யுத்த நிறுத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் மட்டுமே பேச்சு
[27 - June - 2007]
இணைத்தலைமைகளின் அழுத்தம் வேண்டுமென்கிறார் தமிழ்ச்செல்வன்
சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை ஏற்றுக் கொண்டு அதற்கு ஆதரவளிப்பதுடன் யுத்தநிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே பேச்சுக்கான பாதை திறக்குமெனவும் சமாதானத்தை கொண்டு வர முடியும் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பேச்சாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நெற்" இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் இதனைத் தெரிவித்துள்ள தமிழ்ச்செல்வன் தென்னிலங்கையில் கட்சிகளிடையே கருத்தொருமைப்பாட்டை கொண்டு வருவதென்பது ஒரே மாதிரியான பழைய நாடகம் என்றும் வர்ணித்துள்ளார்.
அத்துடன் யுத்தநிறுத்த உடன்படிக்கையே இலங்கையை அழிவிலிருந்தும் பாதுகாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் இணைத்தலைமை நாடுகள் சில இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ நிதியுதவிகளை வழங்கி அதனை மறைமுகமாக பலப்படுத்தி வரும் அதேவேளை வேறு சில நாடுகள் அதற்கு எதிராக அழுத்தங்களை அதிகரிப்பது தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக கூறியிருக்கும் தமிழ்ச்செல்வன் இணைத்தலைமை நாடுகள் மத்தியில் ஒன்றுபட்ட நிலைப்பாடு இல்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படவில்லை. அவர்கள் சூழலுக்கு தகுந்த வகையிலேயே இராணுவத் தந்திரோபாயத்தினை முன்னெடுப்பர். கிழக்கில் படையினர் முன்னேறுவதும் பின்னர் இழப்பு மத்தியில் பின்வாங்குவதும் வழமை எனவும் தெரிவித்துள்ள தமிழ்ச்செல்வன் படையினர் விரைவில் தாங்கள் பொறியில் சிக்கியதை உணர்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மனிதாபிமான கரிசனையுடனும் அவர்களது உறவுகள் குறித்த அக்கறையுடனும் செயற்படுபவர்கள் மீது உலக நாடுகள் பயங்கரவாத முத்திரை குத்துவது குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
அவர் அளித்த பேட்டி வருமாறு;
கேள்வி: ஒஸ்லோவில் நடைபெறும் இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பு குறித்த உங்கள் கருத்து என்ன?
தமிழ்ச்செல்வன்: இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு மற்றும் சமாதானத்தை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக நடைபெறும் இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டினை நாங்கள் வரவேற்கின்றோம். சர்வதேச சமூகம் இராணுவத் தீர்வு சாத்தியமற்றது எனவும் இருதரப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
இதனை வரவேற்கும் அதேவேளை அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்காதது குறித்து தமிழ் மக்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர்.
இனச்சுத்திகரிப்பு, பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் மக்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றை முடிவிற்கு கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
இணைத்தலைமை நாடுகள் மத்தியில் வலுவான ஒருமித்த நிலைப்பாடு இல்லாதது ஏன் என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் உருவாகின்றது.
சில நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் மறைமுகமாக ஊக்குவிப்பது ஏன் என்றும் வேறு சில நாடுகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் நோக்கம் என்னவென்றும் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
கேள்வி: இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதற்காக சர்வதேச சமூகம் தனது கொள்கை நிலைப்பாடுகளில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்?
தமிழ்ச்செல்வன்: இருபது வருடமாக நடைபெற்ற யுத்தத்திற்கு போர் நிறுத்தம் ஆகக் குறைந்தது தற்காலிகமாவது முடிவுகட்டியது.மிக நீண்டகாலத்திற்குப் பின்னர் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை என்பதால் இது முக்கியமானது. உலகம் இதற்கு ஒருமித்த ஆதரவை வழங்கியது. மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு இது ஆதரவளித்தது.
எனினும், சிங்கள ஆளும் வர்க்கத்தினுள் காணப்பட்ட அதிகார போட்டி காரணமாக சமாதானத்திற்காக உருவாக்கப்பட்ட சாதகமான சூழல் அழிக்கப்பட்டது.
ஆளும் வர்க்கம் தனது செயற்பாடு காரணமாக பெரும்பான்மை சமூகத்தின் நிலைப்பாடு குறித்து குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் இலங்கையில் மோசமான நிலைமை உருவாகியது.
தமிழ் மக்கள் முன் வைத்த இடைக்கால நிர்வாக யோசனையை அவர்கள் நிராகரித்தனர். கடல்கோள் புனர்நிர்மாணப் பணிகளுக்கான பொதுக் கட்டமைப்பையும் அது கைச்சாத்தான பின்னர் அவர்கள் நிராகரித்தனர்.
இதன் மூலம் தமிழ் மக்களிடம் எஞ்சியிருந்த நம்பிக்கையையும் சிங்கள பேரினவாத தலைமை அழித்தது.
சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் நீண்ட கால போராட்டத்தினைத் தீவிரமாக ஆராய்ந்து சிங்கள தலைமைத்துவத்தின் இனப் பாகுபாட்டை முடிவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு ஆதரிப்பதும் யுத்த நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதுமே சர்வதேசத்தால் எடுக்கப்பட்ட உறுதியான ஆக்கபூர்வமான நடவடிக்கை எனக் கருதுகிறேன்.
கேள்வி: சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா தென்பகுதி அரசியல் கட்சிகள் மத்தியில் இணக்கப்பாடு ஏற்பட வேண்டும். இதுவே விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக வேண்டும் என கருதுகின்றது. இது சாத்தியமா?
பதில்: தென்பகுதியைப் பொறுத்த வரை கட்சியின் கொள்கைகளை பின்பற்றும் பாரம்பரியம் இருந்ததில்லை. அதிகாரம் மற்றும் ஏனைய நன்மைகளுக்காக கட்சிக்கு கட்சி தாவுவார்கள்.
தற்போது தென்பகுதி அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான நாடகம் போன்று முன்னரும் இடம்பெற்றுள்ளது.
தீர்வொன்றைக்காண்பது எப்போதும் இதில் நோக்கமாக இருந்ததில்லை.
சமீபத்தைய முயற்சிகள் மூலம் விரும்பப்படும் நன்மைகள் கிட்டாது முடிவுகள் எடுத்தால் இந்த கட்சிகள் அதனை நடைமுறைப்படுத்த இணங்காது.
அதிகாரத்தில் உள்ளவர்கள் நேர்மையுடன் நடந்துகொண்டால் மாத்திரமே தீர்வைக் காணலாம்.
மேலும், இலங்கையில் ஆட்சிக்கு வரும் எவரும் இராணுவத் தீர்வில் ஆர்வம் காட்டிவருவதுடன் இதற்காக சர்வதேச சமூகத்தை பயன்படுத்த முனைகின்றன. இதுவே எப்போதும் வழிமுறையாக இருந்துள்ளது. இது சுட்டிக்காட்டப்படவேண்டியது.
இலங்கை அரசாங்கம் தன்னை இராணுவ ரீதியாக பலப்படுத்திய பின்னர் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வராது.
இதற்கு மாறாக அது சமாதான முயற்சிகளையும் யுத்தநிறுத்த உடன்படிக்கையையும் நிராகரிக்கும். இராணுவ தீர்வைக்காணப்போவதாக தெரிவிக்கும் .
பாரிய இழப்புகளை சந்தித்த பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் பேச்சுவார்த்தைக்கு இணங்கும் சர்வதேச சமூகம் இந்த ஏமாற்று வித்தையை உணர்ந்திருக்கும்.
இலங்கை அரசாங்கம் சந்தித்த இராணுவ, பொருளாதார நெருக்கடிகளே தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு காரணமாக அமைந்தன.
இலங்கை அரசாங்கத்தை இராணுவ ரீதியாகப் பலப்படுத்த தமிழ் மக்களைக் கூட்டாகவும் அவர்களது விடுதலைப் போராட்டத்தையும் இதன் மூலம் அழிக்கலாம் என்பது பகற்கனவாகவே முடியும்.
இலங்கை அரசாங்கம் இராணுவ ரீதியில் பலமான நிலையிலிருந்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு இணங்கியதில்லை. மேலும் இவ்வாறான சூழ்நிலையில் முன்வைக்கப்படும் தீர்வு நீதியான ஒன்றாக அமையாது.
கேள்வி: விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக பலவீனப்படுத்துவதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தலாம் என்ற கருத்திற்கு தென்பகுதியில் ஊக்குவிப்பு காணப்படுவது பற்றி உங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: தமிழ் மக்கள் கடந்த 60 வருடங்களாக தமது உரிமைகளுக்காக போராடுகின்றனர். தமது சுதந்திர போராட்டத் திற்காக வன்முறையை அவர்கள் தெரிவு செய்யவில்லை. அகிம்சை வழிமுறையூடாகவே தமது போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்தனர்.
கடந்த 30 வருடங்களில் சிங்களத் தலைமை இதற்கு உரிய தீர்வை முன்வைத்திருக்கலாம்.
சிங்களத் தலைமை வெளிப்படையான மனிதாபிமான அணுகுமுறையை கையாளவில்லை. மாறாக இனச்சுத்திகரிப்பும் இனப்படுகொலையும் முன்னெடுக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் தமது பகுதிகளிலிருந்து விரட்டப்பட்டனர். இது பாரிய மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியது.
இவ்வாறான சூழ்நிலையிலேயே எமது விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது. ஜனநாயக வழிமுறைகள் அடக்கப்பட்டு மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடப்பட்டபோதே எமது தற்பாதுகாப்பு ஆயுத போராட்டம் தோற்றம் பெற்றது. தமிழ் மக்கள் இந்தச் சூழ்நிலையை உருவாக்கவில்லை.
தமிழ் மக்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஆயுத போராட்டம் காரணமாகவே அவர்களது துயரங்களை சர்வதேச சமூகத்தினை எட்டின. படிப்படியாகக் கட்டப்பட்ட அந்த பலத்தினை பலவீனமடைய தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
இதனை நன்கறிந்த சிங்களத் தலைமை தமிழ் மக்களின் இனப்படுகொலையை மேற்கொள்வதற்கான அவகாசத்தை பெறுவதற்காக இந்த நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியும் தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகளை சிங்கள தலைமை புரிந்து கொள்ளும்போது, தமிழ் மக்களின் இராணுவப் பலம் சிங்கள தேசத்திற்கே எதிரானது அல்ல, சுய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டது என்பதை உணரும்போது, இந்த நாடு வன்முறையற்றதாக மாறும்.
கேள்வி: இராணுவ தீர்வை நிராகரிக்கும் அரசியல் தீர்வை வலியுறுத்தும் சில நாடுகள் விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கின்றனவே?
பதில்: ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது தாயகத்திலிருந்து விரட்டப்பட்டு பல நாடுகளில் வாழ்கின்றனர். இலங்கையில் துயரத்தில் சிக்கியுள்ள தமது உறவுகளுக்கு அவர்கள் உதவுகின்றனர்.
மனிதாபிமான கரிசனையும், உறவுப் பிணைப்பையும் பயங்கரவாதமாக கருதி முத்திரை குத்துவது உண்மையான துயரம்.
தமிழ் மக்களோ அல்லது அவர்களது பிரதிநிதிகளோ தாங்கள் வாழ்ந்து வரும் நாடுகளின் சட்டங்களை மீறாமல் அரசியல் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நாடுகளின் அரசாங்கம் மற்றும் மக்களை மதித்தே இவர்கள் செயற்படுகின்றனர்.
கடல்கோள் அனர்த்தத்தின் போதும் இன வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோதும் தமது உறவுகளுக்காக இவர்கள் பாடுபட்டுள்ளனர்.
(குறிப்பு: அழுத்தம் ENB)
மன்னார் தளளாடியில் மோதல்
நிஷாந்தி
மன்னார் தளளாடியில் விடுதலைப்புலிகள் மற்றும் இராணுவத்தினரின் முன்னரங்கு எல்லை பகுதியில் இன்று புதன் கிழமை அதிகாலை மோதல் இடம்பெற்றுள்ளது
இதன் போது தள்ளாடியில் இருந்து மன்னார் நோக்கி பகுதியில் உள்ள இராணுவ காவலரன் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக புலிகளின் தரப்பு தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலால் 5 இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக அத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது எனினும் இராணுவத்தினர் இத்தாக்குதல் தொடர்பாக எது வித கருத்தும் தெரிவிக்கவில்லை. நடுநிலையாகச் செயற்பட சர்வதேசம் முன்வரவேண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் ஊடகப் பேட்டி ஒன் றின் மூலம் குறிப்பிட்டிருக்கும் கருத்துகள் ஒட்டு மொத்த தமிழினத்தின் மனநிலையை அப்படியே பிரதிபலிப்ப னவாக அமைந்திருக்கின்றன.தங்களுடைய கௌரவமான வாழ்வுக்காகவும், நியாய மான உரிமைகளுக்காகவும், அடக்கு முறைக்கு எதிராக வும் சுமார் முப்பது ஆண்டு காலம் அமைதி வழியில் அஹிம்சை முறையில் போராட்டம் நடத்தியவர்கள் ஈழத்தமிழர்கள். அப்போதெல்லாம் அவர்களின் நியாய மான கோரிக்கைகள் சிங்கள ஆட்சியாளர்களால் புறக் கணிக்கப்பட்டன; உதாசீனம் செய்யப்பட்டன. ஆயுதமுனை யில் அவர்கள் அடக்கப்பட்டனர். ஒடுக்கு முறை தொடர்ந்தது.தமிழரின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக சிங்க ளத் தலைமைகளிடம் தெளிவான பார்வையோ, தீர்க்க தரிசனமான நன்நோக்கோ, உருப்படியான தீர்வு உபாயங் களோ இருக்கவில்லை. இனப்பிரச்சினையை திறந்த மனத்துடன் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் நியாயமான போக்கில் அணுகும் சிந்தனைத் தெளிவும் அவற்றிடம் இருக்கவில்லை.சிங்கள மேலாதிக்க வாதிகளின் பிடியில் சிறுபான்மையினரான தமிழர்களின் பேரவலம் தொடர்ந்ததால் தம்மை யும், தமது இனத்தையும், அதன் தனித்துவ அடையாளங் களையும், தமது தாயகத்தையும், அதில் தமது வாழ்வுரி மையையும் காப்பதற்காகத் தமிழர்கள் ஆயுதம் ஏந்த வேண் டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.தாமாக விரும்பித் தமிழர்கள் யுத்த வழியை நாடவில்லை. அவர்கள் போரின் மீது தீராத பற்றுக் கொண்ட போர் வெறி யர்களும் அல்லர். ஆயுதம் தூக்கும் நிலைக்கு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி யில்லை என்ற கட்டாயத்துக்கு பௌத்த, சிங்கள மேலா திக்க ஆட்சியே தமிழர்களை வல்வந்தமாகத் தள்ளியது.சுருங்கக் கூறுவதானால் சிங்கள அடக்குமுறை மேலா திக்கமே தமிழர்களை ஆயுதம் ஏந்த நிர்ப்பந்தித்துப் போர் வழிக்கு அவர்களை நெட்டித் தள்ளியது.ஆனாலும் பேரழிவுகளையும், போரழிவுகளையும் சந்தித்து, இவ் வளவு மனிதாபிமானப் பேரவலங்களை எதிர்கொண்ட பின் னரும், தமது தேசியப் பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் நியாயத் தீர்வு காணும் எத்தனங் களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிச் செயற்பட தமிழர் தரப்புத் தயாராகவே இப்போதும் காத்திருக்கின்றது. ஆனால் சிங்கள ஆளும் வர்க்கம் தனது அதிகாரப் போட் டிகளுக்காக அந்த அமைதி வாய்ப்புகளைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கியதோடு அல்லாமல், தென்னிலங்கை பௌத்த சிங்களத் தீவிரப் போக்கு சக்திகளைத் திருப் திப்படுத்தி, அவற்றின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள் ளும் தனது அரசியல் நோக்குக்காக, போர்த் தீவிரத்தில் முனைப்பாக நிற்கின்றது.இலங்கைத் தீவு பெரும் போர் வெடிக்கும் பேராபத் தின் விளிம்பை நெருங்கியிருப்பதற்கு இதுதான் பின்னணி.தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை, மோசமான மனித உரிமை மீறல்கள், பெரும் யுத்தத்துக் கான போர் முனைப்பு என இலங்கை அரசின் கொடூரப் போக் குத் தொடர்கின்றது.ஆனால் அவற்றைத் தடுத்து நிறுத் துவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையும் இணைத் தலைமைகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் செய்யாமல் வாளாவிருக்கின்றது.ஈழத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புலிகள் மற்றும் இலங்கை அரசு ஆகிய இரு தரப்பினருமே பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும், இராணுவத் தீர்வு முயற் சியால் பலன் கிட்டாது என்றெல்லாம் உலகம் உறுதியா கக் கூறுகின்றமை வாஸ்தவம்தான்.ஆனால் இவ்விவகாரங்களில் இணைத் தலைமைகள் கூட உறுதியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பின்ன டிக்கின்றமை ஏன் என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு ஏற் பட்டிருக்கின்றது எனத் தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டி யிருக்கின்றார்.அரசியல் வழித் தீர்வுக்காக சில நாடுகள் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து நிற்கையில், ஏன் மற்றைய சில நாடு கள் இலங்கை அரசுக்கு இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி அதன் போர் முனைப்புப் போக்கைத் தூண்டிவிடுகின்றன? இதுவே தமிழர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது என்கிறார் தமிழ்ச்செல்வன்.சர்வதேசத்தைப் பார்த்து ஒட்டுமொத்த ஈழத் தமிழி னம் எழுப்பும் வினாவும் இதுதான்.இலங்கைக்கு இராணுவ, பொருளாதார உதவிகளை வழங்கி, அதன் மூலம் சிங்கள அரசின் போர்முனைப்புப் போக்கை ஏன் ஊக்கப்படுத்தித் தூண்டி விடுகிறீர்கள்? இராணுவவழித் தீர்வை நிராகரிப்பதாகக் கூறிக்கொண்டு அமைதி வழி அரசியல் தீர்வை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டு தமிழர் மீதான கொடூர யுத்தத்துக்கு ஏன் ஒத் துழைத்து, உதவிபுரிந்து, வசதி செய்கிறீர்கள்?இலங்கைத் தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேச சமூ கம் ஒரு பக்கம் சாராமல் சிங்களப் பேரினவாத அரசின் இராணுவத் தீர்வு முனைப்புக்கு ஊக்கமளிக்காமல் நடு நிலையாக நடக்க முன்வருமானால் மட்டுமே இவ்விவ காரத்துக்கு நியாயத் தீர்வு கிட்டுவது சாத்தியம். உறுதி.
No comments:
Post a Comment