=====================================================
======================================================
சில தினங்களில் தொப்பிகல பகுதியை கைப்பற்றுவோம்
தொப்பிகல பிரதேசத்தை அரசாங்கம் இன்னும் சில தினங்களில் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். தற்போதைக்கு தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றிவிட்டன என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது :
தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றியுள்ளன. இன்னும் சில தினங்களில் நாங்கள் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். தொப்பிகல பகுதியில் உள்ள ஏழுக்கும் மேற்பட்ட புலிகளின் முகாம்களை நாங்கள் அழித்துவிட்டோம்.
தொப்பிகல பகுதியில் அதிகமானளவில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றோம். அப்பகுதியிலிருந்து அதிகமான புலிகள் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் அதிகமான புலி உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர்.
இதேவேளை இதுவரை புலி உறுப்பினர்கள் 656 பேர் இராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். இந்த வாரம் மட்டும் 42 புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளனர்.
வன்னிப்பிரதேசத்திலும் நேற்று முன்தினம் இரண்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றன. இதில் புலி உறுப்பினர்கள் 11 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது புலிகள் வழிபாட்டு தலங்களை யுத்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திவருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை பருத்தித்துறை பகுதிக்கு புலிகள் 24 படகுகளில் வந்தனர். இதனை அவதானித்த கடற்படையினர் படகுகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது புலிகளின் 9 படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 40 க்கும் மேற்பட்ட புலிகள் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு இராணுவமும் விமானப்படையும் தமது ஒத்துழைப்பை வழங்கின.
கடதாசிகளை கடுமையாக பரிசோதித்த படையினர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு கொண்டு வருகின்ற "கோவைகள்' "கடதாசிகளுக்கு' விசேட அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டுமா? என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல கேள்விக்கான நேரம் முடிவடைந்ததன் பின்னர் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகின்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது: நான் பாராளுமன்றத்திற்கு இன்று (நேற்று) வருகை தருகின்ற போது கொண்டு வந்த "கோவைகள்' "கடதாசிகளை' கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதுவும் ஜயந்திபுரத்தில் பாராளுமன்றத்திற்குள் உள்நுழையும் வழியில் அமைக்கப்பட்டுள்ள விசேட பாதுகாப்பு கூண்டில் வைத்தே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அந்தப் பாதுகாப்புக் கூண்டில் வாகனமும் என்னுடன் வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர், செயலாளர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் வாகனத்தில் இருந்த "கோவைகள்' துணியில் செய்யப்பட்ட தொப்பிகள் கொண்டு போக முடியாது என்று எனது செயலாளரிடம் கோரியுள்ளனர்.
எனது வாகனத்தில் வெடிபொருட்களோ, ஆயுதங்களோ கொண்டு வரப்படவில்லை என்பதை கூறிக் கொள்வதுடன் கோவைகள், தொப்பிகள் கொண்டு வருவதற்கு விசேட அனுமதியை பெற வேண்டுமா? என்பதையும் கேட்கின்றேன்.
அத்துடன் பாரளுமன்றத்திற்கு வருகின்ற எம்.பி. களுக்கு எதிர்காலத்தில் இவ்வாறான அகௌரவம் ஏற்படுத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
மூதூர், சம்பூர் பிரதேசங்களை உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியமையை கண்டித்து சபையில் விவாதம்
மூதூர், சம்பூர் பிரதேசங்களில் மக்களை மீளக்குடியேற்றாமல் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் பாதுகாப்பு வலயத்தை நீக்கி மக்களைமீளக்குடியமர்த்துமாறுவேண்டுகோள் விடுத்தும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றை தமி ழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது.
கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் பிரேர ணையை சமர்ப்பித்து உரைநிகழ்த்தினார்.
இது தொடர்பான விவாதத்தில் அரச தரப்பு, எதிர்தரப்பு எம்.பி.க்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள். பிரேரணை சமர்ப்பித்து உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,
மூதூர், சம்பூர் பிரதேசங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய இடங்களாகும். அங்கு 19 பாடசாலைகள், 18 இந்து ஆலயங்கள், ஒரு மெதடிஸ் தேவாலயம், 88 சிறு விவசாய குளங்கள் உள்ளன. 2 வைத்தியசாலைகளும் உள்ளன. ஒன்று சம்பூர் வைத்தியசாலை மற்றையது பாட்டாளி புரம் வைத்தியசாலை. இப்பிரதேசங்களில் வாழ்கின்ற மக்கள் அநேகமாக விவசாய தொழிலும் மீன்பிடி தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். 2000 ஹெக்ரேயர் நிலப்பரப்பு கால்நடை வளர்ப்புக்குரிய மேய்ச்சல் நிலமாக உள்ளது. 28 கிராமங்கள் இந்த பிரதேசங்களில் உள்ளன.
இராணுவ நடவடிக்கைகளினால் 15 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்கின்றனர். இந்நிலையில் இந்த பிரதேசத்தை பொருளாதார வலயமாக பிரகடனப்படுத்தி உயர்பாதுகாப்பு வலயமõகவும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையானது இன சுத்திகரிப்பு என்றே நாங்கள் கருதுகின்றோம்.
தமிழ் மக்களின் சமூக கலாசார உரிமைகள் இவ்வாறான நடவடிக்கையின் மூலம் பறிக்கப்படுகின்றன. இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் குழப்பமான நிலைமை ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. ஆகவேதான் உடனடியாக அந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்து மக்களை மீளக்குடியமர்த்துங்கள். அதன் பின்னர் இந்த பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடற்படையினர் புலிகள் கடும் மோதல்
யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நேற்று முன்தினம் கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் கடற் படையினரின் டோரா படகு ஒன்று சேதமடைந்துள்ளதுடன் படையினர் சிலர் காயமடைந்துள்ளதாகவும் பலாலி இராணுவத்தள வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த மோதலில் தமது தரப்பில் கடற்புலிகள் இருவர் பலியானதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், கடற்புலிகள் 40 பேர் இம்மோதலில் கொல்லப்பட்டுள்ளதாக படை தரப்பினர் கூறினர்.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கட்டைக்காடு முதல் பருத்தித்துறை வரையான பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியிலிருந்து இரவு 10.30 மணிவரையான 5 மணிநேரம் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறையிலுள்ள கடற்படையினரின் நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தியவாறு முன்னேறிய கடற்புலிகளை வழிமறித்து கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் வெடித்ததாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
இம் மோதலில் கடற்படையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதன்போது கடற்புலிகள் 40 பேர் கொல்லப்பட்டதுடன் ஒன்பது படகுகள் சேதமாக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.
தமது படகுகளுக்கு சேதம் ஏற்படவில்லை என்று கூறியுள்ள விடுதலைப்புலிகள் மோதலில் கடற்புலிகள் இருவர் பலியானதாக தெரிவித்துள்ளனர்.
மோதல் சம்பவத்தையடுத்து பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் பாரிய தேடுதலில் ஈடுபட்டனர். அங்கு கண்காணிப்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
உதயனில் இருந்து:
Posted on : Wed Jun 20 6:26:24 EEST 2007
சம்பூர், மூதூர் கிழக்குப் பகுதிகளில் 12,000 தமிழ்க்குடும்பங்களின் வளமான பூர்வீக நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கபளீகரம்!
தரிசுக் காணிகளில் குடியேற்ற ஏற்பாடு!
திருகோணமலை மாவட்டத்தில், சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பன்னிரண்டாயிரம் தமிழ்க் குடும்பங்களின் வளம் நிறைந்த 5,547 சதுர மீற்றர் நிலம் அரசாங்கத்தினால் ஜனாதிபதியினால் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தப்பட்டுக் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.இவ்வருட முற்பகுதியில் சம்பூர், மூதூர் பகுதிகளில் நடைபெற்ற போரினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் இப்போது திருகோணமலை நகரப் பகுதியில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர்.இவர்களை திருமலை மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்களில் குடியேற்றத் திட்டமிடப் பட்டிருப்பதாக அறியப்படுகிறது. சம்பூர், மூதூர் கிழக்குப் பகுதிகளை அதி உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப் படுத்தும் விசேட வர்த்தமானியை மே மாதம் முப்பதாம் திகதி ஜனாதிபதி வெளியிட்டி ருந்தார்.அந்த வர்த்தமானியில் உள்ளடக்கப் பட்ட விவரங்கள் ஒரு சில நாள்களுக்கு முன் னரே வெளியே வந்தன.உயர் பாதுகாப்பு வலயம் சம்பந்தப் பட்ட சகல செயற்பாடுகளையும் நடை முறைப்படுத்தும் தகுதி வாய்ந்த அதிகாரி யாக, கிழக்குப் பிராந்திய இராணுவத் தள பதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப் பிட்டிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட் டுள்ளார்.வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் சம்பூர் மற்றும் மூதூர் கிழக்குப் பகுதியை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாணத்தில் மேற்குக் கரை யோரப் பிரதேசங்களை பவுல் பொயின்ற், கல்லடிச்சேனை, உப்பூறல் அடங் கிய கடற்கரைப் பிரதேசங்களும் தெற்கில் செல்வாநகர், தோப்பூர், பச்சநூர் பிரதேசங் களும் மேற்கில் கல்லடிச் சேனை ஆற்றின் மேற்குக் கரை, பச்சிலைக் கல்லடிச்சேனை தெற்கு, மூதூர் கல்லடிச் சேனை வடக்கு ஆகியப் பிரதேசங்களும் வடக்கில் கொட்டியாரக்குடா, தெற்குக் கரை, கல்லடிச்சேனை ஆறு, சம்பூர் பவுல் பொயின்ற் ஆகிய பிரதேசங்களை உள்ள டக்கியதாக இந்த அதியுயர் பாதுகாப்பு வல யம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் தெரிவிக்கையில் சம்பூர், மூதூர் கிழக்கு ஆகிய பிரதேசங் களை உள்ளடக்கிய 6 கிராம சேவகர் பிரிவு களிலும் உள்ள ஏறத்தாள 12 ஆயிரத்திற் கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்களின் பூர்வீக நிலங்கள் அரசின் இந்த நடவடிக் கையால் அபகரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,547 சதுர மீற்றர் தமிழர் நிலம் அரசினால் கபளிகரம் செய்யப்பட்டுவிட்டது.கோயிலும் அழிக்கப்படும்இதனால் பத்து பாடசாலைகள், சம்பூரில் உள்ள பத்திரகாளி அம்மன் ஆலயம் 600 இற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் என்பன அழிக்கப்படவுள்ளன.வளமான விளைநிலங்களையும் விவசா யத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதான தொழிலாகக் கொண்ட இப்பிர தேச மக்களை பாட்டாளிபுரம், நல்லூர் போன்ற தரிசு நிலப் பிரதேசங்களில் குடியமர்த்து வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற் கொண்டு வருகின்றது.பாரம்பரிய நிலங்களையும், வளமான விளை நிலங்களையும் இழக்கவுள்ள நிலை யில் எதிர்காலத்தில் தொழில் வாய்ப்பை யும் இழக்கும் நிலைக்கு இப்பிரதேசத் தமிழ் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.அண்மைக்கால போர் நடவடிக்கை களால் வாழ்விடங்களையும் உடைமைகளை யும் இழந்துநிற்கும் இப்பிரதேச மக்கள் அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத் தால் மிகவும் மோசமான நிலைக்குத் தள் ளப்பட்டுள்ளனர் என்றார்.இதேவேளை இப்பிரதேசத்தை அரசு பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் இப்பிரதேசங்களில் வாழந்து வந்த மக்கள் வேறு இடங்களில் குடியேற்றப்படவுள்ளதாகவும் அரசு வெளி யிட்ட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட் டுள்ளது.மூதூர் கிழக்கை அரசு அதியுயர் பாது காப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ள மையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன் மையாகக் கண்டித்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விவ காரத்தை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு இப்பிரகடனத்தை எதிர்த்தும் வழக்கொன்றைத் தாக்கல் செய்வதற்கும் தீர்மானித்துள்ளது.
இலங்கை கேட்கும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயார்.
இராணுவத் தளபதிகள் மாநாட்டில் அந்தோனி
இலங்கை அரசு கேட் கும் அனைத்து இராணுவ உதவி களையும், தளபாடங்களை யும் வழங்க இந்திய அரசு தயாராகவே உள்ளது என அறிவித்திருக்கின்றார் அந் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. அந்தோனி.இராணுவத் தளபதிகளின் ஒருங்கி ணைப்பு மாநாடு புதுடில்லியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனைத் தொடக்கிவைத்து உரைநிகழ்த்தியபோதே அந்தோனி மேற்கண்ட தகவலையும் கசிய விட்டார் என டில்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபடும் நோக்கில் "ராடர்' உள்ளிட்ட கருவி களை எம்மிடம் இலங்கை கேட்டிருக்கின் றது. அதற்கமைய அவர்களுக்குத் தேவை யான எல்லாவகை உதவிகளையும் நாம் செய் வோம். அதில் எந்தச் சிக்கலும் இல்லை எனினும் அங்கு (இலங்கையில்) நிலவும் இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சரிப் படாது. அரசியல் தீர்வே ஒரே வழி என் றும் அந்தோனி தமது உரையில் தெரிவித் தார்.
புலிகளைப் பலவீனப்படுத்திப் பேச்சு மேசைக்கு இழுத்து வருவதையே எமது தரப்பு விரும்புகிறது
நிலங்களைக் கைப்பற்றுவது நோக்கமல்ல என்கிறார் கோத்தபாய
நிலங்களைக் கைப் பற்றுவதில் எமக்கோ இராணுவத்துக்கோ விருப் பம் இல்லை. விடுத லைப் புலிகளைப் பல வீனப்படுத்தி அவர்களைப் பேச்சு மேசைக்கு இழுத்து வருவதையே சகலரும் விரும்புகின்றனர்.பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோத்த பாய ராஜபக்ஷ இப்படிக் கூறியுள்ளார்.கொழும்பில் இருந்து வெளிவரும் "ஐலண்ட்' வார இதழுக்கு அளித்த பேட்டி யில் அவர் இப்படிக் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:வன்னியை கைப்பற்றுவதில் எமக்கு நாட்டமில்லை. அது நடைமுறைச் சாத்திய மும் இல்லை. விடுதலைப் புலிகளின் பலத்தை, போராளிகளை, அவர்களின் சொத்துக்களை, தளங்களைப் பலவீனப்படுத்த வேண்டும். அதனைத்தான் வன்னியில் செய்கிறோம்.வன்னியில் நடந்த சமரில் எமக்கு அழிவு எதுவும் உண்டாகவில்லை. நாம் வெற்றியீட் டியுள்ளோம். வன்னியில் மோட்டார் குண்டு ஒன்று தவறுதலாக வெடித்ததாலேயே ஆயுதக் களஞ்சியம் எதிர்பாராத விதமாக வெடித் துச் சிதறியது.வளையாத மனிதர் பிரபாகரனின் மனநிலையைப் புரிந்து கொள்ளவேண்டும். அவர் வளையாத மனிதர். தனியரசு என்பதைத் தவிர வேறு எந்த ஒரு வார்த்தையையுமே ஒப்புக் கொள் வதாக அவர் சொன்னதே இல்லை. நமது தலைவர்களை அவர் தவறாக புரிய வைத் திருக்கிறார். அதே நேரத்தில் தாம் செய்யும் சவாரிக்காக வெளிநாட்டுத் தலைவர்களை அவர் கைக்குள் போட்டுள்ளார் என்றார் அவர்.
கிழக்கு மாகாண -(உயர் பாதுகாப்பு வலய)- தமிழர் தேசத்தை நிலப்பறி செய்து அமெரிக்காவுக்கு காவு கொடுக்கும்- திட்டத்துக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பதில்.
''இந்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் குழப்பமான நிலைமை ஒன்று ஏற்பட்டிருக்கின்றது. ஆகவேதான் உடனடியாக அந்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்து மக்களை மீளக்குடியமர்த்துங்கள். அதன் பின்னர் இந்த பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.''

No comments:
Post a Comment