Tuesday, 15 May 2007

உயர்மட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இந்திய உயர்ஸ்தானிகர் புதுடில்லி விரைவு
வீரகேசரி நாளேடு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் மற்றும் தற்போதைய சூழ்நிலை குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் புதுடில்லி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இந்திய தலைவர்களுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் தொடர்ச்சியாகவே அலோக் பிரசாத்தின் டில்லிப்பயணம் அமைவதாக தெரிவிக்கப்படுகின்றது.இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
சுதந்திரக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய தலைவர்களுக்கு விளக்கிய லலித் வீரதுங்க ஜனாதிபதியின் செய்தியையும் வழங்கியுள்ளார்.
மேலும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் இந்திய தலைவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் சுதந்திரக்கட்சியின் தீர்வு யோசனைகள் குறித்து உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக இந்திய உயர்ஸ்தானிகர் டில்லி சென்றுள்ளார். றிச்சர்ட் பௌச்சரின் அண்மைய விஜயம், இலங்கை தொடர்பான பிரித்தானிய அரசாங்கத்தின் கரிசனை தொடர்பாகவும் இச்சந்திப்பின்போது ஆராயப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments: