இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட பிரித்தானியாவுக்கு அனுமதி வழங்கமாட்டோம்
வீரகேசரி நாளேடு
இலங்கையின் உள்விவகாரங்களில் பிரித்தானியா தலையிடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது. பிரித்தானியா இதுவரை அவ்வாறான ஒருவிடயம் தொடர்பாக எம்முடன் உத்தியோகபூர்வமான முறையில் கலந்துரையாடவில்லை. இருப்பினும் எமது நாட்டின் பிரச்சினையை எம்மால் தீர்த்துக்கொள்ளமுடியும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளருமான பாலிய கோஹன தெரிவித்தார்.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக அண்மையில் விவாதிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கை விவகாரம் தொடர்பாக அண்மையில் விவாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன் இலங்கை விவகாரம் தொடர்பாக ஆராய பிரித்தானியா விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இதுவரை எந்தவொரு விடயம் தொடர்பாகவும் பிரித்தானியா இராஜதந்திர ரீதியில்எம்முடன் கலந்துரையாடவில்லை.
நன்றி: வீரகேசரி நாளேடு
No comments:
Post a Comment