Friday, 29 June 2007

ஈழச்செய்திகள்: 290607

ஜப்பானின் தயக்கமே கூட்டறிக்கை வெளியிடப்படாமைக்கு காரணம்?
வீரகேசரி நாளேடு

இலங்கை அரசாங்கத்தை கண்டிப்பதற்கு ஜப்பான் காட்டிய தயக்கத்தை அடுத்தே இம்முறை கூட்டறிக்கை வெளியிடுவதில்லை என இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்ததாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது ;
இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படுவது வழக்கமானதாகும். இம்முறையும் அதேபோன்ற நடைமுறையை கையாளவே இணைத்தலைமை நாடுகள் எண்ணியிருந்தன.
அதிகரித்துச்செல்லும் மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், படுகொலைகள், படையினரால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள், கொழும்பிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் தொடர்பான இணைத்தலைமை நாடுகளின் கண்டனங்களை கூட்டறிக்கையில் சேர்ப்பதற்கு ஜப்பான் தவிர்ந்த ஏனைய இணைத்தலைமை நாடுகள் தீர்மானிக்கப்பட்டிருந்தன.
அதேபோன்று பொதுமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சிறுவர்களை படையில் சேர்த்தல் விமானத் தாக்குதல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளை கண்டிப்பதற்கும் அவை எண்ணியிருந்தன.
இந்நிலையிலேயே அரசாங்கத்தை கண்டிப்பதற்கு இலங்கையின் மிக நெருக்கிய நாடான ஜப்பான் தயக்கம் காட்டியது என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. மத, கலாச்சார அடிப்படையில் இருநாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக நட்புறவு நிலவி வருகின்றது. அத்தோடு இலங்கைக்கு மிக அதிகளவு நிதியுதவி அளிக்கும் நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை சர்வதேசத்தின் கடும் கண்டனங்களுக்கு இலக்காகியிருக்கும் இத்தருணத்தில் மீண்டும் இணைத்தலைமை நாடுகளின் அறிக்கைகள் மூலம் இலங்கையை கண்டிக்க ஜப்பான் இணக்கம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனால் சமாதான முயற்சிகளில் இணைத்தலைமை நாடுகளின் செயற்பாடுகளை பாதிக்கும் நிலை உருவாகும். எனவே இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிப்பதனை தவிர்த்து சமாதான முயற்சிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக கவனம் செலுத்துமாறு ஜப்பான் ஆலோசனை கூறியதாக தெரியவருகின்றது.
இதனையடுத்தே இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்படும் வழமை மாற்றப்பட்டதாக இராஜதந்திரியொருவர் தெரிவித்தார்.
தம்மீதான கண்டனங்களை குறைத்துக்கொள்ளும் ஒரு உபாயமாகவே இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் நடைபெறும் வேளையில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Uthayan Posted on : Fri Jun 29 6:04:21 EEST 2007
ஊடகவியலாளர்களைச் சிக்கலில் மாட்ட வைக்கும் குற்றவியல் அவதூறுச் சட்டத்தை மீளக் கொண்டுவர அரசு முஸ்தீபு!

ஊடகச் செய்திப் பொறுப்பாளர்கள் மற் றும் பத்திரிகை ஆசிரியர்கள், செய்தியா ளர்கள் போன்றோர் மீது கிரிமினல் குற்றப் பொறுப்பைச் சுமத்த வழிவகுக்கும் குற்ற வியல் அவதூறு சட்டத்தை (இணூடிட்டிணச்டூ ஈஞுஞூச் ட்ச்tடிணிண ஃச்தீ) மீண்டும் நடைமுறைப்படுத்து வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயா ராகி வருகின்றார் எனச் செய்திகள் தெரி விக்கின்றன.2002இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசினால் இல்லாதொழிக்கப்பட்ட இச்சட்டத்தை அவசர அவசரமாக மீண்டும் கொண்டு வந்து, ஊடகங்களை அடக்கி ஒடுக்கும் முயற்சியில் அரசுத் தலைமை ஈடுபட்டி ருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஊடகவியலாளர்களுக்கு எதிரான அவ தூறு குற்றச்சாட்டுகளின்போது ஊடகவிய லாளர்களைச் சிவில் குற்றத்துக்கு மேலதிக மாக கிரிமினல் குற்றத்துக்கும் உள்ளாக்க வழி செய்யும் இச்சட்டத்தை மீளக் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடாக இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இம்முயற்சிக்கு சில அமைச்சர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் விடயம், அடுத்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு தள்ளிவைக்கப்பட்டதாக அறியவந்தது.மேற்படி அமைச்சரவைப் பத்திரத்தை நீதி அமைச்சர் டிலான் பெரேரா நேற்றுமுன்தினம் அமைச்சரவையில் சமர்ப்பித்தபோது அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கலாநிதி சரத் அமுனுகம, தினேஷ் குணவர்தன ஆகியோர் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து கருத்துகளை வெளியிட்டனர்.இச்சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர்களான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் வற்புறுத்தினர் என தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இச்சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தினார்.சில அமைச்சர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இது தொடர்பான முடிவை மீண்டும் அடுத்த வாரம் கூடும் அமைச்சரவை எடுக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இணைந்து செயற்படுவதற்கு ரணில் மங்கள இணக்கம்

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும் ஸ்ரீல.சு.க. மக்கள் பிரிவுக் கட்சியின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர விற்குமிடையில் நேற்று முக்கிய சந்திப் பொன்று இடம்பெற்றது.கொழும்பு 07, கேம்பிரிஜ்ட் டெரஸில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலு வலகத்தில் காலை 10.30 மணிக்கு இச்சந் திப்பு இடம்பெற்றது.ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஜோஸப் மைக்கல் பெரேரா ஆகியோரும் ஸ்ரீல.சு.க. மக்கள் பிரிவின் சார்பில் முன் னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறிபதி சூரியாராய்ச்சி மற்றும் டிரான் அலஸ் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண் டனர்.இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக இடம்பெற்ற இச்சந்திப்பில் தற்கால அரசி யல் நிலைமைகள் தொடர்பாகவும் விசேட மாக அரசு முன்கொண்டு செல்லும் அரசி யல் நடவடிக்கைகள், யுத்தம் போன்றவை பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.குறிப்பாக அரசு மேற்கொள்வதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போலி யான யுத்தம், வாழ்க்கை செலவீன அதி கரிப்பு போன்றவை பற்றி மிகவும் விரி வாக ஆராயப்பட்டிருக்கின்றது.இவ்வாறான பிரச்சினைகளுக்குத் தீர்வு, அரசை வீழ்த்துவதன் ஊடாகவே பெறப்பட முடியும் என்று இரு தரப்புகளும் இச்சந்திப்பில் இணக்கம் கண்டிருக்கின்றன.அது தொடர்பாக பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சந்திப்பில் மங்கள சமரவீர, தனது கட்சியின் கொள்கை அறிக்கையையும் ரணிலிடம் சமர்ப்பித்தார்.இக்கொள்கையின் அடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படவேண்டும் என்றொரு யோசனையை மங்கள தெரிவித்திருக்கின்றார். அது தொடர்பாக ஆராய்ந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக இரு கட்சிகளின் சார்பில் இரு குழுக்களை அமைக்க முடிவுவெடுக்கப்பட்டுள்ளது.இச்சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக முடிவுற்றதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இரு குழுக்களை அமைத்து இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதற்கான நடவடிக்கைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படும் என்று ஐ.தே.கட்சி நேற்றுத் தெரிவித்தது.

Uthayan: Posted on : Thu Jun 28 7:52:47 EEST 2007
கிழக்கில் முதல் கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல்கள்

கிழக்கில் முதற்கட்டமாக உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை நடத்த அரசு முடிவு செய்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் முடிவடைந்த பின் கிழக்கில் முதற் கட்டமாக பிரதேச சபை, நகர சபைகளுக்கான தேர்தல்களை நடத்தவும்இரண்டாவது கட்டமாக கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல்களை நடத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.கிழக்கில் 99 சதவீதமான பகுதிகள் விடுதலைப் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும், எஞ்சிய பகுதியும் சில தினங்களில் மீட்கப்படும் என்றும் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார்.கிழக்கு முழுமையாக மீட்கப்பட்டவுடன் தேர்தல்களை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

மேற்குலக நாடுகளின் நிதி உதவிகளைப் பெற அரசாங்கம் தீவிர பிரசாரம்

உதவிகளை வெட்டினால் பயங்கரவாதம் பலம் பெறும்

( தமிழர்களுக்கெதிரான யுத்தம் வெளிநாட்டு உதவியிலேயே நடக்கிறது என்பதுதானே இதற்குப் பொருள்! ENB )

என்று ஜி.எல்.பீரிஸ் வாதம் மேற்குலக நாடுகள் இலங்கைக்கு வழங்கி வரும் நிதி ஆதாரங்களை தொடர்ந்து வழங்கும்படி செய்வதற்கும், நிதி உதவிகள் நிறுத்தப்பட்டால் பயங்கர வாதத்தின் வளர்ச்சிக்கு உதவியதாகவே முடியும் என்ற வகையிலும் இலங் கையின் சர்வதேச வர்த்தக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மேற்குலக நாடுகளில் பெரும் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார்.வாஷிங்ரனில் அவர் நேற்றுமுன்தினம் நடத்தியுள்ள செய்தியாளர் மாநாட்டில், உதவி வழங்கும் மேற்குலக நாடுகள் அந்த உதவிகளை வெட்டிக் குறைத்தால் அது ஒரு பெரும் துன்பகரமான தவறாகவே இருக்கும் என்று தெரிவித்தார்.இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய வேறு காரணங்களுக்காகவும் ஏற்கனவே பிரிட் டன், ஜேர்மனி மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் இலங்கைக்கு வழங்கிவந்த உதவிகளில் குறிப்பிட்ட பகுதிகளை வெட் டிக் குறைத்துள்ளன. வேறு பல நாடுகளும் நிதி ஆதாரங்களைக் குறைப்பதற்கும் ஆலோசித்து வருவது தெரிந்ததே.அமெரிக்காவும் அதன் "மில்லேனியம் சலஞ் எக்கவுன்ட' என்ற உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையை இணைத்துக்கொள்ள மறுத்துள்ளது. இந்த நிதி கிடைக்கு மானால் இலங்கைக்கு மிகவும் தேவைப்படும் அதன் உள் கட்டமைப்புக்களை விருத்திசெய்து கொள்ள பல மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடியும். பயங்கரவாதம் பலம் பெறவே உதவும்இலங்கைக்குக் கிடைக்க வேண்டிய வளங்களை வெட்டிக் குறைப்பதன் மூலம் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் மீது அழுத்தங் களைப் பிரயோகிக்க வேண்டும் என்று எவர் வாதித்தாலும் அவர் வேண்டுமென்றே இல்லாவிட்டாலும் புத்திசாதுர்யமற்ற விதத்தில் பயங்கரவாதம் பலம் பெறுவதற்கே உதவுகிறார் என்று ஜி.எல்.பீரிஸ் கூறினார்.இந்த சக்திமிக்க பலமான செய்தியை அமெரிக்காவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாம் எடுத்துரைத்திருப்பதாகவும் பீரிஸ் தெரிவித்தார்.அமெரிக்க அதிகாரிகளுக்கு இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக விளக்கமளித்துள்ள அமைச்சர், அமெரிக்க அரசு தனது சட்ட சபைகள் மற்றும் பொதுமக்களின் நெருக்குதல்களுக்குள்ளாகி அதற்கு பதில் அளிக்க வேண்டியிருப்பதை எம்மால் புரிந்துகொள்ள முடியும். அதேவேளை எமது நிலையையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். என்று அவர் கேட்டுள்ளார்.

செய்தி சேகரிக்கச் சென்ற தினக்குரல் ஊடகவியலாளர் மீது தாக்குதல்
[29 - June - 2007]

கொழும்பிலுள்ள ஜனாதிபதிச் செயலகத்துக்கு நேற்று வியாழக்கிழமை செய்தி சேகரிக்கச் சென்ற "தினக்குரல்" பத்திரிகையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான "கே.பி. மோகன்" விமானப் படையினரால் தாக்கப்பட்டு காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 2.30 மணியளவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதிச் செயலகத்தினால் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர் மோகன் சென்றுள்ளார்.
அவர் தான் வந்த பஸ்ஸை விட்டு இறங்கி கோட்டையிலிருந்து காலி முகத்திடல் செல்லும் பிரதான பாதையினூடு ஜனாதிபதி செயலகத்துக்கு நடந்து சென்றுள்ளார். இதன்போது அப்பாதையினூடு விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணி செல்லவிருப்பதால் பாதையை கடந்து செல்லும் அனைவரையும் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படையினர் வீதியைக் கடக்க விடாமல் நிறுத்தி வைத்திருந்துள்ளனர்.
எனினும், ஜனாதிபதிச் செயலகத்துக்கு செல்ல அவ்வீதியை கடக்க வேண்டிய அவசியமில்லை என்பதுடன் செய்தி சேகரிப்பதற்காக ஜனாதிபதி செயலகம் செல்வதால் அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த விமானப்படையினரிடம் தான் செல்லும் காரணத்தை கூறி அரசாங்க தகவல் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையையும் காட்டி தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி செல்ல முற்பட்டுள்ளார்.
இதேநேரம், நேற்று முன்தினம் புதன்கிழமையும் இதே ஊடகவியலாளர், ஊடகவியலாளர் மாநாடொன்றுக்கு சென்று வரும்வேளை காலி முகத்திடலிலுள்ள சோதனைச் சாவடியில் சோதனையிடப்பட்டபோது இவர் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை காண்பித்தபோது அதைப் புறக்கணித்த விமானப்படை வீரரொருவர், ஊடகவியலாளரை தாறுமாறாக ஏசியிருந்ததுடன் இது தொடர்பான செய்திகள் ஊடகங்களிலும் வெளியாகியிருந்தன.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே நேற்றும் ஊடகவியலாளர் மோகன் செய்தி சேகரிப்புக்காக சென்று கொண்டிருந்தபோது ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை விமானப்படையினரிடம் காட்டி ஜனாதிபதிச் செயலகத்துக்கு செல்ல முற்பட்டுள்ளார்.
எனினும், அப்படிச் செல்ல அனுமதிக்க முடியாதென மறுத்துள்ள விமானப் படையினர், ஊடகவியலாளரது பெயரைக் கேட்டுள்ளனர். அவர் தனது பெயரைக் கூறியதும் அவரை விமானப்படையினர் ஏசத் தொடங்கியுள்ளனர்.
இதன் பின்னர் அவர், தான் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை எழுதும் செய்தியாளர் எனவும் அவ்வாறு தன்னை ஏச வேண்டாமெனவும் விமானப்படையினரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னரும் அவர்கள் தொடர்ந்தும் தாறுமாறாக ஏசியுள்ளதுடன் அங்கிருந்த விமானப்படை வீரரொருவர், தொலைபேசி மூலம் ஏனைய வீரர்களுக்கும் தெரிவித்ததை அடுத்து அங்கு வந்த மேலும் சில விமானப்படையினரும் ஒன்றாக சேர்ந்து "இவனா அவன்" என்று சிங்களத்தில் கேட்டு விட்டு ஊடகவியலாளரை தாக்க ஆரம்பித்துள்ளனர்.
இவர் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போதே விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணியும் சென்று விட்டது.
இதேநேரம், அவர் தாக்கப்பட்டதன் பின்னர் அருகிலிருந்து கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு செல்ல முற்பட்ட போது அவரை பலவந்தமாக ஆட்டோவொன்றில் ஏற்றியுள்ள விமானப்படையினர், அவரை கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை, விமானப்படைத் தளபதியின் வாகனத் தொடரணி வரும்போது குறுக்கே பாய முற்பட்டபோதே விமானப்படைத் தளபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு ஊடகவியலாளரை கீழே இழுத்துத் தள்ளியதாகவும் அதன்போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள விமானப்படையினர், ஊடகவியலாளரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸில் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், ஊடகவியலாளர் மோகனது தரப்பு முறைப்பாடும் கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், விமானப்படையினர் தாக்கியதில் ஊடகவியலாளர் மோகன் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவரது வலது கைக்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் மோகனை பொலிஸிலிருந்து விடுவித்து வைத்தியசாலையில் அனுமதிப்பது வரை இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தினர் பெரும் உதவிகளைப் புரிந்தனர்.

பல்கலைக் கழகங்களைத் தனியார் மயப்படுத்தும் திட்டத்திற்கெதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

[29 - June - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
பல்கலைக்கழகங்களைத் தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுக் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த இவ்வார்ப்பாட்டத்தில் நாட்டின் அநேக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழக முன்றிலிலிருந்து ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் பல வீதிகளூடாகச் சென்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னிலையில் நிறைவடைந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் `பல்கலைக்கழகக் கல்வியைத் தனியார் மயமாக்காதே', `பாடசாலைக் கல்வியை விற்காதே', `பல்கலைக் கழகங்களுக்கு வளங்களை வழங்கு' உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
அத்துடன் `பல்கலைக்கழகங்களைக் காக்க அணிதிரளுங்கள்', `இலவசக் கல்வியை வெளிநாடுகளுக்கு விற்க முயற்சி; `பெற்றோர்களே கண் விழியுங்கள்', `போலிக் காரணங்களைக் கூறி பல்கலைக்கழகங்களை மூடுவதை இடைநிறுத்துங்கள்' ஆகிய கோஷங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எழுப்பினர்.
இவ்வார்பாட்டம் குறித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியப் பிரதிநிதி துமிந்து நாகமுவ கூறுகையில்;
பல்கலைக்கழகங்களை தனியார் மயப்படுத்தி, இலவசக் கல்வியை தாரை வார்க்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கான தெளிவான ஆதாரங்கள் எம்மிடமுள்ளன.
அரசாங்கத்தின் இச் செயற்பாடுகளைக் கண்டித்தும், தனியார் மயமாக்கும் செயற்பாடுகளை உடனடியாக கைவிடக்கோரியுமே சகல பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு கல்வி உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வ வர்ணபால, கல்வியமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் காமனி சமரநாயக்கா ஆகியோரின் கொடும்பாவிகளையும் தீயிட்டுக் கொளுத்தினோம்.
இதையடுத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் எம்மைப் பேச்சுக்கு அழைத்தார். நாமும் சென்றோம். அவர் ஆர்ப்பாட்டத்தைக் கொச்சைப்படுத்தி இது நீதியற்றதென்றார். இந்நிலையில் நாம் பேசிப் பயனில்லை என்ற நிலைப்பாட்டுடன் பேச்சினை இடைநிறுத்திவிட்டு வெளியேறினோம்.
கல்வியை விற்கும் செயற்பாட்டிற்கு எதிரான எமது போராட்டம் தொடரும் என்றார்.
============================
மண்டபம் முகாமில்

ஈழத்தமிழர்கள்:


அகதிகளா? கைதிகளா? - ENB
============================

அகதிகள் தப்பிச்செல்வதைத் தடுப்பதற்கு
மண்டபம் அகதிமுகாமை சூழ சுற்றுச்சுவர் அமைப்பதற்கு நடவடிக்கை

வீரகேசரி நாளேடு

அகதிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு மண்டபம் முகாமைச் சூழ சுற்றுச் சுவர் அமைக்கப்படவுள்ளதாக அகதிகள் மறுவாழ்வு துறை ஆணையாளர் கற்பூரசுந்தர பாண்டியன் தெரிவித்தார். இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபம் முகாமில் அகதிகளின் குறைகளை நேற்று முன்தினம் கேட்டறிந்த அவர் செய்திளார்களிடம் பேசும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது:
இராமநாதபுரம் கெலக்டர் பரிந்துரை பேரில் தமிழக அரசிடம் 6 கோடியே 46 இலட்சம் ரூபா நிதி கேட்டுள்ளோம்.
இந்த நிதியின் மூலம், மண்டபம் அகதிகள் முகாம் சீரமைக்கப்பட உள்ளது. அத்தியாவசிய பணிகளான வீதி, மின்சாரம், கழிப்பறை, சுற்றுச்சுவர் என சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மண்டபம் முகாமில் சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால் அகதிகள் தப்பி செல்கின்றனர். இதனை தடுக்க முகாமை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படும். அகதிகள் குடியிருப்புக்களுக்கு தனி மின் மீற்றர் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அகதிகளுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இனி 24 மணிநேரமும் இலவச மின்சாரம் வழங்க உள்ளோம். அகதிகளை மண்டபம் முகாம் அழைத்து வர தனியாக வான் வாங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.

முஸ்லிம்கள் கடத்தப்படுவது நிரூபணம் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா?

வீரகேசரி நாளேடு
முஸ்லிம் மக்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்படுவது தற்போது நிரூபணமாகியுள்ளது. கடத்தல்கள் தொடர்பாக விமானப்படையினதும் பொலிஸ் திணைக்களத்தினதும் சில அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகுவார்களா ? என்று கேள்வியெழுப்புகின்றோம் என கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே யே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது :
ஐக்கிய தேசிய கட்சி கடந்த பல மாதங்களாக நாட்டில் இடம்பெறும் கடத்தல்கள் தொடர்பாக குரல் எழுப்புவதுடன் அவை தொடர்பான தகவல்களையும் வழங்கிவருகின்றது. ஆனால் முக்கியமான தகவல்களை வெளியிட்ட எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்னவுக்கு எதிராக அரசாங்கம் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளது. கவலைக்கிடமாக முஸ்லிம் அமைச்சர்களும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆனால் லக்ஷமன் செனவிரட்னவின் தகவல்களின்படி தற்போது விமானப்படை அதிகாரிகள் இருவரும் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் தகவல்களை வெளிப்படுத்தியமைக்காக எமது கட்சியினருக்கு அரசாங்கம் முழுமையான நன்றி கூறவேண்டும்.
முஸ்லிம் மக்கள் கடத்தப்பட்டால் நாங்கள் பதவி விலகுவோம் என்று அண்மையில் முஸ்லிம் அøமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். தற்போது முஸ்லிம் மக்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்படுவது நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகுவார்களா? என்று கேட்கின்றோம்.
கடத்தப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள் எம்மிடம் முறையிடலாம். நாங்கள் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கின்றோம். கப்பம் கொடுக்கப்பட்டிருந்தால் அவற்றைப் பெற்றுக்கொடுப்போம்.

No comments: