Monday, 11 June 2007

தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றும் முடிவு கோத்தபய தலைமையிலேயே எடுக்கப்பட்டது

உண்மையை அம்பலப்படுத்துகிறது பிரதிப் பொலிஸ் மா அதிபரின் சுற்றறிக்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ஷவின் நேரடிப் பணிப்பின் பேரி லேயே தமிழர்களைக் கொழும்பிலி ருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நட வடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இவ்வாறு ஆங்கில வார இதழான "த சண்டே லீடர்' தனது நேற்றைய முன்பக் கத் தலைப்புச் செய்தியில் தகவல் வெளி யிட்டிருக்கின்றது.வடக்கு, கிழக்குக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய கடந்த 31 ஆம் திகதி வெளியிட்ட சுற்றறிக்கையில் இது பற்றிய உண்மை முழுதாக அடங்கியுள்ளது என வும் அச்செய்தி மேலும் தெரிவித்தது.அந்தச் சுற்றறிக்கையின்படி பாதுகாப்பு அமைச்சில் கடந்த மே 31 ஆம் திகதி பாது காப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தலைமையில் ஒரு முக்கிய உயர்மட்டக்கூட்டம் நடைபெற்றிருக்கின் றது. பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா, இராணுவத்தின் சிரேஷ்ட தலைமை அதி காரி லொரன்ஸ் பெர்னாண்டோ, கொழும் புக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் அபேவர்த்தன, குற்றப் புல னாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிர திப் பொலிஸ் மா அதிபர் பிரதாப் சிங்ஹ ஆகியோரும் அதில் பங்கு கொண்டிருக் கின்றனர். அங்கு பாதுகாப்புச் செயலாளரின் அறி வுறுத்தலுக்கு அமைய, ஜூன் முதலாம் திகதி தொடக்கம் கொழும்புக்கு வரும் தமிழ் சிவிலியன்களை அவர்களது வேலை முடிந்ததும் பொலிஸார் பாதுகாப்புடன் அவரவர் இடங்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கும் நடவடிக்கை குறித்து விரிவாக ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட் டன.படம் பிடிக்கவும் முடிவு செய்யப்பட் டிருந்தது.யுத்தப் பிரதேசங்களில் இருந்து வரு வோரை வழி மறித்து சோதித்து விசாரிப் பதற்கும் மேலே செல்ல அனுமதிப்பதற் கும் ஆறு இடங்களில் விசேட சோதனைச் சாவடிகளை அமைத்தல், அப்பிரதேசங்க ளில் இருந்து வரும் ஒவ்வொருவரையும் "டிஜிட்டல்கமரா' மூலம் படம் பிடித்தல், தேவையற்றோரைத் தலைநகருக்கு வர விடாமல் தடுத்தல், அவர்களைத் தங்க வைப்பதற்காக வவுனியாவில் நல நோம்பு மையங்களை அமைத்தல், இது போன்ற மையங்களை சேனபுர, வெலிக் கந்தை ஆகிய பகுதிகளிலும் ஸ்தாபித்தல் உட்படப் பல விடயங்கள் குறித்து அக் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு செய்யப் பட்டன.இவ்வாறு அந்த சுற்றறிக்கை தெரி விப்பதாக அச்செய்தியில் விவரிக்கப் பட்டது.தமிழர்களை தலைநகரிலிருந்து வெளி யேற்றும் நடவடிக்கையை ஜூன் 7 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கவும் மேற் படி உயர் மட்டக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு தமிழர்களைப் பலவந்தமா கத் தலைநகரிலிருந்து வெளியேற்றும் இன ஒதுக்கல் நடவடிக்கை குறித்துத் தமக்கு எதுவுமே தெரியாததுபோலவும், தாம் இதுகுறித்து பொலிஸ்மா அதிபரி டம் விளக்கம் கோரியிருப்பவர் போல வும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டிருக்கையிலேயே, அவரது சகோதரர் தலைமையிலான பாதுகாப்புக் கூட்டத்திலேயே இந்த அராஜகத்துக்கான தீர்மானம் எடுக்கப்பட்டது பற்றிய உண் மையை "த சண்டே லீடர்' பத்திரிகை போட்டுடைத்திருக்கின்றது என்பது குறிப் பிடத்தக்கது.
நன்றி: யாழ் உதயன்

No comments: