தமிழ் மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தும் உகந்த சூழ்நிலை இப்போது இல்லை.
தேர்தல் ஆணையாளருக்கு அரச அதிபர்கள் எடுத்துரைப்பு
தமிழ் மாவட்டங்களில், கடந்த வருடத்தில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக் கான தேர்தல்களை, இப்போது நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை இல்லை.தேர்தல்களை உரிய விதிமுறைப்படி செவ்வனே நடத்தும் சாத்தியம் அறவே இல்லை. மக் களின் வாழ்க்கை முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பாதவரை தமிழ் மாவட்டங்களில் எந்தத் தேர்தலையும் நடத்துவது சாத்தியமில்லை.இவ்வாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்காவின் பணிப்பின் பேரில் அவரை நேற்றுக் கொழும்பில் சந்தித்த ஆறு தமிழ் மாவட்டங்களின் அரச அதிபர்கள் எடுத்துக் கூறியதாக அறியவந்தது.தமிழ் மாவட்டங்களில் மக்களின் சுதந் திரமான நடமாட்டம் தடைப்பட்டுள்ளமை, அவர்களின் இயல்பு வாழ்க்கை முழுமை யான நிலைக்குத் திரும்பாமை, அரசியல் நடவடிக்கைகளை வழமைபோல் மேற் கொள்ள முடியாத நிலைமை, இராணுவ நடவடிக்கைகளால் மக்களின் இடம்பெயர் வுகளும் அவர்கள் நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் அசாதாரண சூழ்நிலை ஆகிய காரணங்களால் உள்ளூராட்சி சபைத் தேர் தலை இப்போதைக்கு நடத்துவது உகந்ததல்ல; அசாத்தியமானது என்று அரச அதிபர்கள் தேர்தல் ஆணையாளரிடம் எடுத்துக் கூறிய தாக அறியவந்தது.வன்னிப் பிரதேசத்துக்குரிய உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு முகமாலை யில் கொத்தணி முறையில் வாக்குச் சாவடி கள் நிறுவப்பட வேண்டும். இப்போதைய போர்ச் சூழ்நிலையில் அது நூற்றுக்கு நூறு சாத்தியமற்றது என்று கிளிநொச்சி, முல் லைத்தீவு அரசாங்க அதிபர்கள் சுட்டிக் காட்டியதாகவும் அறியவந்தது. தேர்தல் ஆணையாளருடனான நேற் றைய சந்திப்பில் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர் கே.கணேஷ், கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா.வேதநாயகம், முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகு மார், மன்னார் அரசாங்க அதிபர் எஸ். விஸ்வலிங்கம், வவுனியா அரசாங்க அதி பர் எஸ்.சண்முகம், மட்டக்களப்பு பதில் அரசாங்க அதிபர் எஸ்.மகேசன் ஆகியோர் பங்குபற்றினர். திருகோணமலை, அம்பாறை மாவட் டங்களில் கடந்த வருடத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் மார்ச் மாதம் 30ஆம் திகதி நடைபெற்று முடிந்தன. அத னால் அந்த இரண்டு மாவட்டங்களின் அர சாங்க அதிபர்களும் நேற்றைய சந்திப்புக்கு அழைக்கப்படவில்லை. நாடளாவிய ரீதி யில் உள்ளூராட்சி சபையின் தேர்தல் 2006 மார்ச் மாதம் 30ஆம் திகதி நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.மேலே குறிப்பிட்ட ஆறு மாவட்டங் களிலும் மொத்தம் 42 உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தல்கள் கடந்த வருடம் நடத் தப்படாமல் இம்மாதம் 30ஆம் திகதி (30.06.2007) வரை தேர்தல் ஆணையாள ரால் ஒத்திவைக்கப்பட்டது.யாழ். மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 03 உள்ளூராட்சி சபைகளும், முல்லைத் தீவு மாவட்டத்தில் 03 உள்ளூராட்சி சபை களும், வவுனியா மாவட்டத்தில் 05 உள்ளூ ராட்சி சபைகளும், மட்டக்களப்பு மாவட் டத்தில் 09 உள்ளூராட்சி சபைகளும் இதில் அடங்குகின்றன.முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்புப் பிரதேச சபைக்கான உறுப் பினர்கள் போட்டியின்றி தேர்தல் இல் லாமலே தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.அரச அதிபர்கள் அறுவரும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் உள்ளூ ராட்சி சபைகளின் தேர்தல் மீண்டும் ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.
உலக உணவுத் திட்ட நிவாரண விநியோகம் இன்று ஆரம்பம்
உலக உணவுத் திட்டத்தின் கீழ் நலிந்த பிரிவினருக்கான உணவுப் பொருள் நிவாரண விநியோகத்தை இன்று ஆரம் பிக்குமாறு செயலக திட்டப் பணிப் பாளர் ம.பிரதீபன் சகல ப.நோ.கூ.சங்கங் களையும் கேட்டுள்ளார்.11.08.2006 இற்குப் பின் இடம் பெயர்ந்தவர்கள், கடற் றொழிலாளர் கள், நலிவுற்றோர் ஆகிய தரத்தில் உள்ள குடும்பங்களுக்கே இந்த நிவாரணம் வழங்கப்படவிருக்கின்றது.மேற் கூறப்பட்ட தரப்பினருக்கான ஏப்ரல் மாதத்தின் 2ஆம் 3ஆம் வார விநியோகத்தை இன்று ஆரம்பித்து எதிர்வரும் 30ஆம் திகதிக்குமுன் விநி யோகத்தைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.இன்று ஆரம்பமாகும் விநியோகத் தில் கோதுமை மா, சீனி ஆகிய பொருள் கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் பருப்பு, மரக்கறி எண்ணெய் ஆகியன பின்னர் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.ப.நோ.கூ.சங்கங்கள் செயலகத்தின் உலக உணவுத் திட்ட மாவட்டக் கண் காணிப்புப் பிரிவில் வழங்கற் கட்டளை களைப் பெற்று விநியோகத்தை ஆரம் பிக்க வேண்டும் என்று கேட்கப்பட் டுள்ளனர்.
நீதித்துறை ஆணைக்குழு சுயேச்சையாக இயங்க முடியாது
சபாநாயகர் அறிவிப்பு
நீதித்துறை சேவைகள் ஆணைக் குழுவினால் சுயேச்சையாக செயல்பட முடியாதென்று சபாநாயகர் டபிள்யு ஜே.எம். லொக்கு பண்டார கடந்த செவ் வாயன்று நாடாளுமன்றில் தீர்ப்பளித் தார்.நீதித்துறை சேவைகள் ஆணைக் குழுவை நாடாளுமன்றமே நியமிக்கின் றது. அதற்குத் தேவையான நிதி ஆதா ரங்களையும் அதுவே வழங்குகின்றது. எனவே நாடாளுமன்றத்துக்கு பதில் கூறாத வகையில் அதனால் சுயேச்சை யாக செயற்பட முடியாது என்று சபா நாயகர் கூறினார்.மேற்படி ஆணைக்குழுவை நாடாளு மன்றம் கேள்வி கேட்க முடியாது என்ற அடிப்படையில் சில தகவல்களை அக் குழு வழங்க மறுத்துவிட்டது என்று அர சாங்கத்தின் பிரதம கொறடாவான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே சபை யில் தெரிவித்ததையடுத்து மேற்படி தீர்ப் பினை சபாநாயகர் வழங்கினார்.ஐ.தே.கட்சி உறுப்பினர் ரஞ்சித் அலு விகாரை கொழும்பு மாவட்ட நீதிமன்ற பதிவேடு சம்பந்தமாக எழுப்பிய வாய் மூலமான கேள்வியொன்று தொடர் பாக சில தகவல்கள் தேவைபட்டதாக வும் ஆனால் ஆணைக்குழு அதனை வழங்க மறுத்துவிட்டதாகவும் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.இந்தவிடயம் தொடர்பாக தீர்ப் பொன்றை வழங்குமாறு அவர் வற்புறுத் தினார். இந்த விடயத்தை கட்சித் தலை வர்கள் கூட்டத்திலும் எழுப்புவதாக சபாநாயகர் தெரிவித்தார்.
தினக்குரல்
`தமிழ் நெற்'றை முடக்கியதை அரசாங்கம் முழுமையாக மறுப்பு
[22 - June - 2007] எம்.ஏ.எம்.நிலாம்
`தமிழ் நெற்' இணையத்தளத்தை அரசு முடக்கியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டை முற்றாக நிராகரித்திருக்கும் அமைச்சரவைப் பேச்சாளரான தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அரசாங்கத்துக்கு இது விடயத்தில் எந்த விதமான தொடர்பும் கிடையாதெனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது `தமிழ் நெற்' விவகாரம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இவ்வாறு கூறினார்.
`தமிழ் நெற்' இணையத்தளத்தை முடக்குவதற்கான எந்த விதத் தேவையும் அரசுக்குக் கிடையாது. அந்த விடயத்தில் அரசு தலையிடவும் விரும்பவில்லை என செய்தியாளர்களிடம் கூறிய அமைச்சர் யாப்பா, அது குறித்து அதனை நடத்துபவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். நாம் அந்த விவகாரம் குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. இதைவிட எம்மால் எதுவும் கூற முடியாது எனத் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் ரெலிகொம் நிறுவனத்துக்கு ஏதும் தொடர்புண்டா எனக் கேட்கப்பட்டபோது, ரெலிகொம் அரசுக்குரியதெனினும் அது ஒரு கம்பனியாகும். இருந்தபோதிலும் இந்த விடயத்தில் அதற்கும் தொடர்பிருக்க முடியாது. இந்த விடயத்தில் அரசு மீது குற்றச் சாட்டு சுமத்த எந்த வித நியாயமும் கிடையாதென அமைச்சர் அநுர யாப்பா தெரிவித்தார்.
இதேநேரம் `தமிழ்நெற்' இணையத்தளத்தை தடைசெய்யுமாறு தாங்கள் உத்தரவெதனையும் விடுக்கவில்லையென இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கவும் தெரிவித்துள்ளார்.
`தமிழ் நெற்' தடைசெய்யப்பட வேண்டுமெனத் தாங்கள் கேட்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக `தமிழ் நெற்' இணையத்தளத்தை மட்டும் பார்க்க முடியவில்லையெனவும் ஏனைய இணையத்தளங்களை பார்க்கக் கூடியதாயிருப்பதாகவும், இணையத்தளங்களைப் பார்வையிடுவோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அரசின் உத்தரவின் பேரிலேயே தாங்கள் `தமிழ் நெற்' இணையத்தளத்தை இலங்கையில் முடக்கியுள்ளதாக, இலங்கையில் மிகப் பெருமளவில் இணையத்தள சேவையை வழங்கும் ஷ்ரீலங்கா ரெலிகொம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அரசின் உத்தரவின் பேரிலேயே தாங்களும் இந்த இணையத்தளத்தை முடக்கியுள்ளதாக `டயலக்' நிறுவனப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெ. இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை முழுமையாக ஏன்? சமர்ப்பிக்க முடியாது
வீரகேசரி நாளேடு
அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்திலுள்ள 11 உப பிரிவுகளையும் அரசாங்கத்தினால் ஏன் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியாது. அந்த ஒப்பந்தத்தில் மறைப்பதற்கு என்ன தான் இருக்கின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் முடிவடைந்ததன் பின்னர் சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வாவிடம் விளக்கம் கேட்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்;
அமெரிக்கா இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான முழு விபரங்களையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திடம் கோரியிருந்தது எனினும் அரசாங்கம் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 11 உப பிரிவுகளையும் பாராளுமன்றத்தில் இன்று வரையிலுமே சமர்ப்பிக்கவில்லை, ஒப்பந்தத்தின் முழு விபரங்களையும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காது எதனை முடி மறைப்பதற்கு முயற்சி செய்கின்றது. அந்த ஒப்பந்தத்தின் மூலமாக நடந்ததோ, நடக்கபோவதோ ஒன்றுமில்லை கிடைக்கபோவதும் ஒன்றுமில்லை.
ஒப்பந்தத்தை காலம் தாழ்த்தாது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கோரிய போதும் நாம் இன்று ஞாபகபடுத்தும் வரை அந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆவணம் குறித்து அரசாங்கம் மௌனமாகவே இருக்கின்றது. ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முழு விபரங்கள் அடங்கிய ஆவணத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் எப்பொழுது சமர்ப்பிக்க போகின்றது என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான நிமால் சிறி பாலடி சில்வா பாராளுமன்ற அமெரிக்கா இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுடன் கலந்தாலோசித்த பின்னரே ஒப்பந்தம் தொடர்பாக பதிலளிக்க முடியும். ஒப்பந்தம் தொடர்பான முழு பதிலையும் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் தினத்தன்று சமர்ப்பிப்பேன் என்றார்.
இந்த விளக்கத்திற்கும் மத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க உரையாற்றிய போது.
ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சி காலத்தில் செய்துக்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக இந்த நாடு மட்டுமல்ல முழு உலகமுமே அறிந்திருக்கின்றது. இந்நிலையில் அமெரிக்க இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பது ஏன்? பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கருத்துக்களை தெரிவித்து அரசாங்கம் நழுவி சென்றுவிட முடியாது என்றார்.

களநிலைமைகள் குறித்து ஆராய நோர்வே தரப்பு
வீரகேசரி நாளேடு
இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு முன்னர் நோர்வே தரப்பை சந்தித்து தற்போதைய கள நிலைமைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. வார இறுதியில் இச்சந்திப்பு நடைபெறுமென திர்பார்க்கப்படுகின்றது.
இதில் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் தலைவர் லார்ஸ் சோல்வ்பேர்க், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வேயின் விஷேட சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இச்சந்திப்பின்போது இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வன்முறைகள், படுகொலைச் சம்பவங்கள் மற்றும் போர்நிறுத்த மீறல்கள் குறித்து கண்காணிப்புக்குழு அனுசரணையாளர்களுக்கு தெளிவுபடுத்தும் என கண்காணிப்புக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பு, தாக்குதல் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதில் உள்ள சிக்கல்கள், இராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து கிடைக்கும் ஒத்தழைப்புக்கள் தொடர்பாகவும் இருதரப்பும் தீவிரமாக பரிசீலனை செய்யும் என தெரிகின்றது.
மேலும் இச்சந்திப்பின்போது கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் , கண்காணிப்பை மேலும் வினைத்திறன் மிக்கதாக மேற்கொள்ளுதல் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

தொப்பிகலயில் மூவினத்தையும் சேர்ந்த.............
வீரகேசரி நாளேடு
தொப்பிகல பகுதியை அரசாங்கப்படைகள் நெருங்கிவிட்டன. மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி தொப்பிகல பகுதியை மீட்பதே எமது நோக்கமாகும்.
அப்பகுதியில் விடுதலை புலிகள் மூவினத்தையும் சேர்ந்த 73 பேரை சிறைவைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவர்களை மீட்கும் பணியிலேயே நாங்கள் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : தொப்பிகல பகுதிக்கு அருகில் இராணுவத்தினர் சென்றுவிட்டனர். விரைவில் தொப்பிகல பகுதியை எமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம். இருப்பினும் தொப்பிகல பகுதியில் புலிகள் பொதுமக்கள் 73 பேரை சிறைவைத்துள்ளதாக தெரியவருகின்றது. அங்கிருந்து தப்பிவந்த ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். இந்த 73 பேரில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் இருப்பதாக தெரிகின்றது.
எனவே அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம். தற்போது சிறைவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவுகளை வழங்கும் வசதிகள் புலிகளிடம் இல்லை. ஆனால் இந்த 73 மூன்று பேரை தவிர தொப்பிகல பகுதியில் வேறு சிவிலியன்கள் இல்லை. இதேவேளை தமிழ்நெட் இணையதளம் முடக்கப்பட்டுள்ள விடயம் குறித்து எம்மால் கருத்துக்கூற முடியாது. அது குறித்து எமக்கு எதுவும் தெரியாது.

No comments:
Post a Comment