Monday, 25 June 2007

ஈழச்செய்திகள்: 250607


கிழக்கு பாதுகாப்பு வலயம்: தமிழ்த் தேசிய படுகொலை- ENB
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

கிழக்கைக் காக்க கி்ளர்ந்தெழுவோம்!
இனவெறிப் பாசிச இலங்கை அரசின் கிழக்குமாகாண கபளீகரத்தைக் கண்டு கொள்ளாத இணைத்தலைமை நாடுகள் நமது எதிரிகளே! - ENB

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

* மனித உரிமை, சட்டம் ஒழுங்கு பேணுவதற்கே இணைத்தலைமை மாநாட்டில் இம்முறை முன்னுரிமை
யாழ்: உதயன்

* சமாதான முயற்சிகளை ஆரம்பிக்க முடியுமா? ஆராய உதவி வழங்கும் சமூகம் நாளை கூடுகிறதுநம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தும் ஆய்வாளர்கள்.
கொழும்பு: தினக்குரல்
* இரத்தக்களரியை தணிப்பதற்கு இணை தலைமைகளின் கூட்டம் வழியேற்படுத்தும்
வீரகேசரி நாளேடு

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
மனித உரிமை, சட்டம் ஒழுங்கு பேணுவதற்கே இணைத்தலைமை மாநாட்டில் இம்முறை முன்னுரிமை
யாழ்: உதயன்


பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு உதவுவது குறித்தும் ஆராயப்படும் இலங்கையில் மனித உரிமைகளைப் பேணுதல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல் ஆகியவற்றுக்கு எவ்வாறு உந்துதலும், ஊக்கமும் அளிக்கலாம் என்பது குறித்தே ஒஸ்லோவில் நாளை கூடும் இணைத்தலைமை நாடுகளின் கூட் டத்தில் முன்னுரிமை அளித்து ஆராயப்படும் என்று அறியப்படுகி றது. அதற்கு அடுத்தே சமாதானப் பேச்சை மீள ஆரம்பிப்பதற்கான சாத்திய அசாத்திய நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்படும் என்று தெரியவந்துள்ளது. இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளில் ஒருவர் மேற்படி தகவலைப் பூடகமாக வெளியிட்டிருக்கிறார். இலங்கைக்கு உதவும் இணைத் தலைமை நாடுகளின் இரண்டு நாள் கூட்டம் நாளை நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் ஆரம்ப மாகிறது.இந்த மாநாட்டில் இலங்கையில் மோச மடைந்துவரும் தள, கள நிலைமைகள் குறித்து மிக விரிவாக ஆராயப்படும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. அமைதிப் பேச்சுக்களை மீளத் தொடங்க வைப்பதே இணைத்தலைமை நாடு களின் பிரதான நோக்கம் எனினும் அதற்கு முன்பதாக அங்கு மலிந்து வரும், அந்நாட்டு மக்கள் வாழ்வை சீர ழித்து வரும் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகள்,ஆள்கடத்தல்கள்போன்ற உச்சக்கட்ட மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு அர்த்தமற்ற நிலைக்கு கீழ் நோக்கிச் செல்வதை நிறுத்துவது அவ சியம். அதனால் இவற்றை முதன்மைப் படுத்தியே விரிவாக ஆராயப்படும் என்று பிரதிநிதிகளில் ஒருவர் தெரிவித்தார். நாளை தொடங்கும் கூட்டத்தில் இணைத் தலைமை நாடுகளைச் சேர்ந்த உயர் மட் டத்தினர் அந்நாட்டுக்கு விஜயம் செய்த போது கண்டறிந்து, கேட்டறிந்து அவதானி த்த தரவுகளை அடிப்படை யாகக் கொண்டே ஆராயப்படும் என்று நோர்வேயின் சர்வதேச விவகா ரங்களுக் கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் கூறி னார்.ஒவ்வொரு தரப்பினரும் பெற்றுக் கொண்ட தகவல்களையும் அவதானிப்பு களையும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வோம். இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் மோதல்களை நிறுத்தச் செய்து அவர்களை பேச்சு வார்த்தை மேசைக்குத் திரும்பச் செய்வ தற்கு ஒவ்வொரு நாடும் தனித்தோ அல் லது கூட்டிணைந்தோ எவ்வாறு பங்களிக் கலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆராயப்படும் என்றும் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்தார்.சர்வதேச சமூகத்தினரால் இலங்கை அரசாங்கத்தையோ விடுதலைப் புலி களையோ பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரும் விதத்தில் நம்பிக்கையூட் டுவதற்கு இப்போது இயலாது. இரண்டு தரப்புக்களும் சமாதான வழி யில் நாட்டம் காட்டவில்லை. இரண்டில் ஒரு தரப்புக்குப் பெரும் இராணுவ வெற்றி கிடைத்தபின்னரே பேச்சுவார்த்தை சாத் தியம் என்று பாதுகாப்பு ஆய்வாளர் நாமல் பெரேரா தெரிவித்தார். நாளையும் நாளை மறுதினமும் இடம் பெறும் கூட்டத்தில் அமெரிக்காவின் சார் பில் உதவி இராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் பௌச்சரும் ஜப்பானின் சார்பில் விசேட சமாதானத் தூதர் யசூசிஅகாஷியும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உத விச் செயலாளர் நாயகம் ஜேம்ஸ் பொறைன் மற்றும்அன்றியோ மைத்திலிஸ் ஆகியோ ரும் நோர்வேயின் சார்பில் சர்வதேச விவகா ரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம், விசேட சமாதானத் தூதுவர் ஹன்சன் போவர் ஆகியோரும் கலந்து கொள்வர்.இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல் செயற்பாடான கொலைகள், ஆள்கடத்தல்கள் போன்ற விடயங்களே முன்னுரிமை கொடுத்து விவாதிக்கப்படும். வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதா ரத்தை கட்டி எழுப்புவது குறித்தும் கூட் டத்தில் ஆராயப்படும் என்று அறியப்படு கிறது.

சமாதான முயற்சிகளை ஆரம்பிக்க முடியுமா?
ஆராய உதவி வழங்கும் சமூகம் நாளை கூடுகிறது

இலங்கையில் மிக மோசமாக அதிகரித்து வரும் வன்முறைகளின் மத்தியில் முழுமையாக ஸ்தம்பிதமடைந்திருக்கும் சமாதான நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான வழிவகைகள் இருக்கின்றதா என்பது குறித்து ஆராய்வதற்காக இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் நாளை திங்கட்கிழமை நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இலங்கையில் நிலைவரம் மோசமடைவது குறித்து ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நோர்வே ஆகிய உதவி வழங்கும் நாடுகள் அமைப்புகளே இரண்டு நாட்களுக்கு ஆராயவுள்ளதாக சமாதான முயற்சிகளுடன் தொடர்புபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் என்ன நடைபெறுகின்றது என்பது குறித்தும் உதவி வழங்கும் நாடுகளுக்கு சமாதான முயற்சிகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான பங்களிப்பாற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதா என்பதை ஆராயவும் ஒஸ்லோ சந்திப்பு இடம்பெறுவதாக மேற்குலக இராஜதந்திரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த மாநாடு குறித்து அரசியல் ஆய்வாளர்கள் நம்பிக்கையின்மையை வெளியிட்டுள்ளனர். இந்த சந்திப்பில் வழமை போன்ற இலங்கை நிலைவரம் குறித்து கவலை வெளியிடப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் மீண்டும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துமாறும் செய்வதற்கான வழிவகைகள் சர்வதேச சமூகத்திடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினதும் விடுதலைப் புலிகளினதும் நிகழ்ச்சி நிரலில் சமாதானமில்லை, பாரிய இராணுவ வெற்றிக்குப் பின்னரே பேச்சுவார்த்தை குறித்து பேசுவார்களென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் கிழக்கு மாகாணத்தை தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிலையிலுள்ளதாக தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் கிழக்கின் பெருமளவு பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள போதிலும் வடக்கில் அவர்கள் தமது நிலைகளை பலப்படுத்தியுள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மாத ஆரம்பத்தில் வன்னி பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நோக்கி முன்னேற முயன்ற படையினருக்கு விடுதலைப் புலிகள் கடும் உயிரிழப்பை ஏற்படுத்தினர்.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் தமது விமானத் தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர் நிலைமை மாற்றமடைவதற்கான சிறிய அறிகுறி கூட தென்படவில்லை.
சிறந்த சூழல் உருவாவதற்கு முன்னர் நிலைமை மிகவும் மோசமடையும் என தெரிவித்துள்ள மேற்குலக இராஜதந்திரியொருவர் அடுத்த சில மாதங்களில் வன்முறைகள் தீவிரமடையலாம் என அச்சமடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எவ்வாறான அழுத்தத்தை கொடுப்பது என்பது குறித்து உதவி வழங்கும் நாடுகள் மத்தியில் மாறுபட்ட கருத்து காணப்படுகின்றது. கொழும்பு: தினக்குரல்
இரத்தக்களரியை தணிப்பதற்கு இணை தலைமைகளின் கூட்டம் வழியேற்படுத்தும் வீரகேசரி நாளேடு இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் மோதல்களையும் இரத்தக்களரியையும் தணிப்பதற்கு இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் வழியேற்படுத்துமென சமாதான செயற்பாடுகளின் அனுசரணையாளரான நோர்வே தெரிவித்துள்ளது.நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படுமென இராஜதந்திரிகள் கருத்து
வெளியிட்டுள்ளனர்.முதல் நாளான இன்று ஆரம்ப நிகழ்வும் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களும் இடம்பெறுவதோடு தமது செயற்பாடுகளை இணைத்தலைமைகள் மதிப்பீடு செய்யவுள்ளன.
இரண்டாம் நாளான நாளை செவ்வாய்க்கிழமை, நாட்டில் அதிகரித்துச் செல்லும் மோல்கள் மற்றும் படுகொலைகள், கொழும்பிலிருந்து தமிழ்மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, கிழக்கில் படையினர் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்படவுள்ளது.
அதேபோன்று விடுதலைப்புலிகளின் வான்தாக்குதல்கள் உள்ளிட்ட அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் இணைத்தலைமை நாடுகள் தமது கவனத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் கள நிலைமைகள் தொடர்பாக தமது அவதானிப்புக்கள், பரிந்துரைகளை உள்ளடக்கி கண்காணிப்புக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையும் விவாதத்தி>ற்கு எடுத்தக்கொள்ளப்படவுள்ளது.
போர்நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், ஒப்பந்தத்தை வலுப்படுத்தல், பேச்சு வார்த்தையை மீள ஆரம்பித்தல், அதற்கான சூழலை ஏற்படுத்தல், இதற்கு சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பõன முடிவுகளை இணைத்தலைம நாடுகள் இதன்போது மேற்கொள்ளவுள்ளன. வீரகேசரி நாளேடு
பெருந்திருவிழாக் காலம் இது; ஊரடங்கை இரவு 8 மணிக்கு பின்னர் அமுலாக்கக் கோருகிறார் ஆதீன முதல்வர்
குடாநாட்டில் சைவ ஆலயங்களில் வருடாந்தப் பெருந் திருவிழாக்கள் நடைபெறும் காலம் இது. எனவே ஊர டங்குச் சட்டத்தை இரவு 8 மணிக்குப் பின்னரே நடை முறைப்படுத்த வேண்டும். நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமா சார்ய சுவாமிகள் மேற்கண்டவாறு கோரியுள்ளார்.யாழ். சைவ மக்களின் பெருங்கோயில்களான, சரித் திரப் பிரசித்திபெற்ற ஆலயங்களான நயினாதீவு, மாவிட்ட புரம், நல்லூர் ஆலயங்களின் திருவிழாக்கள் இடம் பெறும், இடம்பெறவுள்ள காலம் இது. இவற்றை விட பெரும் எண்ணிக்கையான கிராமங்கள் தோறும் உள்ள சிறு ஆலயங்களின் வருடாந்தப் பெருந்திருவிழாக்களும் இந்தக் காலத்திலேயே நடைபெறுகின் றன. இந்தத் திருவிழாக் காலத்தில் பக்தர்கள் உற்சவங்களை ஓரளவாவது சிறப்பாக நடத்த ஊரடங்குச் சட்டத்தை இரவு 8 மணிக்குப் பின்னரே நடைமுறைப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்புகள் இதை ஆராய்ந்து முடிவு எடுக்கவேண்டும் என்றார் அவர்.

யாழ். மாநகரசபைப் பகுதியில் குழாய் நீருக்கு பணம் அறவிடப்படும்

யாழ். மாநகரசபையின் குடி தண்ணீர் விநியோகத்திற்கான பராமரிப்புச் செலவு களை ஈடு செய்யும் பொருட்டு, பாவனையாளர் சங்கங்கள் உருவாக்கப்படவுள் ளன. அவற்றின் ஊடாக குழாய் நீருக்குப் பணம் அறவிடப்பட உள்ளது. இத்தக வலை யாழ். மாநகர சபை ஆணையாளர் மு.செ. சரவணபவ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:யாழ். மாநகர சபையின் குடி தண்ணீர் விநியோகத் திட்டத்தின் பராமரிப்புச் செலவு கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இச் செலவை ஈடுசெய்யும் பொருட்டு மக்களின் பங்களிப்புடன் விநியோகம் மேம்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய பொது நீர்க்கம்பங்களின் ஊடாக குடி தண்ணீரை (குழாய் நீர்) பெறு பவர்களை அங்கத்தவர்களாகக் கொண்ட பாவனையாளர் சங்கங்கள் நிறுவப்பட உள்ளன.அச்சங்கங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் குழாய் நீர் மூலம் நீரைப் பெறுகின்ற ஒரு குடும்பத்துக்கு நாளொன்றுக்கு ஒரு ரூபா வீதம் மாதாந்தம் 30 ரூபா சேகரிக்கப்படவுள்ளது. இந்நிதி ஒவ்வொரு சங்கங்களினதும் கண்காணிப்பாளர் கள் மூலம் மாநகரசபையில் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்: உதயன்Posted on : Sun Jun 24 10:18:46 EEST 2007

யாழ். புறநகர் பகுதியை சுற்றிவளைத்து தீவிர தேடுதல்

யாழ். புறநகர்ப் பகுதியில் நேற்று சனிக்கிழமை 2 ஆவது நாளாக அதிகாலை முதல் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடைபெற்றது. கடந்த வியாழக்கிழமை இரவு அரியாலை புங்கன்குளம் பகுதியில் இடம்பெற்ற கிளேமோர் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்தே நேற்று முன்தினம் அதிகாலை முதல் பிற்பகல் வரை அரியாலை, பாசையூர், ஈச்சமோட்டை பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல்கள் நடைபெற்றன.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் நண்பகல் வரை பாசையூர் மற்றும் குருநகர் பகுதிகளில் பாரிய சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடத்தப்பட்டது.
வீடு வீடாகச் சென்ற படையினர் அனைவரையும் சோதனைக்குட்படுத்தியதுடன் அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகளையும் பரிசோதித்துள்ளனர்.
பவள் கவச வாகனங்கள், மோட்டார் சைக்கிள் படையணியினரும் இந்தச் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கம்பஹாவில் பாரிய சுற்றிவளைப்பு தேடுதல் 203 பேர் நேற்று பொலிஸாரால் கைது
கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் நேற்று சனிக்கிழமை அதிகாலை வரை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளில் 203 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 76 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் ஏனையவர்கள் ஏற்கனவே பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர்களெனவும், போதைப்பொருட்கள் வியாபாரம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்களெனவும் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாந்த ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதே நேரம், வெள்ளவத்தை பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 10 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் போது கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜார் படுத்தப்பட்டதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெட்டபுலா ஊனுகொட்டுவ பகுதியில் நேற்று அதிகாலை 3 மணி முதல் 7.30 மணி வரை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 2 பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இவர்கள் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு: தினக்குரல்

நீர்கொழும்பில் பாரிய தேடுதல்; 109 பேர் கைது
நீர்கொழும்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் பொலிஸாரால் தேடப்படும் 15 நபர்களும், நீதிமன்றத்தால்
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 51 நபர்களும், சந்தேகத்துக்கிடமான நபர்கள் 43 பேரும் என மொத்தமாக 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்டப் பொலிஸ் அதிகாரி பிரேமசிறி விதான தெரிவித்தார்.
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அதிகாரியின் அதிகாரத்திற்குட்பட்ட 7 பொலிஸ் நிலையங்களையும் சேர்ந்த அதிகாரிகள் இச்சுற்றி வளைப்பின்போது பங்குபற்றியுள்ளனர். லிவேரியவில் தேடுதல் தமிழர் உட்பட 25 பேர் கைது வீரகேசரி நாளேடு கம்பஹா வெலிவேரிய பிரதேசத்தில் நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட பாரிய சுற்றிவளைப்புத் தேடுதலில் தமிழர்கள் உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் இத்தேடுதலில் ஈடுபட்டனர்.
வீடுகளையும் வாகனங்களையும் சோதனையிட்ட பொலிஸார் அடையாளத்தை உறுதிப்படுத்தத் தவறிய தமிழர்கள் உள்ளிட்ட 25 பேரை கைதுசெய்துள்ளனர்.
இவர்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களும் அடங்குவர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர்.


மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச மட்டத்தில் பேசப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல
வீரகேசரி நாளேடு

நாட்டில் வாழ்கின்ற தமிழர்கள் வீதியில் செல்ல அச்சப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்பட்டுவருகின்றனர். ஊடக நிறுவனங்களால் செய்திகளை வெளியிட முடியவில்லை. மனித உரிமைகள் நாட்டில் மீறப்பட்டுவருகின்றன. இவை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்றது. இவற்றை எம்மால் தடுக்க
முடியாது. இவை குறித்து சர்வதேச மட்டத்தில் பேசப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல. இது நாட்டை பிரித்துவிடும் அபாயகரமான நிலைமையாகும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். கேகாலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டுஉரையாற்றுகையில் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு அவர் மேலும் கூறியதாவது
அரசாங்கம் இன்று அனைத்து சமூகத்தினருடனும் யுத்தம் செய்துகொண்டிருக்கின்றது. இங்கிலாந்துடன் அரசாங்கம் யுத்த பிரகடனம் செய்துள்ளது. எமது விடயங்களில் தலையிடவேண்டாம் என்று அரசாங்கம் இங்கிலாந்துக்கு அறிவித்துள்ளது. இவ்வாறு சர்வதேச சமூகத்தினருடன் அரசாங்கம் சிறந்த உறவை பேணுவதில்லை.
மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டுவருகின்றனர். அதிகமான வர்த்தகர்களிடம் கப்பம் கோரப்படுகின்றது. சில வர்த்தகர்கள் கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்படுகின்றனர். சில வர்த்தகர்கள் கப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்படுகின்றனர். நாட்டில் என்ன நடக்கின்றது என்று புரியவில்லை. தமிழர்கள் வீதியில் செல்ல அச்சப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டுவருகின்றனர். ஊடக நிறுவனங்களால் செய்திகளை வெளியிட முடியவில்லை. மனித உரிமைகள் நாட்டில் மீறப்பட்டுவருகின்றன.
இவை தொடர்பாக சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்றது. இவற்றை எம்மால் தடுக்க முடியாது. இவை தொடர்பாச சர்வதேச மட்டத்தில் பேசப்படுவது ஆரோக்கியமான விடயமல்ல. இது நாட்டை பிரித்துவிடும் அபாயகரமான நிலைமையாகும். எமது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலைமையே ஏற்பட்டுள்ளது.


கொழும்பு: வீரகேசரி

No comments: