அணு சக்தி ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்காவுடன் சமரசம் ஏற்படும் என்று இந்தியப் பிரதமர் நம்பிக்கை
இந்தியாவுக்கும்- அமெரிக்காவுக்கும் இடையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட அணு ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்து, அமெரிக்காவுடன் காணப்படும் முரண்பாடுகளை களையக் கூடியதாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கூறியுள்ளார்.
இந்த உடன்பாட்டை இறுதி செய்வதற்காக, இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் மும்முரமாக சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வதற்காக அமெரிக்காவின் தலைமை சமரசப் பேச்சுவார்த்தையாளர் இந்தியா செல்வதற்கான பயண ஒழுங்குகள் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று அமெரிக்கா கூறிய மறுதினம் இந்த கருத்து வந்துள்ளது.
இந்த உடன்படிக்கை கடந்த டிசம்பரில் அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு இரு தரப்பு விமர்சகர்களும், தமது தரப்பால் அளவுக்கு அதிகமாக விட்டுக்கொடுக்கப்பட்டுவிட்டதாகவும், ஆனால் மறுதரப்பால் பதிலுக்கு ஏதும் செய்யப்படவில்லை என்றும் கூறுகின்றனர்.
மூலம்: பி.பி.சி.தமிழ்
No comments:
Post a Comment