி, தெய்வநாயகம் இரத்தினசிங்கம் (35 வயது) பன்சேனை, தெய்வநாயகம் குணசிங்கம் (37 வயது) பன்சேனை, பாலிப்போடி பெரியபிள்ளை (85 வயது) பன்சேனை ஆகியோரே காணாமல் போயுள்ளனர்.
இக் கடிதத்தின் பிரதிகள் மனித உரிமை ஆணைக்குழுத் தலைவருக்கும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, மக்கள் கண்காணிப்புக் குழு அமைப்பாளர் மனோகணேசன் எம்.பி. ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை சோதனை நிலையம் இரண்டாவது நாளாக நேற்றும் பூட்டு
அவசர நோயாளரைக் கொண்டு செல்ல முடியாத அவலநிலை
கிளிநொச்சி, மே 19
ஏ9 பாதையில் ஓமந்தை சோதனை நிலையம் இரண்டாவது நாளாக நேற்றும் மூடப்பட்டிருந்தது. இதனால் அவசர நோயா ளார்கள் 46பேரை வவுனியா ஆஸ்பத்திரிக்கு மேலதிக சிகிச்சைக்குக் கொண்டு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.நேற்றுமுன்தினம் ஓமந்தை சோதனை நிலையப் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பரஸ்பர ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றதை அடுத்து பாதை மூடப்பட்டது.தமக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று செஞ்சிலுவைச் சர்வ தேசக் குழு தெரிவித்து, அங்கிருந்து வியாழனன்று வெளியேறிவிட்டது.நேற்று செஞ்சிலுவைச் சர்வதேச குழுவின் பிரசன்னம் ஓமந்தை மற்றும் உயிலங்குளம் சோதனை நிலையங்களில் இல்லாமையால், அந்தப் பாதைகள் ஊடான போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு அதிகாரிகள், படையினர் மற்றும் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடனும் நேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர்.பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குமாறு இருதரப்பையும் அவர்கள் கோரியுள்ளனர்.இது சம்பந்தமாக இதுவரை நடந்த பேச்சுகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று செஞ்சிலுவைக் குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இப்பாதை மூடப்பட்டதால், கிளிநொச்சி வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்கு செல்லமுடியாத நிலையில் 46 நோயா ளர்கள் உள்ளனர் என கிளிநொச்சி வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி என்.சதானந்தன் தெரிவித்துள்ளார்.இவர்களில் 12 பேர் சிறுவர்கள், 6 பேர் கர்ப்பிணிகள் மற்றும் 2நாள், 12நாள், 18 நாள் நிரம்பிய சிசுக்களும் அடங்குவர் என அவர் தெரிவித்துள்ளார்.அபாய நிலையில் உள்ள இந்த நோயாளர் களுக்கு உடன் சிகிச்சை அளிக்க வசதியாக நோயளர்களை வவுனியாவுக்கு அழைத்துச் செல்ல வழித்துணை வழங்குமாறு செஞ்சிலுவைச் சர்வதேச குழு, யுனிசெவ் அமைப்புகளைக் கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஊரடங்கு நேர மாற்றம் மறு அறிவித்தல் வரை
யாழ்ப்பாணம், மே 19
கடந்த வியாழக்கிழமை தொடக்கம் ஊரடங்கு நேரத்தில் கொண்டுவரப் பட்ட மாற்றம் மறுஅறிவித்தல் வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று யாழ். பொலிஸார் நேற்றுத் தெரி வித்தனர்.இரவில் 8 மணிக்கு அமுலுக்குக் கொண்டுவரப்படும் ஊரடங்கு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படும் என்று பொலிஸ் தரப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டது.
செய்தின் சாரம்:காலை வீணைகளின் சாம லீலைகளை மக்கள் காணக்கூடாது பாருங்கோ!-ஈழச்செய்திப்பலகை-
செய்தி: யாழ் உதயன்
மாணவர் கல்வியைத் தொடர இயல்பு நிலையைத் தோற்றுவிக்கவும் ஈ.பி.டி.பி. அரசிடம் வலியுறுத்து
கொழும்பு, மே 19
மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கான இயல்புச் சூழ்நிலை தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று நாம் அரசிடம் கோரிக்கை விடுக்கிறோம்.ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நேற்று விடுத்த அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:யாழ்ப்பாணத்தில் தொடர்கின்ற ஆள்கடத்தல்கள், கொலை கள் என்பவற்றை நாம் தொடர்ந்து கண்டித்து வந்துள் ளோம். அதிலும் மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதையும், மாணவர்கள் நால்வர் காணாமல் போயிருப்பதையும் அறிந்து நாம் எரிச் சலடைந்திருப்பதோடு, எமது மாணவச் செல்வங்களைத் தேடிக்கண்டுபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்க உரிய தேடுதல்களையும் விசாரணைகளையும் செய்ய மாணவர்களின் நியாயமான போராட்டங்களுக்கு எமது ஒத்துழைப்பு எப்போதும் உண்டு. ஆனால், ஒத்து ழைப்பு வழங்குவதாகக் கூறிக்கொண்டு தமிழ்க் கூட்ட மைப்பு மாணவர்களின் நியாயமான போராட்டத்தை, பஸ் எரிப்பு நடத்தி வன்முறைப் போராட்டமாக மாற் றியதோடு, பாடசாலைகளை மூடிவிடும்படியும் மாணவர் களை கல்வியை கைவிடும்படியும் கூறியுள்ளதோடு, அதை ஊக்குவிப்பதுமானது எமது சமூகத்துக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.எமது மாணவச் செல்வங்களைப் பாதுகாப்பதற்கு மாறாக அவர்களை பலிகொடுக்கவும் அவர்களின் கல்வியை சீர்குலைக்கவுமான புலிகளின் திட்டத்தை நிறைவேற் றும் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சமூக விரோத நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.எத்தனையோ நெருக்கடிக்களுக்கு முகம் கொடுத்த போதும் கல்வியை இழக்காத எங்கள் சமூகம் தற்போதைய சவால்களை எதிர்கொண்டு தமது கல்வியைத் தொடர வேண்டும். மாணவர்களின் பாதுகாப்புக்கும், கல்விக்கும் அச்சுறுத்தலாக எவர் இருந்தாலும் அதை நாம் கண்டிப் போம். அத்தகையவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவ தோடு, மாணவர்களுக்கு தமது கல்வியைத் தொடர்வதற் கான இயல்புச் சூழலையும் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றோம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தின் சாரம்:
"மாணவச்செல்வங்களைக்" காப்பாற்ற கிழம்பியிருக்கும் மானங்கெட்ட ஜென்மம்!
வெள்ளை வான் வேட்டைக்காரனுக்கு மாணவர் போராட்டம் வன்முறையாம்!!
"எக்காலமும் பிரிக்க முடியாத வடக்குக் கிழக்கு கொள்கை" என்னாய்ச்சு?
கோடரிக்காம்பே உனக்கு கொள்கை ஒரு கேடா?
-ஈழச்செய்திப்பலகை-
வவுனியாவில் வெள்ளை வான் அட்டகாசம்
3 பொது மக்கள் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை
[19 - May - 2007]
கூமாங்குளத்தில் சடலங்கள் கண்டுபிடிப்பு வவுனியா, காத்தார் சின்னக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு வெள்ளை வானொன்றில் வந்தோரால் கடத்திச் செல்லப்பட்ட மூன்று பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை இந்த மூவரதும் சடலங்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கூமாங்குளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
பூந்தோட்டத்திற்கு சமீபமாகவுள்ள காத்தார் சின்னக்குளம் பகுதிக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வெள்ளை வானில் சென்ற ஆயுதபாணிகள் சில வீடுகளுக்குச் சென்று மூவரைத் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.
இந்த மூவரும் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கடத்தல் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் ஐந்து கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால், வவுனியா நகருக்கருகில் கூமாங்குளம் வீதியில் நேற்றுக் காலை கண்டுபிடிக்கப்பட்டனர்.
மூவரதும் தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் காணப்பட்டன.
காத்தார் சின்னக்குளத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான சுப்பிரமணியம் சந்திரசேகரன் (28 வயது), சின்னத்துரை விக்கினேஸ்வரன் (24 வயது) மற்றும் இளைஞனான மன்மோகன் மோகனதாஸ் (24 வயது) ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.
இவர்கள் மூவரது சடலங்களும் நேற்றுக் காலை வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டு, மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் முன்னிலையில் மரண விசாரணை நடைபெற்றது.
இதன்போது, கொல்லப்பட்டவர்களது குடும்பத்தவர்களும் உறவினர்களும் கிராமவாசிகளும் திரண்டு வந்து நடந்த சம்பவம் பற்றி நீதிபதிக்குத் தெரிவித்தனர்.
இந்தப் படுகொலைகளால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.