Saturday, 30 June 2007

ஈழச்செய்திகள்:300607


ஏகாதிபத்தியவாதிகள் உத்தரவு!
மீண்டும் பேச்சுவார்த்தை நோக்கி அரசு புலிகள் நகர்வு!!
ENB

Posted on : Sat Jun 30 7:03:53 EEST 2007
நோர்வேயுடன் தொடர்புகளை ஏற்படுத்த இரண்டு தரப்புகளிடமும் வற்புறுத்து

இலங்கையில் மோதலில் ஈடுபட்டிருக் கும் அரசு மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய தரப்புகளை உடனடியாகப் பேச்சு மேசைக் குத் திரும்புமாறு அழுத்தமாக கடும் தொனி யில் வற்புறுத்திக்கோருவது என்று ஒஸ் லோவில் கூடிய இணைத்தலைமை நாடு கள் தீர்மானித்திருக்கின்றன.
இந்தப் பிணக்குக்கு முடிவு கட்டுவதற் காக காத்திரமான அனுசரணைப் பணியில் ஈடுபட்டிருக்கும் நோர்வேயுடன் தொடர்பு களை ஏற்படுத்தி சமாதான முயற்சி களைப் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளில் உடனே இறங்குமாறும் தரப்புகளைக் கோரு வது என்று இணைத்தலைமை முடிவு செய்திருக்கின்றது.
ஒஸ்லோவில் இரு தினங்கள் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை அந்நாடுகள் வழமைபோன்று பகிரங்கமாக அறிவிக்காத போதிலும் கூட்டத்தில் எட்டப் பட்ட முடிவுகள் தொடர்பான தகவல்கள் இராஜதந்திரவட்டாரங்கள் மூலம் வெளியே கசிந்துள்ளன.

Posted on : Sat Jun 30 7:05:20 EEST 2007
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புத்துயிர் கொடுக்க புதிய அணுகுமுறையைக் கைக்கொள்ள முடிவு அரசும் கண்காணிப்புக் குழுவும் இணக்கம்


2002ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதி கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு புத்துயிர் அளிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் முதற்கட்டமாக போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சமாதானச் செயலகத்தின் தலைவர் கலாநிதி ரஜிவ விஜயசிங்கவுக்கும், போர் நிறுத் தக் கண் காணிப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகம் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க்கிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் இது குறித்துக் கருத்திணக்கம் காணப்பட்டது.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடை பெற்ற சந்திப்பில் போர் நிறுத்த ஒப்பந் தத்துக்கு புத்துயிர் கொடுப்பது குறித்து நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண் காணிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளிடையே நம்பிக்கையை உருவாக் கும் பொருட்டும், இலங்கையில் சமாதா னத்தை உருவாக்குவதற்கு அதிக அளவில் உதவும் வகையிலும் புதிய அணுகுமுறை கள் கண்டறியப்பட வேண்டும் என்று இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
அதனை மையக் கருவாக வைத்து, போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்கான புதிய னவும் சூழ்நிலைக்கு உகந்தவையுமான புதிய வழிமுறைகளை வகுப்பது அவசியம் என் பதனை இரண்டு தரப்புகளும் ஏற்றுக் கொண்டன.
எனினும் அந்த வழிமுறைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய கண்காணிப்புக் குழுவுக்குள்ள வரை யறைக்குள் அமைய வேண்டும் என்று இணங் கப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பிரகாரம், விசாரணைகளை நடத்துவது மட்டும் கண் காணிப்புக் குழுவின் பணியல்ல என்றும்
முறைப்பாடுகள் குறித்துத் தக்க நடவ டிக்கை எடுப்பதும், தவறுகளைத் திருத்து மாறு அழுத்தம் கொடுப்பதும் குழுவின் பொறுப்பு என்றும்
சமாதானச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பேச்சுக்களின் போது சுட்டிக்காட்டி னார்.
காண்காணிப்புக் குழுவினரின் எண் ணிக்கை தற்போது குறைந்திருப்பது குறித் தும் அதனால் அதிக சர்வதேச கண்காணிப் பாளர்களை இணைத்துக் கொள்வது குறித் தும் இரு தரப்புகளும் கருத்துப் பரிமாறிக் கொண்டன.
சர்வதேச கண்காணிப்பாளர்களின் எண் ணிக்கை குறைந்தபோது யுத்த நிறுத்த மீறல்கள் அதிகரித்தன. எனினும் நாம் இன்னமும் எங்கள் பணியை அர்ப்பணிப் புடனேயே செய்து வருகிறோம் என்று அதன் தலைவர் லார்ஸ் ஜொகான் ஒரு கட்டத்தில் தெரிவித்தார்.
இவை குறித்து அடுத்த வாரமும் கூடி ஆராய் வதென வியாழனன்று நடந்த சந்திப்பில் முடிவாகியது.

Posted on : Sat Jun 30 6:59:59 EEST 2007
புலிகளுடன் பேச்சை ஆரம்பிக்க கோத்தபாய பச்சைக்கொடி!


விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுக் களை ஆரம்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜ பக்ஷ அரசுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
இத்தகவலை கொழும்பு ஊடகம் ஒன்று நேற்று வெளியிட்டது.
கிழக்கு மாகாண இராணுவ நடவடிக் கைகள் பூர்த்தியாகும் நிலையை அடைந் துள்ளன. எனவே அரசு சமாதானப் பேச் சுக்களை மீள ஆரம்பிக்க அரசுக்கு அனுமதி வழங்கிவிட்டேன் என்றவாறு கோத்தபாய கூறியதாக அந்தத் தகவலில் விவரிக்கப் பட்டுள்ளது.
இதேவேளை
நேற்றுமுன்தினம் அலரி மாளிகையில் மகா நாயக்கர்களுக்கு வடக்கு கிழக்கு நிலைமை குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விளக்குவதற்கு ஏற்பாடு செய் யப்பட்ட வைபவத்தில் உரையாற்றுகையி லும், கோத்தபாய இதே கருத்தை வெளியிட் டார் என்று மற் றொரு கொழும்பு ஊடகம் தெரிவித்தது.

Posted on : Sat Jun 30 6:58:00 EEST 2007
கூட்டமைப்புக் குழு நோர்வேயில் பேச்சு


தேக்கமடைந்துள்ள சமாதான முயற்சிகளுக்குப் புத்துயிர் அளிக்கும் வழிமுறைகள் குறித்து நோர்வே உயர்மட்டக் குழுவுடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் குழு நாளை மறுதினம் பேச்சு நடத்தவுள்ளது.
கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்புக்குழு சர்வதேச விவ காரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல் ஹெய்ம், சமாதானத்துக்கான விசேட தூதர் ஹன்ஸன் போவர் ஆகியோருடன் பேச்சு நடத்தும்.
போவர் வருவார்
இதேவேளை
சமாதான முயற்சிகளை அடுத்த கட்டத் திற்கு நகர்த்தும் வாய்ப்புக் குறித்து இலங்கைத் தலைவர்களுடனும் விடுதலைப் புலிகளின் தலைவர்களுடனும் பேசுவதற்காக ஹன் ஸன் போவர் ஜூலை நடுப்பகுதியில் இலங் கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி: யாழ் உதயன்

No comments: