
ஆறுமாதங்களில் அடையாளங்காணப்படாத நூறு சடலங்கள்!
நாட்டில் கடந்த ஆறுமாதகாலங்களில் மட்டும் நூறு அடையாளம் காணப்படாத சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன என்று பொலிஸாரின் தகவல்களை அடிப்படை யாக வைத்து செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இவ்வாறு மீட்கப்பட்ட சடலங் களில் பெரும்பாலானவை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர் களுடையதாகும்.இவ்வாறான கொலைகள் வேறு இடங்களில் செய்யப்பட்டபின்னர் மற்று மோர் இடத்தில் சடலங்கள் வீசப்பட் டவை.இதேவேளை, கடந்த வருடம் 147 அடையாளம் காணப்படாத சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இச்சடலங்களில் 27 பெண்களுடையது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 770 அடையாளம் காணப்படாத சட லங்கள் மீட்கப்பட்டன. இவற்றில் 153 சடலங்கள் பெண்களுடையவை என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment